Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 008 - அன்புடைமை


Guru

Status: Offline
Posts: 7474
Date:
008 - அன்புடைமை
Permalink  
 


அன்புடைமை
பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: அன்புடைமை.

குறள் 71:

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.

மணக்குடவர் உரை:
அன்பினை யடைக்குந்தாழுமுளதோ? அன்புடையார் மாட்டு உளதாகிய புல்லிய கண்ணின் நீர்தானே ஆரவாரத்தைத் தரும்.

பரிமேலழகர் உரை:
அன்பிற்கும் அடைக்கும் தாழ் உண்டோ - அன்பிற்கும் பிறர் அறியாமல் அடைத்து வைக்கும் தாழ் உளதோ?; ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும் -தம்மால் அன்பு செய்யப்பட்டாரது துன்பம் கண்டுழி அன்புடையார் கண்பொழிகின்ற புல்லிய கண்ணீரே உள்நின்ற அன்பினை எல்லாரும் அறியத்தூற்றும் ஆதலான். (உம்மை சிறப்பின்கண் வந்தது. ஆர்வலரது புன்மை. கண்ணீர்மேல் ஏற்றப்பட்டது. காட்சியளவைக்கு எய்தாதாயினும் அனுமான அளவையான் வெளிப்படும் என்பதாம். இதனால் அன்பினது உண்மை கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே இருக்கும் அன்பைப் ) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.

மு. கருணாநிதி உரை:
உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது. அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டுவிடும்.

சாலமன் பாப்பையா உரை:
அன்பிற்கும் கூடப் பிறர் அறியாமல் தன்னை மூடி வைக்கும் கதவு உண்டோ? இல்லை. தம்மால் அன்பு செய்யப்பட்டவரின் துன்பத்தைக் காணும்போது வடியும் கண்ணீரே அன்பு உள்ளத்தைக் காட்டிவிடும்.

Translation:
And is there bar that can even love restrain?
The tiny tear shall make the lover's secret plain.

Explanation:
Is there any fastening that can shut in love ? Tears of the affectionate will publish the love that is within.

குறள் 72:

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

மணக்குடவர் உரை:
அன்பிலாதார் எல்லாப் பொருளையுந் தமக்கு உரிமையாக வுடையர்: அன்புடையார் பொருளேயன்றித் தம்முடம்புக்கு அங்கமாகிய வெலும்பினையும் பிறர்க்கு உரிமையாக வுடையர். அன்புடையார்க்கல்லது அறஞ்செய்த லரிதென்றாயிற்று.

பரிமேலழகர் உரை:
அன்பிலார் எல்லாம் தமக்கு உரியர் - அன்பிலாதார் பிறர்க்குப் பயன்படாமையின் எல்லாப் பொருளானும் தமக்கே உரியர்; அன்புடையார் என்பும் பிறர்க்கு உரியர் - அன்புடையார் அவற்றானே அன்றித் தம் உடம்பானும் பிறர்க்கு உரியர். (ஆன் உருபுகளும் பிரிநிலை ஏகாரமும் விகாரத்தால் தொக்கன. 'என்பு' ஆகு பெயர். என்பும் உரியராதல் 'தன்னகம் புக்க குறுநடைப் புறவின் தபுதி அஞ்சிச் சீரை புக்கோன்' (புறநா.43) முதலாயினார் கண்காண்க.).

மு. வரதராசன் உரை:
அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்.

மு. கருணாநிதி உரை:
அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர்.

சாலமன் பாப்பையா உரை:
அன்பு இல்லாதவர் எல்லாவற்றாலும் தமக்கே உரிமை உடையவராய் இருப்பர். அன்புள்ளவரோ பொருளால் மட்டும் அன்று; உடம்பாலும் பிறர்க்கு உரியவராய் இருப்பர்.

Translation:
The loveless to themselves belong alone;
The loving men are others' to the very bone.

Explanation:
Those who are destitute of love appropriate all they have to themselves; but those who possess love consider even their bones to belong to others.

குறள் 73:

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.

மணக்குடவர் உரை:
முற்பிறப்பின்கண் அன்போடு பொருந்தச் சென்ற செலவென்று சொல்லுவர்; பெறுதற்கரிய வுயிர்க்கு இப்பிறப்பின்கண் உடம்போடு இடைவிடாத நட்பினை.

பரிமேலழகர் உரை:
ஆர் உயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு - பெறுதற்கு அரிய மக்கள் உயிர்க்கு உடம்போடு உண்டாகிய தொடர்ச்சியினை; அன்போடு இயைந்த வழக்கு என்ப - அன்போடு பொருந்துதற்கு வந்த நெறியின் பயன் என்று சொல்லுவர் அறிந்தோர். (பிறப்பினது அருமை பிறந்த உயிர்மேல் ஏற்றப்பட்டது. 'இயைந்த' என்பது உபசார வழக்கு; வழக்கு: ஆகுபெயர். உடம்போடு இயைந்தல்லது அன்பு செய்யலாகாமையின், அது செய்தற் பொருட்டு இத்தொடர்ச்சி உளதாயிற்று என்பதாம். ஆகவே இத்தொடர்ச்சிக்குப் பயன் அன்புடைமை என்றாயிற்று.).

மு. வரதராசன் உரை:
அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன்என்று கூறுவர்.

மு. கருணாநிதி உரை:
உயிரும் உடலும்போல் அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த பொருத்தமாகும்.

சாலமன் பாப்பையா உரை:
பெறுவதற்கு அரிய உயிருக்கு நம் உடம்போடு உண்டாகிய தொடர்பு, அன்போடு கொண்ட ஆசையின் பயனே என்று அறிந்தவர் கூறுவர்.

Translation:
Of precious soul with body's flesh and bone,
The union yields one fruit, the life of love alone.

Explanation:
They say that the union of soul and body in man is the fruit of the union of love and virtue (in a former birth).

குறள் 74:

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு.

மணக்குடவர் உரை:
அன்பு தரும் ஆர்வமுடைமையை அவ்வார்வமுடைமை தரும். நட்பென்று சொல்லப்பட்ட ஆராய்தலில்லாத சிறப்பினை.

பரிமேலழகர் உரை:
அன்பு ஆர்வமுடைமை ஈனும் - ஒருவனுக்குத் தொடர்புடையார் மாட்டுச் செய்த அன்பு அத்தன்மையால் பிறர் மாட்டும் விருப்பமுடைமையைத் தரும்; அது நண்பு என்னும் நாடாச்சிறப்பு ஈனும் - அவ்விருப்பமுடைமைதான்.அவற்குப் பகையும் நொதுமலும் இல்லையாய் யாவரும் நண்பு என்று சொல்லப்படும் அளவறந்த சிறப்பினைத் தரும்.(உடைமை, உடையனாம் தன்மை. யாவரும் நண்பாதல் எல்லாப் பொருளும் எய்துதற்கு ஏதுவாகலின், அதனை 'நாடாச்சிறப்பு' என்றார்.).

மு. வரதராசன் உரை:
அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லாரிடத்தும் நட்பு என்றுசொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்.

மு. கருணாநிதி உரை:
அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும் அந்த உள்ளம், நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும்.

சாலமன் பாப்பையா உரை:
குடும்பம், உறவு என்பாரிடத்துக் கொள்ளும் அன்பு, உலகத்தவரிடம் எல்லாம் உறவு கொள்ளும் விருப்பை உண்டாக்கும். அதுவே அனைவரையும் நட்பாக்கும் சிறப்பையும் உண்டாக்கும்.

Translation:
From love fond yearning springs for union sweet of minds;
And that the bond of rare excelling friendship binds.

Explanation:
Love begets desire: and that (desire) begets the immeasureable excellence of friendship.

குறள் 75:

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.

மணக்குடவர் உரை:
முற்பிறப்பின்கண் பிறர்மேலன்பு வைத்துச் சென்ற செலவென்று சொல்லுவர்: இப்பிறப்பின்கண் உலகத்தில் இன்பமுற்றார் அதன் மேலுஞ் சிறப்பெய்துதலை.

பரிமேலழகர் உரை:
அன்பு உற்று அமர்ந்த வழக்கு என்ப - அன்புடையராய் இல்லறத்தோடு பொருந்திய நெறியின் பயன் என்று சொல்லுவர் அறிந்தோர்; வையகத்து இன்பு உற்றார் எய்தும் சிறப்பு - இவ்வுலகத்து இல்வாழ்க்கைக்கண் நின்று, இன்பம் நுகர்ந்து, அதன்மேல் துறக்கத்துச் சென்று எய்தும் பேரின்பத்தினை. ('வழக்கு' ஆகுபெயர். இல்வாழ்க்கைக்கண் நின்று மனைவியோடும் மக்களோடும் ஒக்கலோடும் கூடி இன்புற்றார் தாம் செய்த வேள்வித்தொழிலால் தேவராய் ஆண்டும் இன்புறுவர் ஆகலின் இன்புற்றார் எய்தும் சிறப்பு என்றார்.தவத்தால் துன்புற்று எய்தும் துறக்க இன்பத்தினை ஈண்டு இன்புற்று எய்துதல் அன்பானன்றி இல்லை என்பதாம்.).

மு. வரதராசன் உரை:
உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்கையின் பயன் என்று கூறுவர்.

மு. கருணாநிதி உரை:
உலகில் இன்புற்று வாழ்கின்றவர்க்கு வாய்க்கும் சிறப்பு, அவர் அன்புள்ளம் கொண்டவராக விளங்குவதன் பயனே என்று கூறலாம்.

சாலமன் பாப்பையா உரை:
இவ்வுலகில் வாழ்ந்து இன்பம் அடைந்தவர் பெறும் சிறப்பே அன்பு கொண்டு இல்வாழ்க்கை நடத்தியதன் பயன்தான் என்று அறிந்தோர் கூறுவர்.

Translation:
They say that the felicity which those who, after enjoying the pleasure (of the conjugal state) in this world, obtain in heaven is the result of their domestic state imbued with love.

Explanation:
The touch of children gives pleasure to the body, and the hearing of their words, pleasure to the ear.

குறள் 76:

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.

மணக்குடவர் உரை:
அன்பானது அறஞ்செய்வார்க்கே சார்பாமென்பர் அறியாதார். அவ்வன்பு மறஞ் செய்வார்க்குந் துணையாம்.

பரிமேலழகர் உரை:
அன்பு சார்பு அறத்திற்கே என்ப அறியார் - அன்பு துணையாவது அறத்திற்கே என்று சொல்லுவர் சிலர் அறியார்; மறத்திற்கும் அஃதே துணை - ஏனை மறத்திற்கும் அவ்வன்பே துணையாவது. (ஒருவன் செய்த பகைமைபற்றி உள்ளத்து மறம் நிகழ்ந்துழி, அவனை நட்பாகக் கருதி அவன் மேல் அன்புசெய்ய அது நீங்குமாகலின்,மறத்தை நீக்குதற்கும் துணையாம் என்பார், 'மறத்திற்கும் அஃதே துணை' என்றார். துன்பத்திற்கு யாரே துணையாவார் (குறள் 1299)என்புழிப்போல. இவை ஐந்து பாட்டானும் அன்பினது சிறப்புக் கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்:ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்க்கும் அதுவே துணையாக நிற்கின்றது.

மு. கருணாநிதி உரை:
வீரச் செயல்களுக்கும் அன்பு துணையாகத் திகழ்கிறது என்பதை அறியாதவர்களே, அறச் செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாக இருப்பதாகக் கூறுவார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவோர் அறியாதவரே; மறத்திற்கும் கூட அதுவே காரணம் ஆகும்.

Translation:
The unwise deem love virtue only can sustain,
It also helps the man who evil would restrain.

Explanation:
The ignorant say that love is an ally to virtue only, but it is also a help to get out of vice.

குறள் 77:

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.

மணக்குடவர் உரை:
என்பிலாத சீவனை வெயில் சுடுமாறு போற் சுடும்: அன்பிலாதவுயிரினை அறம்.

பரிமேலழகர் உரை:
என்பு இலதனை வெயில் போலக் காயும் - என்பு இல்லாத உடம்பை வெயில் காய்ந்தாற்போலக்காயும்; அன்பு இலதனை அறம் - அன்பில்லாத உயிரை அறக்கடவுள். ('என்பிலது' என்றதனான் உடம்பு என்பதூஉம் 'அன்பிலது' என்றதனான் உயிர் என்பதூஉம் பெற்றாம். வெறுப்பு இன்றி எங்கும் ஒருதன்மைத்து ஆகிய வெயிலின்முன் என்பில்லது தன் இயல்பாற் சென்று கெடுமாறுபோல, அத்தன்மைத்து ஆகிய அறத்தின்முன் அன்பில்லது தன் இயல்பால் கெடும் என்பதாம்.அதனைக் காயும் என வெயில் அறங்களின் மேல் ஏற்றினார், அவற்றிற்கும் அவ்வியல்பு உண்மையின். இவ்வாறு 'அல்லவை செய்வார்க்கு அறம் கூற்றம்' (நான்மணி.83) எனப் பிறரும் கூறினார்.).

மு. வரதராசன் உரை:
எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்.

மு. கருணாநிதி உரை:
அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும். அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும்.

சாலமன் பாப்பையா உரை:
எலும்பு இல்லாத புழுவை வெயில் காய்ந்து கொள்வது போல அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள் காய்ந்து கொல்லும்.

Translation:
As sun's fierce ray dries up the boneless things,
So loveless beings virtue's power to nothing brings.

Explanation:
Virtue will burn up the soul which is without love, even as the sun burns up the creature which is without bone, i.e. worms.

குறள் 78:

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.

மணக்குடவர் உரை:
தன்னிடத்து அன்பில்லாத உயிரினது வாழ்க்கை வலிய பாரிடத்து (பாறை) உண்டாகிய உலர்ந்த மரம் தளிர்த்தாற் போலும். தளிர்த்தற்குக் காரணமின்மையால் தளிராதென்றவாறு.

பரிமேலழகர் உரை:
அகத்து அன்பு இல்லா உயிர் வாழ்க்கை - மனத்தின்கண் அன்பு இல்லாத உயிர் இல்லறத்தோடு கூடி வாழ்தல்; வன்பாற்கண் வற்றல் மரம் தளிர்த்தற்று - வன்பாலின்கண்வற்றல் ஆகிய மரம் தளிர்த்தாற் போலும். ( கூடாது என்பதாம். வன்பால் - வல்நிலம். வற்றல் என்பது பால் விளங்கா அஃறிணைப் படர்க்கைப் பெயர்.).

மு. வரதராசன் உரை:
அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழக்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.

மு. கருணாநிதி உரை:
மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றது.

சாலமன் பாப்பையா உரை:
மனத்தில் அன்பு இல்லாமல் குடும்பத்தோடு வாழும் வாழ்க்கை, வறண்ட பாலை நிலத்தில் காய்ந்து சுக்காகிப் போன மரம் மீண்டும் இலை விடுவது போலாம்.

Translation:
The loveless soul, the very joys of life may know,
When flowers, in barren soil, on sapless trees, shall blow.

Explanation:
The domestic state of that man whose mind is without love is like the flourishing of a withered tree upon the parched desert.




__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

குறள் 79:

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.

மணக்குடவர் உரை:
உடம்பிற்கு அகத்துறுப்பாகிய அன்பிலார்க்குப் புறத்துறுப்புகளெல்லாம் யாதினைச் செய்யும்?

பரிமேலழகர் உரை:
யாக்கை அகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு - யாக்கை அகத்தின்கண் நின்று (இல்லறத்திற்கு) உறுப்பாகிய அன்புடையர் அல்லாதார்க்கு; புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும் - ஏனைப் புறத்தின்கண் நின்று உறுப்பாவன எல்லாம் அவ்வறஞ்செய்தற்கண் என்ன உதவியைச் செய்யும்.? (புறத்து உறுப்பாவன: இடனும், பொருளும், ஏவல் செய்வாரும் முதலாயின. துணையொடு கூடாதவழி அவற்றால் பயன் இன்மையின் 'எவன் செய்யும்' என்றார். உறுப்புப் போறலின் 'உறுப்பு' எனப்பட்டன 'யாக்கையின் கண் முதலிய உறுப்புக்கள் எல்லாம் என்ன பயனைச் செய்யும், மனத்தின்கண் உறுப்பு ஆகிய அன்பு இல்லாதார்க்கு' என்று உரைப்பாரும் உளர்.அதற்குஇல்லறத்தோடு யாதும் இயைபு இல்லாமை அறிக.

மு. வரதராசன் உரை:
உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும்?

மு. கருணாநிதி உரை:
அன்பு என்னும் அகத்து உறுப்பு இல்லாதவர்க்குப் புறத்து உறுப்புக்கள் அழகாக இருந்து என்ன பயன்?

சாலமன் பாப்பையா உரை:
குடும்பத்திற்கு அக உறுப்பாகிய அன்பு இல்லாவதர்களுக்கு வெளி உறுப்பாக விளங்கும் இடம், பொருள், ஏவல் என்பன என்ன பயனைத் தரும்?

Translation:
Though every outward part complete, the body's fitly framed;
What good, when soul within, of love devoid, lies halt and maimed?

Explanation:
Of what avail are all the external members (of the body) to those who are destitute of love, the internal member.

குறள் 80:

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.

மணக்குடவர் உரை:
உடம்பிற்கு அகத்துறுப்பாகிய அன்பிலார்க்குப் புறத்துறுப்புகளெல்லாம் யாதினைச் செய்யும்?

பரிமேலழகர் உரை:
அன்பின் வழியது உயிர்நிலை - அன்பு முதலாக அதன் வழிநின்ற உடம்பே உயிர்நின்ற உடம்பாவது; அஃது இலார்க்கு உடம்பு என்பு தோல் போர்த்த - அவ்வன்பு இல்லாதார்க்கு உளவான உடம்புகள் என்பினைத் தோலால் போர்த்தன ஆம்; உயிர் நின்றன ஆகா. (இல்லறம் பயவாமையின், அன்ன ஆயின. இவை நான்கு பாட்டானும் அன்பில்வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்: அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல்போர்த்த வெற்றுடம்பே ஆகும்.

மு. கருணாநிதி உரை:
அன்புநெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்; இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெறும் உடலேயாகும்.

சாலமன் பாப்பையா உரை:
அன்பை அடிப்படையாகக் கொண்டதே உயிர் நிறைந்த இந்த உடம்பு, அன்பு மட்டும் இல்லை என்றால் இந்த உடம்பு வெறும் எலும்பின்மேல் தோலைப் போர்த்தியது போன்றது ஆகும்.

Translation:
Bodies of loveless men are bony framework clad with skin;
Then is the body seat of life, when love resides within.

Explanation:
That body alone which is inspired with love contains a living soul: if void of it, (the body) is bone overlaid with skin.



8. அன்புடைமை


1.அன்பிற்கு முண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்
⁠புன்கண்நீர் பூசல் தரும்.

எவரும் தம்மிடத்திலுள்ள அன்பினைப் பிறர் அறியாதவாறு மறைத்துத் தாழ்ப்பாள் இட முடியாது. ஒருவர் எவரிடத்து அன்பு கொண்டுள்ளாரோ, அவர் துன்பப்படுவதைக் காணும் போது அன்புடையவருடைய கண்களிலிருந்து நீர் வழியும். அக்கண்ணீரே அவரிடத்துள்ள அன்பைப் பலரும் அறியக் காட்டி விடும்.71

தாழ்-தாழ்ப்பாள்; பூசல் தரும்-வெளிப்படுத்தும்.

2.அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
⁠என்பும் உரியர் பிறர்க்கு.

அன்புடையார் பிறர்க்குப் பயன்படுவார்; தமக்கென ஒன்றையும் விரும்பார்; தமது உடம்பும் பிறர்க்குப் பயன் படுமாயின் அவ்வுடம்பையும் அவர்க்கு அளிப்பார். அன்பில்லாதவர் பிறர்க்குப் பயன்படார்; எல்லாப் பொருள்களும் தமக்கு உரியனவென்று கொள்வார்.

என்பு-எலும்பு; (இங்கு எலும்போடு கூடிய உடம்பைக் குறிக்கும்.)72

3.அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
⁠என்போடு இயைந்த தொடர்பு.

மக்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் பிறரிடத்து அன்பாய் இருக்க வேண்டும். மக்கள் அவ்வாறு அன்பு செய்தல் பொருட்டே உயிர் உடலோடு தொடர்பு கொண்டுள்ளது.73

4.அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
⁠நண்பென்னும் நாடாச் சிறப்பு.

அன்பு பிறரிடத்து விருப்பத்தைத் தோற்றுவிக்கும்; அவ்விருப்பம் எல்லாரும் அவருக்கு நண்பர் என்று சொல்லும்படியான அளவிறந்த சிறப்பையும் அளிக்கும்.74


5.அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையத்து
⁠இன்புற்றார் எய்தும் சிறப்பு.

இவ்வுலகத்தில் தம் உற்றார் உறவினரோடு அன்பினால் பிணைக்கப்பட்டு இனிதே இல்வாழ்க்கை நடத்தி மகிழ்ந்தவர் விண்ணுலகத்தும் இன்புறுவர். அவர் வானுலகத்தே அடையும் சிறப்பு, அவர் மண்ணுலகத்தே நடத்திய அன்பு வாழ்க்கையின் விளைவேயாம்.

இக்குறளுக்கு "இவ்வுலகத்தில் இன்பத்தோடு வாழ்வார் அடையும் பெருஞ் சிறப்பு அவர் முற்பிறவியில் பிறர் பால் செலுத்திய அன்பின் விளைவேயாம்," என்றும் பொருள் கூறுவர்.75
6.அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
⁠மறத்திற்கும் அஃதே துணை.

அறியாதார் அறச்செயல்கள் மட்டுமே அன்பின் விளைவு எனக் கூறுவார். மறச்செயலை நீக்கவும் அன்பு துணை செய்கிறது. ஒருவன் செய்த பகைமை பற்றி மனத்திலே மறச் செயல் தோன்றிய போது அவனை நட்பாகக் கருதி அம்மறச் செயல் எண்ணத்தைப் போக்குவதும் அன்பேயாம்.

அறத்திற்கு - அறச்செயல்கள் செய்வதற்கு; சார்பு-துணை; மறத்திற்கு-மறச்செயல்களை நீக்குவதற்கு.76

7.என்பி லதனை வெயில்போலக் காயுமே
⁠அன்பி லதனை அறம்.

எலும்பே யில்லாத உடலையுடைய புழுவைக் காய்ந்து கொல்லும் வெயில் போல் அன்பில்லாதவர்களை அறக் கடவுள் வருத்தும்..77

8.அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
⁠வற்றல் மரந்தளிர்த் தற்று.

அன்பில்லாத ஒருவன் இல்வாழ்க்கை நடத்துதல் பாலை வனத்தில் உலர்ந்ததாகிய மரமொன்று தளிர்ப்பது போன்றது. பட்டுப் போன மரம் பாலைவனத்தில் தளிர்க்காது. அது போலவே அன்பில்லாத இல்வாழ்க்கையும் நடைபெற முடியாது.

வன்பால்-வலிய பாலை நிலம்; தளிர்த்தற்று-தளிர்த்தது போன்றது..78

9.புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
⁠அகத்துறுப் பன்பி லவர்க்கு?

ஒருவனுடைய மனத்தின் கண் இருக்க வேண்டிய சிறந்த உறுப்பு அன்பேயாம். இடமும், பொருளும், ஏவல் செய்வோரும் ஆகிய வெளியுறுப்புக்கள் அன்பின் துணை கொண்டே பயன்படுவன. அந்த அன்பு ஒருவனிடத்து இல்லையாயின் அவற்றால் பயன் இல்லையாம்.

புறத்துறுப்பு-கை, கால், கண், செவி முதலிய உறுப்புக்களுமாம்.79

10.அன்பின் வழிய துயிர்நிலை அஃதுஇலார்க்கு
⁠என்புதோல் போர்த்த உடம்பு.

அன்பின் வழி நின்ற உடலே உயிரோடு கூடிய உடலாகும். அன்பின் வழிச் செல்லாதவருடைய உடல் உயிரோடு கூடிய உடலன்று; அஃது எலும்பைத் தோலால் போர்த்த உடலாகும்.

வழியது-வழி நிற்பது (இங்கு வழி நிற்கும் உடல்); உயிர்நிலை-உயிர் நிலைத்திருக்கும் இடம், உடல்.80

அன்புக்கு அடைத்து வைக்கும் தாழ் எதுவும் உண்டோ? அன்புடையாரின் சிறு கண்ணீரே அவர் அன்பினைப் பலர் அறிய வெளிப்படுத்திவிடும்
அன்பில்லாதவர் எல்லாமே தமக்கு உரிமை என்று நினைப்பர்; அன்பு உடையவரோ தம் எலும்பையும் பிறருக்கு உரியதாக்கி மகிழ்வர் (௭௰௨)
அருமையான உயிருக்கு உடம்போடு பொருந்திய தொடர்பானது, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கைக்காகவே என்பர் சான்றோர் (௭௰௩)
அன்பானது பிறர்பால் ஆர்வம் உடையவராகும் பண்பைத் தரும் (௭௰௪)
இவ்வுலகத்திலே இன்பம் அடைந்தவர் அடையும் சிறப்பு, அவர் அன்புடையவராகப் பொருந்தி வாழ்ந்த வாழ்க்கையின் பயனே என்பர் (௭௰௫)
அறத்திற்கே அன்பு துணையாகும் என்று சொல்பவர் அறியாதவர்; ஆராய்ந்தால் மறச்செய்கைகளுக்கும் அன்பே துணையாயிருக்கும் (௭௰௬)
எலும்பில்லாத புழுப்பூச்சிகளை வெயில் காய்ந்து வருத்துவது போல, அன்பில்லாதவனை அறமானது காய்ந்து வருந்தச் செய்யும் (௭௰௭)
உள்ளத்திலே அன்பு இல்லாதவருடைய இல்வாழ்க்கையானது, வன்மையான பாலை நிலத்திலே காய்ந்த மரம் தளிர்த்தாற் போல நிலையற்றதாம் (௭௰௮)உள்ளத்தின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவருக்கு, கண்ணுக்குத் தெரியும் உடம்பின் பிற உறுப்புக்கள் எல்லாம் என்ன பயனைச் செய்யும்? (௭௰௯)உயிர்நிலை என்பது அன்பின் வழியாக அமைந்ததே; அஃது இல்லாதவருக்கு எலும்பைத் தோலால் போர்த்த உடம்பு மட்டுமேயாகும் (௮௰)


8. அன்புடைமை
உள்ளத்தில் அன்பு என்னும் பண்புடன் வாடிநடிநடிநடிநடிநவது.
1. அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாடிநடிநடிநடிநடிந? ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும்.
(ப-உ) அன்பிற்கும்- அன்புக்கும். அடைக்கும்தாடிந- அதைப்
பிறர் காணாமல் அடைத்து வைக்கும் தாடிநப்பாள். உண்டோஇருக்
கின்றதோ? ஆர்வலர்- அன்புள்ளவர்களின். புன்கண்நீர்-
சிறிய கண்ணீரே. பூசல் தரும்- உள்ளிருக்கும் அன்பை வெளிப்
படுத்தும்
(க-து) அன்புள்ளவரைக் காணும்போது அவர் விடும்
கண்ணீர் அன்பை வெளிப்படுத்தும்.
30 சாமி.சிதம்பரனார் நூற் களஞ்சியம் - 4 திருக்குறள் பொருள் விளக்கம் 31
(க-து) உள்ளத்திலே அன்பு இல்லாதவர்க்கு வெளி
உறுப்புக்களால் பயன் இல்லை.
10. அன்பின் வழியது உயிர்நிலை; அஃதுஇலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
(ப-உ) அன்பின் வழியது- அன்புநெறியில் வாடிநவதே. உயிர்
நிலை- உயிர் வாழும் உடம்பாகும். அஃது இலார்க்கு- அந்த அன்பு
இல்லாதவர்க்கு. உடம்பு- உடம்பானது. என்பு தோல் போர்த்தவெறு
ம் எலும்பைத் தோலால் மூடப்பட்ட வெற்றுடம்புதான்.
(க-து) அன்புள்ள உடம்பே உயிருள்ள உடம்பு;
அன்பில்லாத உடம்பு உயிர் இல்லாத உடம்பு.
9. விருந்து ஓம்பல்
விருந்தினரைப் பாதுகாப்பது.
1. இருந்துஓம்பி இல்வாடிநடிநடிநடிநடிநவது எல்லாம், விருந்துஓம்பி
வேளாண்மை செடீநுடீநுடீநுடீநுடீநுதல் பொருட்டு.
(ப-உ) இல்- வீட்டிலே. இருந்து ஓம்பி- இருந்து பொருள்
களைக் காப்பாற்றி. வாடிநவது எல்லாம்- இல்லறத்தில் வாடிநவ
தெல்லாம். விருந்து- விருந்தினரை. ஓம்பி- உபசரித்து. வேளாண்மைஉதவி
செடீநுதல். பொருட்டு - செடீநுவதற்கேயாம்.
(க-து) இல்லறத்தில் வாடிநவது விருந்தினரைக் காப்பாற்று
வதற்காகத்தான்.
2. விருந்து புறத்ததாத் தான்உண்டல், சாவா
மருந்துஎனினும், வேண்டல்பாற்று அன்று.
(ப-உ) விருந்து- விருந்தினர். புறத்ததுஆ- வெளியில் இருக்க.
தான் உண்டல்- தான் மட்டும் சாப்பிடுவது. சாவா மருந்து
எனினும் - அமுதமாயினும். வேண்டல்பாற்று அன்று- அது
விரும்புந்தன்மையுள்ளது அன்று.
(க-து) விருந்தினரை வெளியில் வைத்துவிட்டுத் தான்
மட்டும் உள்ளிருந்து உண்ணுதல் வெறுக்கத்தக்கது.
3. வருவிருந்து, வைகலும் ஓம்புவான் வாடிநடிநடிநடிநடிநக்கை,
பருவந்து பாடிநடிநடிநடிநடிநபடுதல் இன்று.
(க-து) அன்புடன் வாழும் வாடிநவின் பயனே- உலகில்
இன்புற்று வாடிநவோர் அடையும் சிறப்பாகும்.
6. அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்
மறத்திற்கு அஃதே துணை.
(ப-உ) அறியார்-அறியாதவர். அறத்திற்கே- அறத்திற்கு
மட்டுந்தான். அன்பு சார்பு- அன்பு துணையாகும். என்ப -
என்பார்கள். மறத்திற்கும்- பாவத்தை நீக்குவதற்கும். அஃதே
துணை- அந்த அன்பே துணையாகும்.
(க-து) தருமத்துக்கு அன்பு துணையாவதோடு, பாவத்தை
நீக்கவும் அதுவே துணையாகும்.
7. என்பு இலதனை வெயில்போலக் காயுமே
அன்பு இலதனை அறம்.
(ப-உ) என்பு இலதனை- எலும்பில்லாத புழுவை. வெயில்
போல- வெடீநுயில் சுடுவதுபோல. அன்பு இலதனை - அன்பு
இல்லாத உயிரை. அறம் காயும்ஏ- தருமம் துன்புறுத்தும். ஏஅசை.
(க-து) எலும்பில்லாத புழுக்களை வெயில் சுடுவது போல்,
அன்பில்லாத உயிர்களை அறம் துன்புறுத்தும்.
8. அன்புஅகத்து இல்லா உயிர்வாடிநடிநடிநடிநடிநக்கை வன்பாற்கண்
வற்றல் மரம்தளிர்த்து அற்று.
(ப-உ) அன்பு அகத்து இல்லா- அன்பு உள்ளத்தில்
இல்லாமல். உயிர் வாடிநக்கை- உயிர் வாழும் வாடிநவானது. வன்பால்
கண்- கடினமான பாலைநிலத்திலே. வற்றல் மரம்- பட்டுப்போன
மரம். தளிர்த்து அற்று- துளிர் விட்டதுபோல் ஆகும்.
(க-து) அன்பில்லாத வாடிநவு, பாலைவனத்தில் பட்ட மரம்
தளிர்த்ததுபோல் ஆகும்.
9. புறத்துஉறுப் பெல்லாம் எவன்செடீநுடீநுடீநுடீநுடீநுயும், யாக்கை
அகத்துஉறுப்பு அன்பில் அவர்க்கு.
(ப-உ) யாக்கை அகத்து உறுப்பு- உடம்பின் உள் அவயவ
மாகிய. அன்பு இல்அவர்க்கு- அன்பு இல்லாதவர்க்கு. புறத்து
உறுப்பு- வெளி அவயவங்கள். எல்லாம்- எல்லாம் இருந்தும்.
எவன் செடீநுயும்- என்ன பயன் உண்டு?



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard