Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 001 - கடவுள் வாழ்த்து


Guru

Status: Offline
Posts: 7474
Date:
001 - கடவுள் வாழ்த்து
Permalink  
 


001 - கடவுள் வாழ்த்து
பால்: அறம். இயல்: பாயிரம். அதிகாரம்: கடவுள் வாழ்த்து.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
 குறள் 1: கடவுள் வாழ்த்து.
மணக்குடவர் உரை:எழுத்துக்களெல்லாம் அகரமாகிய வெழுத்தைத் தமக்கு முதலாக வுடையன. அவ்வண்ணமே உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாக வுடைத்து.
பரிமேலழகர் உரை:எழுத்து எல்லாம் அகரம் முதல - எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன; உலகு ஆதிபகவன் முதற்று - அது போல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து. (இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டு உவமை. அகரத்திற்குத் தலைமை விகாரத்தான் அன்றி நாதமாத்திரை ஆகிய இயல்பாற் பிறத்தலானும், ஆதிபகவற்குத் தலைமை செயற்கை உணர்வான் அன்றி இயற்கை உணர்வான் முற்றும் உணர்தலானும் கொள்க.தமிழ் எழுத்திற்கே அன்றி வட எழுத்திற்கும் முதலாதல் நோக்கி, 'எழுத்து' எல்லாம் என்றார். ஆதிபகவன் என்னும் இரு பெயரொட்டுப் பண்புத்தொகை வடநூல் முடிபு. 'உலகு' என்றது ஈண்டு உயிர்கள் மேல் நின்றது. காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின், 'ஆதிபகவன் முதற்றே' என உலகின் மேல் வைத்துக் கூறினார்; கூறினாரேனும், உலகிற்கு முதல் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க. ஏகாரம் - தேற்றத்தின்கண் வந்தது. இப்பாட்டான் முதற்கடவுளது உண்மை கூறப்பட்டது.)
மு. வரதராசன் உரை:எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது.
மயிலை சிவமுத்து உரை: “அ” என்னும் எழுத்தில் இருந்தே எல்லா எழுத்துக்களும் தோன்றின. வரிசை முறையிலும் அகரமே முதல் இடத்தைப் பெற்றிருக்கிறது. அவ்வாறே எல்லாவற்றிற்கும் முற்பட்டவராகிய கடவுளையே இவ்வுலகம் முதலாக உடையது.
புலியூர்க் கேசிகன் உரை: அகர ஒலியே எல்லா எழுத்துகளுக்கும் முதல்; அதுபோல், ஆதிபகவன் உலகிலுள்ள உயிர்கள் எல்லாவற்றிற்கும் முதல்வனாக இருக்கின்றான்.
மு. கருணாநிதி உரை:அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும்
உயிர்களுக்கு முதன்மை.
சாலமன் பாப்பையா உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.
Translation:A, as its first of letters, every speech maintains; The "Primal Deity" is first through all the world's domains.
Explanation:As all letters have the letter A for their first, so the world has the eternal
God for its first.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
. குறள் 2: கடவுள் வாழ்த்து.
மணக்குடவர் உரை: மேற்கூறிய வெழுத்தினா னாகிய சொற்க ளெல்லாங் கற்றதனானாகிய பயன் வேறியாது? விளங்கின வறிவினை யுடையவன் திருவடியைத் தொழாராயின்.சொல்லினானே பொருளறியப்படுமாதலான் அதனைக் கற்கவே மெய்யுணர்ந்து வீடுபெறலாகும். மீண்டும் வணக்கம் கூறியது எற்றுக்கென்றாற்கு, இஃது அதனாற் பயனிது வென்பதூஉம், வேறுவேறு பயனில்லையென்பதூஉம் கூறிற்று. `கற்பக் கழிமட மஃகும் என்றாருமுளர்.
பரிமேலழகர் உரை: கற்றதனால் ஆய பயன் என் - எல்லா நூல்களையும் கற்றவர்க்கு அக்கல்வி அறிவான் ஆய பயன் யாது?; வால் அறிவன் நல் தாள் தொழாஅர் எனின் - மெய்யுணர்வினை உடையானது நல்ல தாள்களைத் தொழாராயின்? (எவன் என்னும் வினாப்பெயர் என் என்று ஆய், ஈண்டு இன்மை குறித்து நின்றது. 'கொல்' என்பது அசைநிலை. பிறவிப் பிணிக்கு மருந்து ஆகலின் 'நற்றாள்' என்றார். ஆகம அறிவிற்குப் பயன் அவன் தாளைத் தொழுது பிறவியறுத்தல் என்பது இதனான் கூறப்பட்டது.
மு. வரதராசன் உரை: தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளைத் தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?
மயிலை சிவமுத்து உரை: துய்மையான அறிவினையுடைய கடவுளின் சிறந்த திருவடிகளை நாம் வணங்க வேண்டும். அவ்விதம் வணங்காவிட்டால் நாம் கற்ற கல்வியால் பயனில்லை.
புலியூர்க் கேசிகன் உரை: தூய அறிவு வடிவமான இறைவனின் நன்மை தரும் திருவடிகளைத் தொழாதவர் என்றால், அவர் கற்றதனால் உண்டான பயன் யாதுமில்லை.
மு. கருணாநிதி உரை:தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றுஇருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.
சாலமன் பாப்பையா உரை: தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?.
Translation: No fruit have men of all their studied lore, Save they the 'Purely Wise One's'feet adore.
Explanation: What Profit have those derived from learning, who worship not the good feet of Him who is possessed of pure knowledge?

சாமி சிதம்பரனார் உரை :

பதவுரை: எழுத்து எல்லாம் - எழுத்துக்கள் எல்லாம். அகரம்
- அ என்னும் எழுத்தை. முதல - தலைமையாகக் கொண்டவை.
உலகம் - அதுபோல இவ்வுலகம் - ஆதி பகவன் - முதன்மையான
கடவுளை. முதற்று - தலைமையாகக் கொண்டதாகும்.
கருத்து: இவ்வுலகத்தின் தலைவர் கடவுளே ஆவார்.

(ப-உ) வால் அறிவன் - பரிசுத்தமான அறிவையுடைய
கடவுளின். நல்தாள்- நல்ல பாதங்களை. தொழாஅர் எனின்-
வணங்கார் ஆயின். கற்றதனால் - கல்வி கற்றதனால். ஆயஉ
ண்டான. பயன் என் கொல் - பலன் என்ன?
(க-து) கல்வி கற்றதன் பயன் கடவுளை வணங்குவதாகும்.


(ப-உ) * இது முதல் 4 அதிகாரங்கள் பாயிரம். பாயிரம் என்பது நூலுக்கு முன்னுரை
போன்றது.
1

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். குறள் 3: கடவுள் வாழ்த்து.
மணக்குடவர் உரை: மலரின்மேல் நடந்தானது மாட்சிமைப்பட்ட திருவடியைச் சேர்ந்தவரன்றே, நிலத்தின்மேல் நெடுங்காலம் வாழ்வார். 'நிலம்' என்று பொதுப்படக் கூறியவதனான் இவ்வுலகின் கண்ணும் மேலுலகின்கண்ணுமென்று கொள்ளப்படும். தொழுதாற் பயனென்னையென்றாற்கு, போகநுகர்தலும் வீடுபெறலுமென்று கூறுவார் முற்படப் போகநுகர்வாரென்று கூறினர்.
பரிமேலழகர் உரை: மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார் - மலரின் கண்ணே சென்றவனது மாட்சிமைப்பட்ட அடிகளைச் சேர்ந்தார்; நிலமிசை நீடுவாழ்வார் - எல்லா உலகிற்கும் மேலாய வீட்டு உலகின்கண் அழிவின்றி வாழ்வார். (அன்பான் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேறலின் 'ஏகினான்' என இறந்த காலத்தால் கூறினார்; என்னை? "வாராக் காலத்தும் நிகழும் காலத்தும் ஓராங்கு வரூஉம் வினைச் சொற் கிளவி இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் விரைந்த பொருள் என்மனார் புலவர்" (தொல், சொல், வினை, 44) என்பது ஓத்தாகலின். இதனைப் 'பூமேல் நடந்தான்' என்பதோர் பெயர்பற்றிப் பிறிதோர் கடவுட்கு ஏற்றுவாரும் உளர். சேர்தல் - இடைவிடாது நினைத்தல்)
மு. வரதராசன் உரை: அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை இடைவிடாமல் நினைக்கின்றவர் இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.
சாமி சிதம்பரனார் உரை :மலர் மிசை - அன்பர்களின் நெஞ்சமாகிய மலரிலே.
ஏகினான்- சென்று தங்கிய கடவுளின். மாண் அடி- பெருமையுள்ள பாதங்களை. சேர்ந்தார் - சேர்ந்து வணங்கியவர். நிலமிசை

மயிலை சிவமுத்து உரை: அன்பர்களுடைய மனமாகிய தாமரையில் கடவுள் அமர்ந்திருக்கிறார். அக் கடவுளின் பெருமை வாய்ந்த திருவடிகளை நாம் வணங்கினால் நம் உள்ளத்திலும் அவர் எழுந்தருளியிருப்பார். அதனால் நாம் இந்த உலத்திலே நெடுங்காலம் இன்பமாக வாழலாம்.
‘நிலமிசை’ என்பதற்கு மேலுலகம் என்றும் பொருள் கூறுவர். சேர்தல்-இடைவிடாது நினைத்தல்.
புலியூர்க் கேசிகன் உரை: அன்பர் நெஞ்சமாகிய மலரின்மேல் சென்று வீற்றிருப்பவனது சிறந்த திருவடிகளைச் சேர்ந்தவர்களே, உலகில் நிலையாக வாழ்வார்கள்.
மு.கருணாநிதி உரை: மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.
சாலமன் பாப்பையா உரை: மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்.
Translation: His feet, 'Who o'er the full-blown flower hath past,' who gain In bliss long time shall dwell above this earthly plain.
Explanation: They who are united to the glorious feet of Him who occupies swiftly the flower of the mind, shall flourish in the highest of worlds (heaven).

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. குறள் 4: கடவுள் வாழ்த்து.
மணக்குடவர் உரை: இன்பமும் வெகுளியு மில்லாதானது திருவடியைச் சேர்ந்தவர் எவ்விடத்து மிடும்பை யில்லாதவர். பொருளுங் காமமுமாகாவென்றற்கு "வேண்டுதல் வேண்டாமையிலான்" என்று பெயரிட்டார்.
பரிமேலழகர் உரை: வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு - ஒரு பொருளையும் விழைதலும் வெறுத்தலும் இல்லாதவன் அடியைச் சேர்ந்தார்க்கு; யாண்டும் இடும்பை இல - எக்காலத்தும் பிறவித் துன்பங்கள் உளவாகா. (பிறவித் துன்பங்களாவன : தன்னைப் பற்றி வருவனவும், பிற உயிர்களைப் பற்றி வருவனவும், தெய்வத்தைப் பற்றி வருவனவும் என மூவகையான் வரும் துன்பங்கள். அடி சேர்ந்தார்க்கும் அவ்விரண்டும் (வேண்டுதலும் வேண்டாமையும்) இன்மையின், அவை காரணமாக வரும் மூவகைத் துன்பங்களும் இலவாயின.)
மு. வரதராசன் உரை: விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.
மயிலை சிவமுத்து உரை: கடவுள் விருப்பு வெறுப்பு இல்லாதவர்; அக் கடவுளை இடைவிடாது வணங்குவதால் நாமும் விருப்பு வெறுப்பு அற்ற சிறந்த குணத்தை அடையலாம். அதனால் எத்தகைய துன்பங்களும் எந்தக் காலத்தும் நம்மை வந்து அடைய மாட்டா.
புலியூர்க் கேசிகன் உரை: விருப்பும் வெறுப்பும் இல்லாதவனாகிய இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்களுக்கு, எவ்விடத்திலும், எக்காலத்திலும் துன்பம் இல்லை.
மு.கருணாநிதி உரை: விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.
சாலமன் பாப்பையா உரை: எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை.
Translation: His foot, 'Whom want affects not, irks not grief,' who gain
Shall not, through every time, of any woes complain.
Explanation: To those who meditate the feet of Him who is void of desire or aversion, evil shall never come.

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. குறள் 5: கடவுள் வாழ்த்து.
மணக்குடவர் உரை: மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு.
பரிமேலழகர் உரை: இருள்சேர் இருவினையும் சேரா - மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்¢னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு - இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து. (இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை 'இருள்' என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் 'இருவினையும் சேரா' என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் - எப்பொழுதும் சொல்லுதல்)
மு. வரதராசன் உரை: கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம், அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.
மயிலை சிவமுத்து உரை: கடவுளுடைய உண்மையான சிறப்புக்களை உணர்ந்து, நாம் அவரை இடைவிடாது வணங்குதல் வேண்டும். அவ்வாறு வணங்கினால் நாம் சென்ற பிறப்பில் செய்த வினைகள், இந்தப் பிறப்பில் செய்த வினைகள் ஆகிய இரண்டும் நம்மை வந்து துன்புறுத்தமாட்டா.
இருள் சேர் - துன்பம் பொருந்திய ‘இருவினை’ என்பதற்கு நல்வினை, தீவினை என்றும் பொருள் கூறுவர்; புரிதல் - எப்பொழுதும் சொல்லுதல்.
புலியூர்க் கேசிகன் உரை: இறைவனின் மெய்மையோடு சேர்ந்த புகழையே விரும்பினவரிடத்து, அறியாமை என்னும் இருளைச் சார்ந்த இருவகை வினைகளும் வந்து சேரா.
மு.கருணாநிதி உரை: இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்.
சாலமன் பாப்பையா உரை: கடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை.
Translation:The men, who on the 'King's' true praised delight to dwell, Affects not them the fruit of deeds done ill or well.
Explanation:The two-fold deeds that spring from darkness shall not adhere to those who delight in the true praise of God.




__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார். குறள் 6: கடவுள் வாழ்த்து.
மணக்குடவர் உரை:மெய் வாய் கண் மூக்குச் செவியென்னும் ஐம் பொறிகளின் வழியாக வரும் ஊறு சுவை யொளி நாற்ற மோசை யென்னு மைந்தின்கண்ணுஞ் செல்லும் மன நிகழ்ச்சியை அடக்கினானது பொய்யற்ற வொழுக்க நெறியிலே நின்றாரன்றே நெடிது வாழ்வார்? இது சாவில்லையென்றது.
பரிமேலழகர் உரை:பொறி வாயில் ஐந்து அவித்தான் - மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பொறிகளை வழியாக உடைய ஐந்து அவாவினையும் அறுத்தானது; பொய் தீர் ஒழுக்க நெறி நின்றார்-மெய்யான ஒழுக்க நெறியின்கண் நின்றார், நீடு வாழ்வார் - பிறப்பு இன்றி எக்காலத்தும் ஒரு தன்மையராய் வாழ்வார். (புலன்கள் ஐந்து ஆகலான், அவற்றின்கண் செல்கின்ற அவாவும் ஐந்து ஆயிற்று. ஒழுக்க நெறி ஐந்தவித்தானால் சொல்லப்பட்டமையின், ஆண்டை ஆறனுருபு செய்யுட் கிழமைக்கண் வந்தது. 'கபிலரது பாட்டு' என்பது போல. இவை நான்கு பாட்டானும் இறைவனை நினைத்தலும், வாழ்த்தலும், அவன் நெறி நிற்றலும் செய்தார் வீடு பெறுவர் என்பது கூறப்பட்டது)
மு. வரதராசன் உரை:ஐம்பொறி வாயிலாகப் பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.
மயிலை சிவமுத்து உரை: மெய், வாய், கண், மூக்கு, செவி யென்னும் ஐந்தின் வழியாகத் தோன்றத்தக்க ஐவகை ஆசைகளையும் இயல்பாகவே வென்று விளங்குபவரே கடவுள். அக்கடவுளின் நல்லொழுக்க வழியைக் கடைப்பிடித்து ஐவகை ஆசைகளையும் அடக்கி வாழ்பவர் இவ்வுலகின் கண் நெடுங்காலம் இனிது இருப்பர்.
‘நீடு நிலமிசை வாழ்வார்’ என்பதற்கு விண்ணுலகத்தில் நிலைத்து வாழ்வார் என்றும் பொருள் கூறுவர்.
புலியூர்க் கேசிகன் உரை: ஐம்பொறி வழியாக எழுகின்ற ஆசைகளை அவித்தவனின் பொய்ம்மை இல்லாத ஒழுக்க நெறியில் நின்றவரே நிலையான வாழ்வினர் ஆவர்
மு.கருணாநிதி உரை: மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்.
சாலமன் பாப்பையா உரை:மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றவர் நெடுங்காலம் வாழ்வார்.
Translation:Long live they blest, who 've stood in path from falsehood freed; His, 'Who quenched lusts that from the sense-gates five proceed'.
Explanation:Those shall long proposer who abide in the faultless way of Him who has destroyed the five desires of the senses.

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. குறள் 7: கடவுள் வாழ்த்து.
மணக்குடவர் உரை:பிறவியாகிய பெரிய கடலை நீந்தியேறுவர், இறைவனது அடியைச் சேர்ந்தவர்; சேராதவ ரதனு ளழுந்துவார்
பரிமேலழகர் உரை: தனக்கு உவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் - ஒருவாற்றானும் தனக்கு நிகர் இல்லாதவனது தாளைச் சேர்ந்தார்க்கு அல்லது; மனக்கவலை மாற்றல் அரிது - மனத்தின்கண் நிகழும் துன்பங்களை நீக்குதல் உண்டாகாது. ("உறற்பால தீண்டா விடுதலரிது" (நாலடி.109) என்றாற் போல, ஈண்டு 'அருமை' இன்மைமேல் நின்றது. தாள் சேராதார் பிறவிக்கு ஏது ஆகிய காம வெகுளி மயக்கங்களை மாற்றமாட்டாமையின், பிறந்து இறந்து அவற்றான் வரும் துன்பங்களுள் அழுந்துவர் என்பதாம்.)
மு. வரதராசன் உரை:தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.
மயிலை சிவமுத்து உரை: அறிவு, ஆற்றல், குணம் முதலியவைகளில் தனக்குச் சமம் எவரும் இல்லாத கடவுளின் பாதங்களை இடைவிடாது சிந்தித்தால் நாம் மனக் கவலை சிறிதும் இன்றி வாழலாம். அவ்விதம் நினையாதவர்க்கு மனக் கவலை நீங்குதல் அரிது.
புலியூர்க் கேசிகன் உரை: தனக்கு யாதொன்றும் ஒப்புமை இல்லாதவனின் திருவடிகளைச் சேர்ந்தார்க்கு அல்லாமல், பிறர்க்கு, மனக்கவலையை மாற்றுதல் அரிதாகும்
மு.கருணாநிதி உரை: ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை.
சாலமன் பாப்பையா உரை:தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்.
Translation:Unless His foot, 'to Whom none can compare,gain, 'This hard for mind to find relief from anxious pain.
Explanation:Anxiety of mind cannot be removed, except from those who are united to the feet of Him who is incomparable.

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது. குறள் 8: கடவுள் வாழ்த்து.
மணக்குடவர் உரை:அறமாகிய கடலையுடைய அந்தணனது திருவடியைச் சேர்ந்தவர்க்கல்லது, ஒழிந்த பேர்களுக்குப் பிறவாழியை நீந்தலாகாது. அது பெறுதலரிது. இது காமமும் பொருளும் பற்றி வரும் அவலங் கெடுமென்றது.
பரிமேலழகர் உரை:அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் - அறக்கடல் ஆகிய அந்தணனது தாள் ஆகிய புணையைச் சேர்ந்தார்க்கல்லது; பிற ஆழி நீந்தல் அரிது. அதனின் பிறவாகிய கடல்களை நீந்தல் அரிது. (அறம், பொருள், இன்பம் என உடன் எண்ணப்பட்ட மூன்றனுள் அறத்தை முன்னர்ப் பிரித்தமையான், ஏனைப் பொருளும், இன்பமும் பிற எனப்பட்டன. பல்வேறு வகைப்பட்ட அறங்கள் எல்லாவற்றையும் தனக்கு வடிவமாக உடையான் ஆகலின், 'அறஆழி' அந்தணன் என்றார். 'அறஆழி' என்பதனைத் தரும சக்கரம் ஆக்கி, 'அதனை உடைய அந்தணன்' என்று உரைப்பாரும் உளர். அப்புணையைச் சேராதார் கரைகாணாது அவற்றுள்ளே அழுந்துவர் ஆகலின், 'நீந்தல் அரிது' என்றார். இஃது ஏகதேச உருவகம்.)
மு. வரதராசன் உரை: அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்றக் கடல்களைக் கடக்க முடியாது.
மயிலை சிவமுத்து உரை: கடவுள் கடல் போன்று பரந்துள்ள அறச்செயலே வடிவாக உடையவர்; கருணையும் வாய்ந்தவர். அவருடைய பாதங்களை நாம் இடைவிடாது நினைத்தல் வேண்டும். அவ்விதம் நினைத்தால் கடல் போன்று பரந்துள்ள எல்லாத் துன்பங்களையும் நாம் கடந்து விடலாம். மற்றவர் இத்துன்பங்களைக் கடத்தல் அரிது.
புலியூர்க் கேசிகன் உரை: அறக் கடலான அந்தணனின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கு அல்லாமல், பிறர்க்கு இன்பமும் பொருளும் ஆகிய கடல்களைக் கடத்தல் இயலாது
மு.கருணாநிதி உரை: அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல.
சாலமன் பாப்பையா உரை:அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்.
Translation: Unless His feet 'the Sea of Good, the Fair and Bountiful,' men gain, 'Tis hard
the further bank of being's changeful sea to attain.
Explanation:None can swim the sea of vice, but those who are united to the feet of that
gracious Being who is a sea of virtue.

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. குறள் 9: கடவுள் வாழ்த்து.
மணக்குடவர் உரை:அறிவில்லாத பொறிகளையுடைய பாவைகள் போல, ஒரு குணமுமுடையனவல்ல; எட்டுக் குணத்தினை யுடையவன் திருவடியினை வணங்காத தலையினையுடைய உடம்புகள். உயிருண்டாகில் வணங்குமென் றிழித்து உடம்புக ளென்றார்
பரிமேலழகர் உரை:கோள் இல் பொறியில் குணம் இல - தத்தமக்கு ஏற்ற புலன்களைக் கொள்கை இல்லாத பொறிகள் போலப் பயன்படுதலுடைய அல்ல; எண் குணத்தான் தாளை வணங்காத் தலை - எண் வகைப்பட்ட குணங்களை உடையானது தாள்களை வணங்காத தலைகள். (எண்குணங்களாவன: தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவு இல் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை என இவை.இவ்வாறு சைவாகமத்துக் கூறப்பட்டது. 'அணிமா' வை முதலாக உடையன எனவும், 'கடை இலா அறிவை' முதலாக உடையன எனவும் உரைப்பாரும் உளர். காணாத கண் முதலியன போல வணங்காத தலைகள் பயன் இல எனத்தலைமேல் வைத்துக் கூறினார். கூறினாரேனும், இனம்பற்றி வாழ்த்தாத நாக்களும் அவ்வாறே பயன் இல என்பதூஉம் கொள்க. இவை மூன்று பாட்டானும் அவனை நினைத்தலும், வாழ்த்தலும், வணங்கலும் செய்யாவழிப் படும் குற்றம் கூறப்பட்டது.)
மு. வரதராசன் உரை:கேட்காத செவி பார்க்காத கண் முதலியனபோல் எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.
சாமி சிதம்பரனார் உரை: *எட்டு வகையான குணங்களையுடைய கடவுளின். தாளை பாதங்களை. வணங்காத்தலை- வணங்காத தலைகள். குணம்
இலவே- பயன் உள்ளவை அல்ல.
* எட்டுக்குணங்கள்: தன்வசம், தூயஉடம்பு, இயற்கையறிவு, எல்லாம் அறிதல், தானாகவே பாசங்களை விடுதல், பேர்அருள், அளவற்ற ஆற்றல், அளவற்ற இன்பம் என்பவை.
புலியூர்க் கேசிகன் உரை: எண் வகைக் குணங்களில் உருவான இறைவன் திருவடிகளை வணங்காத தலை, கேளாக் காதும் காணாக் கண்ணும் போலப் பயனில்லாதது
மயிலை சிவமுத்து உரை: ஒருவனுக்குக் கண், காது, மூக்கு முதலிய பொறிகள் இருந்தும் அவை பார்த்தல், கேட்டல், முகர்தல் முதலிய தொழில்களைச் செய்யாவிட்டால் அவற்றால் அவனுக்குச் சிறிதும் பயனில்லை. அவ்வாறே எண்வகைக் குணங்களையும் உடைய கடவுளின் பாதங்களை வணங்காத் தலை, கை முதலியன சிறிதும் பயன் அற்றவையே ஆகும்.
கோள் இல் பொறி - (புலன்களைக்) கொள்ளுதல் இல்லாத பொறி; எண் குணம் - மேல் எட்டுப் பாடல்களிலும் கடவுளுக்குக் குறிப்பிட்டுள்ள குணங்கள்.
மு.கருணாநிதி உரை: உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே.
Translation:Before His foot, 'the Eight-fold Excellence,' with unbent head, Who stands, like palsied sense, is to all living functions dead.
Explanation:The head that worships not the feet of Him who is possessed of eight attributes, is as useless as a sense without the power of sensation.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். குறள் 10: கடவுள் வாழ்த்து.
மணக்குடவர் உரை:பிறவியாகிய பெரிய கடலை நீந்தியேறுவர், இறைவனது அடியைச் சேர்ந்தவர்; சேராதவ ரதனு ளழுந்துவார்
பரிமேலழகர் உரை:இறைவன் அடி (சேர்ந்தார்) பிறவிப் பெருங்கடல் நீந்துவர் - இறைவன் அடி என்னும் புணையைச் சேர்ந்தார் பிறவி ஆகிய பெரிய கடலை நீந்துவர்; சேராதார் நீந்தார் - அதனைச் சேராதார் நீந்தமாட்டாராய் அதனுள் அழுந்துவர். (காரண காரியத் தொடர்ச்சியாய்¢ கரை இன்றி வருதலின், 'பிறவிப் பெருங்கடல்' என்றார். சேர்ந்தார் என்பது சொல்லெச்சம். உலகியல்பை நினையாது இறைவன் அடியையே நினைப்பார்க்குப் பிறவி அறுதலும், அவ்வாறன்றி மாறி நினைப்பார்க்குப் அஃது அறாமையும் ஆகிய இரண்டும் இதனான் நியமிக்கப்பட்டன.)
மு. வரதராசன் உரை:இறைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும்; மற்றவர் கடக்க முடியாது.
சாமி சிதம்பரனார் உரை :(ப-உ) பிறவிப் பெருங்கடல்- (கடவுள் பாதத்தை
வணங்குவோர்) பிறவியாகிய பெரிய கடலை. நீந்துவர்- நீந்திக் கடப்பார்கள். இறைவன் அடி சேராதார்- கடவுள் பாதத்தை அடையாதவர்கள். நீந்தார்- (பிறவியாகிய பெரிய கடலை) நீந்திக் கடக்கமாட்டார்கள்.
(க-து) கடவுள் பாதத்தை வணங்காதார் பிறவிக் கடலைக் கடக்கமாட்டார்கள்.
புலியூர்க் கேசிகன் உரை: இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்களே பிறவிப் பெருங்கடலைக் கடப்பார்கள்; சேராதவர்களால் கடக்க இயலாது (௰)
மயிலை சிவமுத்து உரை: பிறப்பாகிய பெரிய கடலை நாம் கடக்க விரும்பினால் கடவுளின் திருவடிகளை இடைவிடாமல் தியானம் செய்தல் வேண்டும். அவ்வாறு துதிக்காதவர்கள் பிறந்து பிறந்து துன்புறுவர்.
கடவுள் திருவடியாகிய தெப்பத்தைக் கொண்டு பிறவிக் கடலைக் கடத்தல் வேண்டும்
மு.கருணாநிதி உரை:வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.
சாலமன் பாப்பையா உரை:கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்.
Translation:They swim the sea of births, the 'Monarch's' foot who gain; None others reach
the shore of being's mighty main.
Explanation: None can swim the great sea of births but those who are united to the feet of God.


10 சாமி.சிதம்பரனார் நூற் களஞ்சியம் - 4 திருக்குறள் பொருள் விளக்கம் 11
- மோட்சமாகிய உலகையடைந்து. நீடு வாடிநவார் - அழியாமல்
வாடிநவார்கள்.
(க-து) கடவுள் அடிகளை வணங்குவோர் மோட்சம்
பெறுவார்கள்.
4. வேண்டுதல், வேண்டாமை இலான்,அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
(ப-உ) வேண்டுதல்- ஒரு பொருளை விரும்புதலும்.
வேண்டாமை - ஒரு பொருளை வெறுத்தலும். இலான்-
இல்லாதவனாகிய கடவுளின். அடி சேர்ந்தார்க்கு- பாதங்களை
அடைந்து வணங்கியவர்களுக்கு. யாண்டும்- எப்பொழுதும்.
இடும்பை- துன்பங்கள். இல- இல்லை.
(க-து) கடவுளை வணங்குவோர்க்கு எப்பொழுதும்
துன்பங்கள் இல்லை.
5. இருள்சேர் இருவினையும் சேரா; இறைவன்
பொருள்சேர் புகடிநடிநடிநடிநடிநபுரிந்தார் மாட்டு.
(ப-உ) இறைவன்- கடவுளின். பொருள்சேர்- உண்மையான.
புகடிந- கீர்த்தியை. புரிந்தார்மாட்டு- விரும்பிப் போற்றியவர்களிடம்.
இருள்சேர்- அறியாமையால் வருகின்ற. இரு வினையும் - நல்வினை
தீவினை என்னும் இரண்டு வினைகளும். சேரா- அடையமாட்டா.
(க-து) கடவுளைப் போற்றுகின்றவர்களிடம் நல்வினை
தீவினைகள் சேரமாட்டா.
6. பொறிவாயில் ஐந்துஅவித்தான், பொடீநுடீநுடீநுடீநுடீநுதீர் ஒழுக்க
நெறிநின்றார், நீடுவாடிநடிநடிநடிநடிந வார்.
(ப-உ) பொறிவாயில்- மெடீநு, வாடீநு, கண், மூக்கு, செவி
என்னும் ஐம்பொறிகளிடம் உள்ள. ஐந்து- உணர்ச்சி, சுவை, ஒளி,
மணம், ஓசை என்னும் ஐந்து ஆசைகளையும். அவித்தான்-
அடக்கிய கடவுளின். பொடீநுதீர்- பொடீநுயற்ற. ஒழுக்க நெறி-
நல்லொழுக்க வழியிலே. நின்றார்- தவறாமல் நின்றவர்.
நீடுவாடிநவார்- அழியாத வாடிநவைப் பெறுவர்.
(க-து) கடவுள் நெறியிலே நடப்பவர் அழியாமல் வாடிநவர்..
7. தனக்கு உவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு
அல்லால் மனக்கவலை மாற்றல்அரிது.
(ப-உ) தனக்கு உவமை இல்லாதான்- தனக்கு வேறு யாரும்
ஒப்பில்லாத கடவுளின். தாள்- அடிகளை. சேர்ந்தார்க்கு அல்லால்சே
ர்ந்து வணங்கியவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு. மனக் கவலைமனத்
தில் உண்டாகும் துன்பங்களை. மாற்றல்- நீக்குதல். அரிதுமுடியாத
செயல்.
(க-து) கடவுள் பாதங்களை வணங்காதவர்களால் மனக்க
வலையை நீக்கிக்கொள்ள முடியாது.
8. அறஆழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்,
பிறஆழி நீந்தல் அரிது.
(ப-உ) அறம் ஆழி- தருமக்கடலாகிய. அந்தணன்- இரக்க
முள்ள கடவுளின். தாள்- பாதமாகிய (மரக் கலத்தை). சேர்ந்தார்க்கு
அல்லால்- சேர்ந்தவர்க்கு அல்லாமல் மற்றவர்களால். பிறஆழிபொருளு
ம் இன்பமும் ஆகிய வேறு கடல்களை. நீந்தல்- நீந்திக்
கரை ஏறுவது. அரிது- முடியாத செயல்.
(க-து) கடவுளின் பாதங்களை வணங்காதவர்கள் பொருள்,
இன்பம் ஆகிய கடல்களைக் கடக்க மாட்டார்கள்.
9. கோள்இல் பொறியில், குணம்இலவே, எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
(ப-உ) கோள் இல்- தனக்குரிய தன்மைகளைக் கொண்டிராத. பொறியில் - ஐம்பொறிகளைப்போல. எண் குணத்தான்-

(க-து) கடவுள் பாதங்களை வணங்காத தலைகளால் பயன் இல்லை.
1



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard