Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் -வள்ளுவர் கூறுவது என்ன


Guru

Status: Offline
Posts: 7474
Date:
பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் -வள்ளுவர் கூறுவது என்ன
Permalink  
 


 பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் -வள்ளுவர் கூறுவது என்ன

பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்  (அதிகாரம்:பெருமை குறள்:972)
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒரு தன்மையானதே; ஆயினும் செய்கின்ற  வேறுவேறு தொழில்களால் கிடைக்கும் பெருமை ஒத்து ருப்பதில்லை
 
பொருள் கொள்ள வரிஅமைப்பு:
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும்.
செய்தொழில் வேற்றுமையான் சிறப்பு ஒவ்வா.
பதவுரை: பிறப்பு-தோற்றம்; ஒக்கும்-ஒத்து அமைகிறது; எல்லா-அனைத்து; உயிர்க்கும்-உயிருக்கும். சிறப்பு- பெருமை ஒவ்வா-  ஒப்பாகாது - ஈடாகாது- இணையாகாது; செய்-செய்யும்; தொழில்-தொழில்; வேற்றுமையான்-வேறுபாட்டினால்.
6.jpg
எளிமையான இந்தக் குறளை வைத்து நவீன தமிழ் மெய்யியல் மரபை ஏற்காத நவீன புலவர்கள் பிரிவினை மூட்டி திருக்குறளை சிறுமை செய்வதால் நாம் விரிவாகக் காண வேண்டி உள்ளது.

எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் 

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை. (327: கொல்லாமை)
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.  (251:புலான்மறுத்தல்)
உயிர் என்கையில் எல்லாவித உயிரையும் வள்ளுவர் பல்வேறு குறளில் சொல்லி உள்ளார்.
வள்ளுவர் எழுபிறப்பு என ஏழுவகைப் பிறப்பு எனவும் குறிப்பிட்டுள்ளும் உள்ளார்(எழு பிறப்பு -தேவர், மக்கள், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் ஆகிய ஏழு வகையான பிறவி) -  இதில் முழுமையாய் அறத்தை செய்து வாழ்ந்தால் மேலுலகம் செல்ல முடியும் என்பதை வள்ளுவர் ஏற்கிறார், அதன் பின்னும் மீண்டும் மனிதனாகப் பிறக்கிறான், அற வாழ்க்கையோடு உலகைப் படைத்த றைவன் திருவடி பற்றிக் கொண்டால் பிறவியற்ற நல்லாறு அடைய இயலும் என்பது வள்ளுவர் பல்வேறு குறளில் காட்டி உள்ளார்.
பிறப்பு ஒக்கும் என்கையில், பிறப்பு வகையில் வேறுபாடுகள்பிறப்பு வேறுபாடுகள் 4விதம் என்பது மெய்யியல் மரபு
1.அண்டகம் - முட்டையில் குஞ்சு பொரிக்கும் பறவை இனம். (பறப்பன)
2.வேர்வையிலிருந்து தோன்றுவதான சுவேதசம் வகையில் கொசு முதலியவை
3.சிராயுசம் வகையில் - பாலூட்டிகள் தாய் கர்ப்பப்பையில் சுமந்து யோனி வழியில் பிறப்பு
4. உற்பிச்சம் - வித்து, வேர், கிழங்கு முதலியவைகளை மேற் பிளந்து தோன்றுவன- செடி-கொடி தாவரங்கள்.
 
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் என்றவர்- தொழில் வேற்றுமையான் என்கையில் இது மனிதப் பிறப்பை மட்டுமே குறிக்கும் என்பது தெளிவாகும்.  
 
ஒக்கும் -இச்சொல்லை வள்ளுவர் இன்னுமொரு குறளிலும் பயன்படுத்து உள்ளார்
மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று. குறள் 1112நலம் புனைந்துரைத்தல்.
'இவளது கண் பலரால் காணப்படும் பூவையொக்கும் என்று, நெஞ்சே! மலர்களைக் கண்டால் மயங்குகின்றாய்'
தலைவியின் கண்ணையும் பூவின் மலரையும் ஒப்பீடு, ஆனால் இரண்டு வேறு; எனவே பார்வைக்கு ஒன்று போலே ஆனால் வெவ்வேறு எனவே அமைந்துள்ளது.
 
பிறப்பு தன்மையில், ஈன்றாள் தன் கர்ப்பப் பையில் சுமந்து நம்மை பெற்றுடுக்கும் முறையில் பிறப்பு ஒரே மாதிரியாக அமைகிறது.எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் – பிறப்பு இயல்பு என்பது ஒரே மாதிரியாக அமைகிறது. 
 


__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
RE: பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் -வள்ளுவர் கூறுவது என்ன
Permalink  
 


செய்தொழில் வேற்றுமையான் சிறப்பு ஒவ்வா. 
சிறப்புஒவ்வா செய்தொழில் வேற்றுமையான் -செய்கின்ற தொழில் வேறுபாட்டினால் பெருமை ஒத்திருப்பது இல்லை
ஒவ்வா எனும் சொல்லினை வைத்தும் பல கயமை காண்பதால வள்ளுவரின் வழியே காண்போம்
காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும் 
மாணிழை கண் ஒவ்வேம் என்று.                   குறள் 1114: நலம் புனைந்துரைத்தல்
குவளை மலர்கள் காண முடிந்தால், தலைவியின் கண்களுக்கு தாம் ஒப்பாக வில்லையே என்று தலை கவிழ்ந்து நிலத்தை நோக்கும். 
 
ஒவ்வேம் என்பது ஒவ்வா என மேலுள்ள குறள் போலே எதிர்மறையிலே தான் வள்ளுவர் பயன் படுத்தி உள்ளார்
 ஒவ்வேம் -தலைவியின் கண்களுக்கு தாம் ஒப்பாக வில்லையே 
செய்யும் தொழில்களின் வேறுபாட்டால் கிடைக்கும் பெருமை ஒன்றாக இருக்காது என்பது இப்பகுதியின் பொருள். 
 
அதிகாரத்தோடே பொருள் காண்பது 
வள்ளுவர் எந்த அதிர்காரத்தில் ஒரு குறளை இயற்றி உள்ளாரோ - அந்த அதிகாரத்தின் தலைப்போடேயே தான் பொருள் காண்பது தமிழ் இலக்கண மரபு
பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் -குறள் பெருமை அதிகாரத்தில் உள்ளது
6%2Ba.jpg
பெருமை அதிகாரத்தில் குறள்972 -  பிறப்பு ஒக்கும் என்றவர் அடுத்த குறளிலேயே
மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.       ( 973:பெருமை)
மு. வரதராசன் உரை: மேல்நிலையில் இருந்தாலும் மேன்மைப் பண்பு இல்லாதவர் மேலானவர் அல்லர்; கீழ்நிலையில் இருந்தாலும் இழிகுணம் இல்லாதவர் கீழ்மக்கள் அல்லர்.
ள்ளுவர் கல்வியும் நற்பண்புகளில் ஒருவன் உயர் நிலை அடைய முடியும் என்கையிலேயே-நாம் வள்ளுவர் மேல் கீழ் என்பதை பிறப்பால் எனவும் கூறுவதைக் காணலாம்
மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் 
கற்றார் அனைத்திலர் பாடு. (409: கல்லாமை
சாலமன் பாப்பையா உரை:படிக்காதவர் மேல்சாதியில் பிறந்திருந்தாலும், கீழ்சாதியில் பிறந்திருந்தும் படித்தவர் அளவிற்குப் பெருமை இல்லாதவரே. 
 


__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

 நல்ல குடியில் பிறந்தவனிடனிடமே நல்ல  பண்புகள் இருக்கும் 
நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்.(குறள் 958:குடிமை)
ஒருவனுடைய நல்ல பண்புகளுக்கிடையில் அன்பற்ற தன்மை காணப்பட்டால், அவனை அவனுடைய குடிப்பிறப்புப் பற்றி ஐயப்பட நேரும்.
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல். 959: குடிமை)
நிலத்தின் இயல்பை அதில் விளைந்த பயிர்காட்டும்; அதுபோல் குடியிற் பிறந்தவரின்  இயல்பை அதில் பிறந்தவர் பேசும் சொல் காட்டும்.
 
 எல்லோரையும் ஒன்றாகப் பார்க்கவேணுமா 
வள்ளுவர் மிகத் தெளிவாய் ஒவ்வொருவரையும் அவரவர் தொழில் - தகுதி அடிப்படையில் தான் நோக்க வேண்டும் பொதுமைப் படுத்தி பார்க்கலாகாது எனவும் தெளிவாய் உரைக்கின்றார்.
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர் 528:சுற்றந்தழால்)
அரசன் எல்லாரையும் சமனாகப் பொதுநோக்கு நோக்காமல் அவரவர் தகுதியறிந்து அதற்கேற்பச் சிறப்பு நோக்கு நோக்குவானாயின், அச்சிறப்பு நோக்கி அவனை விடாது (விரும்பிச் சுற்றமாக) வாழ்பவர்கள் பலராவர்.
 
இவ்வுலக வாழ்விற்கு வள்ளுவர் காட்டும் வழி
வள்ளுவர் தன்மனிதன் நட்பு தேர்ந்தெடுக்க கூறு வழி
குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு. (793:  நட்பாராய்தல்)
மு. வரதராசன் உரை: ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும், குற்றத்தையும், குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனோடு நட்புக் கொள்ளவேண்டும்.
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.    (794:  நட்பாராய்தல்)
மு. வரதராசன் உரை: உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வரக்கூடிய பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்புக் கொள்ளவேண்டும்.
அரசன் தன் சார்பாக தூது அனுப்ப்வோரை தேர்ந்தெடுக்க வள்ளுவர் வழி
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.  ( 681: தூது)
அன்புடையவனாதல், உயர்ந்த குடிப்பிறப்பு உடையவனாதல், அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல் அகிய இவை தூது உரைப்பவனுடைய தகுதிகள்.
 
வள்ளுவத்தின் அடிப்படை வழிகாட்டல் 
ஆதி பகவன் முதற்றே உலகு என இந்த உலகம் இறைவனிலிருந்து தொடக்கம் முழுமுதல் கடவுளை உலகைப் படைத்த இறைமை (பிரம்மத்தை) கூறி தொடங்கினார்.
கல்வி கற்பதன் பயனே இறைவனின் திருவடியைப் பற்றி கொள்ளவே என்றவர்; இறைவன் திருவடி சேராதாரோல் மீண்டும் மீண்டும் பிறக்கும் பெரும் கடலை நீந்த  (முக்தி- மோட்சம் அடைதல்)இயலாது என்கிறார்.
 
திருக்குறளிற்கு வள்ளுவர் தரும் முகவுரை அறன் வலியுறுத்தல் அதிகாரம் முதல் பாடலிலேயே
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு. (31:அறன்வலியுறுத்தல்)
மணக்குடவர் உரை: முத்தியும் தரும் செல்வமும் தரும் ஆதலால், அறத்தின் மேல் உயிர்கட்கு ஆக்கமாவது பிறிதில்லை. இது பொருளான் ஆக்கம்  உண்டென்பாரை மறுத்து, அறன் வலி யுடைத்தென்று
 
வள்ளுவத்தின் அடிப்படை- இறை நம்பிக்கை, இறைவன் திருவடியைப்  பற்றி இவ்வுலகில் மீண்டும் பிறக்கும் வழியை அடைக்கும் வகையில் அறத்தை செய்து இறைவனை அடையும் வழி நாடவேண்டும்
 
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்
.      (குறள் 38:அறன்வலியுறுத்தல்)
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை (குறள் 36:அறன்வலியுறுத்தல்
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி. (356:மெய்யுணர்தல்)
இந்த உலகில் நாம் பிறந்த இந்த உடல் இருக்கிறது ஆனால் உயிர் எங்கே இருக்கிறது மீண்டும் மீண்டும் பிறப்பு எடுக்கிறது என்பதை வள்ளுவர்
உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு 
 (339 :நிலையாமை)

இந்த உலகில் நாம் இறைவனை வேண்டும் பொழுது ஆசைகள் எதை கேட்டாலும் கிடைக்கும் ஆனால் மனிதன் கேட்க வேண்டியது பிறவாமை என்னும் நிலை என்பார் வள்ளுவர்
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும். ( 362: அவாவறுத்தல்)
அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து. ( 361: அவாவறுத்தல்)
 


__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

 திருவள்ளூவர் அறத்தை வலியுறுத்த உத்தி
1. முந்தைய நூல்கள் மீது ஏற்றி வலியுறுத்துவார்- இது வள்ளுவர் பண்டைய மெய்யியல் மரபினை வலியுறுத்துபவர் என்பதை உறுதி செய்யும். 
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூற்றும் ஆக்கத் தரும். 183:
காணாவிடத்துப் புறஞ்சொல்லிக் கண்டவிடத்துப் பொய்செய்து உயிரோடு வாழ்தலின் புறங்கூறாதிருந்து நல்குரவினாற் சாதல் அறநூல்(தர்ம சாஸ்திரங்கள்) சொல்லுகின்ற ஆக்க மெல்லாந் தரும்.
Ulaku.jpg
2. உலகின் மீது ஏற்றி கூறுதல் - மரபு வழியே வாழும் சான்றோர்கள் ஏற்பதே உலகின் மீது ஏற்றி கூறுவது ஆகும்
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.   140:ஒழுக்கமுடைமை.
உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர்.
 
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.   (34: அறன்வலியுறுத்தல்.)
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். (குறள் 35:அறன்வலியுறுத்தல்.)
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லத நாடு. 735: நாடு. 
சாலமன் பாப்பையா உரை: சாதி, சமய, அரசியல், கருத்து முரண்பாடுகளால் வளரும் பல்வேறு குழுக்கள், கூட இருந்தே குழி பறிக்கும் சொந்தக் கட்சியினர், அரசை நெரக்கடிக்கு உள்ளாக்கும் சிறு கலகக்காரர்கள் (ரௌடிகள், தாதாக்கள், வட்டாரப் போக்கிரிகள்) ஆகியோர் இல்லாது இருப்பதே நாடு
அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது.  181: புறங்கூறாமை.
ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும், அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசமாட்டான் என்றால் அதுவே அவனுக்கு நல்லது. 
 
திருக்குறளில் தெய்வப் புலவரே தெளிவாய் யாரோடு சேர வேண்டும் - தவறான மோசடியாளரோடு இணைந்தால் கேடு என்பதை-
.தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை 
தீரா இடும்பை தரும்.          குறள் 508:  தெரிந்துதெளிதல்
ஒருவரை  ஆராய்ந்து பார்க்காமல்  துணையாகத் தேர்வு செய்து, அமர்த்திக் கொண்டால் தனக்கு மட்டும் அல்லாமல் அவரால் வருங்காலத் சந்ததியினர்க்கும் நீங்காத துன்பம் விளையும்
சான்றோர் ஆயினும் அவர் சேர்ந்துள்ள கூட்டம் அவரை தவறாய் வழிகாட்டும்
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு 
 
இனத்தியல்ப தாகும் அறிவு.          குறள் 452:  சிற்றினஞ்சேராமை
 நீர் தான் பாயும் இடத்தின் தன்மைக்கு ஏற்ப அந்நிலத்தின் தன்மையோடு திரிந்து விடும், மக்களுடைய அறிவும் அவர்கள் சேர்ந்துள்ள கூட்டத்தின் தன்மையை பெற்றுவிடும்
மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு 
இனநலம் ஏமாப் புடைத்து.        சிற்றினஞ்சேராமை குறள் 458
நிறைகுணம் பெற்றவராக இருந்தாலும்  நன்கு கற்ற சான்றோர் ஆயினும் அவர் சேர்ந்துள்ள கூட்டத்தினரைப் பொருத்தே  வலிமை அமையும் 
 
வள்ளுவர் காலம் தொட்டு அடுத்த ஆயிரம் ஆண்டுகள் பொஆ1800 வரையிலும் கூட ஆசிரியர் வீட்டில் அவரோடே வசித்து குருகுஅல அமைப்பில் படிப்பது தான் வழி, எனவே இவை பெரும்பாலும் அவரவர் குடிக்கான கல்வியை கற்கும் சூழல்
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.                              (543-செங்கோன்மை)
அந்தணர்கள் ஓதும் வேதம் மற்றும் தர்ம சாஸ்திர அற நூல்களின் ஆட்சி செய்து அதற்கு முன்னோடியாய் அவர் செங்கோல் இருக்க வேண்டும்.
   
“கடவது அன்றுநின் கைத் தூஉண் வாழ்க்கை;
வடமொழி வாசகம் செய்த நல்லேடு

கடனறி மாந்தர் கைந்நீ கொடுக்க” என.....” (அடைக்கலக் காதை)
வடமொழி தர்ம சாஸ்திர அற நூல்களில் கூறியபடி கோவலன் தானங்களைக் கொடுத்தார்.-சிலப்பதிகாரம் அடைக்கலக் காதை

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.                                   (8-கடவுள் வாழ்த்து)

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.                   (30-நீத்தார் பெருமை)
இந்தக் குறளினை வைத்து தாங்கள் முற்போக்கு என நம்பிக்கைகளை வள்ளுவம் மேல் ஏற்றுவோர் தமிழிற்கு சிறுமை செய்கின்றனர், இதே வழியில் தொடர்புள்ள இன்னுமொரு குறள் நீத்தார் என இவ்வுலக பற்றுக்களை நீத்து துறவறம் பூண்டோரைக் குறிப்பது
மணக்குடவர் உரை: எல்லாவுயிர்க்குஞ் செவ்விய தட்பஞ்செய்தலை மேற்கொண்டொழுகலானே, அந்தணரென்போரும் துறந்தாராகக் கொள்ளப்படுவர். மேல் துறந்தவர்களினுஞ் சிறியாருளரென்று கூறினார். இதனானே துறவாதாரினும் பெரியாருளரென்று கூறினார். இவை யெட்டானும் துறவறத்தின் பெருமை கூறப்பட்டது.
 
பரிமேலழகர் உரை: எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான் - எல்லா உயிர்கள் மேலும் செவ்விய தண்ணளியைப் பூண்டு ஒழுகலான்; அந்தணர் என்போர் அறவோர் - அந்தணரென்று சொல்லப்படுவார் துறவறத்தில் நின்றவர். (பூணுதல் விரதமாகக் கோடல். 'அந்தணர்' என்பது அழகிய தட்பத்தினை உடையார் என ஏதுப்பெயர் ஆகலின், அஃது அவ்வருளுடையார் மேலன்றிச் செல்லாது என்பது கருத்து. அவ்வாறு ஆணையுடையாராயினும் உயிர்கண்மாட்டு அருளுடையர் என்பது இதனால் கூறப்பட்டது.
மு. வரதராசன் உரை: எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.
கலைஞர் உரை: அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்.
சாலமன் பாப்பையா உரை: எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர்.
 
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல் (505 : தெரிந்து தெளிதல்)
ஒருவரது சிறப்புக்கும் குறைபாட்டிற்கும் அவரவர் செயல்களே  (செயலின் செம்மை) ஒருவர்க்குச் சிறப்பு தரும்.க - ஈடாக- இணையா
சிறப்பொவ்வா  செய்தொழில் வேற்றுமையான் -   செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.
 
திருக்குறளின் அடிப்படை இறை நம்பிக்கையோடு முக்தியை தேடுதல் என்பது அதைவிடுத்து திருவள்ளுவர் சொல்லாததை திருவள்ளுவர் சொன்னதாகக் கூறி பிரிவினை வாதம் செய்வதை வள்ளுவர் ஏற்கமாட்டார் நாடு எனும் அதிகாரத்தில் அவர் கூறும் அதேபோல அருகிலேயே மிக முக்கியமான ஆழம் என்ன எனில் வள்ளுவர் கூறி உள்ளது எனவே பொய்யாக வள்ளுவத்தில் இல்லாததை வைத்துக்கொண்டு நாத்திகம் ஆத்திகம் இடையே பொருள் கூறுகிறேன் என்றும் தேவையற்ற விதத்தில் சிறிய விஷயத்தை பெரிது படுத்தி தமிழர் மெய்யியல் மரபு செய்வோர் திருக்குறளை சிறுமைப்படுத்தும் திருக்குறள் துரோகிகள் என பெண்களை அழைத்துக்கொண்டு பணி செய்யலாம்
 
நிறையுரை:எல்லா உயிர்களுக்கும் பிறப்பு ஒத்த தன்மையதே; செய்யும் தொழிலின் வேறுபாட்டால் சிறப்பு ஒத்தவையாகா.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; செய்யும் தொழிலின் வேற்றுமையால் சிறப்பு ஒன்றாக இருக்காது என்பது பாடலின் பொருள்.
'பிறப்பொக்கும்' குறிப்பது என்ன?
பிறப்பு ஒக்கும் என்ற தொடர்க்கு பிறப்பு ஒத்துள்ளது என்பது பொருள்.
எல்லா உயிர்க்கும் என்ற தொடர் அனைத்து உயிர்களுக்கும் என்ற பொருள் தரும்.
சிறப்பு ஒவ்வா என்ற தொடர்க்கு பெருமையென்பது ஒத்திருக்காது என்று பொருள்.
செய்தொழில் என்ற தொடர் செய்கின்ற தொழில்கள் என்ற பொருளது.
வேற்றுமையான் என்ற சொல் வேற்றுமைகளால் என்ற பொருள் தருவது.
 
பிறப்பால் சிறப்பு உண்டாவதில்லை; செய்யும் தொழிலால் பெருமை வேறுபடுவதுண்டு. 
 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard