வாழப் பிறந்தவர்கள் மக்கள். இவ்வுலகத்திலே இன் பத்துடன் வாழ்வதற்கு எல்லா மக்களுக்கும் இன்ப வாழ்வைப் பெறுவதற்கே எந்நாளும் முயற்சி செய்ய வேண்டும்; இன்ப வாழ்வுக்கு முட்டுக்கட்டைகளாக நின்று தடுப்பவை எவை யானாலும் சரி, அவைகளை அடியோடு களைந்தெறிய வேண்டும். முன்னேற்றத்திற்கான திட்டங்களை வகுத்துக் கொண்டு அவற்றை நிறைவேற்ற முயல வேண்டியது மக்கள் கடமை. இதுவே எக்காலத்திலும் அறிஞர்களால் ஆதரிக்கப்பட்டு வந்த கொள்கை.
“மக்கட் பிறவி துன்பத்திற்கு இடமானது; பாபத்தின் காரணமாகவே மக்களாகப் பிறந்திருக்கின்றனர்; மக்கள் பிறவி யிலே இன்பத்திற்கு இடமே இல்லை; முன்செய்த வினையே இப்பிறவிக்குக் காரணம்; தலைவிதிப்படி தான் எல்லாம் நடக்கும்; ஆதலால் ஒவ்வொருவரும் உழைப்பதை மட்டுமே கடமையாகக் கொள்ள வேண்டும்; உழைப்பின் பலனைப் பற்றிக் கவலை கொள்ளக்கூடாது;” என்று கூறுகின்றனர் சிலர். இக்கூற்று தனியுடைமைச் சமுதாயத்தின் உயிர் நாடியாகும். இக்கொள்கை யிலே மக்களுக்கு நம்பிக்கையிருந்தால் தான் தனியுடைமைச் சமுதாயம் நிலைத்து நிற்க முடியும். பகுத்தறிவு வாதிகள் - முற்போக்கு வாதிகள் - மனித சமுதாயத்தின் நல்வாழ்வை விரும்புவோர் இக்கொள்கையை ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.
வள்ளுவர் காலத்தில் இக்கருத்து நிலைத்திருந்தது; வள்ளுவர் இக்கருத்தை வெளிப்படையாக மறுக்கவில்லை. ஆனால் இக்கருத்தை அப்படியே ஒப்புக்கொண்டவர் என்று சொல்ல முடியாது. அவர் தமக்கே உரிய பாணியில் இக்கருத்துக்கு மாறாக உரைக்கின்றார். “மக்கள் இவ்வுலகிவே இன்பத்துடன் வாழ முடியும்; வாழ்வதற்கு முயலவேண்டும்.” என்பதை மிக நயமாக வலியுறுத்துகிறார்.
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்
இவ்வுலகிலே வாழ வேண்டிய முறைப்படி, அறநெறியிலே நின்று வாழ்கின்றவன் சிறந்தவன்; வானுலகில் உள்ள தெய்வத்தை மக்கள் எவ்வளவு உயர்வாக மதிக்கின்றார்களோ அவ்வளவு உயர்வாக அவன் இவ்வுலகிலே மதிக்கப்படுவான்.” (கு.50)
இக்குறளின் கருத்துப்படி, மக்கள் அனைவரும் இவ்வுலகிலே வாழவேண்டுமானால் இன்றுள்ள சமுதாய அமைப்பு இதற்கு இடம் தராது. செல்வமும் வசதியும் படைத்த சிலர் தாம் இவ்வாறு வாழ முடியும். இல்லாதவர், உள்ளவர், சுரண்டுகிறவர், சுரண்டப்படுகிறவர், ஏமாறுகின்றவர், ஏமாற்றப்படுகின்றவர் என்ற வேற்றுமைகள் வேரோடியிருக்கும் சமுதாயமே இன்றைய சமுதாயம். இச்சமுதாயத்திலே திருக்குறளுக்கு இலக்கியமாக எல்லோரும் எப்படி, வாழ முடியும்? இதுபோன்ற கருத்துள்ள குறட்பாக்கள் நமக்கு உணர்ச்சி யை ஊட்டுகின்றன. அறிவும், செல்வமும், நல்ல நடத்தையும், அன்பும், ஒற்றுமையும் கொழிக்கும் புதிய சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தை எழுப்புகின்றன.
கணவன் மனைவி
மணம் புரிந்துகொண்டு குடும்பமாக வாழ்வதே இந்த இல்லறம். இனிது நடைபெற வேண்டுமானால் கணவனுக்கும் மனைவிக்கும் ஒற்றுமையிருக்க வேண்டும். உள்ளத்திலே நடத்தையிலே பண்பிலே அவர்கள் ஒன்றுபட்டிருக்க வேண்டும்; ஒன்றுபட்ட தம்பதிகளின் வாழ்விலே தன் இன்பம் தழைக்கும். அமைதியை விரும்பும் கணவனும், அடம்பரத்தை விரும்பும் மனைவியும் ஒன்றுபட்டு வாழ முடியாது; குறைந்த வருமானமுள்ள கணவனும், ஊதாரித்தனத்திலே ஊன்றி நிற்கும் மனைவி யும் ஒன்றுபட்டு வாழமுடியாது; நற்குணங்கள் நிரம்பிய நங்கை யும், துர்க்குணங்கள் நிறைந்த கணவனும் சேர்ந்து வாழமுடியாது. இத்தகையவர்கள் ஒன்றாக்க் கூடி வாழ்ந்தாலும் அவர்கள் வாழ்க்கை போலி வாழ்க்கைத்தான். இன்பமற்ற இருண்ட வாழ்வாகத்தான் இருக்கும். வள்ளுவர் கூறும் அறிவுரைகளாவ் இவ்வுண்மையை உணரலாம்.
“மனைத்தக்க மாண்புடையள் ஆகித் தற்கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை
மனைவியிடம் இல்லறத்திற்கேற்ற சிறந்த குணங்கள் அமைந்திருக்க வேண்டும்; அவற்றுடன் குடும்ப வரவு செலவைக் கவனிக்கும் திறமையும் இருக்க வேண்டும்; கணவனுடைய வருமானத்தை அறிந்து அதற்குத் தகுந்தவாறு செலவு செய்யக் கூடிய அறிவும் வேண்டும்; அவளே சிறந்த மனைவி.” (கு. 57.) இவ்வாறு மனைவியின் இலக்கணத்தைக் கூறினார்
வள்ளுவர். மனைவிக்குச் சிறந்த குணங்கள் வேண்டும் என்பதை மேலும் வலியுறுத்துகின்றார்.
“மனைமாட்சி இல்லாள்கண் இல்ஆயின், வாழ்க்கை
எனைமாட்சித்து ஆயினும் இல்
இல்வாழ்க்கைக்கு ஏற்ற நல்ல பண்புகள் மனைவியிடம் இல்லாவிட்டால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புக்களை உடையவாயினும் பயன் இல்லை.” (ஞ..52)
இக்குறளிலே இல்வாழ்வு சிறந்து விளங்குவதற்கு மனைவி யின் நல்ல குணங்களே அடிப்படை என்று வலியுறுத்தினார். இதற்கு அடுத்த குறளிலே இதை இன்னும் அழுத்தம் திருத்த மாகக் கூறுகின்றார்.
“இல்லது என் இல்லவள் மாண்பு ஆனால்; உள்ளதுஎன்
இல்லவள் மாணாக் கடை.
மனைவி, சிறந்த குணங்களை உடையவளாக இருந்தால் அவளைப் பெற்ற கணவனுக்கு இல்லாத செல்வம் ஒன்றுமே யில்லை; மனைவி மாசுள்ளவளானால், அவளைப் பெற்ற கணவனுக்கு எவ்வளவு செல்வங்கள் இருந்தால் தான் என்ன? அவன் வாழ்விலே மகிழ்ச்சியும் இல்லை; இன்பமும் இல்லை.”(கூ.53) இச்செய்யுட்கள் வாழ்க்கைத்துணை நலம் என்ற அதிகாரத்தில் உள்ளவை. மனைவிக்கு வேண்டிய நல்ல குணங்களைப் பற்றியே இப்பத்துப் பாடல்களிலும் கூறப்படுகின்றன.
“தெய்வம் தொழா அள் கொழுநன் தொழுது எழுவான்
பெய்எனப் பெய்யும் மழை
வேறு தெய்வத்தை வணங்காமல், தன் கணவனையே தெய்வமாக வணங்கி, அவன் விழித்து எழுவதற்குமுன் தான் பிழித்து எழுகின்றவளே சிறந்த மனைவி; அவள் வானத்தைப் பார்த்து மழை பெய் என்று சொன்னால் பெய்யும்.” (ஞு.55)
இக்குறளும் வாழ்க்கைத் துணை நலம் என்னும் அதிகாரகத்தில் உள்ளதுதான்.
திருவள்ளுவர் காலத்தில் பெண்ணுக்கு உரிமையில்லை. அவர்கள் அண்களின் கட்டுப்பாட்டுக்கு அடங்கி நடக்கவேண்டியவர்களாகத்தான் இருந்தனர். கல்லானாலும் கணவன்/புல்லானாலும் புருஷன்; என்ற கொள்கை நிலை பெற்றிருந்த காலம் அது. அதலால் மனைனிவக்கு வேண்டிய சிறந்த குணங்களை மட்டும் வலியுறுத்திக் கூறினார்.
“மனைவியின் மாண்மைக் கூறுவதற்கு வாழ்க்கைத் துணை நலம் என்று ஒரு தனி அதிகாரம் வகுத்திருப்பதைப் போல கணவன் மாண்பைக் கூறத் தனி அதிகாரம் ஒன்றும் கூறப்படவில்லை. “இல்லதென் காதலன் மாணாக்கடை” என்று ஒரு குறள் கூடச் சொல்லப்படவில்லை. அதலால் வள்ளுவர் அண் பெண் சமத்துவத்தை ஒப்புக்கொள்ளவில்லை. அணுக்குப் பெண் அடங்கி வாழ வேண்டும் என்பதே அவர் கொள்கை. இக்கொள்கை பெண்ணுக்குப் பெருமையளிப்பது ஆகாது” என்று இவ்வாறு கூறுவோர் உண்டு.
இக் கருத்து தவறானது. வாழக்கைத் துணை நலம் என்னும் அதிகாரம் சிறப்பாகப் பெண்களுக்குக் கூறப் பட்டிருப்பது போல, பிறன் இல் விழையாமை, வரைவின மகளிர், என்னும் அதிகாரங்கள் அண்களுக்காகக் கூறப்பட்டி ருக்கின்றன. ஏனைய இல்லறவியல் அதிகாரங்கள் பெரும்பாலும் அண்கள் பின்பற்ற வேண்டிய அறங்களையே கூறுகின்றன. இவைகளை ஆழ்ந்து சிந்தித்தால் பெண்ணுக்கு வேண்டும் கட்டுப்பாடுகளும், நடத்தை களும் அணுக்கும் வேண்டும் என்பதே வள்ளுவர் கருத்தென் பதைக் காணலாம். பெண்களுக்குள்ள பொறுப்புக்களைவிட அண்களுக்குத்தான் பொறுப்பு அதிகம் என்பதை வள்ளுவர் வலியுறுத்துகின்றார்.
“கணவனும் மனைவியும் ஒத்துவாழ்வதே சிறந்த வாழ்வு. அவர்கள் இவ்வுலகில் இன்பமுடன் வாழ முயல வேண்டும; அதுவே உயர்ந்த வாழ்வாகும்” என்பதே இல்லறத்தைப் பற்றி வள்ளுவர் கொண்ட கருத்தாகும்.