திருவள்ளுவர் அண் பெண் சமத்துவத்தை விரும்பவில்லை: பெண்ணை இழிவாகவே எண்ணுகின்றார்; என்று கூறுவோர் உண்டு. பொருட்பாலிலே பெண் வழிச் சேறல் என்ற ஒரு அதிகாரம் உண்டு. அதில் உள்ள பத்துக் குறள்களும் பெண்களுக்கு அண்கள் அடிமைப்படக் கூடாது என்று வலியுறுத்து கின்றன. அவர்கள் சொல்லுவதுதான் சரியென்று நம்பி நடப்பவன் வாழ்விலே வெற்றிபெற மாட்டான் என்று இயம்புகின்றன.
“இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை, எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்”
மனைவியிடத்தில் தாழ்ந்து நடக்கும் இழிந்த தன்மை, ஒருவனுக்கு எப்பொழுதும் நல்லவர்கள் கூட்டத்தில் இருக்கும் போது நாணத்தையே உண்டாக்கும்” (கு.903)
“இல்லாளை அஞ்சுவான் அஞ்சும் மற்று எஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்”
தன் மனைவிக்கு அஞ்சுகின்றவன் நல்லவர்களுக்கு நன்மை செய்வதற்குக் கூட எந்நாளும் அஞ்சுவான்.” (ஞ.905)
செய்திகளைப் பற்றியும் சொல்லுவதே பொருட்பால் அரசியலிலும், பொதுக் காரியங்களிலும் பெண்கள் ஆலோசனை கூறத் தகுதியற்றவர்கள் என்பதே வள்ளுவர் கருத்தாகக் கொள்ள வேண்டும்.
வள்ளுவர் காலத்திலே பெண்கள் கல்வி கற்காதவர்களா யிருந்தனர்; இல்லறத்திற்குரிய கடமைகளைச் செய்வதற்கே அவர்களுக்கு நேரம் இருந்தது; அரசியலிலோ, பொதுக் காரியங்களிலோ அவர்கள் தலையிடுவதில்லை. அகையால்தான் அரசியலைப் பற்றியோ, பொதுப் பணிகளைப் பற்றியோ அலோசனை கூறும் திறமை அவர்களுக்கு இல்லை. இக்காரணங்களால் தான் கணவன் தன் மனைவியின் சொல்லுக்கு அடிமையாகக்கூடாது. பெண்ணை இழிவு படுத்தினார் என்று உரைப்பது தவறாகும்.
பெண்ணடிமை
பண்டைத் தமிழ் நூலாசிரியர்களிலே பெண்கள் நிலையை உயர்த்துவதற்கு வழி கோலியவர்களில் திருவள்ளுவரே துலைமையானவார். அறத்துப் பாலையும், ஏனைய பால்களையும் ஆழ்ந்து படிப்போர் இவ்வுண்மையைக் காண்பார்.
திருவள்ளுவர் காலத்திற்கு முன்பு தமிழர் சமுதாய நிலை எப்படி யிருந்தது? இல்லறத்திலே வாழ்ந்தவர்கள் எப்படி வாழ்ந்தனர்? சிறப்பாக அண்களும் பெண்களும் எத்தகைய உரிமையைப் பெற்றிருந்தனர்? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். திருவள்ளுவர் அண் பெண் உரிமைகளைப் பற்றி என்ன கூறுகின்றார் என்பதையும் அராய்ந்து பார்க்க வேண்டும். இவைகளைக் கண்டறிந்தால் வள்ளுவரின் முற்போக்கான கருத்தை அறியலாம். வள்ளுவரை ஒரு சமுதாயப் புரட்சிக்காரர் என்று கூடச் சொல்ல முடியும்.
வள்ளுவர் காலத்திலும், அவர் காலத்துக்கு முன்னும் இந்நாட்டில் பெண்கள் அடக்கப்பட்டுத்தான் கிடந்தனர். அண்களுக்குத்தான் எல்லா உரிமைகளும் இருந்தன. பெரும்பாலும் பெண்கள் ஆண்களின் இன்பக்கருவிகளாகத்தான் கருதப் பட்டார்கள். பெண்களுக்குத் தான் கற்பு வேண்டும் என்பதைப் பற்றிக் கவலை காட்டியவர்களே இல்லை. இந்நிலைமை தோன்றியதற்குக் காரணம் பெண்கள் வீட்டிலே அடக்கப்பட்டுக் கிடந்தார்கள். ஆண்களே இல்லறத்தை நடத்துவதற்கு வேண்டிய பண்டங்களைத் தேடக்கூடிய உரிமை பெற்றிருந்தார்கள். செல்வம் தேடுவதும், சிறப்பாக இல்லறத்தை நடத்துவதற்கு உதவுவதும்,
அண்களின் பொறுப்பாக இருந்தது. இந்த நிலை ஏற்பட்டபிறகு தான் பெண்கள் உரிமையிழந்த அடிமைகள் அனார்கள்; அண்கள் அவர்களை அஞளும் தலைவரானார்கள்.
ஒரு ஆண்மகன் பல பெண்களை மணந்து கொள்ளலாம்; மணந்து கொண்ட மனைவியைத் தவிர வேறு பல பெண் களையும் வைப்பாட்டிகளாக வைத்துக் கொள்ளலாம்; இவர் களைத் தவிர பரத்தையர், கணிகையர், வரைவின் மகளிர், விலை மாதர், பொது மகளிர் என்ற பெயர்களைக் கொண்ட வேசையர்களுடன் கூடியும் வாழலாம்; பெண்கள் மட்டும் ஒருவனைப் பற்றி ஓர் அகத்திலே யிருந்துதான் வாம வேண்டும்.
இது வள்ளுவர்க்கு முன்னிருந்த சமுதாயம் அமைப்பு. இந்த நாகரிகத்தைச் சங்க இலக்கியங்களிலே காணலாம்.
மனைவிமார்கள் காதற் கிழத்தியர்; வைப்பாட்டி மார்கள் காதற் பரத்தையர்; வேசையர்கள் சேரிப் பரத்தையர்; என்று பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன.
சமநீதி
அண்களின் இத்தகைய அநீதியான செய்லகளை வள்ளுவர் அதரிக்கவில்லை. ஒருவன் பல பெண்களை மணப்பது கூட வள்ளுவர் விரும்பாத செய்தி. வாழ்க்கைத் துணை நலம் என்ற அதிகாரத்தில் மனைவியைக் குறித்து வரும்சொற்கள் ஒருமையில் தான் இருக்கின்றன. “மாண்புடையாள்; வளத்தக்காள்; இல்லாள்; இல்லவள்; பெண்ணின்; தொழுது எழுவாள்; பெண்; புகழ் மிகுநத இல்; மனை; என்ற சொற்களே அப்பாடல்களில் வருகின்றன. இவைகள் ஒருமைச் சொற்கள், இதனால் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையே வள்ளுவர் கருத்தென்று தெரியலாம்.
வரைவின் மகளிர் என்ற அதிகாரம் பொருட்பாலில் அமைந்திருக்கின்றது. இவ்வதிகாரம், அறத்துப் பாலில் இல்லறவியலில் அமைந்திருந்தால் மிகவும் பொருத்தமாகும். இவ்வதிகாரத்திலே அண்கள் பரத்தையருடன் கூடி மகிழ்வதைக் கண்டிக்கிறார். அண்களுக்கு அறிவுரை கூறும் முறையில் தான் இவ்வதிகாரத்தில் உள்ள குறள்கள் அமைந்திருக்கின்றன; அதிகார முறையில் அறிவுறுத்துவனவாக இல்லை. வள்ளுவர் காலத்தில் இருந்த நிலைமையைக் கருதியே அவர் இவ்வாறு கூறினார்.
அறத்தின் வழியிலே நின்று இல்வாழ்க்கை நடத்து கின்றவன் யார் என்றால் பிறன் மனைவியின் பெண் தன்மையை விரும்பாதவனேயாவான்” (கு.150)
இவ்வாறே பிறனில் விழையாமையில் உள்ள பத்து வெண்பாக்களிலும் அறிவுரை காணப்படுகின்றன. தன் கணவனைத் தவிர வேறு அடவனை விரும்பாத பெண்ணே கற்புள்ளவன்/அதுபோலத் தன் மானைவியைத் தவிர வேறு பெண்ணை விரும்பாத அண் மகனே ஒழுக்கம் உள்ளவன்; கற்புள்ளவன்; என்று கூறுவதே இவ்வதிகாரத்தின் கருத்தாகும்.
ஆணெல்லாம் கற்பை விட்டுத் தவறு செய்தால்
அப்போது பெண்மையும் கற்பழிந்திடாதோ
என்று பாரதியார் கேட்கின்றார். இது வள்ளுவர் கருத்தின் விளக்கம் என்றால் அதில் தவறில்லை.
பலதார மணத்திற்கு எதிராக ஏகதார மணத்தைக் குறிப்பாக உரைத்தல், வரைவில் மகளிர் கூட்டுறவை வெறுத்தல், பிறனில் விழையாமையை வலியுறுத்தல், பரத்தையிற் பிரிவு கூறப்படாமை இவைகள் எல்லாம் வள்ளுவரின் முற்போக்கான கொள்கையைக் காட்டும். முன்னோர் முறைக்கு மாறாக ஏகதார மணத்தைக் குறிப்பதும் வேசியர் உறவை வெறுத்திருப்பதும் அக்காலத்திலே வள்ளுவர் காட்டிய புதிய வழியாகும். அணுக்கொரு நீதி பெண்ணுக்கொரு நீதி என்ற அநீதியை அவர் ஒப்புக்கொள்ளவில்லை. பெண் இனத்தை அவர் இழிவான எண்ணவில்லை; பெருமையாகவே போற்றுகின்றார்.
“கணவனது வருமானத்திற்கு ஏற்றவாறு செலவு செய்ய அறிந்திருக்க வேண்டும் மனைவி” என்று வள்ளுவர் கூறியிருக்கின்றார். “வளத்தக்காள்' என்ற சொற்றொடரால் இதைக் குறிக்கின்றார். இதனால் பெண்களுக்குக் கல்வியறிவு வேண்டும்