அன்னியரான ஆபிரகாம், வாரிசுகள் இஸ்ரேல் நாட்டின் அரசியல் உரிமைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள். |
அவர் பேரன் யாக்கோபு காலத்தில் 70 பேரோடு எகிப்துக்கு இடம் பெயர்ந்த மக்கள் 3 தலைமுறைக்குப் பின் 25 லட்சம் பேராக வந்து சிறு தெய்வம் கர்த்தர் துணையோடு மண்ணின் மைந்தர்களைக் கொலை செய்து கர்த்தரால் தேர்ந்தெஉக்கப்பட்ட அரசியல் உரிமை உள்ள மக்களாக குடியேரிய கதை. ராஜா தாவீது, சாலமன் காலத்தில் – ஜெருசலேம் மிகச் சிறிய கிராமம், இவர்கள் காலத்திற்கு 100 ஆண்டுபின் தான் பெருவாரியாக மக்கள் ஜெருசலேமில் குடியேறினர். |
• Finkelstein, Israel, and Silberman, Neil Asher, The Bible Unearthed : Archaeology’s New Vision of Ancient Israel and the Origin of Its Sacred Texts, Simon & Schuster 2002, ISBN 0-684-86912-8
இந்நூல் தெளிவு படுத்தும் (முன்பு பல பைபிள் அறிஞர்கள் கூறியது தான்) உண்மைகள். 1. இஸ்ரேலியர்- கானானிய மக்களே. பாபிலோனிலிருந்த வந்த ஒரு வெளியினம் அல்ல. 2. யாத்திர ஆகமம் என்னும் எகிப்தில் இருந்து மீட்டு வந்ந்தது வெறும் கட்டுக்கதை. 3. ஜெருசலேம் பொ.ச.மு. 7ம் நூற்றாண்டிற்குப் பிறகு தான் இஸ்ரேலியரிடம் வந்தது, அதுவும் ஒரு சிறு கிராமமாகவே இருந்தது. 4. யூதேயா- இஸ்ரேல் இரண்டும் சேர்ந்து ஒரு நாடக இருந்ததே இல்லை. 5. தாவீது- சாலமோன் – ஜெருசலேமிலிருந்து ஆண்டதானவை வெறும் கட்டுக்கதை, அவர்கள் சிறு கிராமத் தலைவர்கள். 6. பிதாக்கள் எனப்படும் ஆபிரகாம்-ஈசாக்- யாக்கோபு வெவ்வேறு நபர்கள்- ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர், இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளின் வாய்வழிக்கதைகளின் கதைநாயகர்கள். 7. ஜெருசலேம் தேவாலயம் என ஏது சாலமோனால் கட்டப் படவில்லை. |
இந்த நூல் மிகத் தெளிவாக கிரேக்கப் பாரம்பரியங்கள்- பக்கத்து நாடுகளில் எபிரேயர்கள் பற்றி உள்ள ஆதாரங்கள், ஆதியாகம நூலில் உள்ள பல நாடுகள் அவை அப்பெயரில் இயங்கிய காலம் எப்போது என ஆராய்ந்து – பொ.ச.270 வாக்கில் தான் நாடுகள் அப்பெயர்களில் இயங்கின என நிருபித்தார். கிரேக்க செப்துவகிந்தும் எபிரேயமும் ஒரே நேரத்தில் தான் புனையப்பட்டன எனக் காட்டுகிறார். |