Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறள் அதிகார அமைப்பு வைப்பு முறை

Guru

Status: Offline
Posts: 7474
Date:
திருக்குறள் அதிகார அமைப்பு வைப்பு முறை
Permalink  
 
திருக்குறள்அதிகாரஅமைப்புவைப்புமுறை

திருக்குறள் 133 அதிகாரங்கள், அதிகாரத்திற்கு 10 பாடல் என 1330 பாடல் கொண்டது. மெய்யியல் மரபின் வாழ்வியல் உறுதிப் பொருட்களான அறம், பொருள் & இன்பம் எனப் பிரித்து என முப்பால் என்ற பெயரிலே தமிழ் மொழி நன்கு நெகிழ்ச்சி அடைந்த இடைக்காலத்தில் குறள் வெண்பா அமைப்பில் இயற்றப்பட்டது.

திருவள்ளுவமாலைப் பாடல்கள்

திருக்குறள் யாக்கப்பட்ட காலம் முதல் அது தமிழரால் போற்றப்பட்டும் உரைகளும் திறனாய்வும் செய்யப்பட்டன. திருவள்ளுவமாலை பாடல்கள் திருக்குறளின் மொத்தம் 133 அதிர்காரங்கள் மற்றும் இயல் பிரிப்புகளை உறுதி செய்ய உதவி உள்ளது.

20.  சிறுமேதாவியார்[ii] பார்வை (வீடு ஒன்றிய பாயிரம் 4, அறம் 33, ஊழ் 1, பொருள் 70, இன்பம் 25) & 37. மதுரைப் பெருமகனார்[iii] (அறம் 38, பொருள் 70, இன்பம் 25)

 குறள் வைப்பு முறை

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி. குறள் 356: மெய்யுணர்தல்.

கற்க வேண்டியவற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர் , மீண்டும் இப்பிறப்பிற்கு வராத, வீடுபேறு தரும் இறைவன் திருவடி பற்றும் வழியில் செல்வர்/

மெய்யுணர்தல் அதிகாரத்தில் பரிமேலழகர் வைப்பில் ஆறாவது மணக்குடவர் 8வது காளிங்கர் 5வது என பழமையான ஓலைச் சுவடிகளில் அமைந்துள்ளது

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று.              குறள் 1146: அலரறிவுறுத்தல்.

நான் அவரைப் பார்த்து பேசியதும் கொஞ்சமே! ராகு-கேது எனும் பாம்புகள் சந்திரனை ஒருநாள் பிடித்தால் நிகழும் கிரகணம் பற்றி பலநாள் பேசுவது போலே ஊர் முழுக்கப் பரவி விட்டதே!.

அலரறிவுறுத்தல் அதிகாரத்தில் பரிமேலழகர் மற்றும் காளிங்கர் வைப்பில் ஆறாவது; பரிதியார் ஏழாவது; மணக்குடவர் முதல் குறள்.

“அகர முதல..என்று தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்தாகிய “அவில் ஆரம்பித்து, “ன்னுடன் முடித்திருக்கிறார், என இணையத்தில் உள்ள கட்டுரைகள் உண்மையல்ல

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின். குறள் 1330: ஊடலுவகை

ஊடலுவகை-அதிகாரத்தில் பரிமேலழகர் வைப்பில் பத்தாவது மணக்குடவர் & காளிங்கர் நான்காவது என பழமையான ஓலைச் சுவடிகளில் அமைந்துள்ளது

இன்றைய குறள் எண் என்பது பரிமேலழகர் வைத்த அமைப்பு. அவருக்கு முந்தைய உரையாசிரியர்கள் வைப்பு சில பல மாறுபடுகிறது. தருமபுரம் ஆதீனம் வெளியிட்ட உரைக் களஞ்சியம் தொகுப்பு ஒவ்வொரு அதிகாரத்திலும் பழமையான உரையாசிரியர்கள் எப்படி அமைத்து இருந்தனர் என்பதை கொடுத்த முறையான ஆய்வு நூலாகும்.

__________________

இயல் பிரிப்பு அமைப்புகள்

அறத்துப்பால் - தமிழ் பதிப்புகளில் இன்று பயன்படுத்தப் படும் இயல் பிரிப்புகள் முவ பதிப்பு அடிப்படையில் தொடர்ந்து பாயிரம் - இல்லறவியல் துறவறவியல் ஊழியல் எனும் அமைப்பு பண்டைய உரை ஆசிரியர் அனைவரும் பயன் படுத்தியமையும், வள்ளுவ மாலை[iv] உறுதி செய்பவை ஆகும்

மணக்குடவர் இல்லறவியலில் -வாய்மைவெகுளாமைஇன்னா செய்யாமைகொல்லாமைபுலால் மறுத்தல்கள்ளாமை பரிமேலழகர் துறவறவியலுள் அதிகாரங்களை வைத்துள்ளார்

மணக்குடவர் துறவறவியலில் இனியவை கூறல், அடக்கமுடைமை, அழுக்காறாமை  வெஃகாமை புறங்கூறாமை ஆகிய 5 அதிகாரங்களை கள்ளாமை பரிமேலழகர் இல்லறவியலுள் வைத்துள்ளார். இன்றுள்ள அதிகார அமைப்பு பரிமேலழகர் வைப்பு .

பொருட்பால்: தமிழ் பதிப்புகளில் இன்று  ஏழாகப் - அரசியல், அமைச்சியல், அரணியல், பொருளியல், படையியல், நட்பியல் & குடியியல்,  . வள்ளுவமாலை[v] உறுதி செய்பவை

பொருட்பால் அமைப்பு

 போக்கியார் [vi]வள்ளுவமாலை

மணக்குடவர் &  பரிப்பெருமாள்

காலிங்கர்

பரிமேலழகர்

அரசியல் 39 - 63

அரசியல் 39 - 63

அரசியல்  38-63

அரசியல்- 39 -63

அமைச்சியல் 64 - 73

அமைச்சியல் 64 - 73

அமைச்சியல் 64 - 108

அமைச்சியல் (அங்கவியல்) 64 - 95

அரணியல் 74 -75

பொருளியல் 74 -78

ஒழிபியல் 96- 108

பொருளியல் -76

நட்பியல் 79 - 83 -

படையியல் 77-78

துன்பவியல் 84 - 95

நட்பியல் 79-95

குடியியல் 96 - 108

குடியியல்96 - 108

என்பது பொருட்பாலின் தோற்றுவாயாக உள்ள குறள்இதில் கூறப்பட்டுள்ள ஏழுவகைப் பொருளின் அடிப்படையிலேயே பொருட்பால் அமைந்து செல்கின்றது.

காமத்துப்பால் தமிழ் பதிப்புகளில் இன்று கற்பியல் 18 களவியல் 7,  பெரிதும் பின்பற்றப் படுகின்றது. இவை பரிமேலழகர் பகுப்பினை பின்பற்றுவதே ஆகும்

மணக்குடவர்[vii] 

பரிப்பெருமாள்

காலிங்கர் & மோசிகீரனார்[viii]

பரிமேலழகர்

குறிஞ்சி -5

அருமையிற் கூடல் (1-3)

ஆண்பால் கூற்று -7, 

கற்பியல் 18

பாலை -5

பிரிந்து கூடல் (4-21),

பெண்பால் கூற்று-12 

களவியல் 7

முல்லை  -5

ஊடிக் கூடல் (22-25)

இருபால் கூற்று-6

நெய்தல் -5

மருதம் -5

இன்று அச்சாகியுள்ள மணக்குடவர் உரையில் இப்பகுதி காணப்படவில்லை

__________________

Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 
அதிகாரத்தலைப்புகள்

மக்கட் பேறு என இல்லறவியலில் உள்ள அதிகாரம் மணக்குடவரில் புதல்வரைப் பெறுதல் என உள்ளதுமற்றபடி அனைத்து தொன்மை ஆசிரியர்கள் இன்றைய பெயரிலே தான் பயன்படுத்தி உள்ளனர்.

குறிப்பறிதல் எனும் அதிகாரம் பொருட்பாலிலும்தலைவன் - தலைவி மனதினுள் உள்ளதை அறிய என காமத்துப் பாலிலும் (காலிங்கர் 'குறிப்புணர்தல்')ஒரே பெயரில் உள்ளது.

கடவுள் வாழ்த்து: அனைத்து அதிகாரங்களிலும் தலைப்பில் வரும் சொல் அல்லது எதிர்- மறையானது உள்ளது, கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் கடவுள் எனும் சொல் இல்லை.

வள்ளுவர் ஒரு முழுமையான ஆத்திகர் - கற்றதின் பயன் இறைவன் திருவடியைத் தொழுவதற்கே, அறிவின் பயனே மீண்டும் பிறவாமை எனும் வீடுபேறு அடைய இறைவனை தேடிப் பற்றவே என்ற்பார், இறைவனை வணங்காதார் தலையில் உள்ள உறுப்புகள் பணி செய்யாதவை என்பார்.  மெய்யறிவை உணரும் உணர்வு இல்லாதவர்க்கு ஐந்து புலன்களின் வேறுபாட்டால் வளர்ந்த ஐந்து வகை உணர்வும் முற்றப்பெற்ற போதிலும் பயன் இல்லை.ஒரு பயனும் இல்லை.

இறைவன் என்ற சொல்லை அரசன், தலைவன் என்ற பொருளில் பொருட்பாலில் பயன்படுத்தி உள்ளார். இறை என்ற சொல்லை[ix] கை மணிக்கட்டு எனும் பொருளிலும் உள்ளதால் உலகைப் படைத்த பரம்பொருள் வணக்கம் பயன் கூறும் அதிகாரத்திற்கு வள்ளுவரே கடவுள் வாழ்த்து என வள்ளுவரே பெயர் கொடுத்துள்ளார் என்பர் அறிஞர்கள்.

திருவள்ளுவர் காட்டுவது 10 உடைமைகளா?

அதிகாரத் தலைப்புகளில் என இன்றைய பதிப்புகளில் உள்ளதை வைத்து வள்ளுவர் காட்டும் உடைமைகள் பத்து என நூல்களே வந்துவிட்டன.

1.அடக்கமுடைமை; 2.அருளுடைமை; 3.அறிவுடைமை;

4.அன்புடைமை; 5.ஆள்வினைஉடைமை; 6.ஊக்கமுடைமை;

7.ஒழுக்கமுடைமை; 8.நாணுடைமை; 9.பண்புடைமை &

10.பொறையுடைமை

பரிமேலழகர் அமைத்துள்ள அதிகாரப் பெயர்படி மேலே உள்ள பத்து, ஆனால் மணக்குடவர் உரைப்படி மேலும் 5 அதிகாரங்களில் அவர் பயன் படுத்தியுள்ளது    

1.ஈகையுடைமை; 2. கழுடைமை; 3.வாய்மையுடைமை; 4.தவமுடைமை துறவுடைமை

வள்ளுவர் காட்டும் உடைமைகள் பத்து எனும் தொடர் தவறானது, மேலும் குறள் உள்ளே மனித வாழ்வில் மெய்யியல் வழியில் மேலும் பல உடமைகள் வள்ளுவர்காட்டுவார்.

 அன்னிய காலனிய வழிச் சிந்தனையில் திருக்குறள் ஆராய்ச்சியில் புதைய கருத்து, பொருள், ஊகம் பரப்பல் அதிகமான வழியில் சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழ் அறிஞரான வ.வு.சி. திருக்குறளில் முதல் மூன்று அதிகாரங்கள் கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு மற்றும் நீத்தார் பெருமை பிற்காலத்தில் இடைசெருகல் என்றது மிகத் தெளிவான தவறானது என்பதை உறுதி செய்தது

[ii] 20. வீடொன்று பாயிர நான்கு விளங்கற

நாடிய முப்பத்து மூன்றென்றூழ்-கூடுபொரு

ளெள்ளி லெழுப திருபதிற் றைந்தின்பம்

வள்ளுவர் சொன்னவகை.  சிறுமேதாவியார்

[iii] 37. அறமுப்பத் தெட்டுப் பொருளெழுப தின்பத்

திறமிருபத் தைந்தாற் றெளிய - முறைமையால்

வேத விழுப்பொருளை வெண்குறளால் வள்ளுவனா

ரோதவழுக் கற்ற துலகு.  மதுரைப் பெருமருதனார்

[iv] பாயிர நான்கில் இல்லறம் இருபான் பன்மூன்றே

தூய துறவறம்  ஒன் றூழாக - வாய

வறத்துப்பா னால்வகையா வாய்ந்துரைத்தார் நூலின்

அறத்துப்பால் வள்ளுவனார் தேர்ந்து.                                      25. எறிச்சலூர் மலாடனார்

[v] அரசிய லையைந் தமைச்சிய லீரைந்

துருவல் லரணிரண்டொன் றொண்கூ - ழிருவியல்

திண்படை நட்புப் பதினேழ் குடிபதின்மூன்

றெண்பொரு ளேழா மிவை.                                         26. போக்கியார்

[vi] படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு
 (அதிகாரம்:இறைமாட்சி குறள் எண்:381)
படைகுடிகூழ்அமைச்சுநட்புஅரண்என்றுகூறப்படும்ஆறுஅங்கங்களையும்உடையவன்அரசருள்ஆண்சிங்கம்போன்றவன்.

[vii] காமத்துப்பால்கூறுவார்குறிஞ்சிபாலைமுல்லைநெய்தல்மருதம்என்னும்ஐந்திணையும்முதல்கருஉரிப்பொருள்பற்றிப்புணர்தலும்புணர்தல்நிமித்தமும்குறிஞ்சிஎனவும்பிரிதலும்பிரிதல்நிமித்தமும்பாலைஎனவும்இருத்தலும்இருத்தல்நிமித்தமும்முல்லைஎனவும்இரங்கலும்இரங்கல்நிமித்தமும்நெய்தல்எனவும்ஊடலும்ஊடல்நிமித்தமும்மருதம்எனவும்ஒரோஒருநிலம்ஐந்துஅதிகாரமாகஇருபத்தைந்துஅதிகாரத்தான்கூறி என வரும் மணக்குடவர் கூற்றுவழி அறிய முடிகின்றது.

[viii] ஆண்பாலே ழாறிரண்டு பெண்பா லடுத்தன்பு

பூண்பா லிருபாலோ ராறாக - மாண்பாய

காமத்தின் பக்கமொரு மூன்றாகக் கட்டுரைத்தார்

நாமத்தின் வள்ளுவனார் நன்கு.                              27. மோசிகீரனார்

[ix] குறள் 1157

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard