அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. குறள் 1: கடவுள் வாழ்த்து மணக்குடவர் உரை:எழுத்துக்களெல்லாம் அகரமாகிய வெழுத்தைத் தமக்கு முதலாக வுடையன. அவ்வண்ணமே உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாக வுடைத்து.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்.குறள் 10: கடவுள் வாழ்த்து மணக்குடவர் உரை:பிறவியாகிய பெரிய கடலை நீந்தியேறுவர், இறைவனது அடியைச் சேர்ந்தவர்; சேராதவ ரதனு ளழுந்துவார்
அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து. குறள் 361: அவாவறுத்தல் மணக்குடவர் உரை: எல்லாவுயிர்க்கும் எல்லா நாளுங் கேடில்லாத பிறப்பைக் கொடுக்கும் விதையாவது ஆசையென்று சொல்லுவர். இஃது ஆசை துன்பம் தருதலேயன்றிப் பிறப்பையும் தருமென்றது.
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும். குறள் 362: அவாவறுத்தல்மணக்குடவர் உரை:வேண்டுங்கால் பிறவாமையை விரும்புதல் வேண்டும்:அப்பிறவாமை பொருளை விரும்பாமையை விரும்பத் தானே வரும். இது பிறவாமையும் இதனாலே வருமென்றது.
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும். குறள் 370: அவாவறுத்தல் மணக்குடவர் உரை: நிறையா இயல்பினையுடைய ஆசையை விடுவானாயின் அது விட்ட பொழுதே அழியாத இயல்பினைத் தரும். இயல்பாவது என்றும் ஒருபடிப்பட்டது. இது தன்னுடைய உருவத்தைப் பெறுமென்றது.
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு. குறள் 340: நிலையாமை மணக்குடவர் உரை:தனதல்லாத உடம்பினுள்ளே ஒதுக்குக்குடியாக விருந்த உயிர்க்குப் போயிருப்பதற்கிடம் அமைந்ததில்லையோ? அமைந்ததாயின் இதனுள் இராது. புக்கில் என்பது முத்தி ஸ்தானம் இது மேற்கூறியவற்றால் உயிர் மாறிப் பிறந்து வரினும் ஓரிடத்தே தவறுமென்பது கூறிற்று.
குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே உடம்பொடு உயிரிடை நட்பு. குறள் 338: நிலையாமை மணக்குடவர் உரை: கூடு தனியேகிடக்கப் புள்ளுப் பறந்து போனாற்போலும்,உடம்போடு உயிர்க்கு உள்ள நட்பு. மேல் ஒருபொழுதென்று காலங்கூறினார் ஈண்டு உயிர் நினைக்காத பொழுது போமென்றார்.
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு. குறள் 339:நிலையாமை மணக்குடவர் உரை: உறங்குவதனோடு ஒக்கும் சாக்காடு: உறங்கி விழிப்பதனோடு ஒக்கும் பிறப்பு. இது போன உயிர் மீண்டும் பிறக்கு மென்பதூஉம், இறத்தலும் பிறத்தலும் உறங்குதலும் விழித்தலும் போல மாறிவருமென்பதூஉம் கூறிற்று.
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் கடையரே கல்லா தவர். குறள் 395:கல்வி மணக்குடவர் உரை:பொருளுடையார் முன்பு பொருளில்லாதார் நிற்குமாறு போல, அதனைக் காதலித்து நிற்றலுமன்றிக் கற்றாரிடத்தாவர் கல்லாதார். இது கற்றார் எல்லாரினுந் தலையாவாரென்றது.
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினுந் தள்ளாமை நீர்த்து. குறள் 596: ஊக்கமுடைமை மணக்குடவர் உரை: நினைப்பனவெல்லாம் உயர்வையே நினைக்க: அந்நினைவு முடியாமல் தப்பினும் முயன்று பெற்றதனோடு ஒக்கும். இது தப்பினும் பழிக்கப்படா தென்றது.
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை. குறள் 411: கேள்வி
செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின் ஆன்றாரோ டொப்பர் நிலத்து. குறள் 413: கேள்வி மணக்குடவர் உரை: செவிக்கு உணவு போன்ற கேள்வியை யுடையவர் நிலத்தின் கண்ணே யிருப்பினும் அவியை யுணவாக வுடைய தேவரோடு ஒப்பர்.
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என். குறள் 420: கேள்வி மணக்குடவர் உரை:செவியால் நுகரும் இன்பத்தை யறியாத, வாயால் நுகரும் இன்பத்தையறியும் மாக்கள் செத்தால் வருந் தீமை யாது? வாழ்ந்தால் வரும் நன்மை யாது? உலகத்தார்க்கு. இது கேள்வியில்லாதார் பிறர்க்குப் பயன் படாரென்றது.
ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா மாற்றங் கொடுத்தற் பொருட்டு. குறள் 725: அவையஞ்சாமை மணக்குடவர் உரை:அவையஞ்சாது மறுமாற்றம் சொல்லுதற்காக நெறிமையானே நூல்களை அளவறிந்து கற்க வேண்டும். நூல் கற்றலாவது (1) மெய்யாராய்ச்சியாகிய நூலைக்கற்றலும், (2) வேதமும் ஆகமமும் கற்றலும், (3) உழவும் வாணிகமும் கற்றலும், (4) படைவாங்கல் மநுநீதி முதலியன கற்றலுமென நான்குவகைப்படும்.
ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறென்பர் ஆய்ந்தவர் கோள். குறள் 662: வினைத்திட்பம் மணக்குடவர் உரை:வினைசெய்யுங்கால் உறும் துன்பத்தை ஓரார் ஆதலும் அவ்விடத்துத் துன்பமுற்றால் தளரார் ஆதலுமாகிய இவ்விரண்டினது நெறியென்று சொல்லுவார் நீதி நெறியை ஆராய்ந்தவர். பரிமேலழகர் உரை:ஆய்ந்தவர் கோள் - முன் நீதிநூல் ஆராய்ந்த அமைச்சரது துணிபு; ஊறு ஒரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டன் ஆறு என்பர் - பழுதுபடும் வினைகளைச் செய்யாமையும், செய்யும் வினை தெய்வத்தான் பழுதுபட்ட வழி அதற்குத் தளராமையும் ஆகிய இவ்விரண்டன் வழி என்பர் நூலோர். (தேவர்க்கும் அசுரர்க்கும் அமைச்சுப் பூண்ட வியாழ, வெள்ளிகளது துணிபு தொகுத்துப் பின் நீதிநூலுடையார் கூறியவாறு கூறுகின்றமையின், ஈண்டு வினைத்தூய்மையும் உடன் கூறினார். உறுதலுடையதனை முன் 'ஊறு' என்றமையின், 'உற்றபின்' என்றும்,இவ் இரண்டன் கண்ணே பட்டது என்பார் 'இரண்டன் ஆறு' என்றும் கூறினார். 'ஊறு ஒரார்' என்று பாடம் ஓதுவாரும் உளர், அஃது 'ஒல்காமை' என்னும் எண்ணோடும், 'இரண்டு' என்னும் தொகையோடும் இயையாமை அவர் அறிந்தில மு. வரதராசன் உரை: இடையூறு வருவதற்கு முன்பே நீக்குதல், வந்தபின் தளராமை ஆகிய இந்த இரண்டினது வழியே வினைத் திட்பம் பற்றி ஆராய்ந்தவரின் கொள்கையாம்.
பிறந்த குழந்தைகளைத் தீய சக்திகள் தாக்காமலிருக்க வெண் கடுகைப் புகைத்து ஐம்படைத்தாலி கட்ட வேண்டும் .
மலைகள், காடுகள், ஆறுகளில் அணங்குகள் வாழும்; அவை மனிதர்களுக்கு,
குறிப்பாகப் பெண்களுக்குத் தீங்கு செய்யும் .
கொல்லிமலையில் பாவை ஒன்று இருந்ததாக நம்பினர்-
'பயம் கெழு பலவின் கொல்லிக் குட வரைப்
பூதம் புணர்த்த புதிது இயல் பாவை
விரி கதிர் இள வெயில் தோன்றி அன்ன, நின்
ஆய் நலம் உள்ளி வரின், எமக்கு
ஏமம் ஆகும், மலைமுதல் ஆறே. (நற்றிணை-192-8-12.)
சில பழக்கங்கள் -
பெண்ணின் மனநோயை (காதல் நோய்) குணப்படுத்தக் கட்டுச்சிவியைக் கொண்டு 'விரிச்சி' கேட்டனர்; வேலனைக் கொண்டு வெறியாடச் செய்தனர். பெண்பால் சோதிடர்கள் கழங்கு என்னும் காய்களைக் கொண்டு வருங்காலம் உரைத்தனர்.
1. திருமண முகூர்த்தம்
நல்லநாள் பார்த்துத் திருமணம் செய்யும் வழக்கம் இன்று போல அன்றும் இருந்தது. இணை பிரியாத காதலர்க்கு உவமையாகச் சந்திரனையும், ரோகிணியையும் வடமொழி நூல்கள் குறிப்பிடுகின்றன. தமிழ் நூலான அகநானூறும் இதைக் குறிப்பிடுகிறது. திங்களும் ரோகிணி நட்சத்திரமும் கூடிய நல்ல நாளில் திருமணம் நடந்ததாக அகம் 86, 136 ஆகிய பாடல்கள் கூறுகின்றன. இவ்விரு பாடல்களும் தமிழர்களின் திருமணச் சடங்குகளை மிக அழகாக வருணிக்கின்றன. டுநல் வாடையும் திங்கள் - ரோகிணி பற்றிக் குறிப்பிடுகிறது.
சந்திரன் பிற மனைவியரைக் காட்டிலும் ரோகிணியிடம் அதிக அன்பு கொண்டிருந்தான் என்பதற்கான காரணம் அதன் சுற்றுப்பாதையிலேயே ரோகிணியும் அமையப் பெற்றதுதான். வானத்தில் சந்திரன் செல்லும் பாதையிலிருந்து மற்றவை சற்று விலகியே உள்ளன; ஆனால் ரோகிணி மட்டும்தான் அதன் பாதையிலேயே அமைத்துள்ளது. திங்கள் ரோகிணியைக் கடக்கும் போது, அந்த நக்ஷத்ரத்துடன் ஒட்டிச் செல்வது போலக் காணப்படு வதால், சந்திர– ரோகிணி இணையை தம்பதியருக்கு எடுத்துக் காட்டாக்கியது இந்திய இலக்கிய மரபு.
2.பல்லி சொல்லுக்குப் பலன்
வீட்டில் வசிக்கும் பல்லி ஒலி எழுப்பினால் அது நல்ல சகுனம் என்று நம்பினர். இதை அகம் 9, 151, 289 ஆகிய பாடல்களிலும், நற்றிணை 98, 169, 333 ஆகிய பாடல்களிலும், கலித்தொகை 11-ம் பாடலிலும் காணலாம்.
3.தும்மலும் காதலனும்
யாரேனும் தும்மல் போட்டால் மேலை நாட்டினர் BLESS YOU என்று கூறுவர்.
இந்தியாவில் தீர்காயுஸ் (நீடூழி வாழ்க) என்பர்.
காதலன் தும்மியதும் காதலி வெகுண்டெழும் காட்சியைத் திருவள்ளுவர் பல
குறள்களில் வருணிக்கிறார். 'உன்னை வேறு ஒரு பெண் நினைக்கிறாள்; யார்
அந்தக் கள்ளக் காதலி?' என்று தலைவி சீறுகிறாள். இந்தக் காட்சியைக் குறள் 1312, 1317, 1318, 1203, 1253 ஆகியவற்றில் படித்து இன்புறலாம். இந்தக் கருத்தைச் சங்கப் பாடல்களில் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளனர்.
4.பட்சி சாஸ்திரம்
பறவைகளைக் கொண்டு ஆரூடம் கூறுவதைப் ’புள் நிமித்தம்’ என்று கூறுவர். இதைக் கொண்டு இனி நடக்கப் போவது என்ன என்பதை அறிய முடியும். இந்த நம்பிக்கை இமயம் முதல் குமரி வரை இருந்ததை வடமொழி நூல் களாலும் அறிய முடிகிறது. தமிழில் புறநானூறு 20, 68, 124, 204, 280, அகநானூறு 151 முதலிய பாடல்கள் இதை விளக்குகின்றன.
தொல்காப்பியமும் 6, 7 இடங்களில் நிமித்தம் பற்றிப் பேசுகிறது.
5.நாளும் கோளும்
போர் செய்யப்போகும் மன்னன் நல்ல நாளில் குடையையும் வாளையும் செல்ல வேண்டிய திசையில் எடுத்து வைப்பான். வாள்நாள் கோள், குடநாள் கோள் என்று தொல்காப்பியரும் இதைக் குறிப்பிடுகிறார். ஒருவர் எந்த நட்சத்திரத்தின் கீழ்ப் பிறந்தாரோ அதைக் கொண்டு அவருக்கு ஜாதகம் கணிக்கும் வழக்கம் பழந்தமிழகத்திலும் இருந்தது; புறம் 24-ம் பாடலில் பிறந்த நாள் நட்சத்திரம் பற்றிய குறிப்பு உள்ளது. பொருநராற்றுப் படையில் முடத்தாமக்கண்ணியாரும் இதைக் குறிப்பிடுகிறார். நாளும் ஓரையும் என்ற தொல்காப்பிய சூத்திரமும் குறிப்பிடத்தக்கது.
பரிபாடல் 19ல் முருகன் எழுந்தருளியிருக்கும் திருப்பரங்குன்றத்தில் ஓர் ஓவிய மாடம் இருந்தது என்றும் அங்கே, முதல் ஓவியம் சூரியன் வலம் வரும் அசுவினி முதலாவதாகிய நாண்மீன்கள், மற்ற பிற மீன்கள் (நட்சத்திரங்கள்) கொண்ட காலச் சக்கரத்தை விளக்கும் ஓவியமாகும் என்கிறார் நப்பண்ணனார்.
எரிகல் தோன்றினால் மன்னருக்குத் தீங்கு நேரிடும் என்றும் கருதினர். ஒரு தூமகேது தோன்றிய ஏழாம் நாளில் சேர மன்னன் யானை கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை இறந்ததைப் புறம் 229 பாடுகிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ராஜராஜ சோழன் தன் பிறந்த நாளான சதய நட்சத்திர நாளன்று பெரிய விழாவை எடுத்ததாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன.
6.சகுனம்
விளக்கு அணைவது, ஆந்தை அலறுவது, வால் நட்சத்திரம் தோன்றுவது, விண்கற்கள் விழுவது முதலியவற்றைத் தமிழர்கள் தீய நிமித்தங்களாகக் குறிப்பிட்டுள்ளனர். இவைகளைப் புறம் 41, 229, 238, 280, 395, அகம் 141 முதலிய பாடல்கள் எடுத்துரைக்கின்றன.
’மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும் துறந்த ஒழுக்கம் கிழவற்கு இல்லை (133 களவியல்) தலைவியை இரவுக்குறியிலோ பகற்குறியிலோ சந்திக்கச் செல்லும் தலைவன் ‘இன்றைக்கு என்ன நாள்? இப்பொழுது என்ன ஓரை ?’ என்று நாள், கிழமை , சகுனம் பார்த்துப் போவதைத் தொல்காப்பியர் அழகாகச் சொல்வார். உன்னம் என்னும் மரத்தைக் கொண்டும் சகுனம் பார்த்ததை (பதிற்றுப்பத்து) ஏழாம் பத்து குறிப்பிடுகிறது.
7.பலி இடுதல்
இறந்தோரைத் திருப்தி செய்வதற்காக அவர்கள் நினைவாக எழுப்பப்பட்ட நடுகல்லிற்கு வழிபாடு செய்வதைச் சங்கப் பாடல்கள் எடுத்துரைக்கின்றன. இது தவிரக் காகத்திற்கு 7 பிண்டம் சோறு பலியிடுவதை வடமொழி நூல்களும், குறுந்தொகை (பாடல் 210), அகம் (பாடல் 391) முதலிய தமிழ் நூல்களும் குறிப்பிடுகின்றன. ஆடு பலியிட்டு வழிபடுவதைக் குறுந்தொகை 362ம் பாடலில் காணலாம்.
8.வெறி ஆடல்
காதல் நோயால் வருந்தும் ஒரு பெண்ணில் உடல் மெலிந்து போவதைக் கண்ட அவளது தாய் அந்தப் பெண்ணை அணங்கு பிடித்துக் கொண்டது என்று எண்ணி வேலனைக் கொண்டு வெறி ஆடச் செய்வதும், கட்டுவிச்சியைக் கொண்டு விரிச்சி கேட்பதும் எண்ணற்ற பாடல்களில் வருகின்றன. ஏறத்தாழ முப்பது பாடல்களில் இக்குறிப்புகள் வருகின்றன.
9.பேயும் சுடுகாடும்
பேய் பற்றிய நம்பிக்கைகள் ஈராயிரம் ஆண்டுகளாக இருந்து வருகின்றன. சுடுகாட்டில் பேய் மகள் இருப்பாள் என்றும் சுடுகாட்டிற்குப் போனால், அதைத் திரும்பிப் பார்க்காமல் வர வேண்டும் என்றும், போர்க்களத்தில் காயமடைந்து உயிர் நீக்கப் போகும் வீரர்களைச் சுற்றிப் பேய்கள் நிற்கும் என்றும் தமிழர்கள் நம்பினார்கள். கலிங்கத்துப்பரணி முதலிய பரணி வகை இலக்கியங்களில் இவை பற்றிய செய்திகள் நிறைய உள்ளன. சங்ககால நூல்களில் புறம் 356, 363 குறுந்தொகை 231 முதலிய பாடல்கள் இக்கருத்தை வலியுறுத்துகின்றன.
பேயும் தீய சக்திகளும் தாக்காமல் தடுக்க ஐயவி எனப்படும் வெண்கடுகை நெருப்பில் இட வேண்டும், மணி அடிக்க வேண்டும், வேப்பிலையைப் பயன்படுத்த வேண்டும் என்பன போன்ற தகவல்களை அரிசில் கிழாரும் (புறம் 281), வெள்ளி மாறனாரும் (புறம் 296) தருகின்றனர்.
10. கண் துடிப்பும் கழங்கும்
பெண்களுக்கு இடது கண் துடித்தால் நல்லது என்ற நம்பிக்கை பழந் தமிழர் களிடையே இருந்தது. வால்மீகியும், காளிதாசனும் இதைக் காவியங்களில் பலமுறை குறிப்பிடுவதை வடமொழி நூல்களில் காணலாம். கலித்தொகை யில் பாலை பாடிய பெருங்கடுங்கோவும், முல்லை பாடிய சோழன் நல்லு ருத்திரனும் இதைப் பாடியுள்ளனர். நெல் பரப்பிக் கட்டுவிச்சி குறி சொல்வதை நற்றிணை (288, 373) குறுந்தொகை (181), முல்லைப்பாட்டு ஆகிய பாடல்களில் காணலாம். கழங்கு மூலம் சோதிடம் கூறுவதை ஐங்குறுநூறு 245: 8ல் கபிலர் வருணிக்கிறார். ''பாக்கத்து விரிச்சி'' என்று தொல்காப்பியரும் குறிப்பிடுவார்.
சங்கத் தமிழ் நூல்களிலும் தொல்காப்பியத்திலும் எண்ணற்ற சோதிடக் குறிப்புகளைக் காண முடியும். சங்ககாலத் தமிழர்கள் பறவைகள் பறக்கும் திசை, எழுப்பும் ஒலி ஆகியவற்றைக் கொண்டு (புள் நிமித்தம்) ஆரூடம் கூறினார்கள். பல்லி சொல்லுக்குப் பலன் கண்டனர். கண் துடிப்பதைக் கொண்டு சகுனம் பார்த்தனர்.
வெள்ளியும் வறட்சியும்
மழைக்கும் வெள்ளி கிரகத்திற்கும் உள்ள தொடர்பைச் சங்கப் புலவர்கள் பாடியுள்ளனர். வெள்ளி எனப்படும் சுக்கிரன் தெற்குத் திசைக்குச் சென்றால் பஞ்சமும் வறட்சியும் ஏற்படும் என்று பழந்தமிழர்கள் கருதினர்.
வசையில்புகழ் வயங்குவெண்மீன்
றிசைதிரிந்து தெற்கேகினுந்
தற்பாடிய தளியுணவிற்
புட்டேம்பப் புயன்மாறி - பட்டினப்பாலை
வடமொழி நூல்களும் இதே கருத்தைக் கூறுகின்றன. புறம் 117,384, 385, 386,
388, 389, பதிற்றுப் பத்து 13, 69 ஆகியவற்றில் சுக்ரன் பற்றிய குறிப்புகள் உள்ளன.
இடைக்காட்டுச் சித்தர் வறட்சி ஏற்படப்போவதை அறிந்துகொண்டு ஆடு மாடுகளுக்கு எருக்க இலைகளைத் தின்பதற்குப் பழக்கியதாக ஒரு வரலாறு உண்டு. இவர் 60 தமிழ் ஆண்டுகளின் பலன்களையும் பா வடிவில் தந்துள்ளார்.
கால்கோள் விழா -
நெடுநல்வாடை பாண்டிய மன்னனின் அரண்மனையைப் பற்றிக் கூறும்போது நாழிகை வட்டிலிலுள்ள இரு கோல்களில் நிழல்களும் ஒரே நேர் கோட்டில் விழும் நாளில் அந்த அரண்மனைக்குக் கால்கோள் நடத்தினர் என்று கூறுகிறது. கதிரவன் நேர் மேலே இருக்கும் நாளில் தான் இது நிகழும்.
”விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம்
இருகோற் குறி நிலை வழுக்காது குடக்கேர்பு
ஒரு திறஞ் சாரா அரைநா ளமையத்து நூலறி புலவர் நுண்ணிதிற் கயிறிட்டுத் தேஎங் கொண்டு தெய்வம் நோக்கிப் பெரும்பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்து...”
மணிமேகலையில், புத்தர் பிறந்த தினம் -
“ இருது இளவேனிலில் எரிகதிர் இடபத்து
ஒரு பதின் மேலும் ஒரு மூன்று சென்றபின்
மீனத்து இடைநிலை மீனத்து அகவையின்
போதித் தலைவனோடு பொருந்தி ” (11... 15 )
‘ வசந்த காலத்தில் ரிஷபத்தில் சூரியன் 13 நாட்கள் சென்றபின் மீனத்து இடை நிலையில் திங்களோடு பொருந்தும்போது’ என்று பொருள் தரும் இவ்வரிகளைச் சோதிடம் மூலம்தான் புரிந்து கொள்ள முடியும். வசந்தம் என்பது சித்திரை, வைகாசி இரு மாதங்கள் . இடபம் என்று சாத்தனார் கூறுவது வைகாசித் திங்களை -சூரியன் இருக்கும் மாதத்தை; புத்தர் பிறந்த அந்த நாளில் சந்திரனின் இடம் விசாகம்.
ராசிகளை ஓரைகளென்றும், நக்ஷத்ரங்களை நாண்மீன்களென்றும் கூற வேண்டும் என்கிறது ஒரு வலைப்பதிவு
பைந்தமிழ் நாட்டில் பன்றியார் ஒருவர் , பல்லியாரின் குறி கேட்டதாகப்
பாண்டிய மன்னர் ஒருவர் பாடியுள்ளார் -
உக்கிரப் பெருவழுதி
எய்ம் முள் அன்ன பரூஉ மயிர்எருத்தின்
செய்ம்மம் மேவல் சிறு கட் பன்றி
ஓங்கு மலை வியன் புனம் படீஇயர் வீங்கு பொறி
நூழை நுழையும் பொழுதில் தாழாது
பாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டென
மெல்லமெல்லப் பிறக்கே பெயர்ந்து தன்
கல் அளைப் பள்ளி வதியும் நாடன் ....... ( நற்றிணை –எட்டுத்தொகை )
பொறி அமைக்கப்பட்ட புனத்தில் மேய்வதற்காகச் சிறிய கண்களைக் கொண்ட பன்றி ஒன்று வருகிறது. அது முள் போன்ற பிடரி மயிரைக் கொண்டிருந்தது. அது நுழையும் போது ஒரு குறித்த திசையிலிருந்து பல்லி கத்தியது. உடனே பன்றி நின்றது. ஏதோ ஒரு நுண் உணர்வு. அது திரும்பாமலேயே அப்படியே பின்னோக்கி மெதுவாக நகர்ந்து சென்று அதன் பின்னர் தப்பிச்சென்று விட்டது.
கவுளிக் குறி கேட்பதைக்கூடப் பின்னால் வந்த மூடப்பழக்கம் என்று முடிவுகட்ட முடியாது. நிமித்திகம் என்றாலும், சோதியம் என்றாலும், சோதிடம் என்றாலும், ஜ்யோதிஷம் என்றாலும் துறை ஒன்றுதானே !
வடபுலத்தவர் நீரை ‘பாநி’ என்பதால் அங்கு சென்றால் நீரருந்தாமல் இருந்து விடுவோமா ?
( உடன் பிறப்பே ! உனக்கு மட்டும் ஒன்று சொல்லுவேன். உடனே ‘ஆகா’ போடு. வேண்டாம் என்று தாயே தடுத்தாலும், தமிழே தடுத்தாலும் கடமை தவறாத கண்மணியான நீ கேட்டிடவா போகிறாய் ? எவரேனும் ஏகடியம் பேசிவிட்டுப் போகட்டும். புல்லர் புறம் பேசட்டும்; பொருட்படுத்தாதே. அடலேறே! அண்ணன் அகம் குளிர ’ஆகா’ போட்டிடு; நாளைய வரலாறு நின் புகழ் பேசும் )
திருவள்ளுவர் திருக்குறளை ஆதி பகவன் முதற்.றே.. உலகு எனத் தொடங்குவார், இது தமிழர் மரபில் உலகம் யாவையும் தாமுள வாக்கலும் என சேக்கிழ்ழரும், உலகெலாம் உணர்ந்து என கம்பரும் தொடர்ந்த மெய்யியல் மரபே.
, இந்த உலகம் இறைவனால் படைக்கப் பட்டது என்பதற்கு உவமையாக எழுத்துக்கள் அகரத்தில் தொடங்குவதையும் காட்டுவார், மனிதன் கல்வி ஞானம் பெற முதல்படி எழுதக் கற்பாது, ஞானவழியில் இறைவனைக் காட்டிய வள்ளுவர் அடுத்த குறளிலேயே கற்றதனால் ஆய பயன் என்பது உலகத்தின் முழுமையான தூYஅ அறிவன் இறைவனின் திருவடி பற்றவே என்கிறார்.
கடவுள் வாழ்த்து அதிகாரத்தின் முடிவாக நாம் மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து பிறந்து என வாழும் பிறவி பெருங்கடலைக் கடக்க இறைவன் திருவடி பற்றுவதால் மட்டுமே முடியும் என அறுதியிட்டு கூறுவார்.
க்டவுள் வாழ்த்தில் வள்ளுவர் இறைவன் பெயரை, அதாவது நமது பாரம்பரிய தொன்மப் பெயர்களை கூறவே இல்லை, ஏன் கடவுள் என்ற சொல்லையும் கூட பயன்படுத்தவில்லை, இறைவனை ஒருமையில் பயன்படுத்தியது என்பது இந்த்யத் தத்துவ ஞான மரபில் இறைமை - பிரம்மம் ஒன்றே எனும் கோட்பாட்டையே கூஊருகிறார். பிரம்மம் சங்கெ இலக்கியத்தில் பிரம்மத்தை தமிழர் மரபில் தொல் பண்டைத் தமிழரை அந்தணர் என (அந்தம் - இறுதிப் பொருள், அணவுபவர்-ஆராய்ந்து இணைய்பவர்)
சமணச் சமயம் கடவுளை ஏற்பதில்லை. உயிர்களுக்குக் கன்ம பலன்களைப் (வினைகளை) புசிக்க வைக்கக் கடவுள் தேவையில்லை என்றும், கன்மங்கள் தாமாகவே தத்தம் பலன்களைத் தரும் என்றும் சமணம் கூறுகிறது. ஆனால் வள்ளுவம் இதற்கு முற்றிலும் மாறுபட்டது. மக்கள் இறைநெறியில் நின்றால் தான் துன்பங்களையும், விளைகளையும் கடக்க முடியும் என்று அது வலியுறுத்துகிறது. உயிர்களுக்குக் கன்மங்கள் தாமாகவே (கடவுள் துணை இல்லாமல்) பலன்களை விளைவிக்கும் என்பதை வள்ளுவர் சிறிதும் ஏற்கவில்லை என்பதைக் கீழுள்ள குறட்பாக்களினால் நன்கு உணரலாம்.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
‘வகுத்தான் வகுத்த வகையல்லர்”
என்றும் கூறியிருப்பதால் ஊழை வகுப்பவன் இறைவன் என்பதே அவர் கருத்தாகும். வகுத்தான்| என்பது ஊழைக் குறிப்பதாயினும் ஈங்கு இறைவன் என்று பொருள் கொள்வதே ஏற்புடைத்து.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு – 4 என்றும், இருள்சேர் இருவினையும் சேரா – 5 என்றும்,
அறவாழி அந்தணன் தாள் சோந்தார்க் கல்லால் – 8 என்றும், பிறவிப் பெருங்கடல் நீத்துவர் – 10 என்றும்,
பற்றுக பற்றற்றான் பற்றினை – 350 என்றும்,
திரும்பத்திரும்ப எல்லாவற்றிற்கும் மூலமுதல்வன் இறைவன் எனறே அவர் கூறுவதால், இங்கு வகுத்தான்| என்று கூறியிருப்பதை இறைவன் என்று பொருள் கோடலே ஏற்றது. வினையை வகுத்து ஊட்டும் முதல்வன் இறைவனேயென்று வள்ளுவம் கூறுவது சமணத்துக்கு நேர்மாறானது. இறைவனை மறுக்கும் சமணம் எங்கே? இறைவனை ஏற்கும் வள்ளுவம் எங்கே? இ•து அடிப்படை மாறுபடன்றோ!
மேலும், ஊழைக் காட்டிலும் வலிமையுடையது வேறொன்று இல்லை என்றும், வினைப்பயனை யாராலும் தவிர்க்க முடியாது என்று வலியுறுத்துவது சமணம். ஆனால், வள்ளுவம் ஊழை ஏற்றுக் கொண்டாலும் அதனை உலையா உழைப்பினால் புறம் தள்ளலாம் என்பது அதன் துணிபு. இதுவும் சமணத்துக்கும் வள்ளுவத்துக்கும் அடிப்படையிலுள்ள முரணாகும். வள்ளுவர் ஊழுக்கெதிராக ஆள்வினையுடைமையை வகுத்திருப்பது இந்தியச் சிந்தனை மரபில் ஒரு புதிய அத்தியாயம் ஆகும். பெளத்தம் கூட, ஊழை வெல்ல வேண்டுமெனக் கூறியிருந்தாலும், யாமறிந்த வரையில் மனித முயற்சிக்கு (ஆள்வினைக்கு) வள்ளுவம் தந்த அழுத்தத்தை அது தரவில்லை என்பதே உண்மையாகும்.
-- Edited by admin on Tuesday 18th of August 2020 12:01:11 PM