தொல்காப்பியத்தில் கூறப்படும் “நான்மறை முற்றிய அதங்கோட்டு ஆசாற்கு” என்ற வரிகளும், "நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறை மொழி தானே மந்திரம்" என்பதும் ஆரியர்களின் நான்குவேதங்களைக் குறிக்கின்றன என்று வாதாடுகிறார்கள் சில சமக்கிருத வாதிகள். ஆனால், உண்மையிலே அவை தமிழிலிருந்த மூல மறைகளாகிய பழந்தமிழர்களின் நான்கு மறைகளையும் தான் குறிக்கிறது என்கிறார் முனைவர் மதிவாணன்.
சூரியன் க.பாண்டியன் அவர்கள் எழுதிய மறைக்கப்பட்ட மரபுச் செல்வம் (1988) (பக்.27) என்னும் நூலில் தொன்மை நால்வர் என்னும் தலைப்பில் பழந்தமிழர்களின் நான்மறைகளைத் தொகுத்த நால்வரின் பெயர் இடம் பெற்றுள்ளது. சணகர், சனந்தர், சனாதர், சனாதகுமரர் என்பவர்களே அந்த நால்வர்.
சன் என்றும் வடசொல் நல்ல என்று பொருள் படும். ஆதலால், நன்நாகர், நல்னந்தர், நல்லாதர், நல்லாதன்குமரர் என்னும் தூய தமிழ்ப் பெயர்களே வடமொழி அடைமொழி பெற்றுள்ளன என்று சூரியன் கா. பாண்டியன் கூறுகிறார். வள்ளலாரும் நன்னெறியைச் சன்மார்க்கம் என்று குறிப்பிட்டார். தென்முகக் கடவுள் மாவிந்த மலையில் (மகேந்திரகிரி) கல்லால நீழலின் கீழ் நால்வர்க்கு மந்திர நெறிகளைக் கற்பித்ததாகக் கூறுவது சிவனி மரபு. சிற்ப நூல் கடவுள் வாழ்த்திலும், நல்லார்கள் நால்வருக்கும் நாவில் பூரணம் காட்டி கல்லாலின் கீழிருந்த கண்ணாற்றலான பரம் எல்லார்க்கும் தெய்வமே. எனக் கூறப்பட்டுள்ளது. மேற்கண்ட நால்வரும் முறையே...
1) நல்லாதன் (சனாதன்) - மெய்யியல் (தத்துவம்) - பெளடிகம். - நிறைமொழி மாந்தர் மறைமொழி (ஆகமம்) 2) நல்நந்தி (சனந்தி) - ஓகம் (யோகம்) - தரவாகரம் சித்தர் நெறி (வர்மக்கலை) 3) நல்லாதன் குமரன் - ஊழ்கம் (தியானம்) - தைத்திரியம் (சனாதகுமரர்) 4) நன்னாகன் (சனாகன்) - மந்திரம் (யாமம்) - சாமம், மந்திர உருவேற்றம். மேற்கண்ட நாற்பிரிவு மந்திரங்களும் சித்தர் நெறிகளை நான்கு பிரிவுகளாகப் பிரித்துத் தம் அணுக்க மாணவர்களுக்கு மட்டும் பயிற்சி தந்த சிறப்பு நெறிகளாகும் எனத் தெரிகிறது. சுமாாட்டு என்பவர் ஆரியரல்லாதோரின் சமயம் மற்றும் தத்துவக் கருத்துகள் உபநிடதங்கள் எழுதப்படுவதற்குக் காரணமாக அமைந்தன எனக் கூறியிருப்பதும் இங்குக் கருதத்தக்கது. பழந்தமிழர்களின் நான்மறைகளையும் ஒருவரே கற்றுத் தேர்வது அரிய செயல். ஆனால், தொல்காப்பிய அரங்கேற்றத்திற்குத் தலைமை தாங்கிய அதங்கோட்டாசான் மெய்யியல், ஓகம், ஊழகம்(தியானம்), மந்திரம் என்னும் நான்கு மறைகளையும் முழுமையாகக் கற்றிருந்ததால் நான்மறை முற்றிய அதங்கோட்டாசான் எனத் தொல்காப்பியப் பாயிரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. மறை என்னும் சொல் - மறு - (மறி) மறை எனத் திரிந்து பல காலும் மீண்டும், மீண்டும் மனப்பாடம் செய்யும் நூலைக் குறித்தது. எனவே, பழந்தமிழர்களின் நான்மறை செவிவழி போற்றப்பட்ட மந்திரங்கள் என்பதால், எழுந்து புறத்திசைக்கும் எழுத்தொலிப்புச் சொற்களாகக் கூறுகிறோம் என்கிறார் தொல்காப்பியர். எழுந்து புறத்தே ஒலிக்காமல் கேளா ஒளிபோல அகத்தெழு வளி ஓசையாகக் கூறப்படுவதே மந்திரம் என்றும் அந்தக் கேளா ஒலிகளுக்கு ஆற்றல் உண்டு என்பதும், பண்டையோர் நம்பிக்கை, ஆதலால் தான். நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப - தொல்காப்பியம், நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும் - குறள். என்று பண்டைத் தமிழ் நான்மறைகள் குறிப்பிடப் பட்டுள்ளன எனத் தெரிகிறது.
தொல்காப்பியர் இவற்றை வாய்மொழி என்றும் குறிப்பிட்டிருக்கிறார். தமிழ் நான்மறைகளைத் தோற்றுவித்தவர் நால்வர். பிறகு அவற்றை பேணிக் காத்து வந்த நால்வரிடமிருந்து அவர்கள் பெயராலேயே வடதமிழாகிய பாலி பிராகிருத மொழியாக்கம் பெற்ற நான்குமே நச்சினார்க்கினியர் குறித்த தைத்திரியம், பெளடிகம், தலவாகரம், சாமம் என்பன. திதியன், புகழன், தாலவகன், யாமன் எனும் நால்வர் வாயிலாக வட தமிழாகிய பிராகிருதத்தார், தமதாக்கிக் கொண்ட நான்மறைகள் முறையே...
1) திதியன் - தைத்திரியம் (வடமொழியாளர் திதி என்பவளின் மகனிடம் கற்ற நூல் என்பர்) 2) புகழன் - போழியம் (பெளடிகம்) ( புகழன் வாயிலாகக் கற்ற நூல்) 3) தாலவகன் - தலவாகரம் (தாலவகன் வாயிலாகக் கற்ற நூல்) 4) யாமன் - சாமம் (யாமன் வாயிலாகக் கற்ற நூல் யாமம் - சாமம்) யாமன், யாமனூர், ஏமனூர் என்பன தூய தமிழ்ச் சொற்கள். இவ்வாறு பெயர் பெற்றிருந்ததை ஆய்ந்துணரலாம்.
இவையனைத்தும் உபநிடத நூல்களாக உருவெடுத்த பின்னும் பெரும்பகுதி அச்சிட்டு வெளியிடப்படாமல் உள்ளது என மக்டொனால்டு குறிப்பிடுகிறார். அதங்கோட்டாசான் மெய்யியல் (தத்துவம்), ஊழ்கம் (தியானம்), ஓகம் (யோகம்), மந்திரம் ஆகிய தமிழ் நான்மறை ஓதியுணர்ந்தவர். கி.மு.1000 காலவரம்புக்குப் பிறகே பிராகிருத பாலி மொழிகள் வளர்ந்திருப்பதால் தொல்காப்பியர் காலத்திற்குப் பிறகு கி.மு. 800 அளவில் இவை, பிராகிருத மொழியில் திதியம், போழியம், தாலவகம், யாமம் என்னும் பெயர்களில் அறிமுகமாகியிருத்தல் வேண்டும். இவை படிப்படியாக வடமொழியிலும் மொழியாக்கம் செய்யப்பட்டன. களப்பிரர், பல்லவர், சோழர் காலங்களில் வடமொழிக்கே முதன்மை தரப்பட்டதால் தமிழிலிருந்த மூல நூல்கள் மறைந்தன. எனினும் வடமொழியிலுள்ள பிராமணம், ஆரண்யகம், உபநிடதம் என்னும் வடிவங்களில் தமிழர் நான்மறைகள் மறைந்து வாழ்கின்றன. இருக்கு வேதப் பாடல்களில் இவற்றுக்குரிய மூலம் இல்லை என்பது உலகறிந்த உண்மையாகும்.
1. இவ்விடத்தும் பிறவிடத்தும் குறிக்கப்படாதஆகரமும் ஆங்காங்கு இடமின்மை முதலிய காரணங்களாற்சேர்க்காது விடுபவையும் பின்பு இடைவிடுபட்டவை யென்னும்தலைப்புப்பெயரிட்டு இயன்ற அளவு விளக்கப்பெறும்.
3. அருங்கேடன் (குறள் 210) என்புழிப்போல அருமை இன்மைப் பொருளில் வந்ததாகக் கொள்ளின் அருமறை யென்பதற்கு இந்நிலவுலகத்திலில்லாத வேதங்கள் என்று பொருள் கொள்ளுதலுமாம். எஞ்சிய பொருள்களை யேமுறநாடித், திங்கள்போலத் திசைவிளக்கும்மே’ என முருகற்குக் கூறியிருத்தலுங் காண்க.
4. கங்கை சினந்துவந்தமைபற்றித் தேறுநீரென்பதற்குப் பகையென்று தெளிகின்ற கங்கையென்று பொருள் கூறினர் போலும்.
இது திருமேனிகொண்டு நின்றாயாயினும் வாக்குக்கும் மனத்துக்கும் எட்டாயென்றது.
அவ்வேதந்தனைக் கொண்டே ஆறங்கங்களையும் (2) அறிய வல்லாரென்பது தோன்ற ஆறறியந்தணர் என்றார். (3) அந்தத்தை அணவுவார் அந்தணர்: என்றது, வேதாந்தத்தையே பொருளென்று மேற்கொண்டு பார்ப்பாரென்றவாறு.
ஆறு என்னும் வரையறைப் பண்புப்பெயர் அப்பண்பினையுடைய 2அங்கத்தை உணர்த்திநின்ற ஆகுபெயர். அது ‘‘கிளந்தவல்ல’’ (4) என்பதனுட் கூறினாம்.
யுரையில் செல்லுமென்னும் பெயரெச்சம் கூளி யென்னும் பெயரைக் கொண்டு முடிந்ததென்று கருதும்படி ‘‘கூறாமற்..........கேளினி’’ என்பதை மேற்கோள் காட்டுவர். தக்கயாகப்பரணி யுரையாசிரியர் தக்க. தாழிசை. 330.
(இ) ‘‘இறுதியிற்சலியாதிருத்தலானு, மறுமைதந்துதவு மிருமையானும், பெண்ணிடங்கலந்த புண்ணியனாகியும்’’ என்புழி அறுமையென்று பதம்பிரித்து அதற்கு ஆறென்று பொருள் கூறி இஃது அங்கத்தையுணர்த்தலின் வரையறைக் குணப் பண்புடைப் பொருண்மே னின்றவாகு பெயரென்று இலக்கணமெழுதி அதற்கும் கல். 13 : 18-9; (ஈ) ‘‘நாற்படை’’ என்பதற்கு நான்கு குணத்தினையுடைய படையெனினுமாமென்று பின்னுரையெழுதி அதற்கும் கல். 33 : 6. இப்பகுதியையே மேற்கோள் காட்டினர்.
1. (அ) அங்கம்-அவயவம்; வேதாங்கத்தைக் குறிப்பாக அங்கமென்றார். (ஆ) நிருத்த முதலிய ஆறும் வேதபுருடற்கு இன்ன இன்ன அங்கமென்பதனை. ‘கற்பங்கை’ சந்தங்கா லெண்கண், டெற்றெனிருத்தஞ்செவி சிக்கைமூக், குற்ற வியாகரண முகம்பெற்றுச், சார்பிற்றோன்றா வாரணவேதக்கு’ என மணி. 27. ஆம் காதையிற்காணப்படும் 100-103 ஆம் அடிகளால் உணர்க. (இ) தொல். புறத்திணை 20ஆம் சூத்திரைவுரையில் இவ்வுரைகாரரே இவ்வாறங்கங்களையும் இடையாய ஒத்துவகையுள் ஒன்றென்று கூறி விளக்குமிடத்து, கற்பப் பெயர்களுள் பரமார்த்தம் பரமாத்திரைய மென்னும் பெயர்களின்றி ஆபத்தம்பம் ஆத்திரைய மென்னும் பெயர்கள் காணப்படுகின்றன. (ஈ) இவ்வாறங்களின் பெயர்களும் மந்திரஞ் சந்தோபிசித நிருத்தஞ் சோதிட நிகண்டு வியாகரணமெனச் சில வேறுபட்டும் சில இடத்திற் காணப்படுகின்றன.
2, இங்கே மறையென்றது உபநிடத்தை யென்று சிலர் கூறுவர். அவை விளங்கவில்லை. தலவகாரமென்னுஞ் சொல்லுக்குப் பிரதியாகச் சந்தோகமென்னும் பெயரமைந்து ‘‘சந்தோகா பௌழியா தைத்திரியா சாமவேதியனே’’ என ஒருமுறை நாலாயிர, பெரிய திருமொழி 7 : 8 : 2. இலும் காணப்படுகின்றது.
1. தொல். பாயிரத்து நான்மறை யென்பதற்குப் பொருள் கூறுமிடத்து ‘‘நான்கு கூறுமாய் மறைந்த பொருளு முடைமையால் ‘நான்மறை’என்றார்; அவை : தைத்திரியமும் பௌடியமும் தலவகாரமும் சாமவேதமுமாம்.இனி, இருக்கும் யசுவும் சாமமும் அதர்வணமுமென்பாருமுளர்; அது பொருந்தாது; இவர் இந்நூல் செய்த பின்னர் வேதவியாதர் 1 சில்வாழ்நாட் சிற்றறிவினோ ருணர்தற்கு நான்கு கூறாகச் செய்தாராகலின்’’ என இவ்வுரைகாரரே எழுதி யிருத்தலால்இங்கு மறையைக் குறித்தெழுதப் பெற்றிருக்கும் பின் வாக்கியம் பிறரால் இடைச் செருகப் பெற்றதோவென ஐயுறும்படி இருக்கிறது.
(பிரதிபேதம்) 1 சின்னாட்பல்பிணிச் சிற்றறிவினோர்
2. புறம். 243.
3. இங்கே பறையென்றது தமருகத்தை. கொடுகொட்டியைக் கூறுமிடத்து, ‘பரிதரு செங்கையிற் படுபறையார்ப்பவும்’ என சீல. 28: 68 இலும் பறை கூறப்பெற்றிருத்தலை ஒப்பு நோக்குக.
கொண்டு, கொடிதாகிய கொட்டியெனனுங் (1) கூத்தை நீ ஆடுகின்ற காலத்து, பக்கம் உயர்ந்த அகன்ற அல்குலினையுடைய கொடியையொத்த இடையினையுடையாளோ தாளமுடிந்துவிடுங் காலத்தினைத் தன்னிடத்தே கொண்ட சீரைத் தருவாள்? ஆண்டுப் பிறரில்லையே; என்றவாறு.
1கொடுங்கொட்டி, கொடுகொட்டி என விகாரமாயிற்று. கொடுங்கொட்டி யென்றார் (2) எல்லாவற்றையும் அழித்துநின்று ஆடுதலின்.
5. மகளிர் கூந்தலில் வண்டொலிப்பதாகக் கூறல் கவிமரபு; ஞான பூங்கோதை முதலிய பெயரான் உமையாள் கூந்தற்கு இயற்கை மணங்கூறி இயைப்பாரு முளர்; முன் பின் மரபுநோக்கின் அது பொருந்தாமை விளங்கும்.
ஒருதாளத்திற்குப் பாணி தூக்குச் சீரென்னும் மூன்றும் உளவேனும் 4ஒவ்வொன்று ஒவ்வோராடற்கு மிகுதிவகையாற் சிறந்தமைபற்றி ஒரோவொன்றையே கூறினார். தாழிசைகளிற் சீர் தூக்குப் பாணியென நின்றனவேனும், அவை நிகழும் அடைவுபற்றிச் சுரிதகத்துப் பாணியுந்தூக்குஞ்சீருமென அடைவு கூறினார்.
இவை மூன்றும், தாழிசை.
எனவாங்கு,
என்பது: என்று சொல்லும்படியாக; என்றவாறு.
ஆங்கு, அசை; அவர் கூத்தாடுகின்ற காலங்களை யெனினுமாம்.
இது தனிச்சொல்.
1. “பண்டங்கன் வந்து பலிதா வென்றான்’’ பொன்வண்ணத். 33. என்பதனால், இச்சொல் பண்டங்கமெனச் சிதைந்தும் வரும்போலும்.
இப்பாட்டுப் பலமெய்ப்பாடுகளுந் தோற்றுவித்து நின்றதேனும், அவை உரைப்பிற் பெருகு மாதலின், முடிந்த பொருளாற் பிறந்த மெய்ப்பாடே கூறுதும்; அது தன்கட் டோன்றிய ஆக்கம்பற்றிய மருட்கையாம்.
இது நான்கு உறுப்பான் வந்ததேனும், தேவபாணியான் வருதலின், முதனிலை யொத்தாழிசை 2யாகாது. ‘‘ஏனையொன்றே, தேவர்ப் 3பராஅ முன்னிலைக் கண்ணே’’ (5) என்பதனால், தேவர்ப் பராயிற்றேனும் வண்ணகமு
1. (அ) ‘‘சீருடை நன்மொழி நீரொடு சிதறி’’ (பொருந. 24.) என்பதன் விசேடவுரையில் ‘சீரெனவே பாணியுந்தூக்கு முளவாயின’ என நச்சினார்க்கினியரும் (ஆ) ‘‘உமையவ ளொருதிறனாக வோங்கிய, விமையவனாடிய கொடுகொட்டியாடலும்’’ (சிலப். 6: 42-3.) என்புழி; உமையவ ளொருதிறனாக வென்பதற்கு ‘உமையவ ளொருகூற்றினளாய் நின்று பாணி தூக்குச் சீரென்னுந் தாளங்களைச்செலுத்த’ என அடியார்க்கு நல்லாரும் இவ்வடியை உட்கொண்டு எழுதியிருப்பவை ஈண்டறிதற்பாலன.