Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஐம்பூதங்கள்


Guru

Status: Offline
Posts: 7467
Date:
ஐம்பூதங்கள்
Permalink  
 


ஐம்பூதங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 
 
 
Jump to navigationJump to search

பஞ்சபூதங்கள் அல்லது ஐம்பூதங்கள் ஆகியவைகளின் சேர்கையினால் ஆனது இப்பிரபஞ்சம் மற்றும் அனைத்து ஜீவராசிகளும் ஆகும். வானம்காற்றுநெருப்புநீர் மற்றும் நிலம் ஆகியவை ஐம்பூதங்களாகும். இந்த கூட்டுப் பொருட்களின் பகுதிகள் பஞ்சீகரணத்தினால், இப்பிரபஞ்சம் மற்றும் ஜீவராசிகள் தோன்றின.

உலகம் ஐம்பூதங்களினால் ஆனது எனவும் அவற்றின் தோற்றம் குறித்தும் புறநானூறு பின்வருமாறு விளக்குகிறது

மண் திணிந்த நிலனும்
நிலம் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை
                             புறநானூறு 2, அடி 1-6

உலகம் ஐம்பூதங்களால் ஆனது என தொல்காப்பியம் பின்வருமாறு விளக்குகிறது

நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம்
                           தொல்காப்பிய பொருளதிகார மரபியல் 635

பௌத்தம்[தொகு]

பௌத்தம் நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகிய நாற்பெரும் அடிப்படைகள் உள்ளதென்ற கருத்தினைக் கொண்டது.

இந்து[தொகு]

பஞ்சபூதங்கள், சிவனுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது.[1] பஞ்சபூதங்களின் சேர்க்கையால் பிரபஞ்சமும் சீவராசிகளும் எவ்வாறு தோன்றியது என சாங்கிய சாத்திரங்கள் தெளிவாக உணர்த்துகிறது. பஞ்சபூதங்கள் மாயையின் வெளிப்படாக தோன்றியது. படைப்பின் துவக்கத்தில், முக்குணங்களின் நிலைகுலைவினால் சடப்பிரபஞ்சமும் உணர்வுடன் கூடிய சீவராசிகளும் தோன்றியது என்றும் சாங்கிய தத்துவம் கூறுகிறது.

ஆகாயம் (விண்வெளி)[தொகு]

முதலில் ’ஆகாயம்’ (விண்வெளி) எனும் பூதம் ’ஒலி’ எனும் ஒரே குணத்துடன் தோன்றியது. ஆகாயத்திற்கு தன்னில் அனைத்து சடப்பொருள்களுக்கு இடமளிக்கும் தன்மை உள்ளது. ஆகாயம் மற்ற நான்கு பூதங்களான காற்று, தீ, நீர் மற்றும் மண் ஆகியவைகள் தோன்றக் காரணமாக உள்ளது.

ஆகாயம் எனும் பூதத்தை யாராலும் தொட முடியாது பார்க்கவும் முடியாது. ஆகாயத்தை எவராலும் தொட முடியாது, குளிர், வெப்பம், உலர்தல், மணம் போன்ற குணங்கள் அற்றது. ஆகாயம் என்பது வெற்றிடம் ஆகும். எனவே ஆகாயம் எனும் பூதம் எதனாலும் கரைபடாதது. ஆகாயத்தை உலகப் படைப்புக்கு காரணமான ஹிரண்யகர்பன் (பிரம்மாண்டம்) (தங்க முட்டை) (Golden Egg) என வேதம் உரைக்கிறது.

சில உபநிடதங்கள் ஆகாயம் ஒரு உருவமற்ற, குணங்களற்ற, எதனுடனும் சேர்க்கை இல்லாத காரணத்தினாலும், வெற்றிடம் என்பதாலும் பிரம்ம தத்துவத்திற்கு எடுத்துக்காடாக ஆகாயத்தை கூறுகிறது. சில மெய்யியல் தத்துவவாதிகள் ஆகாயத்தை பஞ்சபூதங்களில் ஒன்றாக சேர்ப்பதில்லை. காரணம் மற்ற சடபூதங்களைப் போல், ஆகாயம் உருவம் மற்றும் குணங்களற்று இருப்பதால்தான்.

காற்று (வாயு)[தொகு]

’ஆகாயம்’ எனும் பூதத்தின் ஒரு பகுதியிலிருந்து ’காற்று’ (வாயு) எனும் பூதம், ’தொடு உணர்வு’ (ஸ்பர்சம்) எனும் குணத்துடனும், ஆகாயத்தின் சொந்த குணமாக ஒலி எனும் குணத்துடனும் தோன்றியது. எனவே காற்று தன் சொந்த குணமான தொடு உணர்வுடன், ஆகாயத்தின் ஒலி எனும் குணத்துடன் இரண்டு குணங்கள் கொண்டுள்ளது. காற்று எனும் பூதத்தின் இயல்பு ஒரு பொருளை உலர்த்தும் சக்தி படைத்தது. காற்றில் பிராணன் எனும் பிராணவாயு ஒரு சீவனை காப்பதால், அதையும் பிரம்ம த்த்துவமாக சில உபநிடதங்கள் காற்று எனும் பூதத்தின் சிறப்பை விளக்குகிறது.

வாயு தத்துவமானது அலைந்து திரியும் குணம், பொருட்களை உலர்த்தும் தன்மை, சூட்சுமமான தன்மை, அறிவு, மனம், பார்க்க இயலாமை, சுவாசிக்கும் பிராண வாயு மற்றும் உயிர் ஆகிய தன்மைகளுடன் போற்றப்படுகிறது. காற்றின் வடிவம் வட்டம் என்றும் அதன் நிறம் நீலம் என்று சாத்திரங்கள் கூறுகிறது.

நெருப்பு (அக்னி)[தொகு]

படம்காற்று எனும் பூதத்தின் ஒரு பகுதியிலிருந்து ’தீ’ எனும் பூதம் ’உருவம்’ (ரூபம்) எனும் குணத்துடன் தோன்றியது. அத்துடன் ஆகாயம் மற்றும் காற்றின் குணங்களான ஒலி மற்றும் தொடு உணர்வு குணங்களுடன் தன் சொந்த குணமான உருவம் எனும் குணத்துடன் ’தீ’ எனும் பூதம் மூன்று குணங்கள் கொண்டுள்ளது.

யாகம் அக்னி ஹோத்திரம் போன்ற சமயச் சடங்குகளில் அக்னியின் பங்கு சிறப்பானது. யாகத்தில் சொறியப்படும் ஹவிஸ் எனும் சிறப்பான உணவுப் பொருட்களை அக்னி எனும் பூதம்தான் தேவர்களுக்கும் இறந்த முன்னோர்களுக்கும் கொண்டு செல்கிறது. அதனால் தேவர்களும், இறந்த நமது முன்னோர்களும் மனம் மகிழ்ந்து நம்மை வாழ்த்துவர் என்பது இந்துக்களின் நம்பிக்கை. தீயின் குணம் தேஜஸ், நிறம் சிவப்பு.

நீர்[தொகு]

தீ எனும் பூதத்தின் ஒரு பகுதியிலிருந்து திரவ நிலையில் உள்ள ‘நீர்’ எனும் பூதம் ’சுவை’ எனும் குணத்துடன் உண்டானது. அத்துடன் ஆகாயம், காற்று, தீ எனும் பூதங்களின் குணங்களான ஒலி, தொடு உணர்வு மற்றும் உருவம் (ரூபம்) எனும் மூன்று குணங்களுடன் தன் சொந்த குணமான சுவை எனும் குணத்துடன், நான்கு குணங்களுடன் நீர் எனும் பூதம் விளங்குகிறது.

ஓடும் ஆற்று நீரில் முக்கிக் குளிப்பதால், செய்த பாவங்கள் நீங்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. எனவே கங்கைகாவேரி போன்ற ஆறுகளை இந்துக்கள் புனிதமானவைகள் என்று நம்பிக்கையுடன் ஆறுகளில் முக்கிக் குளிக்கின்றனர். மேலும் தானம், சத்தியம் செய்யும் போது நீரைச் சொரிந்து சாட்சியாக வைத்து செய்கின்றனர். நீர் எனும் பூதம் இந்துக்களின் புனிதமான ஒன்றாகும்.[2] தாயைப் பழித்தாலும் தண்ணீரை பழிக்கக்கூடாது என்ற பழமொழி மூலம் நீர் எனும் பூதத்தின் சிறப்பு அறியப்படுகிறது. நீரின் குணம் பொருட்களை தூய்மைப்படுத்துவது.

நிலம் (பிருதிவி)[தொகு]

நீர் எனும் பூதத்திலிருந்து ’நிலம்’ எனும் பூதம் ’வாசனை’ எனும் குணத்துடன் தோன்றியது. அத்துடன் ஆகாயம், காற்று, தீ, நீர் எனும் நான்கு பூதங்களின் குணங்களான ஒலி, தொடு உணர்வு, உருவம் (ரூபம்), சுவை எனும் நான்கு குணங்களுடன், தன் சொந்த குணமான வாசனை எனும் குணத்துடன் ஐந்து குணங்களைக் கொண்டது மண் (பிருதிவி) எனும் பூதம்.

மேற்கோள்கள்[தொகு]

  1.  The Pratyabhijñā Philosophy, G.V.Tagare, 2002, pag. 25
  2.  Symbolism of Place, John Fraim, http://www.symbolism.org/writing/books/sp/home.html, cap. 7


__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

AVvXsEiJLxPgad4mXQNV5FTu_J0yiK1xhEsFod-y AVvXsEhuA0d_fVg6a8SvifKBX59N4GP1Xss1jtLwAVvXsEj6aaQ02vVBEXAHysxZz-ZZ0f1keBPhO77KAVvXsEgybC0vV2aiIrftIE2JCdLLtk7tUuFWvx_VAVvXsEiGpmqcyRVkeje8EEqEMz5d2QwDgzX_YDxRAVvXsEgKYPsqgXvbnzDfN_q50rYinAqRiAA7XG3zAVvXsEhMqqs0DIBRzpDd9q6q-G8E3FNU687sWGAvAVvXsEgIj-C3ArqRQpigxxvHox46LDGFZhioaGAj



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

AVvXsEgyMCjwtshRp0OqkGTDd7NboB4TGb8xueFXAVvXsEiW2HdksiUHoK800EA7gsfA9Sqq-r9s7jHK AVvXsEjAMwZA6T9N2BGPwgn-dn7QAJz8t3wf2HFKAVvXsEgcZ1Vv_bfVYq-hqrSdqJ-pvzdKFW7kX28RAVvXsEitnrY3cokoGfEdRSLAJe0N2rUu82QjJAk7AVvXsEiBA2VmO-ZIIHQhyQyJ0e8xq-Lz4De33nvF AVvXsEjLWS9BPpMM-N6fauIiYbSIlZmIyQY1WoNv



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

AVvXsEjI1Jt4YFTl7QaKYen0K1wrV9FIIMsn4nXFAVvXsEhrw4feQ4TJL5PzTDqlF_qPuE4Qki1jOcHj AVvXsEiA9zAqntwD7mnCdLzN93b5noV5MzWhjLysAVvXsEjcAGjejp4PD_weqeTv4bvZMTXOxK8yNxUR  AVvXsEjpnH4UdMtqVGit0q9AZ-oLT0B3a8wDSagOAVvXsEhuLiGUnOy3sb0RH2beyigGOphWaFP0sSaT AVvXsEhrSBY6JiioyOS7VZ6CNSeToJFvQgx1IQHDAVvXsEhMuLyajx5GHT8gwL-LUYN03LIdtk8QqigG



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

AVvXsEjTHhSJtLKo_ovbROgOK180ZoIt-m0MBi_Y AVvXsEjYRl_I-YCA5gncA3a0_ZfSWQG936KSsFRKAVvXsEiZ7u3V8joXQ9Pft1WJAMaGwduPE1Y2JxvCAVvXsEjZ9BlVVs4Lp3dkBhLcV0-kuG-aMisHX46D AVvXsEitt5OjKaVUxv2sVsvz77wOm2gDi2B7SK6WAVvXsEgUkpGeG7-o18WSmvkEEP-mJ9m3-050NB7rAVvXsEgkJ4yd10kQxyWB_woEZqeOM-ElZ6VDulSX AVvXsEjb7XP2APYRGAd_Fdctzx9RaKH6nvjYk4DW



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

AVvXsEjWXjCIQvKRzaSY_xzI1TAhAsHqnR6eLERy AVvXsEjzPUEbW_QvyfXL6ABRKjglLm0gRijqAqvS AVvXsEiA0y83W21I3yLI4Du5A47Oc5j9yV1W1Jfx AVvXsEjQ1uiX9Nw7EMsPeAoxYF2LaTWvJswkopAu AVvXsEj9e6PKoKi2B80qHRcup24_0b_v5t8p0PY1AVvXsEgQTYSHB0BllXXJ2rNjG9cQXSnGT-JDRPf3 AVvXsEgQTYSHB0BllXXJ2rNjG9cQXSnGT-JDRPf3AVvXsEgFp_IsIy-zbEGjynD2XKio-lOkjEQekYs_



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

AVvXsEjgiUv0CEcGxV20jNMYJ9RcWt9_bzjY7txU AVvXsEjiro9VTxsbywQatG4HTimCtdPEJyM_L6Dd AVvXsEhMVPgWxTzkfAWt5rV8B0Y8Ak0Rc7iNUzBJ AVvXsEjRCDpEMYxIA-qY9QGRJt9TP1grxPMUHMFo AVvXsEi2C7mTAyJHl9h4__u9HcMljSVKutTL2w9JAVvXsEgA1sNp25gBFkBtdHIwXIR68SA88vb6TnV2 AVvXsEirgyiDoHxeoY7kDJ-gqlLRjqwKIlK_5cTjAVvXsEjwH-BqxaHJUOPZPck1gJE5aCfOBkvHrbXA



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

AVvXsEhVPPYHCe3yBckWGMqYC-QyfFM5jIN6HZsd  AVvXsEjLd-NiHZ62abAHlkv5AyKCdf7bN44fOkZG AVvXsEjXZs-eny81c1VtWtCjrxfjcdVp2GWzsYri AVvXsEiMv0xDLGFWNQ1UCuYnQo6KXACtkyTDeCjS AVvXsEjiStS31xL28ob2KijPrgtDCEEYuNwMxJhV AVvXsEhG0nnZhMG4OWxqpXi9338g-HYLe_SdZzCO AVvXsEhZR6ejEpZJdFtynouqGvXwnK7GZ-2p6_KiAVvXsEgXrt0GwoAW_ETruFWbx5ftMTXpPTAO1z4y



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

 AVvXsEgGrq9S9z0y53wMaQq4BitBIgkgjf_LxOA8 AVvXsEh_-PEWttFLgUCUk6oQ5yrGJmbJh_MW5ATR AVvXsEgb1POZmTLfC_7uEL_4oydviasI-Z2FyYIQ AVvXsEhhCga7Z1ponbt3C5gRYkSurl5Nhd9bVIB5 AVvXsEjEATEzqhl5AVHlzPsN5wNzs2MPtYVT2F7J AVvXsEj39DUWAJxbDAL0825-G4zrjNpc1DPfgIXi AVvXsEheC5BomyF915HQWszQsHbtzksAKNOgK0iR AVvXsEhTIks1-58Adzc80nU4o5H_YhNiMaFh_xnm



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

 AVvXsEgz4g4DFGs8oTzxEdXwoSrMxEUlLJ8zegO1  AVvXsEhMpWDoRhL_DiZM104kFTKSq986jeHExl3J AVvXsEiHeqzOrDAm6rD82M-Vf4eQha5EqAJ1kNDC AVvXsEjsrReAR6PldH5v1LEgfN10hjYl7qd6TjC_ AVvXsEhj1VWa7-oFPOEGcC-yCFZ80h68-nANl8Gc AVvXsEjZhcGoXrLKQ-xVZkl9dwi3K3Tyzut9j6H-  AVvXsEgp7zARWmwbmy-yWGC9ztYnc8kif_ZbnQvy



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

AVvXsEhdwWk7Ji0pxb0iYhLlo-e-eC2Stq-ch5gc  AVvXsEiTcaG-yrNKZMM9NUR6vXDZ1EkkfrRyZxFG AVvXsEgTYiOKj_FEPfX9tOgIxK9ScJQredESb0rqAVvXsEiB2iA9F6Eduodc1HAgozvm-tGThASXEW4g  AVvXsEjetQCn2ssZq2NWPSMgrhT_TYdHS5Fty5E- AVvXsEgvBg2mqOymoQonPRapbMtnMq8HWqKf-ORV AVvXsEg6F1-IQbG9J_WJATdWnXE0ZSfUmLJ7Lg6vAVvXsEi3s1fc4FpF_8DY3UtaVrUBdBq6-qhZGYMd AVvXsEgNUHO_RFot7E3lSzAwpHw6T021CS_oL9kN



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard