பண்டைத் தமிழர்கள் புலால் உணவை வெறுக்கவில்லை; மது அருந்துவதை மறுக்கவும் இல்லை. பண்டை இலக்கியங்களிலே இவைகள் நிறைந்து கிடக்கின்றன, பழந் தமிழ்நாட்டு வள்ளல்கள், புலவர்கள், பொதுமக்கள் பெரும்பாலும் மாமிசமும், மதுவும் அருந்தியவர்கள் தாம். இவற்றைக் கைவிட்ட ஒரு சிலரும் இருந்தனர். மாமிசம் உண்போர் இரக்கம் அற்றவர்கள்; அருளற்றவர்கள்; என்ற கொள்கை பழந்தமிழ் நாட்டில், இல்லை. வள்ளுவர் காலத்திலே மாமிசத்தையும், மதுவையும் வெறுக்கும் கொள்கை தமிழகத்திலே பரவத் தொடங்கியது என்று கூறலாம். வள்ளுவரும், இவற்றை ஓரளவு ஓப்புக் கொண்டவர்தான். அனால் அவர் இவை யிரண்டைப் பற்றியும் பிரசாரம் செய்யும் முறை குறிப்பிடத் தக்கது.
இந்த மூன்று குறள்களும் புலால் மறுத்தல் என்னும் அதிகாரத்தில் உள்ளவை; இதில் முதற் குறளில் புலால் உணவு உடம்புக்கு வலிமை தரும் உணவு என்பதை வள்ளுவர் ஓத்துக் கொள்கிறார். “தன் உளன் பெருக்கற்கு” என்று சொல்லியிருப்பதே இதை விளக்கும். மாமிசம் உண்பவர்களுக்கு இரக்கம் இராது; அவர்கள் எண்ணம் நல்வழியிலே செல்லாது; புலால் உண்ணாதவர்களே இரக்கம் உள்ளவர்கள்; நல்ல நடத்தையிலே வாழ வேண்டும் என்னும் உள்ளம் உடையவர்களாயிருப்பர்; நல்ல காரியங்களையும் செய்வார்கள். இதுவே புலால் உண்ணக் கூடாது என்பதற்கு வள்ளுவர் கூறும்ம முதல் காரணம். யாருக்குப் புலால் கூடாது?
வள்ளுவர் சொல்லி விட்டார் என்பதற்காக இக்காரணம் சரியென்று சொல்லிவிட முடியாது. பண்டைக் காலத்திலும் சரி, இன்றும் சரி, மாமிசம் உண்டவர்கள் எல்லாம் கொடியவர் களாயிருந்தார்கள் கொடியவர்களாயிருக்கின்றார்கள். மாமிசம் உண்ணாதவர்கள் எல்லாம் அருள் நிரம்யிவர்களாயிருந்தார்கள்; இருக்கின்றார்கள் என்று சொல்லிவிட முடியாது. பண்டைத் தமிழகத்தில் இருந்த வள்ளல்கள் எல்லாம் மதுவும் மாமிசமும் அருந்தியவர்கள் தாம்; ஒளவையார், கபிலர் போன்ற அருந்தமிழ்ப் புலவர்கள் எல்லாம் மதுவும் மாமிசமும் உண்டாவர்கள் தாம்; இவர்கள் எல்லாரும் இரக்கம் அற்றவர்கள் அல்லர்; ஒழுக்கங் கெட்டவர்களளும் அல்லர். நமது நாட்டில் உள்ள அறநிலையங்கள் எல்லாம் மாமிசம் உண்ணாதவர்களால் தான் நிறுவப்பட்டன என்று சொல்ல முடியமா?
மாமிச உணவைக் கொண்டு ஒரு மனிதன் ஒழுக்கம் உள்ளவனா? ஓழுக்கம் அற்றவனா? இரக்கம் உள்ளவனா? இரக்கம் அற்றவனா? என்று முடிவு செய்வது தவறு. ஒரு மனிதனுடைய ஒழுக்கமும், மனப்பண்பும், அவனுடைய கல்வி யையும், அறிவையும், அவன் கொண்ட கொள்கையையும் பொறுத்தே அமைகின்றன.
எல்லாம் அறிந்த வள்ளுவர் இந்த உண்மையை அறியாதவரா? அறிந்திருந்தால் ஏன் மாமிச உணவை வெறுத்துப் பேச வேண்டும்? என்று கேட்கலாம், அவர் இவ்வுண்மையை அறிந்தவர் தான். அதனால் தான் புலால் மறுத்தலை, இல்லற தர்மங்களைப் பற்றி உரைக்கும் இடத்திலே சொல்லவில்லை. துறவறத்தைப் பற்றிச் சொல்லும்போது கூறுகிறார்.
துறவிகள் ஐம்புலன்களை அடக்கவேண்டும்; புலன் அசைகளுக்கு இடந்தரக் கூடாது; அதலால் கொழுப்புள்ள உணவு களை அவர்கள் குறைத்துக் கொள்ள வேண்டும். துறவிகள் கொழுத்திருப்பார்களானால் ஒழுக்க நெறியிலே நிற்பது கடினம். அவர்கள் உடற் கொழுப்பு அவர்களைத் தீயநெறியிலே தள்ளிவிடும். அதனால், துறவறத்திற்கு மாறான இரக்கம் அற்ற செய்கை களிலும் ஈடுபட்டு விடுவார்கள். இதனால் தான் துறவிகள் புலால் புசிக்கக் கூடாது என்று வலியுறுத்துகின்றார் வள்ளுவர்.
இவ்வுண்மையை உணராதவர்களே திருவள்ளுவர் புலால் புசிப்பதே கூடாது என்று கூறுகின்றார் என்று சொல்லுவார்கள்.
மதுவின் தீமை
அடுத்தது மதுபானம். மதுபானத்தால் அறிவு மயங்குவார்கள். அறிவு மயக்கத்தால் அடாத செயல்களை யெல்லாம் செய்வார்கள். அதலால் மதுபானம் கூடாது என்பதே வள்ளுவர் கொள்கை. கள்ளுண்ணாமை என்னும் அதிகாரத்திலே இதை விளக்கிக் கூறியிருக்கின்றார்.
இதுவே கள்ளுண்ணாமை என்னும் அதிகாரத்தில் உள்ள இறுதிக் குறள்.
இக்குறள் ஒரு உண்மையை நமக்கு உணர்த்துகின்றது. மக்கள் ஒன்றைத் தமையென்று உணர்ந்தால்தான் அதைக் கைவிடுவார்கள். அதலால் மதுபானத்தில் வரும் தீமையையும் இழிவையும் அவர்கள் உணரும்படி செய்ய வேண்டும். அப்பொழுதுதான் மதுவருந்தும் பழக்கம் மக்களிடையிலிருந்து மறையும். மதுவருந்தக்கூடாது என்று சட்டம் செய்வது; அருந்து வோர்க்கு அனுமதி யளிப்பது; என்ற சட்டமுறையால் மதுவைத் தடுத்துவிடமுடியாது. சட்டத்தால் தடுக்க முயற்சிப்பதைவிட, பிரசாரத்தாலேயே மதுவருந்துவதைக் தடுக்க முடியும். மது அருந்துவோர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும். இந்த உண்மையை வள்ளுவர் குறள் எடுத்துக் காட்டுகின்றது.
மாமிச உணவைப்பற்றியும், மதுவைப்பற்றியும் வள்ளுவர் கூறியிருக்கும் முறையைக்கொண்டு பார்த்தால் இவை இரண்டு பழக்கங்களும் அவர் காலத்தில் தமிழகத்திலே மிகுதியாகத்தான் இருந்தன. ஆகையால் இவை இரண்டையும் வெறுக்கும் அவர் இவைகளை வன்மையாகக் கண்டிக்க முடியவில்லை. மாமிச உணவு துறவிகளுக்குக் கூடாது; மதுபானம் அரசியலிலே ஈடுபட்டோர்க்குக் கூடாது என்று கூறுவதன் மூலமே பொது மக்களுக்கும் இவற்றைப் பற்றி எடுத்துரைத்தார். இவையிரண்டும் பழந் தமிழர் ஒழுக்கத்திற்கு மாறானவை தான். ஆயினும் வள்ளுவர் காலத்திலிருந்த அறிஞர்கள் இவற்றைத் தீமைகள் என்று எண்ணினர் வள்ளுவரும் அவர்கள் கருத்தை ஆதாரித்தார். காலத்திற்கேற்ப பழக்கவழக்கங்கள் மாறுபடுவது தவறல்ல என்பதும வள்ளுவர் கொள்கை.
மது, மாமிசத்தைப் பற்றிய வள்ளுவர் கொள்கை உலகோர் அனைவரும் ஒப்புக்கொள்ளும் கொள்கையென்று சொல்லிவிட முடியாது. இவற்றைப் பற்றி உலக மக்களிடம் கருத்து வேற்றுமை உண்டு.