Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அந்தணர் என்போர் அறவோர்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
அந்தணர் என்போர் அறவோர்
Permalink  
 


அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். 
குறள் 30: நீத்தார் பெருமை.

மணக்குடவர் உரை:எல்லாவுயிர்க்குஞ் செவ்விய தட்பஞ்செய்தலை மேற்கொண்டொழுகலானே, அந்தணரென்போரும் துறந்தாராகக் கொள்ளப்படுவர். மேல் துறந்தவர்களினுஞ் சிறியாருளரென்று கூறினார். இதனானே துறவாதாரினும் பெரியாருளரென்று கூறினார். இவை யெட்டானும் துறவறத்தின் பெருமை கூறப்பட்டது.
பரிமேலழகர் உரை:எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான் - எல்லா உயிர்கள் மேலும் செவ்விய தண்ணளியைப் பூண்டு ஒழுகலான்; அந்தணர் என்போர் அறவோர் - அந்தணரென்று சொல்லப்படுவார் துறவறத்தில் நின்றவர். (பூணுதல் விரதமாகக் கோடல். 'அந்தணர்' என்பது அழகிய தட்பத்தினை உடையார் என ஏதுப்பெயர் ஆகலின், அஃது அவ்வருளுடையார் மேலன்றிச் செல்லாது என்பது கருத்து. அவ்வாறு ஆணையுடையாராயினும் உயிர்கண்மாட்டு அருளுடையர் என்பது இதனால் கூறப்பட்டது.
மு. வரதராசன் உரை:எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.
கலைஞர் உரை:அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்.
சாலமன் பாப்பையா உரை:எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர்.
Translation:Towards all that breathe, with seemly graciousness adorned they live; And thus to virtue's sons the name of 'Anthanar' men give,
Explanation: The virtuous are truly called Anthanar; because in their conduct towards all creatures they are clothed in kindness.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

சிலப்பதிகாரம் 16-7 Silappathikaram 16-7  இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் 2 மதுரைக் காண்டம்  6. கொலைக்களக் காதை

கண்ணகி மனம் திறந்து பேசுகிறாள்  போற்றா ஒழுக்கம்
 
‘அறவோர்க்கு அளித்தலும், அந்தணர் ஓம்பலும்,
துறவோர்க்கு எதிர்தலும், தொல்லோர் சிறப்பின்
விருந்து எதிர்கோடலும், இழந்த என்னை, நும்
பெருமகள்-தன்னொடும் பெரும் பெயர்த் தலைத் தாள்
மன் பெரும் சிறப்பின் மா நிதிக் கிழவன் 75
முந்தை நில்லா முனிவு இகந்தனனா,
அற்பு உளம் சிறந்து ஆங்கு, அருள் மொழி அளைஇ,
என் பாராட்ட, யான் அகத்து ஒளித்த
நோயும் துன்பமும் நொடிவது போலும் என்
வாய் அல் முறுவற்கு அவர் உள் அகம் வருந்த, 80
போற்றா ஒழுக்கம் புரிந்தீர்; யாவதும்
மாற்றா உள்ள வாழ்க்கையேன் ஆதலின்,
ஏற்று எழுந்தனன், யான்’என்று அவள் கூற

அறநெறியாளர்களுக்கு  அளித்தல், செந்தண்மைப் பூண்டொழுகும் அந்தணர்களைப் பாதுகாத்தல், துறவிகளை வழிபடுதல் - இந்த மூன்றும்  இல்லறம் பூண்டோர் கடமை. 
இந்த மூன்றையும் துறந்து நான் வாழ்ந்துகொண்டிருந்தேன். 
இப்படி வாழ்ந்த என்னை உன் தாயும், தந்தையும் உன்மீது எப்போதும் இல்லாத சினத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு, என்மீது அன்பு உள்ளம் கொண்டு, அருள் தரும் மொழிகளைப் பேசி, என்னைப் பாராட்ட, நான் வீட்டில் ஒளிந்துகொண்டு, என் நோவையும் துன்பத்தையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல், வாயால் புன்னகை பூத்துக் காட்ட, அந்த புன்னகையைப் பார்த்து  அவர்கள் மனம் வருந்தும்படிப் போற்றப்படாத ஒழுக்க நெறியில் வாழ்ந்தீர். 
அதனை நான் மாற்றாத உள்ளத்தோடு வாழ்ந்தேன் ஆகையால், நீ எழுக என்றவுடன் எழுந்தேன்.  - என்று கண்ணகி கோவலனிடம் கூறினாள்.  
(எழுக என எழுந்தாய். என் செய்தனை - என்று கோவலன் வினவியதற்கு இப்பபடி விளக்கம் அளித்தாள்) 

அவளுடைய வருத்தம் என்ன தெரியுமா? "என்னால் தர்மவான்களுக்கு உணவளிக்க முடியவில்லை. அந்தணரைப் பேணமுடியவில்லை. துறவியரை வரவேற்று உபசரிக்க முடியவில்லை. நம்முடைய பழைய மரபுப் பெருமையான விருந்தினரை அழைத்துத் தக்கவற்றைச் செய்யமுடியவில்லை. ஒரு இல்லறப் பெண்ணான எனது கடமைகள் எல்லாவற்றையும் செய்யும் நற்பேறை இழந்த என்னைப் பார்க்க உன் தாயும் தந்தையும் வந்திருந்தனர்" என்றுதான் அவள் தொடங்குகிறாள். செல்வக் குடிப்பெண்ணாகப் பிறந்த அவள் "எனக்குப் பட்டும் பீதாம்பரமும் இல்லை, முத்தும் வைரவைடூரியுமும் பதித்த தங்கநகைகள் இல்லை, பெருமாளிகை வாசம் இல்லை" என்று கூறவில்லை. மாறாக

"அறவோர்க்கு அளித்தலும், அந்தணர் ஓம்பலும்
துறவோர்க்கு எதிர்தலும், தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை"

(சிலப்பதிகாரம்: கொலைக்களக் காதை: 71-73)

[எதிர்தல், எதிர்கோடல் - வரவேற்று உபசரித்தல்]

என்று கூறியே வருந்தினாள்.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

நான்மறை அந்தணர் நவின்ற ஓதையும் - மது:13/141

ஒத்து உடை அந்தணர் உரை_நூல் கிடக்கையின் - மது:15/70

அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும் - மது:16/71

ஆசான் பெருங்கணி அற_களத்து அந்தணர்

   காவிதி மந்திர கணக்கர் தம்மொடு - மது: 22/8,9

அறு தொழில் அந்தணர் பெறு முறை வகுக்க - மது:23/70

அரு மறை அந்தணர் ஆங்கு உளர் வாழ்வோர் - வஞ்சி:26/102

அற_களத்து அந்தணர் ஆசான் பெருங்கணி - வஞ்சி:28/222

நா வல் அந்தணன் தான் நவின்று உரைப்போன் - மது:15/20



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

பால் புரை வெள் எயிற்று பார்ப்பன கோலத்து - மது:21/48

பார்ப்பன வாகை சூடி ஏற்புற - மது:23/72

பாசண்டன் யான் பார்ப்பனி-தன்மேல்

மாடல மறையோய் வந்தேன் என்றலும் - வஞ்சி: 30/69,70

பார்ப்பனி-தன்னொடு பண்டை தாய்-பால் - வஞ்சி:30/82

பார்ப்பார் அறவோர் பசு பத்தினி பெண்டிர் - மது:21/53

மா முது பார்ப்பான் மறை வழி காட்டிட - புகார்:1/54

வலவை பார்ப்பான் பராசரன் என்போன் - மது:23/61

படு_பொருள் வௌவிய பார்ப்பான் இவன் என - மது:23/102

நான்மறை மருங்கின் வேள்வி பார்ப்பான்

   அரு மறை மருங்கின் அரசர்க்கு ஓங்கிய - வஞ்சி: 28/176,177

பார்ப்பானொடு மனையாள் என் மேல் படாதன விட்டு - புகார்:9/7

குண்ட பார்ப்பீர் என்னோடு ஓதி என் - மது:23/88



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard