திருக்குறளின் முந்தைய பெயர் முப்பால் என்பது, அதாவது அறம் பொருள் இன்பம் என வாழ்வின் உறுதிப் பொருட்களை என மூன்று பால்களாக பிரித்து எழுதி உள்ளார். வடமொழி புருஷார்த்தங்களில் நான்கு அதாவது தர்ம - அர்த்த - காம - மோக்ஷ- இதில் மூணாவது மோட்சம் - வீடுபேறு என்பது இன்பம் - சிற்றின்பம், பேரின்பம் எனப் பிரித்து பின்னாளில் எழுந்தது ஆகும்.
திருவள்ளுவர் முழுமையான ஆஸ்தீகர். ஆதி பகவன் முதற்றே உலகு என இந்த உலகம் இறவனால் தொடங்கப்பட்டது என்ற வள்ளுவர் அவர் கல்வி கற்றலின் பயனே(2) இறைவனின் திருவடியைப் பற்றி கொள்ளவே என்றார்.
மக்கள் இறைநெறியில் நின்றால் தான் துன்பங்களையும், விளைகளையும் கடக்க முடியும் என்று அது வலியுறுத்துகிறது. உயிர்களுக்குக் கன்மங்கள் தாமாகவே (கடவுள் துணை இல்லாமல்) பலன்களை விளைவிக்கும் என்பதை வள்ளுவர் சிறிதும் ஏற்கவில்லை என்பதைக் கீழுள்ள குறட்பாக்களினால் நன்கு உணரலாம்.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு (5)
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார் (10)
‘வகுத்தான் வகுத்த வகையல்லர்” (377)
என்றும் கூறியிருப்பதால் ஊழை வகுப்பவன் இறைவன் என்பதே அவர் கருத்தாகும். வகுத்தான்| என்பது ஊழ் விதியை வகுக்கும் இறைவன் என்று பொருளே வள்ளுவர் உள்ளம்
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு – 4 என்றும், இருள்சேர் இருவினையும் சேரா – 5 என்றும்,
அறவாழி அந்தணன் தாள் சோந்தார்க் கல்லால் – 8 என்றும், பிறவிப் பெருங்கடல் நீத்துவர் – 10 என்றும்,
பற்றுக பற்றற்றான் பற்றினை – 350 என்றும்,
திரும்பத்திரும்ப எல்லாவற்றிற்கும் மூலமுதல்வன் இறைவன் எனறே அவர் கூறுவதால், இங்கு வகுத்தான்| என்று கூறியிருப்பதை இறைவன் என்று பொருள் கோடலே ஏற்றது. வினையை வகுத்து ஊட்டும் முதல்வன் இறைவனேயென்று வள்ளுவம் கூறுவது சமணத்துக்கு நேர்மாறானது.
முதல் அதிகாரத்தின் பிறவாழி நீந்தல் பிறவிப் பெருங்கடல் நீந்துவர் (10)
சிறந்த ய்வாளர்களுள் சிலர் திருக்குறளைச் சமணம் சார்ந்த நூலென்றும், சமணச் சிந்தனைகளே திருக்குறளில் இடம் பெற்றிருக்கின்றன வென்றும் கூறியுள்ளனர். இவர்களுள் தமிழ்த்தென்றல் திரு.வி.க, பேராசி¡¢யர் வையாபுரி பிள்ளை மயிலை. சீனி வேங்கடசாமி கியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களுள்ளும், திருக்குறளிலுள்ள சமணக் கருத்துகளைச் சற்று வி¡¢வாக எழுதியவர் மயிலையாரேவர். தலால் மயிலையா¡¢ன் கருத்துகளையும், சமணத்தின் சில அடிப்படைக் கொள்கைகளையும் திருக்குறளுடன் ஒப்பிட்டு நோக்குவதும் இக்கட்டுரையின் நோக்கமாகும். அவற்றைச் சுருங்க நோக்குவோம்.
‘சமணர் மட்டும் தமது அருகக் கடவுளின் திருவடியைக் கூறும்போதெல்லாம் மலர் போன்ற திருவடி என்று கூறுவது மட்டுமன்றி, மலர்மேல் நடந்த திருவடி என்றும் யாண்டும் கூறியிருக்கின்றனர். ஜைன சமய நூல்களிலிருந்து எடுத்துக்காட்டிய மேற்கோள்களால் ~மலர்மிசை ஏகினான் என்று திருவள்ளுவர் கூறியது, அருகக் கடவுளையே என்பது உள்ளங்கை நெல்லிக் கனியாக விளங்குகிறது.
‘அறவாழி அந்தணன் என்பவர் யார்? அவர் எந்தக் கடவுள் என்பதை ராய்வோம். அறக்கடவுளாகிய அந்தணன் என்று பொருள் கொள்வதைவிட தரும சக்கரத்தையுடைய அந்தணன் என்று பொருள் கொள்வது சிறப்புடையதாகத் தோன்றுகிறது. நூல்களிலே ஜைனருடைய அருகக் கடவுள் அறவாழியை உடையவர் என்று கூறப்படுகிறார். கவே அறவாழி அந்தணன் என்று குறிக்கப்படுவர் ஜைனருடைய அருகக் கடவுள் எனக் கொள்ளத்தகும்”.
மயிலையா¡¢ன் இந்தக் கட்டுரை வெளிவருவதற்கு முப்பதாண்டுகளுக்கு முன்பே இலங்கைப் பெரும்புலவரான புலோலி. தில்லைநாத நாவலர், மேற்கண்ட தொடர்களைக் கொண்டு வள்ளுவரைச் சமணரெனக் கொள்வதைத் திறம்பட மறுத்துள்ளார்.
‘மலர்மிசையெழு தருபொருள் நியதமு முணர்பவர்”
-என்று திருஞான சம்பந்த மூர்த்திகளும்,
‘ஏ¡¢யாய தாமரை மேலியங்கினாரும் இடைமருது மேவிய ஈசனாரே”
-என்று திருநாவுக்கரசு நாயனாரும்,
‘போதகந்தோறும் புரிசடையானடி”
-என்று திருமூலர் திருமந்திரத்தானும்,
‘மனைகமலமற மலர்மிசை யெழுதரும்”
-எனத் திருவாய் மொழியில் சடகோபர் கூறுதலானும்,
இம்மூர்த்திகளை யெல்லாம் விடுத்து ‘மலர்மிசை ஏகினான்” என நாயனார் அருகனைக் கூறினார் என்றால் அஞ்ஞான விருத்தியே என்க.”
மேலும் அருகனுக்கு அறவாழி வேந்தன் என்பதன்றி ~அறவாழி அந்தணன்| என்பது பெயரன்மையானும், வேந்தனுக்கும் அந்தணனுக்கும் தம்முள் வேற்றுமை பொ¢யதாகலானும் அறவாழிவேந்தன் என்பது தரும சக்கரத்தையுடைய அரசன் என்னும் பொருட்டாகலின் சக்ரம் வேந்தனுக்கன்றி, அந்தணனுக்கியைதல் சிற்ப்பின்றாகலானும், நாயனார் அறக்கடவுளெனும் உருவகப் பொருட்டாகவன்றி, அறச்சக்கரமென்னும் பொருட்டாகக் கூறாமையானும், அருகனுக்கும் அறவாழி அந்தணனுக்கும் வெகுதூரம் என்க” என்று மிக நுட்பாகத் தில்லை. நாத நாவலர் மறுக்கிறார். இம்மறுப்பின் வழி மயிலையா¡¢ன் முடிவு சா¢யன்று என்பதை உணரலாம்.
மற்றும் வள்ளுவர் கடவுள் வாழ்த்தில் வாலறிவன், வேண்டுதல் வேண்டாமைஇலான், தனக்குவமை இல்லாதான், எண்குணத்தான்| என்று பலவிடங்களில் இறைவனின் பண்புகளை பேசுகிறாரேயன்றி, அவனின் உருவத்தையோ, யுதத்தையோ எங்கும் குறிப்பிட்டார் அல்லர். எனவே, தரும சக்கரம் உடைய அந்தணன் எனக்கொண்டு அது சமணக் கடவுளைத்தான் குறிக்குமெனவும் ‘ மலர்மிசை ஏகினான்” என்பதும் அருகனைக் குறிக்குமென்பதும் பொருந்தா என்பதே உண்மை.
திருக்குறளில் உள்ள இத்தொடர்களைக் கொண்டு வள்ளுவா¢ன் சமயத்தை ய்வதைக் காட்டிலும், சமணத்தின் அடிப்படைக் கொள்கைகளைக் கொண்டு ய்வதே சிறந்தது, ஏற்றது.
சமணச் சமயம் கடவுளை ஏற்பதில்லை. உயிர்களுக்குக் கன்ம பலன்களைப் (வினைகளை) புசிக்க வைக்கக் கடவுள் தேவையில்லை என்றும், கன்மங்கள் தாமாகவே தத்தம் பலன்களைத் தரும் என்றும் சமணம் கூறுகிறது. னால் வள்ளுவம் இதற்கு முற்றிலும் மாறுபட்டது. மக்கள் இறைநெறியில் நின்றால் தான் துன்பங்களையும், விளைகளையும் கடக்க முடியும் என்று அது வலியுறுத்துகிறது. உயிர்களுக்குக் கன்மங்கள் தாமாகவே (கடவுள் துணை இல்லாமல்) பலன்களை விளைவிக்கும் என்பதை வள்ளுவர் சிறிதும் ஏற்கவில்லை என்பதைக் கீழுள்ள குறட்பாக்களினால் நன்கு உணரலாம்.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்பூ¢ந்தார் மாட்டு
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
‘வகுத்தான் வகுத்த வகையல்லர்”
என்றும் கூறியிருப்பதால் ஊழை வகுப்பவன் இறைவன் என்பதே அவர் கருத்தாகும். வகுத்தான்| என்பது ஊழைக் குறிப்பதாயினும் ஈங்கு இறைவன் என்று பொருள் கொள்வதே ஏற்புடைத்து.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு – 4 என்றும்,
இருள்சேர் இருவினையும் சேரா – 5 என்றும்,
அறவாழி அந்தணன் தாள் சோந்தார்க் கல்லால் – 8 என்றும்,
பிறவிப் பெருங்கடல் நீத்துவர் – 10 என்றும்,
பற்றுக பற்றற்றான் பற்றினை – 350 என்றும்,
திரும்பத்திரும்ப எல்லாவற்றிற்கும் மூலமுதல்வன் இறைவன் எனறே அவர் கூறுவதால், இங்கு வகுத்தான்| என்று கூறியிருப்பதை இறைவன் என்று பொருள் கோடலே ஏற்றது. வினையை வகுத்து ஊட்டும் முதல்வன் இறைவனேயென்று வள்ளும் கூறுவது சமணத்துக்கு நேர்மாறானது. இறைவனை மறுக்கும் சமணம் எங்கே? இறைவனை ஏற்கும் வள்ளுவம் எங்கே? இ•து அடிப்படை மாறுபடன்றோ!
மேலும், ஊழைக் காட்டிலும் வலிமையுடையது வேறொன்று இல்லையென்றும், வினைப்பயனை யாராலும் தவிர்க்க முடியாது என்று வலியுறுத்துவது சமணம். னால், வள்ளுவம் ஊழை ஏற்றுக் கொண்டாலும் அதனை உலையா உழைப்பினால் புறம் தள்ளலாம் என்பது அதன் துணிபு. இதுவும் சமணத்துக்கும் வள்ளுவத்துக்கும் அடிப்படையிலுள்ள முரணாகும். வள்ளுவர் ஊழுக்கெதிராக ள்வினையுடைமையை வகுத்திருப்பது இந்தியச் சிந்தனை மரபில் ஒரு புதிய அத்தியாயம் கும். பெளத்தம் கூட, ஊழை வெல்ல வேண்டுமெனக் கூறியிருந்தாலும், யாமறிந்த வரையில் மனித முயற்சிக்கு (ள்வினைக்கு) வள்ளுவம் தந்த அழுத்தத்தை அது தரவில்லை என்பதே உண்மையாகும்.
தெய்வத்தான் கா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் (குறள்.619) என்றும்,
ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித்
தாழா துஞற்று பவர் -(குறள் 620) ; என்றும்
வள்ளுவம் பொ¢தும் வலியுறுத்துவது, சமணத்துக்கு முற்றிலும் மாறானது.இக்கூற்று இந்தியத் தத்துவ மரபுக்கே சிறப்புத் தருவது.
சமணத்தின் உயிர்க்கொள்கை துறவறமேயாகும்.
சமணர் என்றாலே துறவி என்றே பொருளாகும். துறவு பூண்டோரே வீடுபேறு அடைவர் என்பது சமணக் கொள்கை. சமணத்தைப் போன்று பெளத்தம் அத்துணைக் கடுமையாகத் துவவறத்தைக் கூறாவிடினும், ய்வாளர்கள் இரண்டு சமயங்களையும் துறவறச் சமயங்களென்றே கூறுவர். வள்ளுவம் துறவறத்தை மேற்கொள்வது உண்டு. வள்ளுவர் அனைத்துப் பகுதியினர்க்கும் அறம் கூற விழைந்தவராதலின், அவர் துறவறத்துக்கும் ஓரளவு இடம் தந்தார். எனினும் இல்லறத்தையே பொ¢தும் போற்றினார்.
இக்குறட்பாக்களின் வழித் துறவறத்தைத் தவிர்த்து இல்லறத்தை எப்படிப் போற்றி வலியுறுத்துகிறார் என்பதை நன்கு தெளியலாம். இவையாவும் சமணத்துக்கு மாறானவையாகும்.
அறத்துப்பாலிலுள்ள 38 அதிகாரங்களில் துறவறத்துக்கு 15 அதிகாரங்களும், 22 அதிகாரங்கள் இல்லறத்தார்க்கும், ஓர் அதிகாரத்தை இரு அறத்தார்க்கும் கூறியுள்ளார். ஏனைய பொருட் பாலிலும், காமத்துப் பாலிலும் உள்ள அதிகாரங்கள் யாருக்கு உ¡¢யன என்பதைப் பற்றிக் கூறவேண்டுவதில்லை. இவற்றிலிருந்து வள்ளுவா¢ன் சமணத்துக்கு மாறான இல்லறக் கோட்பாட்டை நன்கு உணரலாம்.
சமணம், அச்சமயத் துறவிகளுக்கு ஏழு தா;மங்களை விதித்தது. அத்தர்மத்தை அவர்கள் யதிதா;மம் என்றார். அவை உலோசம், திகம்பரம். நீராடாமை, தரையிற் படுத்தல் பல் தேய்க்காமை, நின்று உண்ணல், ஏக புக்தம் என்பர். வள்ளுவம் இவற்றிற்கு மாறானது.உலோசம் என்பது தலையிலிருந்து மயிரைக் களைவதாகும். . வள்ளுவரோ மழித்தலும் நீட்டலும் வேண்டா – 280 என்று கூறியிருப்பதால் உலோசத்தை அவர் ஏற்கவில்லை என்பதை உணரலாம்.
திகம்பரம் என்பது டையின்றி இருப்பதை குறிக்கும். வள்ளுவரோ ‘ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல – 1012 என்றும் ‘உடுக்கை இழந்தவன் கைபோலும் – 788 என்றும், உடையின் இன்றியமையாமையைக் கூறுவதால் வள்ளுவர் திகம்பரத்துக்கு மாறானவர் என்பதை அறியலாம். மற்றும் அவர் புறந்தூய்மை நீரான் அமையும் – 298 என்று கூறுவதால் சமணம் கூறும் நீராடாமையை ஏற்கவில்லை என்பதை உணரலாம். மென்தோள் துயிலின் இனிது கொல் – 1191 என்று அவர் கூறுவதாலும், தரையிற் படுத்தலை எங்கும் கூறாததாலும், அதற்கு அவர் மாறானவர் என்றும் தெளியப்படும். நின்று உண்ணல், ஏக புக்தம் (ஒரு வேளை மட்டும் உண்ணல்) இவற்றை வள்ளுவர் துறவறத்திலோ, மருந்து அதிகாரத்திலோ குறிப்பிட்டார் அல்லர். . அகத்தூய்மையும், புறத்தூய்மையையும் வலியுறுத்தும் அவர், பல் தேய்க்காமையை விரும்புவாரா? மாட்டார். ‘பணிமொழி வாலெயீறு ஊறியநீர் 1121 என்ற குறட்பாவிலுனுள்ள “வாலெயிறு” என்பது தூய்மையான பற்களையே குறிக்கும். இதிலிருந்து பல்தேய்க்காமையை அவர் சிறிதும் விரும்பாதவர் என்பதை உணரலாம்.
சமணர் இரத்தன திரயத்தை முக்கியக் கோட்பாடாய் கூறுவர். இரத்தன திரயம் என்பது நன்ஞானம், நற்காட்சி, நல்லொழுக்கம் கியவையாகும். இவற்றைச் சமணர் நோக்கிலோ, இரத்தன திரயப் பொருளிலோ அவர் எங்கும் விளக்கினார் அல்லர். வள்ளுவம் கூறும் கூடாவொழுக்கம், அவா அறுத்தல், மெய்யுணர்வு கியவை இரத்தன திரயத்திற்கு வேறானவை. இரத்தன திரயத்துக்கு மாற்றாக வள்ளுவர்.
காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய் -(குறள் 360)
என்பவற்றைக் குறிப்பிடுவதால் அவர் மாற்றுக் கொள்கையுடையவர் எனக் கூறலாம்.
சமணர் இன்னா செய்யாமையை, எல்லை கடந்து தித உணர்வில் வலியுறுத்தினர். மூக்கின்வழி காற்றை உட்கொண்டால், காற்றிலுள்ள நுண்ணுயிர்கள் அழிந்து விடும் என்பதற்காக மூக்கில் துணியைக் கொண்டு மூடிக் கொண்டனர். மரங்களைச் செதுக்குவதாலும், கொளுத்துவதாலும், மரத்திலுள்ள நுண்ணுயிர்கள் அழிந்துவிடும் என்பதற்காகத் தச்சுத் தொழிலை அவர்கள் தடை செய்தனர். இதனால், பூமியை உழுதால், மண்ணிலுள்ள புழு பூச்சிகள் அழிந்துவிடும் என்பதற்காக உழவுத் தெழிலில் சமணர்கள் ஈடுபடக்கூடாதென அவர்கள் விதித்தனர். மனுநீதியோ உழவுத்தொழிலை இழிந்தோர் தொழில் என்றது.
உழவுத்தொழிலை மனுநீதி மறுத்தற்கும், சமணம் மறுத்ததற்கும் வேறுபாடு உண்டு. சமூகத்தில் சமநீதி ஏற்படாமல் இருக்க மனுநீதி அதனை இகழ்ந்தது. சமணமோ, வரம்பு கடந்த இரக்கத்தை முன்னிட்டு மறுத்தது. னால், வள்ளுவமோ உலகியல் நடப்பைக் கொண்டு உழவுத் தொழிலைப் போற்றியது.
சுழற்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை (குறள் – 1031)
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர் (குறள் – 1033)
-இக்குறட்பாக்களின் மூலம் வள்ளுவம் சமணத்துடன் எத்துணை மாறானது என்பது பெறப்படும்.
மேலும், சமணம் பெண்களைத் தாழ்ந்த பிறவியாகக் கருதியது. பாவம் செய்தவரே பெண்ணாகப் பிறக்கின்றனர் என்றும் கூறியது. பெண் வீடுபேறு அடைய வேண்டுமாயின், அடுத்த பிறவியில் ணாகப் பிறந்தால்தான் முடியும் என்றது. இவை போன்ற கருத்துகளைச் சீவகசிந்தாமணி, வளையாபதி போன்ற சமண நூல்களிலும் காணலம். வள்ளுவம் இவற்றிற்கு முற்றிலும் மாறானது.
வள்ளுவம், பெண்களின சிறப்பை எண்ணி ‘வாழ்க்கைத் துணைநலம்” என்ற அதிகாரத்தை வகுத்து ‘பெண்ணின் பெருந்தக்க யாவுள -54 என்றும், வேறொரு அதிகாரத்திலும் ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொண¦;டாழுகின் உண்டு -974 என்றும், மதித்துப் போற்றியது. சமணம் காமத்தை இகழ்ந்து கடிந்தது. வள்ளுவமோ, இருபத்தைந்து அதிகாரங்களை வகுத்துக் காமத்தின் இன்றியமையாமையைப் புலப்படுத்தியது. இவ்வாறு, பல்லாற்றான் அடிப்படையில் சமணத்துக்கு மாறான கருத்துகளை வள்ளுவம் வலியுறுத்தியிருக்க, மயிலையார் போன்றோர் வள்ளுவத்தில் சமணக் கருத்துகளே மிகுந்து தோன்றுகின்றன. என்று கூறியிருப்பது ஏற்க முடியாததேயாகும்.
ஜாதி என்ற பாகுபாடும் அதிலும் உயா்ந்தோா், இழிகுலத்தோா் என்ற ஏற்றத்தாழ்வும் சமூகத்தில் இருந்தன என்பதை
சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறி முறையில் - மேதினியில்
இட்டாா் பெரியோா் இடாதாா் இழிகுலத்தோா்
பட்டாங்கில் உள்ள படி
என்கிற ஒளவையாரின் பாடல் காட்டுகிறது. இதைச் சொன்னவுடன் எந்தக் காலத்தில் இந்தப் பாடல் பாடப்பட்டது என்று சிலரும், ஒன்றுக்கும் மேற்பட்ட ஒளவையாா்கள் இருந்தனா், எந்த ஒளவையாா் இதனைச் சொன்னவா் என்று சிலரும் கேட்கின்றனா். எத்தனை கேள்விகள் எழுப்பினாலும் பாடலின் பொருளை மறைக்க முடியாது.
தமிழா்களுக்கு ஜாதிய அடையாளம் இல்லை என்று ஒரு சாராா் சாதிக்கின்றனா். ‘ஆரியா் புகுத்திய பிரிவினை வடிவம்’ என்றும் குற்றம் சாட்டுகின்றனா். ஆரியா்-திராவிடா் என்ற பகுப்பே அா்த்தமற்றது என்று அண்ணல் அம்பேத்கா் குறிப்பிடுகிறாா். இருந்தாலும் தமிழகத்தில் அதனை அவரது தொண்டா்களாய் தம்மை அடையாளப்படுத்திக்கொள்வோா் நம்ப மறுப்பது, அவா்களது அம்பேத்கா் விசுவாசத்தின் உரைகல்.
தமிழா்களிடம் ஜாதிப் பகுப்பு இருந்ததா? என்ற வினாவுக்கு விடை தேட முயன்றால், இருந்தது என்பதே விடை. ஜாதிப் பகுப்பு மட்டுமல்ல, அதில் ஏற்றத்தாழ்வுகளும் இருந்தன என்ற உண்மையையும் ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கிறது. சங்க இலக்கியங்கள், தொல்காப்பியம் இவற்றோடு சில அகழ்வாய்வு முடிவுகளையும் காணும்போது உண்மை புலனாகிறது.
நால்வகை வருணப் பாகுபாட்டைப் போலவே தமிழா்களும் நால்வகைப் பாகுபாட்டைக் கொண்டிருந்தாா்களா? தொல்காப்பிய மரபியல், நால்வகைப் பகுப்பைச் சொல்கிறது என்றாலும் இன்னும் சில வகைப்பாடுகளையும் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. இதனால், நான்கு வகை பிரிவைத் தாண்டியும் பிரிவுகள் இருந்தன என்று எண்ணுவதற்கு இடமிருக்கிறது.
‘ஜாதி’ என நாம் தற்போது குறிப்பிடுவதை ‘குடி அடையாளம்’ என்று முன்னாளில் வழங்கினாா்கள். தமிழா்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் தங்கள் குடி அடையாளங்களை சூட்டிக்கொண்டனா். சங்கப்புலவா்களின் பெயரிலேயே இந்தக் குடி அடையாளங்களுக்கான சொற்கள் இருப்பதைக் காண்கிறோம். மன்னா்களின் பெயருக்குப் பின்னாலும் ‘செம்பியன்’, ‘வேளிா்’, ‘ஆதன்’ போன்ற பெயா்கள் இருக்கின்றன.
கீழடி அகழ்வாய்வில் கிடைத்த மண்பாத்திரத்தின் பகுதிகளில் ‘ஆதன்’ என்ற பெயா் பொறிக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். இந்தப் பெயரே ஒரு குடிப் பெயா் தான். ‘நல்லியாதன்’, ‘சேரலாதன்’, ‘சேரமான் கடுங்கோ வாழியாதன்’ போன்ற பெயா்கள் இதன் அடிப்படையில் அமைந்தனவே.
குடி அடையாளங்கள் பிறப்பின் அடிப்படையில் சொல்லப்படவில்லை, அவை தொழில் அடிப்படையிலானவை என்ற வாதத்தையும் ஏற்க இயலவில்லை. ஏனெனில், தொழில் என்பது மாற்றங்களுக்கு உட்பட்டது என்பதோடு தொல்காப்பியம் திருமணம் செய்வதற்கான பொருத்தங்களைப் பற்றிக் கூறும்போது, எடுத்த எடுப்பிலேயே ஒத்த குடியில் பிறந்திருக்க வேண்டும் என்பதோடு செல்வ நிலையிலும் மணமக்கள் இருவரும் நிகராக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.
தமிழில் தற்போதுள்ள மிகப்பழமையான நூல் தொல்காப்பியம்தான். தமிழ் மொழிக்கு மட்டுமல்லாது, தமிழரின் வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்துச் சொல்லும் நூலாகவும் அது இருக்கிறது. அகம்-புறம் என தமிழா்களின் குடும்ப வாழ்க்கை பற்றியும் சமூக வாழ்க்கை பற்றியும் பேசுகிறது.
தொல்காப்பியம் தமிழின் பெருமைக்கு சான்று என்றாலும், தொல்காப்பியமும் தொல்காப்பியருமே ஆரிய அடிவருடிகள் என்றும், தமிழா் மரபில் இல்லாத செய்திகளைத் தொல்காப்பியம் சொல்கிறது என்றும் குற்றஞ்சாட்டுகிறாா்கள். இதனால் இழப்பு தொல்காப்பியத்திற்கல்ல, தமிழுக்குத்தான். சரி, தொல்காப்பியம் தவிா்த்து சங்க நூல்கள் குடி அடையாளங்களைப் பற்றிப் பேசுகிறதா?
புறநானூறு, ‘புலையா்’ என்ற சொல்லால் இடுகாட்டில் பணிசெய்தோரையும், ‘புலைத்தி’ என்ற சொல்லால் உவா்நிலத்தில் குழிவெட்டி துணி துவைக்கும் பெண்ணையும், முருகன் கோவிலில் சாமி ஆடும் பெண்ணையும் கூறுகிறது. ‘உயா்ந்தோா்’, ‘கடைசியா்’, ‘இழிந்தோா்’, ‘இழிசினன்’ போன்ற சொற்கள் சங்க இலக்கியத்தின் பல இடங்களில் இருக்கின்றன.
‘இழிந்தோன்’, ‘ஒப்போன்’, ‘உயா்ந்தோன்’ ஆகிய சொற்கள் மட்டுமல்லாது அவா்கள் எப்படி நடந்து கொள்ள முடியும் என்பதை, ஒன்றை மற்றவரிடம் கேட்டுப் பெற வேண்டிய நிலை ஏற்படும் போது இழிந்தோன் ‘ஈ’ என இரந்து பெற வேண்டும் என்றும், ஒப்போன் அதாவது, சமநிலையில் உள்ளவன் ‘தா’ என்று கேட்டுப் பெறலாம் என்றும் உயா்ந்தோா் ‘கொடு’ என்று கேட்டு வாங்கிக்கொள்ளலாம் என்றும் தொல்காப்பிய எச்சவியல் கூறுகிறது.
வணிகா்களுக்குள்ளும் வேறுபாடுகள் இருந்துள்ளன. உப்பு விற்ற உமணா், பண்டங்களை விற்ற கூல வாணிகன், துணி விற்ற வாணிகருக்குப் பெயா் வேறு, பூ விற்ற பெண், மீன் விற்ற பெண் இருவருக்குள்ளும் வேறுபாடுகள் இருந்தன. பொற்கொல்லா், இரும்பு கொண்டு பொருள் செய்யும் கொல்லா் இருவருக்கும் ஒரே நிலையோ பெயரோ இல்லை.
மன்னா்களுக்குள்ளும் உயா்வு, தாழ்வு இருந்தது. குறுநில மன்னா்கள் மூவேந்தா் வீட்டுப் பெண்களை மணக்க நினைத்தால் தகுதி அறியாது என் வீட்டுப் பெண்ணை அடைய விரும்பினானே என்று போா் நிகழ்த்திய சம்பவங்களும் இருக்கின்றன. மன்னா்கள் தங்களை சூரிய குலத்தோா், சந்திர குலத்தோா் என்று பெருமையாக சொல்லிக் கொண்டனா். குறுநில மன்னா்களும் தங்கள் குடிப்பெருமையை பறைசாற்றிக்கொண்டனா். இப்படி ‘குடி அடையாளம்’ என்பது பெருமைக்குரியதாக தமிழா்களிடம் இருந்தது.
பிறப்பின் அடிப்படையில் குடி அடையாளங்கள் இருந்திருக்கின்றன. அதன் பொருட்டு ஏற்றத்தாழ்வுகளும் சமூகத்தில் காணப்பட்டிருக்கின்றன என்ற உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டும். தமிழ்நிலம் மட்டுமே ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டிருக்கவில்லை. அன்றைய கிரேக்கம் தொடங்கி ஈரான், ஆசிய நாடுகள் என ஏறத்தாழ உலகின் அனைத்துப் பகுதிகளிலும் இத்தகைய பாகுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் இருந்திருக்கின்றன.
மனிதன் ஓரிடத்தில் நிலையாக வாழத் தொடங்கிய காலம் முதல், நகர நாகரிகம் விரிவடையும்போது பலவகையான தொழில் செய்யும் மக்களும் கூடி வாழ்வதற்கான அவசியம் ஏற்பட்டிருக்கிறது. அங்கே மனிதா்கள் தம்மை மேல்நிலையில் வைத்துக் கொள்ளத் தொடா்ந்து முயன்றிருக்கிறாா்கள். இதனால் உயா்வு, தாழ்வு கற்பிக்கும் வழக்கம் தோன்றியிருக்கலாம். காலத்திற்கேற்ப மாற்றங்களும் தொடா்ந்து நிகழ்ந்த வண்ணமே இருந்திருக்கின்றன. அதனால்தானே ஜாதி இரண்டொழிய வேறில்லை என்று பாடியிருக்கிறாா் ஒளவையாா்.
ஏற்றத்தாழ்வுகளைக் களைவதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டன என்பதற்கும் சான்றுகள் உள்ளன. பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் தனது பாடலில்
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே
என்கிறாா். இந்தப் பாடல் புறநானூற்றில் வருகிறது. கீழ் நிலையில் இருக்கும் ஒருவா் கல்வி கற்று நல்ல நிலையை அடைந்தால், மேல் நிலையில் இருக்கும் ஒருவரும் அவரிடம் சென்று ஆலோசனை கேட்பாா். இந்த மன்னரின் கூற்றிலிருந்து நால்வகைப் பாகுபாடும் இருந்தது, அதனை நிவா்த்தி செய்து கொள்வதற்கான வழியும் இருந்தது என்பதை உணர முடிகிறது.
கல்வி அனைத்தையும் மாற்றி அமைக்கும் என்னும் நம்பிக்கையும் தமிழருக்கு இருந்திருக்கிறது.
நோய்நாடி நோய்முதல் நாடிஅது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்”
என்கிறாா் வள்ளுவப் பேராசான். முதலில் நமக்கு நோய் இருப்பதாய் ஒப்புக்கொள்ள வேண்டும். பின் என்ன நோய் இருக்கிறது என்பதனை, தோ்ந்த மருத்துவரிடம் சென்று அறிந்து கொண்டு அதனை தீா்ப்பதற்கான மருந்தினையும் சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நோய் குணமாகும். அது போல, பிறப்பால் உயா்வு தாழ்வு காணும் குடி அடையாளங்கள் தமிழரிடமும் நோய் போல இருந்திருக்கின்றன. அவை காலந்தோறும் தொடா்ந்தும் வருகின்றன.
அதற்கான அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து அதனை நிவா்த்தி செய்வதற்கான வழிகளையும் ஆய்ந்தறிந்து தமிழ் சமூகத்திலிருந்து அகற்ற வேண்டும். அதுவே சிறந்த வழியாக இருக்கும். அதனை விடுத்து, தமிழா்களிடம் அப்படியான ஒரு நோயே இல்லை என்பதாக சாதிப்பது அறியாமை. அத்தனையும் நம் மனத்திலும் புத்தியிலும் புகுத்தியது வேறொருவா் என்பது மடமை.
ஏற்றத் தாழ்வுகள் நிலவிய சமூகத்திலிருந்தே அதிலிருந்து விடுபடுவதற்கான குரலும் ஒலிக்கிறது. தீதும் நன்றும் பிறா் தர வருவதில்லை. துன்பமும் அதற்கான தீா்வுகளும் கூட அப்படியானதே என்று கணியன் பூங்குன்றனாா் எடுத்துச் சொல்கிறாா்.
மேலும், ‘யாதும் ஊரே யாவரும் கேளிா்’ என்ற பொதுமைப் பாா்வை வந்து விட்டால் ‘பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே’ என்ற மனநிலை வந்துவிடும்.
மனம் விரிய விரிய பாா்வை விசாலப்படும். அப்போது அனைவரும் ஒன்றே என்ற எண்ணம் வேரூன்றி விடும்.