Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நான்மறை


Guru

Status: Offline
Posts: 7387
Date:
நான்மறை
Permalink  
 


வேதங்களுக்கு முந்தைய தமிழர் நான்மறை!

தொல்காப்பியத்தில் கூறப்படும் “நான்மறை முற்றிய அதங்கோட்டு ஆசாற்கு” என்ற வரிகளும், "நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறை மொழி தானே மந்திரம்" என்பதும் ஆரியர்களின் நான்குவேதங்களைக் குறிக்கின்றன என்று வாதாடுகிறார்கள் சில சமக்கிருத வாதிகள். ஆனால், உண்மையிலே அவை தமிழிலிருந்த மூல மறைகளாகிய பழந்தமிழர்களின் நான்கு மறைகளையும் தான் குறிக்கிறது என்கிறார் முனைவர் மதிவாணன்.

சூரியன் க.பாண்டியன் அவர்கள் எழுதிய மறைக்கப்பட்ட மரபுச் செல்வம் (1988) (பக்.27) என்னும் நூலில் தொன்மை நால்வர் என்னும் தலைப்பில் பழந்தமிழர்களின் நான்மறைகளைத் தொகுத்த நால்வரின் பெயர் இடம் பெற்றுள்ளது. சணகர், சனந்தர், சனாதர், சனாதகுமரர் என்பவர்களே அந்த நால்வர்.

சன் என்றும் வடசொல் நல்ல என்று பொருள் படும். ஆதலால், நன்நாகர், நல்னந்தர், நல்லாதர், நல்லாதன்குமரர் என்னும் தூய தமிழ்ப் பெயர்களே வடமொழி அடைமொழி பெற்றுள்ளன என்று சூரியன் கா. பாண்டியன் கூறுகிறார். வள்ளலாரும் நன்னெறியைச் சன்மார்க்கம் என்று குறிப்பிட்டார்.
தென்முகக் கடவுள் மாவிந்த மலையில் (மகேந்திரகிரி) கல்லால நீழலின் கீழ் நால்வர்க்கு மந்திர நெறிகளைக் கற்பித்ததாகக் கூறுவது சிவனி மரபு. சிற்ப நூல் கடவுள் வாழ்த்திலும், நல்லார்கள் நால்வருக்கும் நாவில் பூரணம் காட்டி கல்லாலின் கீழிருந்த கண்ணாற்றலான பரம் எல்லார்க்கும் தெய்வமே. எனக் கூறப்பட்டுள்ளது. மேற்கண்ட நால்வரும் முறையே...

1) நல்லாதன் (சனாதன்) - மெய்யியல் (தத்துவம்) - பெளடிகம். - நிறைமொழி மாந்தர் மறைமொழி (ஆகமம்)
2) நல்நந்தி (சனந்தி) - ஓகம் (யோகம்) - தரவாகரம் சித்தர் நெறி (வர்மக்கலை)
3) நல்லாதன் குமரன் - ஊழ்கம் (தியானம்) - தைத்திரியம் (சனாதகுமரர்)
4) நன்னாகன் (சனாகன்) - மந்திரம் (யாமம்) - சாமம், மந்திர உருவேற்றம். மேற்கண்ட நாற்பிரிவு மந்திரங்களும் சித்தர் நெறிகளை நான்கு பிரிவுகளாகப் பிரித்துத் தம் அணுக்க மாணவர்களுக்கு மட்டும் பயிற்சி தந்த சிறப்பு நெறிகளாகும் எனத் தெரிகிறது.
சுமாாட்டு என்பவர் ஆரியரல்லாதோரின் சமயம் மற்றும் தத்துவக் கருத்துகள் உபநிடதங்கள் எழுதப்படுவதற்குக் காரணமாக அமைந்தன எனக் கூறியிருப்பதும் இங்குக் கருதத்தக்கது. பழந்தமிழர்களின் நான்மறைகளையும் ஒருவரே கற்றுத் தேர்வது அரிய செயல். ஆனால், தொல்காப்பிய அரங்கேற்றத்திற்குத் தலைமை தாங்கிய அதங்கோட்டாசான் மெய்யியல், ஓகம், ஊழகம்(தியானம்), மந்திரம் என்னும் நான்கு மறைகளையும் முழுமையாகக் கற்றிருந்ததால் நான்மறை முற்றிய அதங்கோட்டாசான் எனத் தொல்காப்பியப் பாயிரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.
மறை என்னும் சொல் - மறு - (மறி) மறை எனத் திரிந்து பல காலும் மீண்டும், மீண்டும் மனப்பாடம் செய்யும் நூலைக் குறித்தது. எனவே, பழந்தமிழர்களின் நான்மறை செவிவழி போற்றப்பட்ட மந்திரங்கள் என்பதால், எழுந்து புறத்திசைக்கும் எழுத்தொலிப்புச் சொற்களாகக் கூறுகிறோம் என்கிறார் தொல்காப்பியர். எழுந்து புறத்தே ஒலிக்காமல் கேளா ஒளிபோல அகத்தெழு வளி ஓசையாகக் கூறப்படுவதே மந்திரம் என்றும் அந்தக் கேளா ஒலிகளுக்கு ஆற்றல் உண்டு என்பதும், பண்டையோர் நம்பிக்கை, ஆதலால் தான். நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப - தொல்காப்பியம், நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும் - குறள். என்று பண்டைத் தமிழ் நான்மறைகள் குறிப்பிடப் பட்டுள்ளன எனத் தெரிகிறது.

தொல்காப்பியர் இவற்றை வாய்மொழி என்றும் குறிப்பிட்டிருக்கிறார். தமிழ் நான்மறைகளைத் தோற்றுவித்தவர் நால்வர். பிறகு அவற்றை பேணிக் காத்து வந்த நால்வரிடமிருந்து அவர்கள் பெயராலேயே வடதமிழாகிய பாலி பிராகிருத மொழியாக்கம் பெற்ற நான்குமே நச்சினார்க்கினியர் குறித்த தைத்திரியம், பெளடிகம், தலவாகரம், சாமம் என்பன. திதியன், புகழன், தாலவகன், யாமன் எனும் நால்வர் வாயிலாக வட தமிழாகிய பிராகிருதத்தார், தமதாக்கிக் கொண்ட நான்மறைகள் முறையே...

1) திதியன் - தைத்திரியம் (வடமொழியாளர் திதி என்பவளின் மகனிடம் கற்ற நூல் என்பர்)
2) புகழன் - போழியம் (பெளடிகம்) ( புகழன் வாயிலாகக் கற்ற நூல்)
3) தாலவகன் - தலவாகரம் (தாலவகன் வாயிலாகக் கற்ற நூல்)
4) யாமன் - சாமம் (யாமன் வாயிலாகக் கற்ற நூல் யாமம் - சாமம்) யாமன், யாமனூர், ஏமனூர் என்பன தூய தமிழ்ச் சொற்கள். இவ்வாறு பெயர் பெற்றிருந்ததை ஆய்ந்துணரலாம்.

இவையனைத்தும் உபநிடத நூல்களாக உருவெடுத்த பின்னும் பெரும்பகுதி அச்சிட்டு வெளியிடப்படாமல் உள்ளது என மக்டொனால்டு குறிப்பிடுகிறார். அதங்கோட்டாசான் மெய்யியல் (தத்துவம்), ஊழ்கம் (தியானம்), ஓகம் (யோகம்), மந்திரம் ஆகிய தமிழ் நான்மறை ஓதியுணர்ந்தவர். கி.மு.1000 காலவரம்புக்குப் பிறகே பிராகிருத பாலி மொழிகள் வளர்ந்திருப்பதால் தொல்காப்பியர் காலத்திற்குப் பிறகு கி.மு. 800 அளவில் இவை, பிராகிருத மொழியில் திதியம், போழியம், தாலவகம், யாமம் என்னும் பெயர்களில் அறிமுகமாகியிருத்தல் வேண்டும். இவை படிப்படியாக வடமொழியிலும் மொழியாக்கம் செய்யப்பட்டன. களப்பிரர், பல்லவர், சோழர் காலங்களில் வடமொழிக்கே முதன்மை தரப்பட்டதால் தமிழிலிருந்த மூல நூல்கள் மறைந்தன. எனினும் வடமொழியிலுள்ள பிராமணம், ஆரண்யகம், உபநிடதம் என்னும் வடிவங்களில் தமிழர் நான்மறைகள் மறைந்து வாழ்கின்றன. இருக்கு வேதப் பாடல்களில் இவற்றுக்குரிய மூலம் இல்லை என்பது உலகறிந்த உண்மையாகும்.

- முனைவர் மதிவாணன்



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

  கணபதி துணை. திருச்சிற்றம்பலம்.

எட்டுத் தொகையுள் ஆறாவதாகியகலித்தொகை மூலமும் நச்சினார்க்கினியருரையும்

கடவுள் வாழ்த்து.

(1) (1) ஆறறி யந்தணர்க் கருமறை பலபகர்ந்து

தேறுநீர் சடைக்கரந்து திரிபுரந் தீமடுத்துக்

கூறாமற் குறித்ததன்மேற் செல்லுங் கடுங்கூளி

மாறாப்போர் மணிமிடற் றெண்கையாய் கேளினி;

5 படுபறைபலவியம்பப் பல்லுருவம் பெயர்த்துநீ

கொடுகொட்டி யாடுங்காற் கோடுயரகலல்குற்

கொடிபுரை நுசுப்பினாள் கொண்டசீர் தருவாளோ;

8 மண்டமர்பலகடந்து மதுகையா னீறணிந்து

பண்டரங்க மாடுங்காற்பணையெழி லணைமென்றோள்

வண்டரற்றுங் கூந்தலாள்வளர்தூக்குத் தருவாளோ;

1. இச்செய்யுள், கலிப்பாவான் வாழ்த்துவந்தது; (தொல். செய். சூ. 109. நச்) மூன்றடியாற் சுரிதகம் வந்தது; (தொல். செய். சூ. 131 ‘போக்கியல்’ இளம்) தரவு தாழிசை தனிச்சொல் சுரிதகமென்னும் நான் குறுப்புடையதும் கொச்சகவொருபோகு; (தொல். செய். சூ. 149. பே. நச்) என்பவற்றிற்கு மேற்கோள்.

11. கொலையுழுவைத் தோலசைஇக் கொன்றைத்தார் சுவற்புரவத்

தலையங்கைகொண்டுநீ காபால மாடுங்கான்

முலையணிந்த முறுவலாண்முற்பாணி தருவாளோ;

எனவாங்கு;

15. பாணியுந் தூக்குஞ் சீரு மென்றிவை

மாணிழையரிவை காப்ப

வாணமில் பொருளெமக் கமர்ந்தனை யாடி.

என்பது. ‘‘வாழ்த் தியல் வகையே 1 நாற் பாக்கு முரித்தே’’ (1) என்றதின்கண் வகையென்றதனாற் கொண்ட (2) அறுமுறைவாழ்த்தன்றித் (3) தனக்குப் பயன்படும்படி முன்னிலையாகக் கடவுளை வாழ்த்துதலிற் கடவுள்வாழ்த்து எனப் பெயர் பெற்றது.

இதன் பொருள்.

(4) ஆறறி யந்தணர்க் கருமறை பலபகர்ந்து

தேறுநீர் சடைக்கரந்து திரிபுரந் தீமடுத்துக்

 

1. தொல். செய். சூ. 109.

 

2. அறுமறை வாழ்த்து:- முனிவரும் பசுவும் பார்ப்பாரும் அரசரும் மழையும் நாடுமென்பவற்றை வாழ்த்துதல்.

3. உலகிற்குப் பயன்படும்படியாகவும் படர்க்கையாகவும் கடவுளை வாழ்த்துதலுமுண்டு.

4. (அ) ‘‘ஆறறிமுனிவரன்’’ கந்த. அசுரர் தோற்று. 15. (ஆ) ‘‘ஆறறிமுனிவன்’’ பிரமோத். உமாமகேசுவர பூசாபல. 27. (இ) ‘‘ஆறறி முனிவிர்காள்’’ வாயுசங். சிவானுக்கிரக. 1. (ஈ)‘‘ஆறறி முனிவர்க்கெல்லாமருமறை தெரித்தபின்னர்’’ 2என்பவை ஈண்டு ஒப்புநோக்கற்பாலன. (உ) ‘‘வகையறிமுனிவிர்’’ விநாயக. நைமிச. 25 என்பதும் கருதத்தக்கது. (ஊ)‘‘ஆறறி......கூளி’’ என்னும் பகுதி வருக்கவெதுகைக்கு மேற்கோள். தொல். செய். சூ. 89. ‘ஆயிரு’ இளம். மதுரைத் தமிழ்ச்சங்கப் பதிப்பில் ஓரடி குறைந்தும் வேறொரு கையெழுத்துப் பிரதியில் ஓரடி மிகுந்து முள்ளது.

1. இவ்விடத்தும் பிறவிடத்தும் குறிக்கப்படாதஆகரமும் ஆங்காங்கு இடமின்மை முதலிய காரணங்களாற்சேர்க்காது விடுபவையும் பின்பு இடைவிடுபட்டவை யென்னும்தலைப்புப்பெயரிட்டு இயன்ற அளவு விளக்கப்பெறும்.

(பிரதிபேதம்) 1. நாற்பாற்கும். 2. நின்றவன் வீமனே



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

1) கூறாமற் குறித்ததன்மேற் செல்லுங் கடுங்கூளி

மாறாப்போர் 1 மணிமிடற் (2) றெண்கையாய் கேளினி

என்பது: ஆறங்கத்தையும் அறியும் அந்தணர்க்கு (3) அரியவாகிய வேதங்கள் பலவற்றையும் அருளிச்செய்து, (4) பகையென்று தெளிகின்ற (5) கங்கையின் வேகத்தைச் சடையில் ஒரு கூற்றிலே அடக்கி, முப்புரத்திலே தீயைச்செலுத்தி, வாக்காற் கூறப்படாமல் மனத்தாற் குறித்த அப்பொருட்கும் எட்டாமல் நிற்கும், கடிதாகிய கூளியினது முதுகிடாத போரினையும் நீலமணிபோலுந் திருமிடற்றினையும் எட்டுக்கையினையும் உடையாய், இங்ஙனங் கட்புலனாய் நின்று இப்பொழுது யான் கூறுகின்றதொன்றைக் கேள்; என்றவாறு.

பகர்ந்து கரந்து மடுத்து என்னுஞ் செய்தெனெச்சங்கள் (6) செல்லுமென்னும் பெயரெச்சத்தோடு முடிந்து, 2அஃது எண்கையாய் என்னுங் (1) குறிப்புப் பெயரோடு முடிந்தது.

1. (அ) கூற்றெச்சம் குறிப்பெச்சமெனவும்

(ஆ) ‘‘கூறியிட்டிடாமற் குறிப்பினாலுரைப்ப’’ எனவும் கூறுதலும் குறித்தலும் இணைந்து வருதல் காண்க. (இ) ‘‘கூறாமற் குறித்ததன் மேற்செல்லும்’’ என்னும்பகுதி மல்லீறுவினை யெச்சமாய் வந்ததற்கு மேற்கோள். இதனைச் சிலர் அல்லீறென்றும் கொள்வர். தொல். வினை. சூ. 32. சே; 35. பே; 31. நச்; நன். வினை. சூ. 24. மயிலை. விருத்தி. இரா. இ - வி. சூ. 246.

2. ‘‘எண்டோள் வீசிநின் றாடும் பிரான்றனை’’ தே. திருவங்கமாலை.

3. அருங்கேடன் (குறள் 210) என்புழிப்போல அருமை இன்மைப் பொருளில் வந்ததாகக் கொள்ளின் அருமறை யென்பதற்கு இந்நிலவுலகத்திலில்லாத வேதங்கள் என்று பொருள் கொள்ளுதலுமாம். எஞ்சிய பொருள்களை யேமுறநாடித், திங்கள்போலத் திசைவிளக்கும்மே’ என முருகற்குக் கூறியிருத்தலுங் காண்க.

4. கங்கை சினந்துவந்தமைபற்றித் தேறுநீரென்பதற்குப் பகையென்று தெளிகின்ற கங்கையென்று பொருள் கூறினர் போலும்.

5. கங்கையைச் சடையில் ஒருகூற்றிலே அடக்கியதை ‘‘உந்தியம்புயத் துதித்தவ னுறைதரு முலகு, மிந்திராதிய ருலகமு நடுக்குறவிரைந்து, வந்துதோன்றினள் வருந்தி மலைமகள் கொழுநன், சிந்திடாதொரு சடையினிற் கரந்தனன்சேர’’ என்பதனால் உணர்க. கம்ப. அகலிகை. 55. 6. ‘‘காலைநெற்றியி னகிலமுஞ்சூடு கனலி குறைபட விரைவர்தம் மேலை நெற்றி விழிக்கவந்து பணிந்து என்னுந் தாழிசை

(பிரதிபேதம்) 1 மணிமிடத்த வெண்கையாய் கேஎளினி.

மென்னும் பெயரெச்சத்தோடு முடிந்தது, 1 அஃது எண்கையாய் என்னுங்(1) குறிப்புப் பெயரோடு முடிந்த்து

இது திருமேனிகொண்டு நின்றாயாயினும் வாக்குக்கும் மனத்துக்கும் எட்டாயென்றது.

அவ்வேதந்தனைக் கொண்டே ஆறங்கங்களையும் (2) அறிய வல்லாரென்பது தோன்ற ஆறறியந்தணர் என்றார். (3) அந்தத்தை அணவுவார் அந்தணர்: என்றது, வேதாந்தத்தையே பொருளென்று மேற்கொண்டு பார்ப்பாரென்றவாறு.

ஆறு என்னும் வரையறைப் பண்புப்பெயர் அப்பண்பினையுடைய 2அங்கத்தை உணர்த்திநின்ற ஆகுபெயர். அது ‘‘கிளந்தவல்ல’’ (4) என்பதனுட் கூறினாம்.

யுரையில் செல்லுமென்னும் பெயரெச்சம் கூளி யென்னும் பெயரைக் கொண்டு முடிந்ததென்று கருதும்படி ‘‘கூறாமற்..........கேளினி’’ என்பதை மேற்கோள் காட்டுவர். தக்கயாகப்பரணி யுரையாசிரியர் தக்க. தாழிசை. 330.

1. குறிப்புப் பெயரென்பதற்குக் குறிப்பு வினையாலணையும் பெயரெனப்பொருள் கொள்ளலாமாயினும் எண்கையாயென்பது வினையா லணையும் பெயராகாமலே பெயரடியாகப்பிறந்த பெயராமாதலால், இஃது உறுப்புப் பெயரென்று இருக்கவேண்டியதுபோலும்; உறுப்புப்பெயர் [கையென்னும்] சினையடியாகப்பிறந்த பெயர்.

2. ‘உரைகோளாளர்க்குரைப்பது நூலே’ என்பது இங்கே கருதத்தக்கது.

3. அந்தணரென்பதற்கு மற்றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுகு பவரென்று பொருளெழுதாது இங்கெழுதியிருக்கும் பொருளும் இதற்கிணங்க மது 474-ல் வேதாந்தத்தை எக்காலமும் பார்ப்பாரெனி எழுதியிருக்கும் பொருளும் “அந்தண்மைபூண்ட வருமறையந்தத்துச், சிந்தைசெயந்தணர்’’ [திருமந். அந்தணரொழுக்கம்] என்பதிற் பிற்பகுதியின் அரியபொருளை வெளிப்படுத்தல் கருதிப்போலும். அழகிய தட்பத்தினையுடையாரென ஏதுப் பெயராம் என்பர்; பரிமேலழகர் குறள். 30.

 

4. (அ) தொல், வேற்-மய. சூ. 35, இச்சூத்திரவுரையில் ஆறறியந்தணரென்பதனை மேற்கோள்காட்டி இக்குறிப்பை எழுதியிருத்தலுமன்றி, (ஆ) சிந்தாமணியிலும் 2734 நூற்றுலாமண்டபமென்பதற்கு நூறடியுலாவு தலையுடையமண்டபமென்று பொருளும் எண்ணுப்பெயர் எண்ணுடைய பொருண்மேல் ஆகுபெயராய் நின்றதென்று இலக்கணமெழுதி இப்பகுதியையே மேற்கோள்காட்டினர், இவ்வுரையாசிரியர்; கல்லாட வுரையாசிரியரும்

 



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

(1) ஆறு அங்கமாவன:- உலகயிற்சொல்லை ஒழித்து வைதிகச் சொல்லை ஆராயும் நிருத்தமும,் அவ்விரண்டையும் உடனாராய்ந்த 1ஐந்திரத்தொடக்கத்து வியாகரணமும், போதாயனீயம் பாரத்துவாசம் 2பரமார்த்தம் பரமாத்திரையம் முதலிய கற்பங்களும், நாராயணீயம் வராகம் முதலிய கணிதமும், எழுத்தாராய்ச்சியாகிய பிரமமும், செய்யுளிலக்கணமாகிய சந்தமுமாம்.

(2) மறையாவன 3 தைத்திரியமும் (3) பவுழியமுந் தலவகாரமுஞ் சாம

(இ) ‘‘இறுதியிற்சலியாதிருத்தலானு, மறுமைதந்துதவு மிருமையானும், பெண்ணிடங்கலந்த புண்ணியனாகியும்’’ என்புழி அறுமையென்று பதம்பிரித்து அதற்கு ஆறென்று பொருள் கூறி இஃது அங்கத்தையுணர்த்தலின் வரையறைக் குணப் பண்புடைப் பொருண்மே னின்றவாகு பெயரென்று இலக்கணமெழுதி அதற்கும் கல். 13 : 18-9; (ஈ) ‘‘நாற்படை’’ என்பதற்கு நான்கு குணத்தினையுடைய படையெனினுமாமென்று பின்னுரையெழுதி அதற்கும் கல். 33 : 6. இப்பகுதியையே மேற்கோள் காட்டினர்.

1. (அ) அங்கம்-அவயவம்; வேதாங்கத்தைக் குறிப்பாக அங்கமென்றார். (ஆ) நிருத்த முதலிய ஆறும் வேதபுருடற்கு இன்ன இன்ன அங்கமென்பதனை. ‘கற்பங்கை’ சந்தங்கா லெண்கண், டெற்றெனிருத்தஞ்செவி சிக்கைமூக், குற்ற வியாகரண முகம்பெற்றுச், சார்பிற்றோன்றா வாரணவேதக்கு’ என மணி. 27. ஆம் காதையிற்காணப்படும் 100-103 ஆம் அடிகளால் உணர்க. (இ) தொல். புறத்திணை 20ஆம் சூத்திரைவுரையில் இவ்வுரைகாரரே இவ்வாறங்கங்களையும் இடையாய ஒத்துவகையுள் ஒன்றென்று கூறி விளக்குமிடத்து, கற்பப் பெயர்களுள் பரமார்த்தம் பரமாத்திரைய மென்னும் பெயர்களின்றி ஆபத்தம்பம் ஆத்திரைய மென்னும் பெயர்கள் காணப்படுகின்றன. (ஈ) இவ்வாறங்களின் பெயர்களும் மந்திரஞ் சந்தோபிசித நிருத்தஞ் சோதிட நிகண்டு வியாகரணமெனச் சில வேறுபட்டும் சில இடத்திற் காணப்படுகின்றன.

2, இங்கே மறையென்றது உபநிடத்தை யென்று சிலர் கூறுவர். அவை விளங்கவில்லை. தலவகாரமென்னுஞ் சொல்லுக்குப் பிரதியாகச் சந்தோகமென்னும் பெயரமைந்து ‘‘சந்தோகா பௌழியா தைத்திரியா சாமவேதியனே’’ என ஒருமுறை நாலாயிர, பெரிய திருமொழி 7 : 8 : 2. இலும் காணப்படுகின்றது.

3. பவுழியமென்பது, இருக்குவேதத்தையுணர்த்தும் ஒருவடமொழியின் மரூஉவென்ப.

(பிரதிபேதம்) 1. ஐந்திரியத்தொடக்கத்து,

2 பரமாத்தம்,

3. இருக்கும் பௌடியமும்.

வேதமுமாம். (1) இனி வேதவியாதர் 1வரையறைப்படுத்திய காலத்து ஓதுகின்ற நான்கு வேதமுமாம்.

இனியென்றது, ‘‘இனிநினைந் திரக்க மாகின்று’’ (2)என்றாற்போல இப்பொழுது என்னும் பொருள் தந்தது.

இது தரவு.

5 படுபறை பலவியம்பப் பல்லுருவம் பெயர்த்துநீ

கொடுகொட்டி யாடுங்காற் கோடுய ரகலல்குற்

கொடிபுரை நுசுப்பினாள்கொண்டசீர் தருவாளோ

என்பது: நின்கையில் ஒலிக்கின்ற (3) பறை பலவாச்சியங்களையும் ஒலியா நிற்கக் 2கட்புலனாய்ப் (4) பல வடிவுகளையும் மீண்டு நின்னிடத்தே ஒடுக்கிக்

1. தொல். பாயிரத்து நான்மறை யென்பதற்குப் பொருள் கூறுமிடத்து ‘‘நான்கு கூறுமாய் மறைந்த பொருளு முடைமையால் ‘நான்மறை’என்றார்; அவை : தைத்திரியமும் பௌடியமும் தலவகாரமும் சாமவேதமுமாம்.இனி, இருக்கும் யசுவும் சாமமும் அதர்வணமுமென்பாருமுளர்; அது பொருந்தாது; இவர் இந்நூல் செய்த பின்னர் வேதவியாதர் 1 சில்வாழ்நாட் சிற்றறிவினோ ருணர்தற்கு நான்கு கூறாகச் செய்தாராகலின்’’ என இவ்வுரைகாரரே எழுதி யிருத்தலால்இங்கு மறையைக் குறித்தெழுதப் பெற்றிருக்கும் பின் வாக்கியம் பிறரால் இடைச் செருகப் பெற்றதோவென ஐயுறும்படி இருக்கிறது.

(பிரதிபேதம்) 1 சின்னாட்பல்பிணிச் சிற்றறிவினோர்

2. புறம். 243.

3. இங்கே பறையென்றது தமருகத்தை. கொடுகொட்டியைக் கூறுமிடத்து, ‘பரிதரு செங்கையிற் படுபறையார்ப்பவும்’ என சீல. 28: 68 இலும் பறை கூறப்பெற்றிருத்தலை ஒப்பு நோக்குக.

4. (அ) ‘பல வடிவங்களையும் மீண்டு நின்னிடத்தேயொடுக்கிக்கொண்டு’என்றது, உலகம் இறைவன்பாலிருந்து தோன்றி அவன்பாலே யொடுங்குமென்னும் வழக்குப்பற்றி. (ஆ) ‘‘நீலமேனி வாலிழைபாகத், தொருவ னிருதாணிழற்கீழ், மூவகை யுலகு முகிழ்த்தன முறையே’’ ஐங். கடவுள். (இ) ‘‘மணிமிடற் றந்தணன் றாவி றாணிழ றவிர்ந்தன்றாலுலகே’’ அகம். கடவுள். (ஈ) ‘‘போற்றியெல் லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம்........ போற்றியெல் லாவுயிர்க்கு மீறா மிணையடிகள்" திருவாசகம். திருவெம். 20. (உ) ‘நாதனுருத்திர னாதியினித்திக ஞாலம்விதித்ததுவும்’. பிரமோத்தா. சிவயோகிமகிமை. 2. (ஊ) ‘‘அருள் சிவத்தினின் றெழவெழுந்தகிலமு மதுபின், மருவி யொன்றுறக் கரத்தலு மடியுமாபோல’’ திருவானைக்காப். கவுதமப். 22 (எ) ‘அயனாகி நின்று படைத்தமுதல்வன்’ கலி. 129 : 1-2. உரை.என்பன காண்க.

(பிரதிபேதம்) 1 வரையறைப்படுத்தி இக்காலத்து,

2 கட்புலனாகிய பலவடிவு.



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

கொண்டு, கொடிதாகிய கொட்டியெனனுங் (1) கூத்தை நீ ஆடுகின்ற காலத்து, பக்கம் உயர்ந்த அகன்ற அல்குலினையுடைய கொடியையொத்த இடையினையுடையாளோ தாளமுடிந்துவிடுங் காலத்தினைத் தன்னிடத்தே கொண்ட சீரைத் தருவாள்? ஆண்டுப் பிறரில்லையே; என்றவாறு.

1கொடுங்கொட்டி, கொடுகொட்டி என விகாரமாயிற்று. கொடுங்கொட்டி யென்றார் (2) எல்லாவற்றையும் அழித்துநின்று ஆடுதலின்.

1. வீரர் தம் வெற்றிக்காலத்துக் களித்து ஆடுதல் மரபாதலான் வெற்றிக்கு ஆடல் ஆடு எனப்பெயரும் வழங்கும். இவ்வாறு ஆடுதல் மரபென்பதனை. (அ) ‘‘கோடியர் முழவின் முன்ன ராடல், வல்லா னல்லன் வாழ்கவவன் கண்ணி, .......... மடம்ம்பெருமையி னுடன்றுமேல்வந்த, வேந்துமெய்ம் மறந்த வாழ்ச்சி, வீந்துகு போர்க்களத் தாடுங் கோவே’’ பதிற். 56. (ஆ) ‘‘ஆளுகு களத்து வாள்பல வீசி, யொன்னா மன்னரு மாடினர்’’ பாரதம். (இ) ‘‘வென்றாடு துணங்கை’’ பதிற். 77. (ஈ) ‘‘நீர்த்திரையரங்கத்து நிகர்த்து முன்னின்ற, சூர்த்திறங் கடந்தோனாடிய துடியும்’’ சில. 6: 50-51. (உ) ‘‘ஆடலமர்ந்தா னமர்வெய்யோன்’’ பு-வெ. தும்பை. 15. (ஊ) ‘‘அடையா, ராளமர் வென்றி யடுகளத்துத், தோள்பெயராக், காய்ந்தடு துப்பிற் கழன்மறவ ராடினார், வேந்தோடு’’ பு-வெ. தும்பை. 21. (எ) ‘‘ஆளுங் குரிசி லுவகைக் களவென்னாங், கேளன்றிக் கொன்றாரே கேளாகி - வாள்வீசி யாடினார்’’ தொல். புறத். சூ. 17. நச். மேற். (ஏ) ‘‘சூடிய பொன்முடியும் பூணு மொளிதுளங்க, வாடிய கூத்தரின்வேந் தாடினான் - வீடிக், குறையாடல் கண்டுவந்து கொற்றப்போர் வாய்த்த, விறையாட வாடாதார் யார்’’ தொல். புறத். சூ. 21. நச். மேற். (ஐ) ‘‘வயிரவன் மனத்தான்றன்னைப் பொருதுவண் சூலத்தேந்தி வயிரவன் களிப்புமிக்கு வாகையினடனஞ் செய்தான்.’’ காஞ்சி. அந்த கேச. 29. என்பவைகளும் விளக்கும். இம்மரபாற் சிவபெருமான் ஆடிய மூன்றாடல்கள் இங்கே கூறப் பெற்றுள்ளன.

1‘‘கொட்டி யாடற் றோற்ற மொட்டிய, வுமையவ ளொருபாலாக 2வொருபா, லிமையா நாட்டத் திறைவ னாகி, யமையா வுட்கும் வியப்பும் விழைவும், பொலிவும்.....பொருந்த நோக்கிய, தொக்க 3வவுண ரின்னுயிரிழப்ப, வக்களம் பொலிய வாடின னென்ப, மற்றதன், 4விருத்தங் காத்தற் பொருளொடு கூடிப், பொருத்த வரூஉம் 5பொருந்திய பாட, றிருத்தகுமரபிற் றெய்வந் துதிப்பே.’’ இதனான் உணர்க.

8. (1) மண்டமர்பலகடந்து மதுகையா னீறணிந்து

(2) பண்டரங்க மாடுங்காற்பணையெழி 6லணைமென்றோள்

வண்டரற்றுங்கூந்தலாள் வளர்தூக்குத் தருவாளோ

என்பது: மிக்குச்செல்கின்ற போர்களிற் (3) பலவாகிய 7முப்புரங்களைவென்று அந்த வலியாலே அவர்கள் வெந்தவிந்தநீற்றை அணிகையினாலே பாண்டரங்கமென்னும் பெயர்பெற்ற கூத்தை நீ ஆடுகின்ற காலத்து (4) மூங்கிலினது 8அழகையுடைய அணைபோன் மெல்லியவாகிய தோள்களையுடைய (5) வண்டுகள் ஒலிக்குங் கூந்தலையுடையாளோ 9தாளத்தினிடை நிகழுங்காலத்தினையுடைய தூக்கைத் தருவாள்? ஆண்டுப் பிறரில்லையே; என்றவாறு.

1. (அ) ‘‘மண்டமர் கடந்தநின்’’ முருகு. 272. (ஆ) ‘‘மண்டமர் கடந்தவேன் மன்னர் மன்னனை’’ (இ) ‘‘மண்டமர் கடந்தவே னளன்’’, (ஈ) ‘‘மண்டமர் கடந்த வொள்வேன் மன்னவற்கு’’ நைடதம். நளன்றூது. 10, 68; போர்புரி. 5.

2. (அ) ‘‘பாண்டரங்கம தியற்றுவான்’’ கந்த. இரண்டாநாட் சூர. 293. (ஆ) ‘‘பண்டரங்க மாடுங்காற் பணையெழி லணைமென்றோள்’’ என்னும் பகுதி கட்டளையடிக்கு மேற்கோள். தொல். செய். சூ. 29. பே. நச்.

3. புரம் மூன்றாதலிற் பலவாகிய முப்புரங்கள் என்றார்; ‘‘மற்றுமெம்பிரான்பல் வேறு வகையினாற் புரங்கள் செற்றல்,

சற்றல வெழுபானாலு தரமெனச் சாற்றுநூல்கள்’’ (திருப்பாசூர். மாயாபுரி 7) என்றும் புராணமுண்டாகலின், முப்புரங்களே பலவிருந்தன வென்றலுமாம்.

 

4. ‘‘அளவே வடிவொப்ப தன்றியே மற்றை, யிளவேய் நிறத்தானு மேய்க்குந்-துளவேய், கலைக்குமரியேறுகைப்பாள் காரவுணர் வீரந், தொலைக்குமரி யேறுகைப்பாடோள்’ என்பது ஈண்டுக் கருதத்தக்கது.

 

5. மகளிர் கூந்தலில் வண்டொலிப்பதாகக் கூறல் கவிமரபு; ஞான பூங்கோதை முதலிய பெயரான் உமையாள் கூந்தற்கு இயற்கை மணங்கூறி இயைப்பாரு முளர்; முன் பின் மரபுநோக்கின் அது பொருந்தாமை விளங்கும்.

(பிரதிபேதம்) 1. கொட்டியாடிய தோற்றம், கொட்டியாடற் கேற்றம்,

2. ஒருபாலிற் கிமையாநாட்டத்து,

3. அவுணரினல்லுயிர்,

4. விருத்திகாத்தல்,

5. பொருந்தியவாடல்,

6. இணை மென்றோள்,

7. முப்புரங்களைவென்ற அந்நகைவலியாலே அவர்கள் வெந்திட வீழ்ந்தகீற்றை,

8. அழகையுடைத்தாகிய அனைபோன்ற மெல்லிய.

 

9. அதனிடை.

(ஒ) ‘‘கொடுகொட்டி பாண்டரங்கங் காபாலமெனு மிறைவன் கூத்து மூன்றும்’’ என்பதும் ஈண்டறிதற் பாலது. இவற்றுள் (ஓ) கொடுகொட்டியும் பாண்டரங்கமும் பதினோராடலினுட்பட்டவையென்று சிலப்பதிகாரத்தால் (3: 14 உரை 6: 39-66) தெரிகின்றது. அதில் கொடுகொட்டி யாவையுமொழித்தகாலைத் திருக்கூத்தெனப்படாது மூவெயி லழித்தகாலைத் திருக்கூத்தெனப்பட்டிருத்தல் சமய நூன்மலைவுபோலும். (ஒள) இவ்விரண்டும் ‘வடவனத்தொருநாள்’ என்னுங் கல்லாடத்துங் கூறப்பட்டிருக்கின்றன.

2. பலவென்பதற்கு எல்லாமென்று பொருள்கூறுதலை ‘‘பலர் புகழ்ஞாயிறு’’ (முருகு. 2.) ‘‘பலர் புகழ்புலவர்’’ (பு-வெ. கொளு 269) என்பவற்றுக் கெழுதியிருக்கும் உரையும் வற்புறுத்தும்.

(பிரதிபேதம்) 1 ‘கொடுகு கொட்டி’ (என ஒருபிரதியில் ஊகிக்கும்படி மேலே ஒட்டி எழுதப்பட்டுள்ளது; இது சிறந்ததென்ப மரூஉ மரபறிவார்.).



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

(1) பாண்டரங்கம், பண்டரங்கமென விகாரமாயிற்று.

‘‘ஏறமர் கடவுண் மூவெயி லெய்வுழிக், கூறுகூறாகக் கொடியொடும் படையொடும், வேறுவே றுருவின் விண்மிசைப் 1பரந்தன, ரவ்வழி யொளியொடு முருவொடுந் தோன,்றித் தேர்மு னின்று திசைதலை பனிப்பச், சுவையுங் குறிப்பு மொழிவில தோன்றி, யவையவை யவ்வழி யாடின னாட, மைந்தரு மகளிருந் 2தந்தநிலை யழிய, மெய்ப்படு சுவையொடு கைப்படை மறப்பக், கடிய காலக் காற்றென வேற்றவன், படிநிலை திரியாப் பாண்டரங் கம்மே’’ இதனான் உணர்க.

11. (2) கொலையுழுவைத்தோலசை இக்கொன்றைத்தார்சுவற்புரளத்

தலையங்கைகொண்டு நீ காபால மாடுங்கான்

முலையணிந்த (3) முறுவலாண் முற்பாணி தருவாளோ

என்பது: கொலைத்தொழிலை யுடைய புலியைக் கொன்று அதன்றோலை உடுத்துக் கொன்றைப்பூவாற் செய்த மாலை தோளிலே அசைய (4) அயன்றலையை அகங்கையிலே ஏந்துகையினாலே

காபாலமென்று பெயர்பெற்ற கூத்தை நீ ஆடுங்காலத்து, முல்லையையொத்த எயிற்றினையுடையாளோ ஒரு தாளத்தின் முதலெடுக்குங் காலத்தினையுடைய பாணியைத் தருவாள்? ஆண்டுப் 3பிறரில்லையே; என்றவாறு.

முல்லை, முலையெனவிகாரமாயிற்று. அணி, உவமவுருபு, ஓகார மூன்றும் எதிர்மறை.

ஒருதாளத்திற்குப் பாணி தூக்குச் சீரென்னும் மூன்றும் உளவேனும் 4ஒவ்வொன்று ஒவ்வோராடற்கு மிகுதிவகையாற் சிறந்தமைபற்றி ஒரோவொன்றையே கூறினார். தாழிசைகளிற் சீர் தூக்குப் பாணியென நின்றனவேனும், அவை நிகழும் அடைவுபற்றிச் சுரிதகத்துப் பாணியுந்தூக்குஞ்சீருமென அடைவு கூறினார்.

இவை மூன்றும், தாழிசை.

எனவாங்கு,

என்பது: என்று சொல்லும்படியாக; என்றவாறு.

ஆங்கு, அசை; அவர் கூத்தாடுகின்ற காலங்களை யெனினுமாம்.

இது தனிச்சொல்.

1. “பண்டங்கன் வந்து பலிதா வென்றான்’’ பொன்வண்ணத். 33. என்பதனால், இச்சொல் பண்டங்கமெனச் சிதைந்தும் வரும்போலும்.

2. ‘‘புலித்தோலை யரைக்கசைத்து, மின்னார் செஞ்சடைமேன் மிளிர் கொன்றை யணிந்தவனே’’ தே.

3. முறுவல் - சிரிப்பு; பல்லுக்கு ஆகுபெயர். குறள். 1113.

4. ‘‘அயன்றலைக்கொண்டு செண்டாடல்பாடி’’ என்பது ஈண்டு ஆராயத்தக்கது.

(பிரதிபேதம்) 1. பாத்தனரவ்வழி, பரந்தனவவ்வழி, 2. தந்நிலையொழிய. 3. (தாழிசைமூன்றனிறுதியுரையிலும்) பிறரில்லையே யென்க. 4. ஒருவோராடன் மிகுதி.

15. (1) பாணியுந்தூக்குஞ் சீரு மென்றிவை

மாணிழை யரிவை காப்ப

(2) வாணமில் பொருளெமக்கமர்ந்தனை யாடி

என்பது: அழித்தற்றொழிலை நிகழ்த்துகின்ற காலங்களிலே, பாணியுந் தூக்குஞ் சீருமென்று சொல்லப்பட்ட இவையிற்றை மாட்சிமைப்பட்ட அணியினையுடைய (3) உமாதேவி (4) காப்ப ஆடிக், காத்தற்றொழிலை நிகழ்த்துகின்ற இக்காலத்தே ஒரு வடிவைக்கொண்டு, நேயமில்லாத பொருளாகிய 1எமக்குப் பொருந்தினாய், இதற்குக் காரணங் கூறுவாயாக; என்றவாறு.

இது சுரிதகம்.

இப்பாட்டுப் பலமெய்ப்பாடுகளுந் தோற்றுவித்து நின்றதேனும், அவை உரைப்பிற் பெருகு மாதலின், முடிந்த பொருளாற் பிறந்த மெய்ப்பாடே கூறுதும்; அது தன்கட் டோன்றிய ஆக்கம்பற்றிய மருட்கையாம்.

இது நான்கு உறுப்பான் வந்ததேனும், தேவபாணியான் வருதலின், முதனிலை யொத்தாழிசை 2யாகாது. ‘‘ஏனையொன்றே, தேவர்ப் 3பராஅ முன்னிலைக் கண்ணே’’ (5) என்பதனால், தேவர்ப் பராயிற்றேனும் வண்ணகமு

1. (அ) ‘‘சீருடை நன்மொழி நீரொடு சிதறி’’ (பொருந. 24.) என்பதன் விசேடவுரையில் ‘சீரெனவே பாணியுந்தூக்கு முளவாயின’ என நச்சினார்க்கினியரும் (ஆ) ‘‘உமையவ ளொருதிறனாக வோங்கிய, விமையவனாடிய கொடுகொட்டியாடலும்’’ (சிலப். 6: 42-3.) என்புழி; உமையவ ளொருதிறனாக வென்பதற்கு ‘உமையவ ளொருகூற்றினளாய் நின்று பாணி தூக்குச் சீரென்னுந் தாளங்களைச்செலுத்த’ என அடியார்க்கு நல்லாரும் இவ்வடியை உட்கொண்டு எழுதியிருப்பவை ஈண்டறிதற்பாலன.

2. ‘ஆணமில் பொருளெமக் கமர்ந்தனை யாடி’ என்பது அகப்பாட்டு வண்ணத்திற்கு மேற்கோள். தொல். செய். சூ. 224. பேர். நச்.

3. (அ) உமாதேவி சிவபெருமானாடலைக் காணுகிறாளென்பது பெருவழக்கு; அன்றியும் (ஆ) அதனருமைகளை அறிந்து மகிழ்ந்து பாடுகிறாளென்றுங்கூறுப. இவற்றொடு அவ்வாடலுக்கிசையத் (இ) தாள மொத்துகிறாளென்றும் கூறுவதை ‘‘கடையுகந்தன்னி லெல்லா வுலகமுங் கடவுட் டீயா, னடலைசெய் தமலை தாள மறைதர நடிக்கு மீசன்’’

என்பதனானும் அறிக.

4. ‘காப்ப’ என்றது ஒத்துதலாற் காப்ப என்றபடி ‘திதத் தத்தத் தித்தத் திதி தாதை’ (கந்தரந். 54.) என்பதற்கு, ‘திதத் தத்தத் தித்த’ என்னுந் தாளமானங்களைத் திருநடனத்தாற் காக்கின்ற (தகப்பன்) பரமசிவனுமென உரை எழுதியிருத்தலுங் காண்க.

5. தொல். செய். சூ. 138.

 

(பிரதிபேதம்) 1. எம்மிடத்தேபொருந்தினாய், 2. ஆகாது, என்னை? ‘ஏனையொன்றே’, 3. பராஅய, பராவுதன் முன்னிலை.

மாகாது; எண்ணுஞ்சின்னமுமிழத்தலின். ஆகலின், 1இஃது எண்ணிடையிட்டுச் சின்னங்குன்றிய (1) கொச்சகவொருபோகாயிற்று.

சீர்வகைக் கலிக்கு, ‘‘விராய தளையு மொரூஉநிலை யின்றே.’’ (2) என்பதனால் தளைவிரவிவரப்பெறும் என்றலின், செல்லுமென நேரீற்றியற்சீர் வந்தது; ‘‘கலித்தளை யடிவயி னேரீற் றியற்சீர், நிலைக்குரித் தன்றே தெரியுமோர்க்கே’’ (3) என்ற விதி 2கட்டளைக்கலிக்காம். 3(1)

கடவுள் வாழ்த்து முற்றிற்று.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard