Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இந்தியாவின் பழமையான நடராஜர்ஒடிசாவின் அசன்பத் பொஆ300 நடராஜர் திருமேனிகீழே 13 வரி சமஸ்கருத கல்வெட


Guru

Status: Offline
Posts: 7474
Date:
இந்தியாவின் பழமையான நடராஜர்ஒடிசாவின் அசன்பத் பொஆ300 நடராஜர் திருமேனிகீழே 13 வரி சமஸ்கருத கல்வெட
Permalink  
 


 

 

நடராஜர் திருமேனிகீழே  13 வரி  சமஸ்கிருத கல்வெட்டும் பொஆ 300 சார்ந்த  ஒடிசாவில்நாகர் அரசன் சத்ருபஞ்சா புகழைக்

கூறும் (Satrubhanja பொஆ 261 முதல் 340 வரை) 

 photo_2022-07-02_11-07-36.jpg

ஒடிசாவின் அசன்பத் கிராமத்தில் கிடைத்துள்ள சத்ருபஞ்சாவின் பதின்மூன்று வரி சமஸ்கிருதக் கல்வெட்டு https://en.wikipedia.org/wiki/Satrubhanja

 அசன்பத் கிராமத்தில் கிடைத்துள்ள நடராசரின் கல்வெட்டு சமசுகிருத மொழியில், பிந்தைய பிராமி அல்லது சத்ருபஞ்சாவின் ஆரம்பகால கலிங்க எழுத்துகளுடன், வெற்றியாளர் எனவும் ஆன்மீக மனிதராக இவர் செய்த சாதனைகள் பற்றியும் விரிவான விவரங்களை வழங்குகிறது. பதின்மூன்று வரிகளைக் கொண்ட கல்வெட்டு பகுதி வசனமாகவும், பகுதி உரைநடையாகவும் எழுதப்பட்டுள்ளது.  

இப்போது ஒடிசா மாநில அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள அசன்பத் கல்வெட்டு, சத்ருபஞ்சாவை ஆட்சியாளர் எனவும் போர்வீரன் எனவும் விரிவான கண்ணோட்டத்தை அளிக்கிறது. இவர் நாக குலத்தில் அரசர்களிடையே சந்திரனைப் போலப் பிறந்தவர் என்றும், மகாபாரதத்தில் பீஷ்மருக்கு வழங்கப்பட்ட சிறப்புப் பெயரான இரனஸ்லாகின் (போரில் பெருமை கொண்டவர்) என்றும் விவரிக்கப்படுகிறார்.

Heliodorus_pillar_(cropped).jpg

சிந்து சரஸ்வதி நாகரீக ஆய்வில் உலகம் போற்றும் டாக்டர்.கல்யாணராமன் தரும் செய்து

 

Heliodorus_pillar_(cropped).jpg
ஜெனிவாவில் உள்ள CERN (European Center for Research in Particle Physics) 

 

"Hundreds of years ago, Indian artists created visual images of dancing Shivas in a beautiful series of bronzes. In our time, physicists have used the most advanced technology to portray the patterns of the cosmic dance. The metaphor of the cosmic dance thus unifies ancient mythology, religious art and modern physics."

அதாவது, "நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு முன்பே இந்திய கலைஞர்கள் சிவபெருமானின் நடன கோலத்தை வெண்கலத்தில் வடித்துள்ளனர். நம்முடைய காலத்தில், இயற்பியல் வல்லுனர்கள் மிக நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த பிரபஞ்ச நடனத்தினை வருணித்துள்ளோம். இந்த பிரபஞ்ச நடனத்தின் உருவணி மெய்ஞானத்தையும், அறிவியலையும் ஒன்றிணைக்கிறது." என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது குறித்து அவர் "TAO OF PHYSICS" என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் இந்து மதத்திற்கும், இயற்பியலுக்கும் உண்டான தொடர்புகளை அவர் குறிப்பிட்டுள்ளார்.

சத்ருபஞ்சா (Satrubhanja) பொ.ச. 4-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் (பொ.ச.261 முதல் 340 வரை இருக்கலாம்) ஒடிசாவின் கியோஞ்சர் பகுதியிலிருந்து ஆட்சி செய்த பத்மாவதி நாக ஆட்சியாளர்களின் விந்தியதாபி கிளையைச் சேர்ந்த ஒரு போர்வீரனும், பேரரசரும் ஆவார். சத்ருபஞ்சாவின் சகாப்தம் இந்தியாவில் ஏகாதிபத்திய சக்தியாக குப்தப் பேரரசின் எழுச்சிக்கு முந்தையது. இந்தியாவின் மற்ற ஆளும் பரசிவ நாகர்களுடன் சேர்ந்து பாடலிபுத்திரத்தை ஆண்டு வந்த குசானர்களை தூக்கியெறிய கைகோர்த்தார். அசன்பத் கிராமத்தில் கிடைத்துள்ள நடராசரின் கல்வெட்டு சமசுகிருத மொழியில், பிந்தைய பிராமி அல்லது சத்ருபஞ்சாவின் ஆரம்பகால கலிங்க எழுத்துகளுடன், வெற்றியாளர் எனவும் ஆன்மீக மனிதராக இவர் செய்த சாதனைகள் பற்றியும் விரிவான விவரங்களை வழங்குகிறது. பதின்மூன்று வரிகளைக் கொண்ட கல்வெட்டு பகுதி வசனமாகவும், பகுதி உரைநடையாகவும் எழுதப்பட்டுள்ளது.

 

ஒடிசாவில் நாகர்களின் ஆட்சி

பண்டைய மத்திய இந்தியாவில், விதிசா, பத்மாவதி, கந்திப்பூர், மதுரா போன்ற நகரங்களை தலைநகரங்களாகக் கொண்டு பொ.ச. 2 ஆம் நூற்றாண்டு முதல் பொ.ச. 4 ஆம் நூற்றாண்டு வரை நாக குலத்தினர் ஆட்சி செய்தனர். அசன்பத் கல்வெட்டு மூலம் சத்ருபஞ்சா கியோஞ்சர் என அடையாளம் காணப்பட்ட விந்தியதாபி கிளையிலிருந்து வடக்கு மற்றும் மேற்கு ஒடிசாவை ஆண்ட இந்த குலத்தின் பகுதியைச் சேர்ந்தவர் என்று அறிகிறோம். ஒடிசாவின் இந்தப் பகுதியில் நாகர்கள் ஒரு பரவலான சக்தியாக இருந்தனர். அதே நேரத்தில் முருண்டாக்கள் முழு திரி- கலிங்கப் பகுதியின் ஆதிக்க சக்தியாக ஆட்சி செய்தனர். குசான சக்தியும் வீழ்த்தப்பட்ட அதே சகாப்தத்தில் முருண்டாக்கள் நாகர்களால் தூக்கியெறியப்பட்டனர். ஒடிசாவின் வரலாற்றில் நாக குலத்தின் தோற்றம் பற்றிய பல பிற்கால குறிப்புகள் உள்ளன. குறிப்பாக ஒடிசாவின் பிற்கால பௌமகரா ராணி, முதலாம் திரிபுவன மகாதேவி நாக ஆட்சியாளரின் மகள் என்றும் நம்பப்படுகிறது. [2]

 

அசன்பத் கல்வெட்டு

இப்போது ஒடிசா மாநில அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள அசன்பத் கல்வெட்டு, சத்ருபஞ்சாவை ஆட்சியாளர் எனவும் போர்வீரன் எனவும் விரிவான கண்ணோட்டத்தை அளிக்கிறது. இவர் நாக குலத்தில் அரசர்களிடையே சந்திரனைப் போலப் பிறந்தவர் என்றும், மகாபாரதத்தில் பீஷ்மருக்கு வழங்கப்பட்ட சிறப்புப் பெயரான இரனஸ்லாகின் (போரில் பெருமை கொண்டவர்) என்றும் விவரிக்கப்படுகிறார். [3] கலியுகத்தின் இறுதி வரை நீடிக்கும் ஒரு குடும்பத்தில் பிறந்த தெய்வீக குழந்தை என்றும் விவரிக்கப்படுகிறார். அநேகமாக இவர் மிக உயர்ந்த நாக குலக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் கல்வெட்டின் படி எதிர்காலத்தில் எதிரிகளுடன் போரில் வெற்றி பெறுவார் என்றும் கருதப்படுகிறது. சத்ருபஞ்சா விந்தியதாபியின் (கியோஞ்சர் மற்றும் அதை ஒட்டிய நவீன மயூர்பஞ்ச் - சிங்பூம் மாவட்டங்கள்) ஆட்சியாளராக விவரிக்கப்படுகிறார். இவர் மகாராஜா மானபஞ்சா மற்றும் ராணி மகாதேவி தமயந்தி ஆகியோரின் மகன். முருண்டாக்கள் மற்றும் குசானர்களுடன் நூற்றுக்கணக்கான போர்களுக்குப் பிறகும் இவர் ஒரு வெற்றிகரமான போர்வீரராக இருந்தார். பூமியில் நிறை பிரகாசம் கொண்ட சூரியனைப் போலவே பூமியில் நல்ல செல்வத்தின் தரத்தை கல்வெட்டில் விவரிக்கப்படுகிறார்.



-- Edited by admin on Wednesday 3rd of August 2022 12:23:55 PM

__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
RE: இந்தியாவின் பழமையான நடராஜர்ஒடிசாவின் அசன்பத் பொஆ300 நடராஜர் திருமேனிகீழே 13 வரி சமஸ்கருத கல்வ
Permalink  
 


https://oruvasagam.pressbooks.com/chapter/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/

வேத ஸம்மதமானாலே வைதிகம் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

https://www.kamakoti.org/tamil/5part124.htm 

வேதத்தில் சிவநாமத்தின் ஸ்தானம் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)https://kamakoti.org/tamil/3dk291.htm

விலையுயர்ந்த ரத்னமொன்று நம்மிடமிருந்தால் வீட்டிலே எங்கே வைப்போம்? வாசல் புற ரூமில் வைப்போமா? தோட்டத்தைச் சேர உள்ள ரூமில் வைப்போமா? ரொம்பவும் காபந்தாக மத்தியில் இருக்கிற ரூமில் இரும்புப் பெட்டியில்தான் வைப்போம். அப்படியே வேதத்தில் ஜீவரத்னமான சிவநாமத்தை ரொம்பவும் ஜாக்ரதைப்படுத்தி வைத்திருக்கிறது. நாலில் மத்தி இரண்டாவது. நாலு வேதங்களில் இரண்டாவது யஜுஸ். அதர்வவேதத்தைச் சேர்க்காமல் ரிக், யஜுஸ், ஸாமம் என்ற மூன்றை மட்டும் ‘த்ரயீ’ என்பதுண்டு. அப்போதும் ரிக்குக்கும் ஸாமத்துக்கும் நடுவில் வருவது யஜுஸே. யஜுஸிலேயே சுக்ல யஜுஸ், க்ருஷ்ண யஜுஸ், என்று இரண்டு இருப்பதால் நாலு வேதத்தை நாலு வேதத்தை ஐந்து என்று ஆக்கினாலும் ரிக், சுக்ல யஜுஸ், க்ருஷ்ண யஜுஸ், ஸாமம், அதர்வம் என்ற ஐந்தில் நட்ட நடுவாக வருவது மூன்றாவதான க்ருஷ்ண யஜுஸ்தான் இந்த க்ருஷ்ண யஜுர் வேதத்தில் மத்ய பாகம் அதன் நாலாவது காண்டம். அந்தக் காண்டத்தின் மத்யம் ஐந்தாவது ப்ரச்னம். இதிலேதான் நடுவில் ஸ்ரீ ருத்ர ஸூக்தம் எனப்படுவதில் நடுநாயகமாக பஞ்சாக்ஷரம் வருகிறது. அந்த பஞ்சாக்ஷரத்துக்கும் மையமாக ‘சிவ’ என்ற த்வயக்ஷரம் இருக்கிறது.

உடம்பை மெய் என்கிறோம். அதிலே இருக்கிற பரமாத்மாவை மெய்ப்பொருள் என்பார்கள். ஸத்வஸ்து என்று வேதாந்தத்தில் சொல்வதைத் திருவள்ளுவர் அப்படியே தமிழில் ‘மெய்ப்பொருள்’ என்கிறார். வேதங்களையெல்லாம் ஒரு சரீரமாக – மெய்யாக – வைத்துக் கொண்டால் அதில் உயிராக, மெய்ப்பொருளாக இருப்பது சிவநாமா. உயிர் என்னும் பரமாத்மா இருக்கும் ஸ்தானம் ஹ்ருதயம் என்றால், அந்த ஹ்ருதயம் சரீர மத்தியில்தான் இருக்கிறது. இதைத்தான் ஞானஸம்பந்தரும் சொல்கிறார்.

வேத நான்கினும் மெய்ப்பொருளாவது

நாத(ன்) நாமம் நமச்சிவாயவே

வீட்டுக்கு நடுவே காபந்தாக இருக்கும் ரத்னம் போல வேத சரீரத்தின் நடுவே அதன் ஜீவரத்னமாக உயிர் கொடுத்துக்கொண்டு சிவ நாமாவாகவே பரமாத்மா இருக்கிறார். இந்த அபிப்ராயத்தையே அப்பைய தீக்ஷிதர் ப்ரஹ்ம தர்க்க ஸத்வத்தில் (ஸ்லோ. 27) “யஜ்-ஜீவ ரத்நம் அகிலாகம லாலநீயம்” என்கிறார்.

அவ்வைப் பாட்டி செய்திருக்கிற நூல்களில் ‘நல்வழி’ என்பது ஒன்று. என்ன ஜாதி, என்ன மதம் என்றெல்லாம் கேட்காமல் மநுஷ்யராகப் பிறந்த எல்லாருக்குமான நீதிகளை அதில் சொல்லியிருக்கிறது. இப்படி நூலில், “சிவாய நம என்று சிந்தித்திருப்போர்க்(கு) அவாயம் (அபாயம்) ஒரு நாளுமில்லை” என்று வருகிறது. அதனால் சிவநாமம் ஸகல ஜனங்களுக்கும் ஏற்பட்டது என்று தெரிகிறது. ஜாதி ப்ரஷ்டம் பண்ணி வைக்கப்பட்ட சண்டாளன்கூட சிவநாமம் சொல்ல வேண்டுமென்றிருக்கிறது. ஸ்ரீருத்ரத்தில் பரமேஸ்வரனை நாய், நாய் தின்னுகிறவன் உள்பட எல்லாமாகச் சொல்லியிருப்பதாலேயே அவனுடைய நாமா எல்லோருக்கும் ஸொத்து என்று தெரிகிறது. 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

வைஷ்ணவர் கூறும் பெருமை : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

ஸ்ரீமத் விஷ்ணு பாகவதத்தில் சிவ நாமாவின் பெருமை வந்திருப்பது போலவே ஸ்ரீவைஷ்ணவர்கள் ரொம்பவும் போற்றி மரியாதை செய்கிற ஒருவரும் அந்த நாமாவுக்கு உரியவரான பரமேச்வரனின் உயர்வைச் சொல்லியிருப்பதாக எனக்கு ஒரு அபிப்ராயம். அவர் என்னமோ சிவனை மட்டந் தட்டினதாகத்தான் கதை சொல்கிறவர்கள் சொன்னாலும் எனக்கு அப்படித் தோன்றவில்லை.

அவர் ராமாநுஜாசார்யாருக்கு மிகவும் முக்யமாக இருக்கப்பட்ட சிஷ்யர்களில் ஒருவர். கூரத்தாழ்வார் என்று பேர். பேர் என்றால் அப்பா அம்மா வைத்தது இல்லை. ஸ்ரீவத்ஸாங்கர் என்பதே அவர் பேர். தமிழில் திருமறுமார்பன் என்பார்கள். காஞ்சீபுரத்துக்குப் பக்கத்திலுள்ள கூரத்தைச் சேர்ந்தவராதலால் கூரத்தாழ்வார் என்று பெயர் வந்தது.

ராமாநுஜர் காலம் வரையில் அநேகர் சிவன், விஷ்ணு இருவரையும் உபாஸிப்பவர்களாக இருந்தார்கள். ஒரு ஊர் என்றாலே அதில் ‘ஈசான்யம்’ என்கிற வடகிழக்கில் ஈஸ்வரன் கோவிலும் மேற்கில் பெருமாள் கோவிலும் இருக்க வேண்டுமென்று விதி. அப்படியிருப்பதில் அநேகமாக எல்லாரும் கார்த்தாலே பெருமாள் கோவில், ஸாயரக்ஷை சிவன் கோவில் என்று போவார்கள். கொஞ்சம் கொஞ்சம் தீவ்ரமாக சிவனையே சொல்கிறவர்கள், விஷ்ணுவையே சொல்கிறவர்கள் என்று இருந்தாலுங்கூட ஒன்றை இழிவு பண்ணி ஒதுக்கி இன்னொன்றை மாத்திரம் உயர்த்தி வைக்க வேண்டும் என்கிற அபிப்ராயம் இல்லாமல் இருந்தது. இப்படி இருக்கிறபோது ராமாநுஜர், ‘விஷ்ணுவைத் தவிரக் கடவுள் இல்லை;தேவதாந்தரமே கூடாது’ என்பதை ஒரு மதமாகவே பண்ணி, சிவன் கோவிலுக்குப் போகப்படாது என்று பிரசாரம் செய்ய ஆரம்பித்தார்.

அப்போது ஆட்சி பண்ணிய சோழராஜாவும் வித்வான்களும் இதைப்பற்றி ஆலோசித்தார்கள். ராமாநுஜர் சொல்வதற்கு என்ன சாஸ்த்ர ஆதாரம் என்று அவரையே கூப்பிட்டுக் கேட்போம் என்று முடிவு பண்ணினார்கள். இதற்காக வித்வத் ஸதஸ் கூட்ட ஏற்பாடாயிற்று. அப்போது தலைநகராயிருந்தது கங்கைகொண்ட சோழபுரம். கும்பகோணத்துக்கு வடக்கே பத்து மைலில் இருப்பது. ராமாநுஜாசாரியார் ஸ்ரீரங்கத்தில் இருந்தார். இங்கிருந்து அங்கே ராஜா ஆள் அனுப்பினான்.

ஆள் போய் விஷயத்தைச் சொன்னான். அப்போது ராமாநுஜரோடு கூட இருந்த கூரத்தாழ்வார், “ஸ்வாமி! ராஜாவோ சைவன்; சிவாலயங்கள் கட்டியிருப்பவன். தாங்களானால் சிவன் கோவிலுக்குப் போகப்படாது என்கிறீர்கள். அதனால் உங்களை அழைத்து தண்டனை கொடுப்பதற்கே ‘வித்வத் ஸதஸ்’ என்று சொல்லி ஆள் அனுப்பியிருக்கிறான். வருகிற ஆபத்து எனக்கு வரட்டும்; தங்களுக்கு வேண்டாம். தாங்கள் என்னுடைய வெள்ளை வேஷ்யைக் கட்டிக்கொண்டு சோழராஜ்யத்தை விட்டே போய்விடுங்கள். தங்களுக்காக நான் தங்களுடைய காஷாயத்தைப் போட்டுக்கொண்டு, நான்தான் தாங்கள் என்று சொல்லிக்கொண்டு ராஜாவிடம் போகிறேன்” என்றார்.

அப்படியே செய்தார்கள். ராமாநுஜர் ராத்திரியோடு ராத்ரியாக முதலில் ஸ்ரீரங்கத்துக்கு இருபத்தெட்டு மைலிலுள்ள திருநாராயணபுரத்துக்கும், அப்புறம் அங்கிருந்து ரொம்ப தூரத்துக்கு அப்பாலுள்ள மைஸூர் திருநாராயணபுரத்துக்கும் போனார். கூரத்தாழ்வார் கங்கைகொண்ட சோழபுர ஸதஸ்ஸுக்கு வந்து சேர்ந்தார்.

அங்கே கூடியிருந்த வித்வான்கள், ‘சிவன் மாதிரி, சிவனுக்கு ஸமமாக விஷ்ணுவோ, இன்னொரு தெய்வமோ இருக்கிறது’ என்று வேண்டுமானால் மற்ற தெய்வங்களை இஷ்ட தெய்வமாகக் கொண்டவர்கள் சொல்லிவிட்டுப் போகட்டும்; ஆனால் தெய்வங்களுக்குள் உசத்தி-தாழ்த்தி சொல்வதாவது? சிவனைவிட விஷ்ணு உசத்தி என்றால் எப்படி? அப்படித்தான் என்றால் சாஸ்த்ரங்களைக் காட்டி நிரூபிக்கட்டும் என்று தீர்மானித்தார்கள். அதனால் “சிவாத் பரதரம் நாஸ்தி“, அதாவது ‘சிவனுக்கு மேலே உயர்ந்த பொருள் இல்லை’ என்று ஓலையில் எழுதினார்கள். வித்வான்களுக்கு ஓலையை அனுப்புவது; இந்த அபிப்ராயத்தை ஒப்புக்கொண்டால் அவர்கள் கையெழுத்துப் போடட்டும்; ஆக்ஷேபித்தால் சாஸ்த்ரம் காட்டி விளக்கட்டும் என்று முடிவு செய்தார்கள்.

கூரத்தாழ்வாரிடம் ஓலை காட்டப்பட்டது.

அவர் அதிலே என்னவோ எழுதித் திருப்பிக் கொடுத்தார். என்ன எழுதினார் என்றால், கையெழுத்துப் போடவில்லை “அஸ்தி த்ரோணம் அத: பரம்” என்று எழுதியிருந்தார்.

“சிவனுக்கு மேல் உசத்தியான ஒன்று இல்லை” என்றுதானே ஓலையில் முதலில் எழுதப்பட்டிருந்தது? அதற்கு மேல் த்ரோணம் இருக்கிறது” என்று இவர் இப்போது எழுதினதிற்கு அர்த்தம். “அஸ்தி த்ரோணம் அத: பரம்” என்றால் “அதற்கு (சிவனுக்கு) மேலானதாக த்ரோணம் இருக்கிறது” என்று அர்த்தம்.

‘சிவ’ என்றால் ஈஸ்வர நாமா என்பது மட்டுமில்லை. அதற்கு இன்னொரு அர்த்தம், ‘மரக்கால்’ என்பது. மரக்கால் – படி – ஆழாக்கு என்பதில் மரக்காலுக்கு ஸம்ஸ்க்ருதத்தில் ‘சிவம்’ என்று பெயர். மரக்காலைவிடப் பெரிய அளவு ஒன்று உண்டு. தமிழில் அதற்குப் பதக்கு என்று பேர். ஸம்ஸ்க்ருதத்தில் இது ‘த்ரோணம்’ எனப்படும்.

‘சிவ’ என்பதற்குப் இரண்டு அர்த்தமிருப்பதில் இவர் சிலேடையாக ‘சிவபெருமான்’ என்பதைத் தள்ளிவிட்டு, ‘மரக்கால்’ என்பதாக எடுத்துக்கொண்டு, ‘ஏன் மரக்காலும் மேலே எதுவும் இல்லாமல்? பதக்கு இருக்கே!’ என்று எடுத்துக்காட்டி எழுதிவிட்டார்.

“ராஜ ஸமூஹம்; அநேக வித்வான்கள் கூடியிருக்கிற கௌரவமான ஸதஸ்; அதிலே ஸீரியஸாக சாஸ்த்ரார்த்தங்களைக் கட்டாமல் குறும்பாக, ‘மரக்காலை விடப் பதக்கு பெரிசு’ என்று இவர் எழுதியிருக்கிறாரே!” என்று எல்லாருக்குமே இருந்தது. ராஜாவுக்குக் கோபம் வந்து, கடுமையாக சிக்ஷை பண்ணினான் என்று கதை போகிறது.

எனக்கென்ன தோன்றுகின்றதென்றால் கூரத்தாழ்வார் குறும்பு பண்ணவில்லை;சிவனே கதி என்று உபாஸிக்க கூடியவர்களும், வேதத்திலுள்ள ருத்ர ஸூக்தமுமே ஒப்புக்கொள்ளும்படியான ஒரு உண்மையைத் தான் “அஸ்தி த்ரோணம் அத:பரம்” என்பதில் உள்ளார்த்தமாக வைத்திருக்கிறார் என்று தோன்றுகிறது.

‘சிவ’ என்பதற்கு அவர் இரண்டர்த்தம் பண்ணிக் கொண்டதாகத்தான் இதுவரை நினைக்கப்பட்டிருக்கிறது. மரக்கால் என்று அர்த்தம் பண்ணினார் என்று நினைத்தே ராஜா சிக்ஷித்தான். எனக்கோ, ‘அஸ்தி த்ரோணம் அத:பரம்’ என்பதில் ‘சிவ’ என்பதற்குப் பரமசிவனுக்கு வேறாக இன்னொன்றை (மரக்காலை) அர்த்தம் பண்ணிக்கொள்ள வேண்டாம்; ‘த்ரோணம்’ என்பதற்குத்தான் பதக்கு என்றில்லாமல் வேறே அர்த்தம் செய்து கொள்ளணும் என்று தோன்றுகிறது.

என்ன அர்த்தம்?

த்ரோணம் என்றால் தும்பை என்றும் அர்த்தம். பரமேச்வரனுக்கு மிகவும் ப்ரீதியான பூ அது. பத்ரங்களில் பில்வம் மாதிரி, புஷ்பங்களில் எந்தக் கடையிலும் விலைக்கு விற்காததான ஊமத்தை, எருக்கு, தும்பை இதுகள்தான் சிவபெருமானுக்கு ரொம்பவும் உகந்தவை. அப்பைய தீக்ஷிதரைவிட ஒரு சிவபக்தர் கிடையாது. அவர் ‘ஆத்மார்ப்பண ஸ்துதி’ என்று செய்திருக்கிறார். இதற்கு ‘உன்மத்த பஞ்சாசத்’ என்றும் காரணப்பெயர் உண்டு*.

அர்க்க-த்ரோண-ப்ரப்ருதி குஸுமை: அர்ச்சநம் தே விதேயம்

ப்ராப்யம் தேந ஸ்மரஹர பலம் மோட்ச ஸாம்ராஜ்ய லக்ஷ்மி: |

என்கிறார். “பரமேச்வரா! உன்மேலே எருக்கையும் த்ரோணத்தையும் (தும்பையையும்) அர்ச்சனை பண்ணி விட்டால் போதும், அது ஒருத்தனுக்கு மோட்ச ஸாம்ராஜ்யம் என்ற பரம ச்ரேயஸைப் பலனாகக் கொடுத்து விடுகிறது” என்கிறார்.

சிவனுக்கு மேலே தும்பைப் பூ அர்ச்சனை செய்த பூ விழுகிறது. அவனுக்கு மேலே போய் அது உட்கார்ந்திருக்கிறது. சிவலிங்கத்தின் உச்சியில் ஒரு தும்பைப்பூவை வைத்து விட்டால், அப்போது அது அவனுக்கு மேலே, அவனைவிட உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கிறது! ஆகையால் “சிவனுக்கு மேலே உயர்வாக எதுவுமில்லை; சிவாத் பரதரம் நாஸ்தி” என்றால் எப்படி ஸரியாகும்? அதுதான் மேலே த்ரோண புஷ்பம், இத்தனூண்டு பூ வெள்ளை வெளேரென்று பரம நிர்மலமாக, அத்தனை பெரியவனுக்கும் மேலே இருக்கிறதே!” இருக்கிறது” என்பதை அடித்துச் சொல்லவே “அஸ்தி” என்று ஆரம்பித்து, “அஸ்தி த்ரோணம் அத:பரம்” என்றதாகத் தோன்றுகிறது.

‘தரம்’ என்றால் ஒன்றைவிட இன்னொன்று comparative degree -ல் உயர்ந்தது என்று அர்த்தம். ‘சிவாத் பரதரம் நாஸ்தி’ என்றால் சிவனைவிடப் பரமாக (உயர்ந்ததாக) கம்பேரடிவ் டிக்ரியில் சொல்ல எதுவும் கிடையாது என்று அர்த்தம்.

சிவனுக்கு ‘மேலே’ தும்பை இருக்கிறது என்று வேண்டுமானால் அது இருக்கும் பொஸிஷனைக் கொண்டு சொல்லலாமே தவிர, சிவனோடு கம்பேர் பண்ணி அதாவது அவருடைய குணத்தோடும் மஹிமையோடும் ஒப்பிட்டுப் பார்த்துத் தும்பை அவரைவிட உசத்தி என்று எப்படிச் சொல்லமுடியும்?

அதுவும் முடியும். வேதமந்த்ரமான ஸ்ரீருத்ர வாக்யமே இதற்கு ஆதரவாயிருக்கிறது. அதிலே முடிகிற இடத்திலே இப்படி வருகிறது: “இதோ என்னுடைய இந்தக் கை இருக்கிறதே, இதுவுமே பகவான்தான், பரமசிவன்தான். இல்லை, பகவானுக்கும் மேலே – ‘பகவத் தர:‘ என்று கம்பரேடிவ் ‘தர’த்தையே சொல்லியிருக்கிறது!

எப்படி இந்தக் கை பகவானைவிட உசத்தி?

எப்படியா? “இது அவனை அபிமர்சனம் பண்ணுகிறதோ இல்லையோ, அதனால்தான்” என்று ச்ருதியே சொல்கிறது.

‘அபிமர்சனம்’ என்றால் நன்றாகத் தொடுவது. பூஜையின் போது அவனை நன்றாகத் தொட்டுத் துடைத்து, சந்தனமிட்டு, அர்ச்சனை பண்ணுவது இந்தக் கைதானே? இப்படி அவனைத் தொட்டுவிட்டால் போதும், அவன்மேலே போய் விழுந்துவிட்டால்போதும், அவன் காலிலே சித்தே (சிறிதே) கிடந்தால் போதும் – அவனுடைய ஸ்பரிசம் படுகிறதே, அப்போது அவன் தன்னுடைய குணம், மஹிமை எல்லாவற்றையும் தானாக இருந்துகொண்டு எவ்வளவு காட்டுகிறானோ அதைவிட ஜாஸ்தியாகவே தன்னை ஸ்பரிசித்துக் கொண்டிருப்பவனுக்குக் கொடுத்துவிடுவான்; தான் பகவான் என்றால் தன்னை ஸ்பர்சிப்பது ‘பகவத்தரம்’ என்று ஆக்கிவிடுவான்!

அதனால் ஒரு தும்பைப்பூ அவனுடைய தலை மேல் ஏறி உட்காரணும் என்று கூட இல்லை, அவனுடைய காலிலே அர்ச்சிக்கப்பட்டுக் கிடந்தாலுங்கூட சிவத்தன்மையிலே அது சிவனைவிட ‘மேல்’ : ‘சிவாத் பரதரம்‘ தான்.

இந்த அபிப்ராயங்களை மனஸில் வைத்துக் கொண்டே, ஆனாலும் தன்னுடைய ஆசார்யனுடைய அபிப்ராயத்துக்கு வேறேயாக வெளிப்படச் சொல்லக் கூடாது; சொல்லாமல் அவருக்காக என்ன தண்டனையானாலும் வாங்கிக் கொள்வது என்றே கூரத்தாழ்வார் இரண்டு அர்த்தத்தில் “அஸ்தி த்ரோணம் அத: பரம்” என்று சொன்னதாக வைத்துக் கொள்ளலாம்.

ஒரு சின்னஞ்சிறிய பூவாக இருந்தால்கூட ஸரி, தன்னிடம் அது வந்துவிட்டது என்றால் அதைத் தன்னிலும் உசத்தியான மஹிமையுள்ளதாகப் பண்ணிவிடுகிற ஒளதார்யம் (உதார குணம்) உடையவர் பரமசிவன் என்பது அந்த வைஷ்ணவர் வார்த்தையால் தெரிவதாக எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் இப்படி அவனை எப்போ பார்த்தாலும் தொட்டுப் பூஜை பண்ணிக்கொண்டிருக்க முடியுமா? எல்லோருக்கும் அந்த ஸெளகர்யம் கிடைக்குமா? இந்த ஸாதாரணத் தும்பை கூட எல்லா மாஸத்திலும் கிடைக்காதே? அதனாலே அவனை ஸ்பரிசித்து, ஒட்டிக் கொண்டு, கட்டிக்கொண்டு இருப்பதெல்லாம் வாக்கால்தான் பண்ணியாகணும். இந்த நாக்கிலேதான் அவன் நாமாவை வைத்துக் கட்டிக்கொண்டு அதன் மூலம் அவனை ஹ்ருதயத்தில் இறக்கிக்கொண்டு அங்கே அவனோடு ஒட்டிக்கொண்டு இருக்கவேண்டும். நாமா சொல்ல எந்த ஸெளகர்யமும் வேண்டாம், உபகரணமும் வேண்டாம், நியமமும் வேண்டாம்.

அதனால் இத்தனை பாபம் பண்ணிவிட்டோமே என்று அழவே வேண்டாம். பாபத்தை ஒரே க்ஷணத்தில் த்வம்ஸம் பண்ணும் வஸ்து இருக்கிறது. அதை எங்கேயோ போய்த் தேடிப் பெற வேண்டியதில்லை. நாமே உண்டு பண்ணிக்கொண்டு விடலாம். கஷ்டமே இல்லை. இரண்டே எழுத்து. தேஹத்தில் உயிர் போலவும், கோயிலில் மஹா லிங்கம் போலவும், வேதங்களின் மத்தியில் ஜீவரத்னமாயிருக்கும் அதை நாம் என்ன பண்ணவேண்டும்? பெரிசாக த்ரவ்யம் சேர்த்து அபிஷேகம் பண்ணணுமா? தினுஸு தினுஸயாய் நைவேத்யம் செய்யணுமா? மாலைகள், நகைகள் சாத்தணுமா? ஒன்றும் வேண்டாம். ஓயாமல் வேண்டாத விஷயங்களில் புரண்டு கொண்டிருக்கிற நாக்கைக் கொஞ்சம் அதற்காகப் புரட்டினால் போதும்!

மநுஷ்யனுக்கு மட்டும் இது birth right (பிறப்புரிமை)! வேறு எது எதற்கோ பர்த்-ரைட் சொல்கிறோம்! இதுதான் எல்லாவற்றுக்கும் மேலே! வாக்கு என்று ஒன்றை மநுஷ்யனுக்கு மாத்திரம் தந்திருப்பது இதற்காகத்தான்! இதைச் செய்யாவிட்டால், ‘வாக்கால் செய்யக் கூடியதை இவன் செய்யவில்லை; இவனுக்குப் இதைக் கொடுத்துப் பிரயோஜனமில்லை’ என்று பரமேச்வரன் அதைத் திரும்ப வாங்கிக் கொண்டு அடுத்த ஜன்மாவில் வேறே மாதிரி உருட்டி விடுவார்! இதைச் சொல்லிவிட்டாலோ ஜன்மாவே இல்லை. பாவம் எல்லாம் பறந்து போய்விடும். மோக்ஷ ஸாம்ராஜ்ய லக்ஷ்மியை இந்த நாமா கொடுத்துவிடும்.

பரமேச்வர ஸ்வரூபத்தை நாம் பார்க்க முடியுமா? விக்ரஹமாக வைத்தால்கூட எப்போதும் பார்க்க முடியுமா? இந்த நாமா இருக்கிறதே, இதுவும் ஸாக்ஷாத் அவனேதான். இதை நினைத்த மாத்திரத்தில் நம்மிடம் வரும்படிப் பண்ணிக் கொண்டுவிடலாம்.

அதனால் எப்பொழுதெப்பொழுது முடிந்தாலும் ‘சிவ’ என்று இரண்டு அக்ஷரங்களைச் சொல்லி லோகமெல்லாம் சிவம், மங்களம், கல்யாணம் தழைக்கச் செய்ய வேண்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

 முழுதும் வேத ஸம்மதமானாலே வைதிகம் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

ஒன்றை வைதிக மதம் என்று சொல்ல வேண்டுமானால் அது வேதத்தில் சொல்லியுள்ள சிலவற்றை ஒப்புக்கொண்டு ‘டெவலப்’ பண்ணினதாக இருந்தால் மாத்திரம் போதாது. வேதத்தில் சொல்லியுள்ள எதையுமே அது ஆக்ஷேபிக்கக் கூடாது என்பது இதைவிட முக்யம். ‘சிவனைப் பற்றி வேதத்தில் ஸூக்தங்கள் இருக்கின்றன; அதனால் அதை எடுத்துக் கொண்டு டெவலப் பண்ணிய பாசுபதம் முதலான சைவ மதங்கள் வைதிகமானவை’ அல்லது, இதே மாதிரி, ‘வேதத்தில் விஷ்ணு ஸூக்தங்கள் இருப்பதால் அதன் அடிப்படையில் ஏற்பட்டுள்ள பாகவத பாஞ்சராத்ரம் முதலிய வைஷ்ணவ மதங்கள் வைதிகமானவை’ என்றால் அது ஸரியான வாதம் இல்லை. வேதத்தில் சிவன், விஷ்ணு என்ற இரண்டையும் ஒரேபோல ஸ்துதித்திருக்கிறது. ஒவ்வொன்றையும் சொல்லுமிடத்தில் அதையே பரப்ரஹ்மமாகச் சொல்லியிருக்கிறது. அதனால், சிவனையே முழுமுதல் தெய்வமாகச் சொல்லும் சைவ மதங்களோ, அதேபோல விஷ்ணுவையே முழு முதலாகக் கொள்ளும் வைஷ்ணவ மதங்களோ ஏற்படுவதில் தவறாக, அதாவது அவைதிகமாக எதுவுமில்லைதான் ஆனாலும் இந்த மதங்கள் தங்களுக்கு இஷ்ட தெய்வமாயுள்ள சிவனையோ விஷ்ணுவையோ முழு முதல் தெய்வமாகப் போற்றுவதோடு நிற்காமல், சைவ மதங்கள், ‘விஷ்ணு முழு முதல் தெய்வமில்லை. அவர் சிவனுக்குக் கீழானவர்தான்’ என்றும் வைஷ்ணவ மதங்கள், ‘விஷ்ணு மட்டுந்தான் முழு முதல் தெய்வம். சிவன் அவருக்குக் கீழ்ப்பட்டவர்தான்’ என்றும் சொல்லுமானால் அப்போது அவை வேதத்துக்கு முரணாகத்தான் போகின்றன. ஆகையினால் அவை அவைதிகமானவையாகி விடுகின்றன. தனக்குப் பிடித்ததை மட்டும் பிடித்துக்கொள்வதோடு நின்று விட்டால் பரவாயில்லை. ஆனால் தனக்குப் பிடிக்காதது என்று ஒன்றை தாக்கப் போனால் அது வேதத்தின் ஒரு பகுதியையே தாக்கியதாகிவிடுகிறது. அதனால் அப்படிப்பட்ட மதம் வைதிகமானதாகாது.

இது ஓரளவு broad outlook -ல் (பரந்த பார்வையில்) சொல்வது. இன்னும் strict -ஆகச் (கண்டிப்பாகச்) சொல்பவர்கள், “வேதங்களில் எல்லா ஸ்வாமிகளுக்கும் உரிய யஜ்ஞங்களைச் சொல்லியிருக்கிறது. ஒரு யஜ்ஞத்திலேயே பல ஸ்வாமிகளுக்கு யஜ்ஞ பாகங்கள் கொடுக்கும்படியும் இருக்கிறது. அவை எல்லாவற்றையும் வித்யாஸமில்லாமல் பண்ணுகிறவன்தான் நிஜமான வைதிகன். ‘ஒரு ஸ்வாமியைக் குறித்தவற்றை மட்டும் பண்ணுவேன்; இன்னொன்றை குறித்தவைகளைப் பண்ண மாட்டேன்’ என்கிறவன் வைதிகன் ஆக மாட்டான். மனஸளவில் இஷ்ட மூர்த்தி என்று ஒன்றிடம் அத்யந்த பக்தியுடன் இருந்துவிட்டுப் போகட்டும். கார்யத்தில் யஜ்ஞம், பூஜை என்று வரும்போது ச்ருதி-ஸ்ம்ருதிகளில் எப்படியிருக்கிறதோ அப்படி தெய்வ பேதம் பாராட்டாமல் பண்ணினால்தான் வைதிகம் என்று அர்த்தம்” என்று சொல்வார்கள்.

“ச்ருதியை அநுஸரித்து ஸ்ம்ருதிகள் கொடுத்துள்ள நாற்பது ஸம்ஸ்காரங்களைத்தான் பின்பற்றவேண்டும். அவற்றில் இல்லாத ஏதோ ஒரு ஸம்ஸ்காரம் பண்ணினால் தான் தங்கள் மதத்தைச் சேர்ந்தவராக முடியும் என்று ஒரு மதம் சொல்லுமானால் அது வேத மதத்திற்கு வேறான இன்னொன்றுதான். உதாரணமாக, நாற்பது ஸம்ஸ்காரங்களில் சங்க-சக்ரங்களையோ, சூலம்-ரிஷபம் முதலானவைகளையோ தப்த கின்ஹங்களாக முத்ரா தாரணம் செய்து கொள்வதென்பது (முத்திரைகளாகச் சூடு போட்டுக் கொள்வதென்பது) இல்லை. இந்த விதமான ஸம்ஸ்காரம் பண்ணிக்கொண்டால்தான், ஒருவன் விஷ்ணு பரமான, அல்லது சிவ பரமான ஒரு மதத்தைச் சேர்ந்தவனாவான் என்றால் அவனை வைதிகனென்பதற்கில்லை” என்று Strict -ஆக இருப்பவர்கள் சொல்வார்கள்.

அதோடுகூட, ‘யாராயிருந்தாலும் வர்ணாச்ரம அநுஷ்டானம் இருந்தால்தான் வைதிகர் என்று அர்த்தம். ‘எங்களுக்கு பக்திதான் முக்யம். வர்ணாச்ரம வ்யவஸ்தைகள் தேவையில்லை’ என்றால் அவைதிகம்தான்’ என்பார்கள்.

பக்தி மதமாக இல்லாமல், தத்வ சோதன மதங்களாக உள்ளவற்றுக்கும் இப்படியேதான்: அதாவது, அவை வேத ஆதாரத்தில் சில தத்வங்களை ஆராய்ச்சி செய்கின்றன என்றால் மட்டும் போதாது. இந்தத் தத்வங்கள், யாருக்கு எந்த ஸ்டேஜில் வேதத்தில் உத்தேசிக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் கவனிக்கவேண்டும். அந்த நிலைக்கு வர இயலாதவர்கள் விஷயத்தில் வேதம் சொல்லியுள்ளவற்றைச் சகட்டுமேனியாக ‘இதெல்லாம் அவச்யமில்லை’ என்று தள்ளி விடக்கூடாது. மறுபக்கம், அந்த நிலைக்கு மேலே வேதத்தில் சொல்லியிருக்க கூடியவற்றையும் தள்ளிவிட்டு, ‘தான் எடுத்துக்கொண்டுள்ளதோடேயே வேதத்தின் தாத்பர்யம் பூர்த்தியாகிவிட்டது’ என்றும் சாதிக்கக்கூடாது. இந்தவிதமான அபிப்ராயக்காரர்களும், ‘நாங்கள் ஃபிலாஸஃபியாகத் தானே சொல்லிக்கொண்டு போகிறோம்? அதனால் எங்களுக்கும் ஸமூஹ நடைமுறை ஸமாசாரமான வர்ணாச்ரமத்துக்கும் ஸம்பந்தமில்லை’ என்று கத்திரித்துக்கொண்டு போகக் கூடாது.

இந்த அடிப்படைகளில்தான் எது வைதிக மதம், எது அவைதிக மதம் என்று மஹாபாரதத்திலேயே நிர்ணயம் செய்திருக்கிறது.

சரக்கூட்டில் படுத்துக்கொண்டிருந்த பீஷ்ம பிதாமஹர் தர்ம புத்ரருக்குப் பண்ணும் நீண்ட உபதேசம் மஹாபாரதத்தில் சாந்தி பர்வம், அநுசாஸன பர்வம் என்று இரண்டு பர்வங்களாக வருகிறது. அதில் பக்தி உபாஸனா மதங்களான பாஞ்சராத்ரம், பாசுபதம் ஆகிய இரண்டையும், தத்வ சாஸ்த்ரமாக இருக்கப்பட்ட ஸாங்க்யம், ஸாங்க்ய தத்வங்களின் அடிப்படையிலேயே மனோநிக்ரஹத்துக்கு க்ரியாரூபமாக ஸாதனம் சொல்லும் யோகம் ஆகிய இரண்டையும், அதாவது இந்த நாலு மதங்களையும் வேதத்திலிருந்து பிரித்து, வேறு வேறான தனி மதங்களாகத்தான் சொல்லியிருக்கிறது.

ஸாங்க்யம் யோக: பாஞ்சராத்ரம் வேதா: பாசுபதம் ததா என்று சொல்லியிருக்கிறது. அதாவது, ‘ஸாங்க்யம், யோகம், பாஞ்சராத்ரம், வேதங்கள், பாசுபதம் என்ற ஐந்து மதங்கள்’ என்று இருக்கிறது. ஐந்தில் ஒன்றாகவே வேதம் வருகிறதென்றால் மற்ற நாலும் வேத மதத்தைச் சேர்ந்தவையில்லை என்றுதானே அர்த்தம்? பாரதத்திலேயே இன்னோரிடத்தில், யோகம் என்பதை அந்த மதத்தின் மூலபுருஷரான பதஞ்ஜலியின் பெயரை வைத்து ‘பாதஞ்ஜலம்’ என்று சொல்லி, இந்த ஐந்தையும் “நாநா மதாநி” – வெவ்வேறு மதங்கள்-என்றே ஸ்பஷ்டமாகக் குறிப்பிட்டிருக்கிறது.

‘சிவ மஹிம்ந ஸ்தோத்ரம்’ என்று ஈச்வர மஹிமைகளைக் கூறுவதாக ஒன்று உண்டு. புஷ்பதந்தர் பண்ணியது. அது ரொம்பவும் பழமை வாய்ந்த ஸ்தோத்ரம். வட தேசத்தில் ரொம்பவும் ப்ரஸித்தமாக இருப்பது அதிலேயும் இப்படியே வேதம், ஸாங்க்யம், யோகம், பாசுபதம், வைஷ்ணவம் ஆகியன வெவ்வேறு மதங்கள் என்றே சொல்லியிருக்கிறது:

த்ரயீ ஸாங்க்யம் யோக: பசுபதிமதம் வைஷ்ணவம் இதி
ப்ரபிந்நே ப்ரஸ்தாநே1

‘த்ரயீ’ என்றால் வேதம், அது ஒரு மதம். ‘ஸாங்க்யம்’ இன்னொரு மதம். ‘யோகம்’ — அதுவும் தனியாக ஒரு மதம். ‘பசுபதி மதம்’ என்பது சிவபெருமானைக் குறித்த பாசுபதம், அதுவும் ஒரு தனி மதம். கடைசியாக இன்னொன்று ‘வைஷ்ணவம்’. இவற்றை ‘ப்ரபின்ன’மான ‘ப்ரஸ்தான’ங்களென்று சொல்லியிருக்கிறது — “ஒன்றுக்கொன்று மாறுபட்ட மார்க்கங்கள்” என்று அர்த்தம்.

பாரதத்திலும் சிவ மஹிம்ந ஸ்தோத்ரத்திலும் இப்படிச்சொல்லியிருப்பதற்கு ‘வால்யூ’ அதிகம். பாரதக் கதை விஷ்ணு அவதாரமான க்ருஷ்ண பரமாத்மாவின் கதையுடனேயே ஒட்டிப் போவது. ‘ஹரிவம்சம்’ என்பதாக உள்ள பாரதத்தின் ‘ஸப்ளிமென்ட்’ (அநுபந்தம்) ஸ்ரீக்ருஷ்ண சரித்ரத்தையே விரிவாகச் சொல்வது. அப்படியிருந்தும் வேதத்தின் ஸாமரஸ்ய பாவத்துக்கு (ஸமரஸ மனப்பான்மைக்கு) விரோதமாக, மற்ற தெய்வங்களைக் குறைத்தும், ச்ருதி-ஸ்ம்ருதி ஆசாரணைகளுக்கு மாறாகவும் விஷ்ணுவைக் குறித்ததாகவே பாஞ்சராத்ரம் என்ற தந்த்ரம் அநுஷ்டிக்கப்பட்டபோது அதை பாரதம் வேதத்துக்குப் புறச் சமயமாகவே சொல்லியிருக்கிறது. இப்படியேதான், சிவ மஹிமைகளையே சொல்லவந்த ஸ்துதியாயிருந்தாலும் சிவமஹிம்ன ஸ்தோத்ரத்தில் பசுபதி மதத்தை வேதத்துக்கு புறச் சமயமாகச் சொல்லியிருப்பதும்.

மஹாகவிகளின் வாக்குக்கும் ஒரு ஸத்ய ப்ரமாணமுண்டாகையால், அப்படியும் ஒன்று இந்த விஷயமாகச் சொல்கிறேன்:

பண்டித ஸமூஹத்தின் கௌரவத்தை நிரம்பப்பெற்றவர் ஸ்ரீஹர்ஷகவி. பாண்டித்யம் இல்லாதவர்களால் அவருடைய புஸ்தகங்களைப் புரிந்துகொள்ள முடியாது. அவர் நள சரித்ரத்தை “நைஷதம்” என்று பெயர் கொடுத்து எழுதியிருக்கிறார்2. அதிலே தமயந்தி ஸ்வயம்வர கட்டம். நளன் ஸ்வயம்வர மண்டபத்திற்கு வந்திருக்கிறான். அவனுக்கும் தமயந்திக்கும் பரஸ்பர ப்ரேமை. அதனால் அவள் அவனுக்குத்தான் மாலை போடுவாள். இந்த இடத்தில்தான் காவ்யச் சுவையைக் கூட்டிவைப்பதாக, இந்த நாள் மர்மக் கதைகள் மாதிரி புதிராக ஒன்று “நைஷத”த்தில் நடக்கிறது. அதாவது, ஒரு நளனுக்குப் பதில் ஐந்த நளர்கள் அடுத்தடுத்து உட்கார்ந்திருக்கிறார்கள்! அதில் ஒருத்தன்தான் நிஜ நளன். பாக்கி நாலு பேரும் தத்ரூபம் அவனைப்போலவே வேஷம் தரித்துக்கொண்டு வந்துள்ள அக்னி, யமன், வருணன், இந்திரன் ஆகிய நாலு தேவர்கள். அந்த ஐந்து பேரில் யார் நிஜ நளன் என்று தமயந்தி திகைத்துப் போகிறாள். இதைச் சொல்லவரும் போதுதான் கவி (ஸ்ரீஹர்ஷர்) நாம் பார்த்துக்கொண்டிருந்த விஷயத்தைக் கொண்டு வருகிறார் — உவமையாகக் கொண்டு வருகிறார். “உண்மையான வேதமதமான அத்வைதம், அதைப் போலவே வேஷம் போட்டுக்கொண்டுள்ள ஸாங்க்யம், யோகம், பாசுபதம், பாஞ்சாத்ரம் என்று நாலு மதங்கள், ஆகிய ஐந்தும் சேர்ந்துள்ளபோது எது நிஜம், எது பொய் என்று ப்ரமிப்பு ஏற்படுவதுபோல, நிஜ நளனோடு நளவேஷம் போட்டுக்கொண்டிருந்த நாலு தேவர்களைப் பார்த்தபோது ‘இந்த ஐந்து பேரில் யார் உண்மை நளன்?’ என்று தமயந்தி ப்ரமிப்படைந்தாள்” என்கிறார் : ….. பஞ்சம கோடி மாத்ரே… மதாநாம் அத்வைத தத்வ இவ ஸத்யதரேபி லோக: (நைஷதம் : XIII.36.)

இப்படியாக அந்தக் காலத்தில், நம் தேசத்தில் அநாதி காலமாக வேத வாக்குதான் ஈச்வர வாக்கான ஸத்யமான மதம் என்று பண்டித – பாமரரில் பெருவாரியானவருக்கு நம்பிக்கை இருந்ததால், வாஸ்தவத்தில் அவைதிகமான கொள்கைகளையும் க்ரியா கலாபங்களையும் கொண்டிருந்த பல மதங்களும் தங்களை வைதிகமானவையாகவே வர்ணித்துக்கொண்டு ஜனங்களைக் கவர்வதாக இருந்தது. இவற்றில் சில ஃபிலாஸஃபியாக அறிவாளிகளைக் கவர்ந்தன; சில தெய்வ உபாஸனைகளாகப் பொது ஜனங்களைக் கவர்ந்தன.

எல்லா உபாஸனா மார்க்கங்களுமே இப்படி இருக்கவில்லை. வாஸ்தவமாகவே வைதிகமாக ஒவ்வொரு ஸ்வாமிக்கும் ஏற்பட்ட உபாஸனைகளும் இருந்தன. ஆனால் ரொம்பவும் மங்கிப்போயிருந்தன. அவைதிகமாயிருந்து கொண்டு வைதிக வேஷம் போடும் தந்த்ரங்களே அதிகமாக ப்ரசாரத்தில் இருந்தன.

இன்னொன்றைக்கூடச் சொல்லவேண்டும். அதாவது, “வேதம் என்ன பெரிய ‘அதாரிடி’? வேதத்தைவிட ஆகமம் (அதாவது உபாஸனா மார்க்கங்களான தந்த்ரங்கள்) தான் ‘அதாரிடி’. இதுதான் பரமாத்மாவே உபதேசித்து ஸ்தாபித்தது” என்று சொல்லிக்கொண்ட அநேக தந்த்ரங்களும் ப்ரசாரத்திலிருந்தன.

வேத மதத்துக்குத் தனிப்பெருமை அது பகவானே ஏற்படுத்தினது என்பதால்தானே? ‘எங்கள் தந்த்ரம்தான் பகவான் ஏற்படுத்தியது’ என்று சில பேர் சொல்லி, அதற்கும் கதை புராணம் எழுதிக் காட்டினபோது-அதோடு, வேதத்தின் அதிகார பேதங்களையும் தளர்த்திவிட்டு, ஜனங்களின் உணர்ச்சிகளுக்கு ருசியூட்டும் சடங்குகளையும் உண்டாக்கிய போது, பல பேர் ‘இதைத்தான் பின்பற்றுவோமே!’ என்று இவர்கள் பின்னே போனார்கள்.


1சிவ மஹிம்ந ஸ்தோத்ரம் – 7

2 ஸ்ரீ ஹர்ஷர் பற்றியும் நைஷதம் பற்றியும் மேலும் சில விஷயங்கள் “பண்பாடு” எனும் பிரிவில் “ஸ்வயம்வரத்தில் அத்வைதம்” என்ற உரையில் காண்க.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

 

ஒரு வாசகம்

தேவர் குறளும் திருநான் மறை முடிபும்
மூவர் தமிழும் முனி வாக்கும் – கோவை
திருவாசகமும் திருமூலர் சொல்லும்
ஒருவாசகம் என்றுணர்.

இந்தப் பழம் பாடல் தேவார திருவாசகங்களின் கருத்தும் நான் மறையின் கருத்தும் ஒன்றே என்கிறது.

இதற்கு மாறாக, “வேத நெறிக்கும் சைவ நெறிக்கும் சம்பந்தம் இல்லை, இரண்டும் வேறு வேறானவை” என்ற வாதம் தமிழ் நாட்டில் பரப்பப்பட்டு வருகிறது. அதன் உண்மையை ஆராய்வோம்.

தேவாரத்திலும் திருவாசகத்திலும் பல இடங்களில் இறைவனை வேத ரூபனாகவும் வேதத்திற்கு ஆதியனாகவும் கூறப்பட்டுள்ளது.

வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே
பரவுவார் இமையோர்கள் பாடுவன நால்வேதம்
வேதம் நான்கும் ஓலமிட் டுணங்கு நின்னை எய்த லுற்று மற்றொ ருண்மை இன்மையின்
வேதமெய்ந்நூல் சொன்னவ னே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளை
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும் ஓத உலவா ஒருதோழன்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி வேதப் பொருள்பாடி அப்பொருள்ஆ மாபாடிச்
வேதமும் வேள்வியும் ஆயி னார்க்கு
வேதமொழியர்வெண்ணீற்றர்செம்மேனியர்
மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென் மனத்திடை மன்னிய மன்னே

என்று திருவாசகத்தில் பல இடங்களில் வேதத்துக்கும் சிவனுக்கும் உள்ள தொடர்பு கூறப்பட்டுள்ளது.

1 இத்தனை சான்றுகளையும் தள்ளி விடும் வகையில் “தேவார, திருவாசகங்கள் சொல்லும் வேதம் வேறு, அவை இருக்கு முதலான வடமொழி வேதங்களைக் குறிப்பன அல்ல. அவை தமிழ் மறைகள்” என்று சப்பைக்கட்டு கட்டுவார்கள். அவர்களுக்காகவே மணிவாசகர், இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் என்று இறைவனுடைய அடியார்களில் ஒரு சிலர் இருக்கு வேதம் முதலான தோத்திரங்களைக் கூறிப் போற்றுகிறார்கள் என்றுதெளிவு படுத்துகிறார்.

சங்கரனைச் சந்தோக சாம மோதும் வாயானை
சாமத்தின் இசைவீணை தடவிக் கொண்டார்
ஊடலை ஒழிக்க வேண்டிப் பாடினார் சாம வேதம்
சாமுண்டி சாம வேதங் கூத்தொடும் பாட வைத்தார்
சாமத்து வேத மாகி நின்றதோர் சயம்பு தன்னை

சங்கரன் சாம வேதி என்று அப்பர் பெருமானும் சிவனுக்கும் சாம வேதத்துக்கும் உள்ள தொடர்பைப் போற்றுகிறார்.

2 “வேதம் உயிர்க் கொலை வேள்வியை அடிப்படையாகக் கொண்டது. சைவம் கொல்லா நோன்பை அடிப்படையாகக் கொண்டது. எனவே சைவமும் வேதமும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை” என்பது அவர்களது மற்றொரு வாதம்.
மேற்கூறிய இரண்டுமே தவறு. வேதத்தில் உயிர்க் கொலை வேள்வி கூறப்பட்டிருப்பது உண்மை தான். என்றாலும் எல்லா வேள்விகளும் உயிர்க்கொலை கொண்டவை அல்ல. சைவத்திலும் உயிர்க் கொலை இருந்தது.

வேப்பமரத்தில் உறையும் தெய்வத்துக்கு பசுவின் உதிரத்தைப் படைத்ததாக அகநானூறு 309 கூறுகிறது. முருகனுக்கு ஆட்டுக்குட்டியை அறுத்துக் குருதியைத் தினையுடன் கலந்து குறவர் படைத்ததை நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் குறிப்பிடுகிறார்.

இறைவனுக்குப் படைக்கும் உணவு வழிபடுவோரின் உணவுப் பழக்கத்தை ஒட்டியே பல் வேறு காலங்களிலும் பல் வேறு இடங்களிலும் இருந்திருக்கிறது. இன்றைக்கும் சில கோவில்களில் இறைவனுக்கு சுருட்டு, சாராயம் முதலானவை படைக்கும் வழக்கம் உள்ளது.

அந்தணர் உள்பட எல்லா மக்களும் புலால் உண்ட காலம் ஒன்று இருந்தது. புத்த சமண சமயக் கருத்துகள் பரவிய பின்னர் மக்களில் சிலர் புலால் மறுக்கத் தொடங்கினர். தெய்வங்களுக்கும் உயிர்க் கொலை தவிர்த்த படையலை மேற்கொண்டனர். எனவே படைக்கும் உணவின் அடிப்படையில் வேதத்தையும் சைவத்தையும் பிரிக்க முடியாது.

3 “வேதம் வேள்வி மூலம் இறைவனைப் போற்றுவது. சைவம் ஆலய வழிபாட்டுக்கு முக்கியத்துவம் தருவது. எனவே இவை இரண்டும் தொடர்பு அற்றவை” என்பது இன்னொரு வாதம்.

வேதம் வேள்வி முறையை மட்டுமே வலியுறுத்தவில்லை. இல்லாமலும் வழிபடலாம் என்று கூறுகிறது. வருங்காலத்தில் ஏற்படக் கூடிய பல்வேறு விதமான வழிபாட்டு முறைகளுக்கும் வரவேற்பு தரும் வகையில் வேதம் அமைந்துள்ளது.
மருத்துகள் பக்தர்களின் வழிபாட்டை வேள்வியுடனோ அல்லது பிரார்த்தனைகளுடனோ ஏற்றுக் கொள்கிறார்கள்.
இந்திரனை வேள்விகளால் மனிதர்கள் அறிவதில்லை. அவர்கள் தோத்திரங்களால் அறிகிறார்கள்.
வேள்வியால் ஏற்படக்கூடிய பலன்களை ரிபு சகோதரர்கள் அருஞ்செயல் மூலமாக அடைந்தார்கள்.
வேள்வியும் செய்து கடுமையாக உழைக்கவும் செய்பவனுக்கு தேவர்கள் அருள் புரிகிறார்கள்.

வணங்கினாலோ, அருஞ்செயல் செய்தாலோ, அல்லது வேள்வி செய்தாலோ அக்னி அவருக்கு வளங்களை அளிக்கிறார்.
பிரார்த்தனை இல்லாத வேள்வி பயனில்லை. வேள்வி இல்லாமல் பிரார்த்தனை மட்டுமே பலன் தரும்.
இந்த வேத மந்திரங்களிலிருந்து வேள்வி மட்டுமே வேத முறை அல்ல என்று அறிகிறோம்.

4 “வேதத்தில் சிவன் என்னும் தெய்வம் குறிக்கப்பெறவில்லை. எனவே வேதத்துக்கும் சைவத்துக்கும் தொடர்பு இல்லை” என்று ஒரு வாதம்.

காரைக்கால் அம்மையாரின் பாடல்களில் ஒன்றில் கூட சிவன் என்னும் பெயர் குறிக்கப் பெறவில்லை. அதனால் அம்மையாருக்கும் சைவத்துக்கும் தொடர்பு இல்லை என்று கூற முடியுமா?

வேதத்தில் இந்திரன், அக்னி, மருத், அசுவினி தேவர்கள் முதலான தேவர்கள் தான் உண்டு. சிவன் இல்லை என்பது உண்மையே. ஆனால் எப்பெயரிட்டு அழைத்தாலும் எல்லாம் ஒரே சத்தியத்தையே குறிக்கும் என்பது வேதக் கருத்து.
உள்ளது ஒன்று, அதை அறிஞர்கள் பல விதமாகக் கூறுகிறார்கள். (ரிக் 1.164.46)

சிவன் என்ற பெயரிலும் விஷ்ணு என்ற பெயரிலும் புதிதாக தெய்வங்கள் ஏற்படுத்தப்பட்ட போது அவை பரம்பொருளை எப்பெயரிட்டும் அழைக்கலாம் என்ற இந்த வேதக் கருத்துக்கு இயைபுடையவையாகவே அமைந்தன. பிற மதத் தெய்வங்களுக்கும், இனி வரவிருக்கும் தெய்வங்களுக்கும் கூட இது பொருந்தும்.

பரம்பொருளுக்குரிய இலக்கணத்தை முதன் முதலில் வரையறுத்தது ரிக் வேதம் தான். ரிக் 10.54 மற்றும் 10.55 பரம்பொருளுக்கு இந்திரன் என்ற பெயர் அளித்து அவருடைய நான்கு மாவலிமைகளைக் குறிப்பிடுகிறது.

1 கடந்த காலமாகவும் வருங்காலமாகவும் காலம் கடந்து நிற்றல்,

2 விண் மண் எல்லாவற்றிலும் வியாபித்து இடம் கடந்து நிற்றல்,

3 சூரியன் முதலான எல்லாப் பொருளையும் படைத்தல்,

4 புரிந்து கொள்ளப்படாத செயல்பாடுகள் கொண்டிருத்தல்.

எப்பொருட்குந் தானேயாய் யாவைக்கும் வீடாகும் அப்பொருளாம்
உலகேழெனத்திசை பத்தெனத்தான்ஒருவனுமே பலவாகிநின்றவா
எங்கள் பெருமான் பாத மிரண்டும் வினவில் பாதாள மேழினுக் கப்பால்
சோதி மணிமுடி சொல்லிற் சொல்லிறந் துநின்ற தொன்மை
முன்புமாய்ப் பின்பும் முழுதுமாய்ப் பரந்த முத்தனே முடிவிலா முதலே
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்ணிறந் தெல்லை யிலாதானே

என்று பரம்பொருளின் முதல் பண்பை, அதாவது, இடம் கடந்த தன்மையை விளக்குகிறது திருவாசகம்.

 

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதி
முன்னீறும் ஆதியும் இல்லான்

என்று பரம்பொருளின் காலம் கடந்த தன்மை குறிப்பிடப்படுகிறது.

கூத்தன்இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தம் கரந்தும் விளையாடி

என்று அதன் படைப்புத் திறன் வியக்கப்படுகிறது.

இறைவனும் அவனது செயல்களும் நம் சிந்தனைக்கு எட்டாதவை என்பதைக் கீழ்க்கண்டவாறு புகழ்கிறது திருவாசகம்.

மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே
யாவையுமாய் அல்லையுமாஞ்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
சித்தமுஞ் செல்லாச் சேட்சியன் காண்க
சிந்தை யாலும் அறிவருஞ் செல்வனே.
விச்ச தின்றியே விளைவு செய்குவாய் விண்ணும் மண்ணகம் முழுதும் யாவையும்
வைச்சு வாங்குவாய்
சிந்தனைக்கும்அரியாய்
நின்னையே அறியேன் நின்னையே அறியும் அறிவறி யேன்
நரியைக் குதிரைப் பரியாக்கி ஞாலமெல்லாம் நிகழ்வித்துப்
பெரிய தென்னன் மதுரையெல்லாம் பிச்சதேற்றும் பெருந்துறையாய்

எல்லாப் பொருளிலும் எல்லாக் காலத்திலும் வியாபித்துள்ள பொருள் ஒன்று தான் இருக்க முடியும். அதை இந்திரன், அக்னி, வருணன் என்று எந்தப் பெயரிலும் அழைக்கலாம் என்பது வேதம் தரும் சுதந்திரம். இதை இன்னும் சற்று நீட்டினால் பரம்பொருளின் பெயர்களில், சிவன், திருமால், விநாயகன், காளி, சாத்தன், வேலன் என்ற பெயர்களும் இருப்பது தெரியவரும். இன்னும் நீட்டுகிறார் பாரதி. அங்கே அல்லா, யெஹோவா என்ற பெயர்களும் தெரிகின்றன.
வேதம் ஒரு சடங்கு நூல் என்று பிரசாரம் செய்யப்பட்டாலும் கூட அது ஒரு பக்தி நூலே. வேதத்தில் பக்தி மாத்திரம் தான் உண்டு என்று பாரதி கூறுவதைக் கவனிக்க.

பக்தி என்பது என்ன? பாரதி வரையறுக்கிறார்- எப்போதும் எப்போதும் எப்போதிலும் எதிலும் எங்கும் நம்மைக் கடவுள் காக்கும் என்ற நம்பிக்கை கொண்டிருத்தல் பக்தி என்று சொல்லப்படும்.

இறைவனை, என்றும் எங்கும் நம்மைக் காப்பவராக, தனக்கு மிக நெருங்கியவராக- தாயாக, தந்தையாக, நண்பனாக, குழந்தையாகக்- கருதுவது, அவனையே சரணடைவது, அவன் புகழைக் கூறுவது, அவனிடம் தன் குறைகளைத் தெரிவித்து நீக்குமாறு வேண்டுவது, அவனன்றி வேறு ஒருவரையும் நாடாமல் இருப்பது – இது தான் பக்தியின் அடையாளங்கள்.

கற்றாவின் மனம் போலக் கசிந்துருக வேண்டுவனே,

கற்றா மனமெனக் கதறியும் பதறியும்
மற்றோர் தெய்வங் கனவிலும் நினையா

என்ற மாணிக்க வாசகர் கூற்றின் ஆழ்ந்த பக்தியை இந்திரா, நாங்கள் உன்னை மடி நிரம்பிக் கன்றை அழைக்கும் பசுப் போலக் கதறி அழைக்கிறோம். எங்கள் பிரார்த்தனையைச் செவி மடுப்பாயாக என்ற ரிக் 7.32.22 இல் காணலாம்.

அவனருளாலே அவன் தாள் வணங்கி என்று மணிவாசகர் சொல்வது உன்னைத் துதிக்க வலிமையும் நீயே தான் கொடுக்க வேண்டும் என்ற வேதக் கூற்றின் எதிரொலியே 5.10.7

நீ எங்களுடையவன், நாங்கள் உன்னுடையவர்கள் என்ற ரிக் 8.92.32 உன்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று திருவாசகத்தில் வெளிப்படுகிறது.

தந்தையின் ஆடை முனையைப் பிடித்திழுக்கும் மகனைப் போல நான் உன்னை என் பிரார்த்தனையால் பிடித்திழுக்கிறேன் (ரிக் 3.53.2) என்பது சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே என்று மாணிக்க வாசகர் கூறுவதற்கு முன்னோடி.

தெய்வத்தைத் தந்தையாக, உறவினனாக, நண்பனாகப் பாவித்துப் போற்றும் மந்திரங்கள் வேதத்தில் பல உள்ளன. இதோ ஒன்று. மருத்துகளே, தந்தை மகனை அணைத்துக் கொள்வது போல, நீங்கள் என்னை எப்பொழுது இருகைகளாலும் அணைத்துக் கொள்வீர்கள்? (ரிக் 1.38.1)

சூரனே, நீ எங்களை ஒரு குற்றத்துக்காகக் கொல்லாதே, இரு குற்றங்களுக்காகக் கொல்லாதே, மூன்று குற்றங்களுக்காகக் கொல்லாதே, பல குற்றங்களுக்காகக் கொல்லாதே

என்ற மந்திரம் 8.45.34

சிறியேன் பிழை பொறுக்குங் கோனே

பெற்றது கொண்டு பிழையே பெருக்கிச் சுருக்குமன்பின்
வெற்றடியேனை விடுதிகண்டாய் விடிலோ கெடுவேன்
பேயேனதுள்ளப் பிழை பொறுக்கும் பெருமையனை
உமையாள் கணவா எனை ஆள்வாய் பிழைத்தாற் பொறுக்க வேண்டாவோ

என்ற திருவாசக வரிகளில் தொனிக்கிறது.

உன்னையன்றி எனக்கு சுகப்படுத்துபவன் எவரும் இல்லை

என்ற ரிக்8.66.1 இன் ஒரு முனைப்பட்ட பக்தி

பரி மேற் கொண்ட சேவகனார் ஒருவரையன்றி உருவறியாதென்றன் உள்ளமதே

என்ற திருவாசகத்தில் காணப்படுகிறது.

பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றுஅறியேன் என்று மணிவாசகர் கூறியதின் முன்னோடி ரிக் 1.7.7 இல் காணப்படுகிறது. இந்திரனைப் புகழும் வகையை நான் அறியேன் என்கிறார் ரிஷி.

புகழுள்ள உன் நாமத்தை நான் எப்பொழுதும் கூறிக் கொண்டிருப்பேன் என்று வேதம் 7.22.5 கூறுவதற்கிணங்க திருவாசகமும்

கொற்றச் சேவகன் நாமங்கள் பாடிப் பாடி
ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லாற் காயிரம் திருநாமம் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ
உன்நாமங்கள்பேசுவார்க் கிணக்கிலாததோர்இன்பமேவரும்

என்று நாம ஜப மஹிமை பற்றிப் பேசுகிறது.

திருமறையும் திருவாசகமும் ஒருவாசகம் என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்?



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard