Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சுஸ்ருதர்


Guru

Status: Offline
Posts: 7474
Date:
சுஸ்ருதர்
Permalink  
 


சுஸ்ருதர் Image may contain: 1 person

இந்தியர்களின் இன்றைய தாழ்வுமனப்பான்மை மிகத் துல்லியமாக திட்டமிடப்பட்டு நடத்தப்படுகிற ஒன்று. இதை நடத்துவதில் முக்கியமானவர்கள் கிறிஸ்தவ மிஷனரிகள். இந்தியக் கிறிஸ்தவ மிஷனரி வெள்ளைக்காரனின் கால்களை நக்கிப் பிழைக்கும் ஒரு அடிமை. நாயினும் கீழான வேசிமகன்களான அவர்களின் கைகளில் இந்தியர்கள் தங்களின் கல்வியை ஒப்படைத்து இன்றைக்கு அவமானப்பட்டு நிற்கிறார்கள். இதற்கு அடித்தளமிட்டவன் மெக்காலே என்கிற பிரிட்டிஷ்காரன். இந்தியர்களுக்கு அவன் அறிமுகப்படுத்திய அவனது கல்விமுறையே இன்றைக்கு இந்தியன் தன்னைப் பிறரை விட, குறிப்பாக ஐரோப்பிய வெள்ளையனை விடத் தாழ்ந்தவன் என்கிற மனப்பான்மையுடன் வாழ வைத்திருக்கிறது. மேற்கத்திய உலகம் "கண்டுபிடித்ததாக" சொல்லப்படும் அத்தனையும் இந்தியாவிலிருந்து திருடப்பட்டது என்கிற எண்ணம் எந்த இந்தியனிடமும் இன்று இல்லை. தான் சொந்தமாகக் கண்டுபிடிக்கும் ஒன்றைக் கூட மேற்கத்திய உலகம் அங்கீகரிக்க வேண்டும் என நினைக்கிற இந்தியர்களே இன்றைக்கு அதிகம்.

இந்தியாவின் உண்மையான வரலாறுகளை அவன் உதாசீனப்படுத்தக் காரணம் இதுதான். மேற்குலகில் எழுதப்பட்டிருக்கும் போலி வரலாறுகளை மட்டுமே நம்புவனாக இன்றைய இந்தியன் தரம் தாழ்ந்து கிடக்கிறான் என்பது வேதனைதான். எத்தனையோ இந்திய அறிஞர்கள் இந்திய வரலாற்றினைக் குறித்து எழுதியிருந்தாலும் அது யாரும் சீந்தாமல் இன்றைக்குக் கிடக்கிறது. கணிதமாகட்டும், மருத்துவமாகட்டும், வான சாஸ்திரமாகட்டும், இலக்கிய இலக்கணங்களாகட்டும், வாழ்க்கைமுறையாகட்டும், தத்துவ நெறிகளாகட்டும், இசை, கலைகளாகட்டும்....இந்தியாவிற்கு இணையாக இன்னொரு நாட்டினை இந்த உலகின் எந்த மூலையிலும் காண்பது அரிதிலும் அரிதுதான். ஆனால் அந்தோ! போலிகளை அறிஞர்கள் என எண்ணித் தன் கலாச்சாரத்தைத் துறக்கத் தயாராக இருக்கும் இன்றைய இந்தியனை, தமிழனை நான் பரிதாபமாகவே நோக்குகிறேன். அடுத்தவன் தன்னை அங்கீகரிக்க வேண்டும் என எண்ணும் அவனின் தாழ்வுமனப்பான்மையை எண்ணியெண்ணி எனக்குள் கூனிக்குறுகுகிறேன்.

இந்திய அறிவுச் செல்வத்திற்கு இணையாக இன்னொரு நாட்டில் என்றைக்கும் இருந்ததில்லை. இன்றைய மேற்குலகின் முன்னேற்றம் "அத்தனையுமே" இந்தியர்களிடமிருந்து, இந்திய ஹிந்துக்களிடமிருந்து திருடிய அறிவின் அடிப்படையில் அமைந்தவை என்பதினை நான் மீண்டும், மீண்டும் சொல்லிக் கொண்டே இருப்பேன். என் வாழ்நாள் முடியும் வரை.

மருத்துவத்தின் அத்தனை துறைகளிலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே பல சாதனைகளை நிகழ்த்தியவர்கள் இந்தியர்கள். அதாகப்பட்டது இந்திய ஹிந்துக்கள்.

உதாரணமாக இந்திய அறுவைச் சிகிச்சை முறைகள். இன்றைக்கு மேற்கத்திய உலக மருத்துவமனைகளில் நிகழும் அறுவைச் சிகிச்சைகளுக்கு அடிப்படை இந்தியாதான். சுஸ்ருதர் செய்த அறுவைச் சிகிச்சை முறைதான் இன்றைக்கும், சிறிதும் மாறாமல் மேற்கத்திய மருத்துவமனைகளில் உபயோகப்படுத்தப்படுகிறது. எனவே சுஸ்ருதர் குறித்துச் சிறிது காணலாம்.

சுஸ்ருதர் பொதுயுகம் நான்காம் நூற்றாண்டில் வாரணாசியில் வாழ்ந்தவர். அறுவைச் சிகிச்சையின் தந்தை அவர்தான். அவர் எழுதிய "சுஸ்ருத சம்ஹிதா" என்னும் நூலே உலகின் மிகப் பழமையான அறுவைச் சிகிச்சை நூல் (சாஸ்திர கர்மா).

அந்த நூலில் அறுவைச் சிகிச்சையைக் கீழ்க்கண்ட எட்டு பகுதிகளாகப் பிரிக்கிறார் சுஸ்ருதர்.

Chhedya (Excision - அப்புறப்படுத்துதல்)
Eshya (Exploration - முற்றாய்வு)
Aharya (Extraction - பிரித்தெடுத்தல்)
Lekhya (Scarification - மேலீடான அறுவை)
Vedhya (Puncturing - துவாரமிடுதல், ஓட்டை செய்தல்)
Bhedya (Piercing - துளையிடுதல்)
Vishravya (Evacuvation - வெளியேற்றுதல்)
Sivya (Suturing - தைத்தல்)

ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை (rhinoplasty) மற்றும் கண்புரை நீக்கம் (extraction of cataract/ophtalmology) செய்வதில் சுஸ்ருதர் மிகவும் திறமை வாய்ந்தவர். இந்தக் கண்புரை நீக்கம் குறித்து மிகத் துல்லியமான தகவல்களை சுஸ்ருதர் அவரது சுஸ்ருத சம்ஹிதையில் எழுதி வைத்துச் சென்றிருக்கிறார். அந்தத் தகவல்களைப் படிக்கிற எவரும் அந்த அறுவைச் சிகிச்சை 2500 வருடங்களுக்கு முன் செய்யப்பட்ட ஒன்று என்கிற எண்ணம் வருவதில்லை. மாறாக அது இன்றைக்கோ அல்லது நேற்றைக்கோ நடந்த ஒன்றினைப் போன்ற எண்ணம் வருவதனைத் தவிர்க்க இயல்வதில்லை.

சுஸ்ருதரின் மிகப் பெரிய சாதனையாகக் கருதப்படுவது அவரது rhinoplasty (இன்றைய plastic surgery) எனப்படும் ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைதான். சிதைந்து போன ஒருவனுடைய மூக்கை ப்ளாஸ்டிக் சர்ஜரி மூலம் சரி செய்த முதல் மருத்துவர் அவர். இந்த அறுவை சிகிச்சையைக் குறித்தான மிகத் துல்லியமான தகவல்கள் அவரது சுஸ்ருத சம்ஹிதா நூலில் எழுதப்பட்டிருக்கிறது. இதுபோன்ற மருத்துவ சிகிச்சையின் பலனாக அவரது புகழ் இந்தியாவெங்கிலும் பரவியிருந்தது. இந்தியா மட்டுமல்லாது பல வெளி நாட்டினரும் அவரை நாடி வந்தார்கள்.

குற்றவாளியின் மூக்கை அறுப்பது என்பது அன்றைய காலகட்ட இந்திய அரசர்களிடையே இருந்ததொரு வழக்கம். இந்த வழக்கத்தைக் கண்டு மனம் வருந்திய சுஸ்ருதர், பாதிக்கப்பட்டவர்களின் மூக்கினை சரிப்படுத்தி அவர்களுக்குப் புத்துயிரளித்தார். பொதுயுகம் நான்காம் நூற்றாண்டில் செய்யப்பட்ட இந்த மருத்துவமுறையே இன்றைக்கு நவீன மருத்துவ உலகிலும் பின்பற்றப்படுகிறது என்பது பேராச்சரியமானதொரு விஷயம்தான்.

தொடர்ச்சியான அன்னிய ஆக்கிரமுப்புகளின் காரணமாக இந்த மருத்துவமுறை நீண்ட காலமாக வெளியில் அறியப்படாதிருந்து 18-ஆம் நூற்றாண்டில் திடீரெனே வெளித் தெரிய ஆரம்பித்தது. 1792-ஆம் வருடம் பிரிட்டிஷ்காரர்களுக்கும், திப்புவிக்கும் நடந்த போரில், பிரிட்டிஷ்காரர்களிடம் பணிபுரிந்த மராத்தா வண்டியோட்டி ஒருவன் திப்புவினால் சிறைப்பிடிக்கப்பட்டான். அவனது மூக்கு வெட்டப்பட்டது. இது நடந்து ஒருவருடம் கழித்து பூனா நகரைச் சேர்ந்ததொரு கும்ஹார் வைத்தியன் (பானைகள் செய்பவன்) ஒருவன் இரண்டு பிரிட்டிஷ்கார மருத்துவர்களின் முன்னிலையில் அறுபட்ட அந்த மனிதனின் மூக்கை அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் சரிசெய்து காட்டினான்.

அன்றைய பாம்பே பிரஸிடென்ஸியைச் சேர்ந்த Thomas Cruso மற்றும் James Trindlay என்கிற அந்த இரண்டு பிரிட்டிஷ் மருத்துவர்களும் இந்த அறுவைச் சிகிச்சையைக் குறித்து Madras Gazette என்கிற பத்திரிகையில் ஒரு கட்டுரையை எழுதினார்கள். இதுமாதிரியான அறுவைச் சிகிச்சைகள் இந்தியாவெங்கும் காலம்காலமாக மேற்கொள்ளப்படுகின்றன (It is not uncommon in India and has been practsed for time immemorial) என்கிற அர்த்தத்துடன் எழுதப்பட்ட அந்தக் கட்டுரை அக்டோபர், 1794-ஆம் வரும் மீண்டும் இங்கிலாந்தில் வெளியிடப்பட்டது. இந்த அறுவைச் சிகிச்சை முறையை அருகிருந்து நன்கு கற்றுத்தேர்ந்த இந்த மருத்துவர்கள் அதனை மேற்கத்திய மருத்துவமுறையுடன் இணைத்தார்கள் (K.K. Somani, Indian Economic and Social Traditions).

சுஸ்ருத சம்ஹிதா ஏறக்குறைய 300 பல்வேறுவிதமான அறுவைச் சிகிச்சை முறைகளையும், 120 விதமான அறுவைச் சிகிச்சைக் கருவிகளையும் விளக்குகிறது (இந்தக் கருவிகளின் படங்களை நான் முன்பு வெளியிட்டிருக்கிறேன்). இன்றைய நவீன மருத்துவம் அதே கருவிகளை இன்றைக்கும் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறது. இவையெல்லாம் இந்திய மருத்துவ உபகரணங்கள் என்கிற தகவலை வெளியில் சொல்லாமல்.

"இந்த உபகரணங்களையும், அறுவைச் சிகிச்சை முறைகளையும் கற்றறிந்த மேற்கத்திய மருத்துவர்கள் அதனை வேறொரு உச்சத்திற்குக் கொண்டு சென்றார்கள்" என ஜெர்மனியின் புகழ்பெற்ற அறுவைச் சிகிச்சை மருத்துவர்களில் ஒருவரான Dr. Hirschberg.

உடலின் ஒரு பகுதியை அறுத்து அதனைக் கொண்டு அதே உடலின் இன்னொரு பகுதியைச் சரி செய்வது என்பது முற்றிலும் இந்தியக் கண்டுபிடிப்பு. அரேபியர்களும், எகிப்தியர்களும், கிரேக்கர்களும் இந்த மருத்துவமுறையை இந்திய ஹிந்துக்களிடமிருந்து கற்றுக் கொண்டார்கள். சுஸ்ருதரின் கண்புரை நீக்க அறுவைச்சிகிச்சை முறை அரேபியாவிலும், எகிப்திலும், கிரேக்கத்திலும் அதற்கு முன்னர் இருந்திருக்கவில்லை. சுஸ்ருதரின் மருத்த முறைகளைப் பின்பற்றி குணப்படுத்த இயலாமல் நோயால் பாதிக்கப்பட்ட கை,கால்கள் அறுவை செய்து நீக்கப்பட்டன. உடைந்த கைகால்கள் சரியாக்கப்பட்டன, ஹெர்னியா போன்ற வயிற்று அறுவைச் சிகிச்சைகளும் இன்னபிற சிகிச்சைகளும் செய்யப்பட்டன.

இன்றைய நவீன உலகிலும் சுஸ்ருதர் சொல்லும் மருத்துவமுறைகளே வெற்றிகரமாகப் பின்பற்றப்பட்டு வருகிற விஷயம் சாதாரண இந்தியனுக்குத் தெரியாது. தெரிந்தாலும் என்ன செய்துவிடப் போகிறான் அவன்?

படத்தில் : பிரிட்டிஷ் மருத்துவர்கள் முன்னிலையில் சரிசெய்யப்பட்ட மூக்கு



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard