Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சீதையை கவர்ந்த ராவணன் குரங்கிணி அம்மன் கதையும்


Guru

Status: Offline
Posts: 7474
Date:
சீதையை கவர்ந்த ராவணன் குரங்கிணி அம்மன் கதையும்
Permalink  
 


புறநானூறு 378, பாடியவர்: ஊன்பொதிபசுங்குடையார்பாடப்பட்டோன்: சோழன் செருப்பாழிஎறிந்தஇளஞ்சேட்சென்னிதிணை: பாடாண்துறை: இயன்மொழி

தென் பரதவர் மிடல் சாய,
வட வடுகர் வாள் ஓட்டிய,
தொடையமை கண்ணித், திருந்து வேல் தடக்கைக்,
கடுமா கடைஇய விடு பரி வடிம்பின்,
நல் தார்க் கள்ளின் சோழன் கோயில்,  5
புதுப் பிறை அன்ன சுதை செய் மாடத்துப்
பனிக் கயத்து அன்ன நீள் நகர் நின்று, என்
அரிக்கூடு மாக் கிணை இரிய ஒற்றி,
எஞ்சா மரபின் வஞ்சி பாட,
எமக்கென வகுத்த அல்ல மிகப்பல  10
மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை
தாங்காது பொழிதந்தோனே; அது கண்டு
இலம்பாடு உழந்த என் இரும்பேர் ஒக்கல்
விரல் செறி மரபின செவித் தொடக்குநரும்,
செவித் தொடர் மரபின விரற் செறிக்குநரும்,  15
அரைக்கமை மரபின மிடற்றி யாக்குநரும்,
மிடற்றமை மரபின அரைக்கி யாக்குநரும்,
கடுந்தெறல் இராமன் உடன் புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை
நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின்  20
செம்முகப் பெருங்கிளை இழைப் பொலிந்தாஅங்கு,
அறாஅ அருநகை இனிது பெற்றிகுமே,
இருங்கிளைத் தலைமை எய்தி,
அரும் படர் எவ்வம் உழந்ததன் தலையே.

Puranānūru 378, Poet Oonpothi Pasunkudaiyār sang for Chozhan Cheruppāli Erintha Ilanchētchenni, Thinai: Pādān, Thurai: Iyan Mozhi
He ruined the strength of the southern fishermen,
and drove away the Vadukars with swords,
Chozhan who wears a lovely garland, carries a perfect
spear, dons an elegantly strung head strand, is rich in
liquor, and spurs his swift horse.

I stood at his pond-like mansion with moon-like plaster,
and beat my dark kinai drum with sharp sounds and sang
songs in vanji mode in a traditional manner.  He gave
me many splendid precious jewels that awed me.
When my large family saw that, they took the finger
ornaments and put them on their ears, put the ear jewels
on their fingers, those meant for the waist on their
necks, and those meant for the necks on their waists.
They were like a huge family of monkeys with gaping red
mouths scooping up the beautiful ornaments that fell to
the ground, when the mighty demon snatched away enraged
Raman’s wife Seethai.  Heading a large family and thinking
about removing their great sorrow, I was very happy along
with them when our poverty and distress were removed.

தெற்கிலிருந்து வந்து குறும்பு செய்த பரதவரின் வலிமையை ஒழித்து,
வடக்கிலிருந்து வந்து குறும்பு செய்த வடுகரின் வாட்படையை அழித்த
நன்றாகத் தொடுக்கப்பட்ட கண்ணியையும், நன்கு செய்யப்பட்ட வேலை ஏந்திய பெரிய கையையும்,
விரைந்து செல்லும் குதிரையைச் செலுத்துவதற்கான பரிவடிம்பு என்னும் காலணியையும்,
நல்ல மாலையையும், கள்ளையும் உடைய சோழன் இளஞ்சேட்சென்னியின் அரண்மனையில்
புதிதாக எழுந்த பிறை போன்ற, வெண்ணிறச் சுண்ணாம்பு பூசப்பட்ட மாடங்களையுடைய
குளிர்ந்த நீர்நிலை போன்ற குளிர்ச்சி பொருந்திய நெடுமனையின் முன்னே நின்று, என்னுடைய
அரித்த ஓசையைச் செய்யும் பெரிய கிணைப் பறை கிழியுமாறு கொட்டி,
மரபு தவறாமல், பகைமேற் செல்லும்போது பாடும் வஞ்சித்துறைப் பாடல்களை பாட,
எம்மைப் போன்ற பரிசிலர்க்குக் கொடுப்பதற்காகச் செய்யப்படாத, மிகப் பல,
மேன்மையான சிறப்பினையுடைய அரிய அணிகலன்களையும் பிற செல்வங்களையும்
எம்மால் தாங்க முடியாத அளவுக்கு வழங்கினான்; அதனைக் கண்டு
வறுமையால் வருந்திய என்னுடைய பெரிய சுற்றத்தார்
விரல்களில் அணிவனவற்றைக் காதில் அணிபவரும்,
காதில் அணிவனவற்றைக் விரல்களில் அணிபவரும்,
இடையில் அணியவேண்டியவற்றைக் கழுத்தில் அணிபவரும்,
கழுத்தில் அணிய வேண்டியவற்றைக் இடையில் கட்டிக்கொண்டவருமாய்
கடும் அழித்தல் தொழிலையுடைய இராமனுடன் கூடியிருந்த சீதையை,
மிக்க வலிமையுடைய அரக்கன் கவர்ந்துகொண்டு செல்லும்பொழுது,
சீதை கழற்றி எறிந்த நகைகள் நிலத்தே விழுந்தவுடன் அந்த நகைகளைக் கண்டெடுத்த குரங்குகளின்
சிவந்த முகமுடைய பெரும் கூட்டம் அவற்றைத் தாறுமாறாக அணிந்ததைக் கண்டோர் நகைத்ததைப் போல்
நீங்காத அரிய மகிழ்ச்சியை மிகவும் அடைந்தோம்,
பெரிய சுற்றத்திற்குத் தலைமை தாங்கி,
பல அரிய எண்ணங்களினால் உண்டாகிய நோயின் வருத்தம் உற்றதற்கும் மேலாக.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
RE: சீதையை கவர்ந்த ராவணன் குரங்கிணி அம்மன் கதையும்
Permalink  
 


Notes:  Puranānūru 10, 203, 370 and 378 were written by this poet.  This king goes by the names சோழன் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னிசோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி and சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி.  பதிற்றுப்பத்து 70 – மா உடற்றிய வடிம்பு வடுகர் (2) – ஒளவை துரைசாமி உரை – தொண்டை நாட்டுத் திருவேங்கடத்திற்கு வடக்கில் உள்ள நாட்டவராதலால் வடுகர் எனப்பட்டனர்பொவேசோமசுந்தரனார் உரை அகநானூறு 213 – வடுகர் தெலுங்கர்.   இரும்பேர்ஒக்கல் – நச்சினார்க்கினியர் உரைபொவேசோமசுந்தரனார் உரை – பொருநராற்றுப்படை 61, சிறுபாணாற்றுப்படை 139, 144, பெரும்பாணாற்றுப்படை 25, 470, மலைபடுகடாம் 157 – கரிய பெரிய சுற்றம்ஒளவை துரைசாமி உரை – புறநானூறு பாடல்கள் 69, 150, 370, 378, 390, 391, 393, 394, 396 – மிக்க பெரிய சுற்றத்தார்மிகப் பெரிய சுற்றம்புறநானூறு 320 – கரிய பெரிய சுற்றத்தார்பொவேசோமசுந்தரனார் உரைஇராவேங்கடாசலம் பிள்ளைமுவேங்கடசாமி நாட்டார் உரை – அகநானூறு 301 – மிகப் பெரிய சுற்றத்தார் பரிவடிம்பின் (4) – பொவேசோமசுந்தரனார் உரை – குதிரையைச் செலுத்துவதற்கு என்று காலில் இடப்பட்ட பரிவடிம்பு என்னும் காலணியையும் இலம்பாடு – இலம்பாடு ஒற்கம் ஆயிரண்டும் வறுமை (தொல்காப்பியம்உரியியல் 64).  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம்உரியியல் 24).

Meanings:  தென் பரதவர் மிடல் சாய – strength of southern fishermen/coastal people ruined, வட வடுகர் வாள் ஓட்டிய – drove away those on the north with swords, drove away Andhra warriors with swords, தொடையமை கண்ணி – well strung  head strand, திருந்து வேல் – perfect spear, தடக் கை – large hands, கடுமா கடைஇய விடு பரிவடிம்பின் – with spurs to goad his fast horses (கடைஇய – சொல்லிசை அளபெடை), நல் தார்க் கள்ளின் சோழன் – Chozhan wearing a fine garland and owning liquor, கோயில் – palace, புதுப் பிறை அன்ன – like a new moon, சுதை செய் மாடத்து – at a mansion which had plaster on its walls, பனிக் கயத்து அன்ன – long like a cool pond (கயத்து  – கயம்அத்து சாரியை), நீள் நகர் – huge house, நின்று என் அரிக்கூடு மாக் கிணை இரிய ஒற்றி – stood there and beat on my dark kinai drum with rhythmic sounds, எஞ்சா மரபின் வஞ்சி பாட – sang in Vanji mode according to strong tradition – it is about unrestrained attack, எமக்கென வகுத்த அல்ல – made not just for us, மிகப்பல மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை தாங்காது பொழிதந்தோனே – he gave me precious jewels and great wealth that I could not endure (ஏகாரம் அசைநிலை, an expletive), அது கண்டு – on seeing, இலம்பாடு உழந்த – suffering with nothing, என் இரும்பேர் ஒக்கல் – my very large family (இரும்பேர் – ஒருபொருட்பன்மொழி), விரல் செறி மரபின செவித் தொடக்குநரும் – took the ones for the fingers and put them on their ears, செவித் தொடர் மரபின விரற் செறிக்குநரும் – those who put on their fingers what needs to be worn on the ears, அரைக்கு அமை மரபின – what should be worn on waists, மிடற்றி யாக்குநரும் – they wore on their necks, மிடற்றமை மரபின அரைக்கு யாக்குநரும் – put what was meant for the necks on their waists, கடுந்தெறல் இராமன் உடன் புணர் சீதையை – Seethai who was the wife of Raman of great wrath, Seethai who was the wife of the invincible Raman, வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை – when the mighty demon seized her, நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின் – of monkeys which saw the beautiful jewels which hit the ground, செம்முகப் பெருங்கிளை – large family with red face, இழைப் பொலிந்தாஅங்கு – like how they glowed with jewels (பொலிந்தாஅங்கு – இசை நிறை அளபெடை), அறாஅ அரு நகை இனிது பெற்றிகுமே – we attained endless great joy (அறாஅ – இசை நிறை அளபெடை), இருங்கிளைத் தலைமை எய்தி – heading the large family, அரும் படர் எவ்வம் உழந்ததன் தலையே – due to thinking about their great sorrow (தலையே – ஏகாரம் அசைநிலை, an expletive)



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

_இருதலையின்அரக்கர்கோமான் - கலி 38/3

 

இமைய வில் வாங்கிய ஈர்ம் சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர் மலை இருந்தனன் ஆக
_இரு தலையின் அரக்கர் கோமான்
தொடி பொலி தட கையின் கீழ் புகுத்து  மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல                   5
உறு புலி உரு ஏய்ப்ப பூத்த வேங்கையை
கறுவு கொண்டு அதன் முதல் குத்திய மத யானை
நீடு இரு விடர் அகம் சிலம்ப கூய் தன்
கோடு புய்க்க அல்லாது உழக்கும் நாட கேள்

 

இமையமலையாகிய வில்லை வளைத்த, கங்கை தங்கும் சடைமுடியோனாகிய சிவன்
உமையவளோடு அமர்ந்து உயர்ந்த மலையில் இருக்கும்போது,
பத்துத் தலைகளைக் கொண்ட அரக்கர் கோமானாகிய இராவணன்
தோள்வளை விளங்கும் பெரிய கையைக் கீழே நுழைத்து அந்த மலையைப்
பெயர்த்து எடுக்க முடியாமல் மனம் வருந்தியதைப் போல,
மிகப்பெரிய புலியின் நிறத்தைப் போன்று பூத்த வேங்கையைச்
சினங்கொண்டு அந்த மரத்தின் அடிப்பகுதியைக் குத்திய மதயானை
நீண்ட கரிய மலைப்பிளவுகளில் எதிரொலிக்கும்படியாக கூக்குரலிட்டுத் தன்

 

கொம்புகளைத் திரும்ப உருவிக்கொள்ள முடியாமல் வருந்துகின்ற நாட்டைச் சேர்ந்தவனே! கேட்பாயாக!


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard