Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆண்‌ பெண்‌ சமத்துவம்‌


Guru

Status: Offline
Posts: 7471
Date:
ஆண்‌ பெண்‌ சமத்துவம்‌
Permalink  
 


ஆண்‌ பெண்‌ சமத்துவம்‌

மனைவி சொற்கேட்டல்‌

திருவள்ளுவர்‌ அண்‌ பெண்‌ சமத்துவத்தை விரும்பவில்லை: பெண்ணை இழிவாகவே எண்ணுகின்றார்‌; என்று கூறுவோர்‌ உண்டு. பொருட்பாலிலே பெண்‌ வழிச்‌ சேறல்‌ என்ற ஒரு அதிகாரம்‌ உண்டு. அதில்‌ உள்ள பத்துக்‌ குறள்களும்‌ பெண்‌களுக்கு அண்கள்‌ அடிமைப்படக்‌ கூடாது என்று வலியுறுத்து கின்றன. அவர்கள்‌ சொல்லுவதுதான்‌ சரியென்று நம்பி நடப்பவன்‌ வாழ்விலே வெற்றிபெற மாட்டான்‌ என்று இயம்புகின்றன.

“இல்லாள்கண்‌ தாழ்ந்த இயல்பின்மை, எஞ்ஞான்றும்‌

நல்லாருள்‌ நாணுத்‌ தரும்‌”

மனைவியிடத்தில்‌ தாழ்ந்து நடக்கும்‌ இழிந்த தன்மை, ஒருவனுக்கு எப்பொழுதும்‌ நல்லவர்கள்‌ கூட்டத்தில்‌ இருக்கும்‌ போது நாணத்தையே உண்டாக்கும்‌” (கு.903)

“இல்லாளை அஞ்சுவான்‌ அஞ்சும்‌ மற்று எஞ்ஞான்றும்‌

நல்லார்க்கு நல்ல செயல்‌”

தன்‌ மனைவிக்கு அஞ்சுகின்றவன்‌ நல்லவர்களுக்கு நன்மை செய்வதற்குக்‌ கூட எந்நாளும்‌ அஞ்சுவான்‌.” (ஞ.905)

“அறவிளையும்‌, ஆன்ற பொருளும்‌, பிறவிளையும்‌

பெண்‌ ஏவல்‌ செய்வார்கண்‌ இல்‌”

அறத்தைச்‌ செய்தலும்‌, சிறந்த செல்வத்தைச்‌ சேர்த்தலும்‌ இவ்விரண்டின்‌ வேறான செயல்களும்‌ தம்‌ மனைவியின்‌ ஏவலைச்‌ செய்வாரிடம்‌ இல்லை. (க.909) இவ்வாறே பத்துக்‌ குறள்களிலும்‌ அண்‌ மகன்‌ தனக்கென்று ஒரு கொள்கையும்‌ இல்லாமல்‌ பெண்ணடிமையாவதை வெறுத்துக்‌ கூறப்படுகின்றன. “பெண்‌ வழிச்‌ சேறல்‌” என்னும்‌ அதிகாரத்தில்‌ கூறப்படுவன அண்‌ மகனுக்கு உரைக்கும்‌ அறிவுரைகள்‌. பெண்ணைப்‌ பழிப்பது அன்று. இவ்வதிகாரம்‌ பொருட்பாலில்‌ இருப்பதும்‌ குறிப்பிடத்தக்கது. அரசியல்‌ பற்றியும்‌, பொதுச்‌

செய்திகளைப்‌ பற்றியும்‌ சொல்லுவதே பொருட்பால்‌ அரசியலிலும்‌, பொதுக்‌ காரியங்களிலும்‌ பெண்கள்‌ ஆலோசனை கூறத்‌ தகுதியற்றவர்கள்‌ என்பதே வள்ளுவர்‌ கருத்தாகக்‌ கொள்ள வேண்டும்‌.

வள்ளுவர்‌ காலத்திலே பெண்கள்‌ கல்வி கற்காதவர்களா யிருந்தனர்‌; இல்லறத்திற்குரிய கடமைகளைச்‌ செய்வதற்கே அவர்களுக்கு நேரம்‌ இருந்தது; அரசியலிலோ, பொதுக்‌ காரியங்‌களிலோ அவர்கள்‌ தலையிடுவதில்லை. அகையால்தான்‌ அரசியலைப்‌ பற்றியோ, பொதுப்‌ பணிகளைப்‌ பற்றியோ அலோசனை கூறும்‌ திறமை அவர்களுக்கு இல்லை. இக்காரணங்களால்‌ தான்‌ கணவன்‌ தன்‌ மனைவியின்‌ சொல்லுக்கு அடிமையாகக்கூடாது. பெண்ணை இழிவு படுத்தினார்‌ என்று உரைப்பது தவறாகும்‌.

பெண்ணடிமை

பண்டைத்‌ தமிழ்‌ நூலாசிரியர்களிலே பெண்கள்‌ நிலையை உயர்த்துவதற்கு வழி கோலியவர்களில்‌ திருவள்ளுவரே துலைமையானவார்‌. அறத்துப்‌ பாலையும்‌, ஏனைய பால்களையும்‌ ஆழ்ந்து படிப்போர்‌ இவ்வுண்மையைக்‌ காண்பார்‌.

திருவள்ளுவர்‌ காலத்திற்கு முன்பு தமிழர்‌ சமுதாய நிலை எப்படி யிருந்தது? இல்லறத்திலே வாழ்ந்தவர்கள்‌ எப்படி வாழ்ந்தனர்‌? சிறப்பாக அண்களும்‌ பெண்களும்‌ எத்தகைய உரிமையைப்‌ பெற்றிருந்தனர்‌? என்பதை எண்ணிப்‌ பார்க்க வேண்டும்‌. திருவள்ளுவர்‌ அண்‌ பெண்‌ உரிமைகளைப்‌ பற்றி என்ன கூறுகின்றார்‌ என்பதையும்‌ அராய்ந்து பார்க்க வேண்டும்‌. இவைகளைக்‌ கண்டறிந்தால்‌ வள்ளுவரின்‌ முற்போக்கான கருத்தை அறியலாம்‌. வள்ளுவரை ஒரு சமுதாயப்‌ புரட்சிக்காரர்‌ என்று கூடச்‌ சொல்ல முடியும்‌.

வள்ளுவர்‌ காலத்திலும்‌, அவர்‌ காலத்துக்கு முன்னும்‌ இந்நாட்டில்‌ பெண்கள்‌ அடக்கப்பட்டுத்தான்‌ கிடந்தனர்‌. அண்‌களுக்குத்தான்‌ எல்லா உரிமைகளும்‌ இருந்தன. பெரும்பாலும்‌ பெண்கள்‌ ஆண்களின்‌ இன்பக்கருவிகளாகத்தான்‌ கருதப்‌ பட்டார்கள்‌. பெண்களுக்குத்‌ தான்‌ கற்பு வேண்டும்‌ என்பதைப்‌ பற்றிக்‌ கவலை காட்டியவர்களே இல்லை. இந்நிலைமை தோன்றியதற்குக்‌ காரணம்‌ பெண்கள்‌ வீட்டிலே அடக்கப்பட்டுக்‌ கிடந்தார்கள்‌. ஆண்களே இல்லறத்தை நடத்துவதற்கு வேண்டிய பண்டங்களைத்‌ தேடக்கூடிய உரிமை பெற்றிருந்தார்கள்‌. செல்வம்‌ தேடுவதும்‌, சிறப்பாக இல்லறத்தை நடத்துவதற்கு உதவுவதும்‌,

அண்களின்‌ பொறுப்பாக இருந்தது. இந்த நிலை ஏற்பட்டபிறகு தான்‌ பெண்கள்‌ உரிமையிழந்த அடிமைகள்‌ அனார்கள்‌; அண்கள்‌ அவர்களை அஞளும்‌ தலைவரானார்கள்‌.

ஒரு ஆண்மகன்‌ பல பெண்களை மணந்து கொள்ளலாம்‌; மணந்து கொண்ட மனைவியைத்‌ தவிர வேறு பல பெண்‌ களையும்‌ வைப்பாட்டிகளாக வைத்துக்‌ கொள்ளலாம்‌; இவர்‌ களைத்‌ தவிர பரத்தையர்‌, கணிகையர்‌, வரைவின்‌ மகளிர்‌, விலை மாதர்‌, பொது மகளிர்‌ என்ற பெயர்களைக்‌ கொண்ட வேசையர்களுடன்‌ கூடியும்‌ வாழலாம்‌; பெண்கள்‌ மட்டும்‌ ஒருவனைப்‌ பற்றி ஓர்‌ அகத்திலே யிருந்துதான்‌ வாம வேண்டும்‌.

இது வள்ளுவர்க்கு முன்னிருந்த சமுதாயம்‌ அமைப்பு. இந்த நாகரிகத்தைச்‌ சங்க இலக்கியங்களிலே காணலாம்‌.

மனைவிமார்கள்‌ காதற்‌ கிழத்தியர்‌; வைப்பாட்டி மார்கள்‌ காதற்‌ பரத்தையர்‌; வேசையர்கள்‌ சேரிப்‌ பரத்தையர்‌; என்று பழந்தமிழ்‌ நூல்கள்‌ கூறுகின்றன.

சமநீதி

அண்களின்‌ இத்தகைய அநீதியான செய்லகளை வள்ளுவர்‌ அதரிக்கவில்லை. ஒருவன்‌ பல பெண்களை மணப்பது கூட வள்ளுவர்‌ விரும்பாத செய்தி. வாழ்க்கைத்‌ துணை நலம்‌ என்ற அதிகாரத்தில்‌ மனைவியைக்‌ குறித்து வரும்சொற்கள்‌ ஒருமையில்‌ தான்‌ இருக்கின்றன. “மாண்புடையாள்‌; வளத்தக்‌காள்‌; இல்லாள்‌; இல்லவள்‌; பெண்ணின்‌; தொழுது எழுவாள்‌; பெண்‌; புகழ்‌ மிகுநத இல்‌; மனை; என்ற சொற்களே அப்‌பாடல்களில்‌ வருகின்றன. இவைகள்‌ ஒருமைச்‌ சொற்கள்‌, இதனால்‌ ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையே வள்ளுவர்‌ கருத்தென்று தெரியலாம்‌.

வரைவின்‌ மகளிர்‌ என்ற அதிகாரம்‌ பொருட்பாலில்‌ அமைந்திருக்கின்றது. இவ்வதிகாரம்‌, அறத்துப்‌ பாலில்‌ இல்லறவியலில்‌ அமைந்திருந்தால்‌ மிகவும்‌ பொருத்தமாகும்‌. இவ்‌வதிகாரத்திலே அண்கள்‌ பரத்தையருடன்‌ கூடி மகிழ்வதைக்‌ கண்டிக்கிறார்‌. அண்களுக்கு அறிவுரை கூறும்‌ முறையில்‌ தான்‌ இவ்வதிகாரத்தில்‌ உள்ள குறள்கள்‌ அமைந்திருக்கின்றன; அதிகார முறையில்‌ அறிவுறுத்துவனவாக இல்லை. வள்ளுவர்‌ காலத்தில்‌ இருந்த நிலைமையைக்‌ கருதியே அவர்‌ இவ்வாறு கூறினார்‌.

“அன்பின்‌ விழையார்‌, பொருள்‌ விழையும்‌ ஆய்தொடியார்‌

இன்சொல்‌, இழுக்குத்‌ தரும்‌.

வேசையர்கள்‌ அன்பினால்‌ விரும்பமாட்டார்கள்‌/பொருள்‌ காரணமாகவே அப்பொதுமகளிர்‌ விரும்புவார்கள்‌; அவர்கள்‌ பேசும்‌ இனிய மொழிகளால்‌ நன்மையில்லை; துன்பத்‌ தான்‌ உண்டாகும்‌” (ஞ..91)

“பொருட்பெண்டிர்‌ பொய்ம்மை முயக்கம்‌, இருட்டு அறையில்‌

ஏதில்‌ பிணம்‌ தழீஇ அற்று.

பொருளையே விரும்பும்‌ பொது மகளிரின்‌ பொய்யன்‌போடு கூடிய தழுவல்‌, ஒரு இருட்டு அறையிலே ஒரு அநாதைப்‌ பிணத்தைத்‌ தழுவிக்கொண்டதைப்‌ போல ஆகும்‌” (க.813)

வரைவுஇலா மாண்‌ இழையார்‌ மெல்தோள்‌, புரையிலாப்‌

பூரியர்கள்‌ ஆழும்‌ அளறு.

யாரையும்‌ மணந்து கொள்ளாத பொது மகளிரின்‌ மெல்லிய தோள்கள்‌, பெருமையற்ற அற்பர்கள்‌ விழுந்து முழுகிக்‌ கிடக்கின்ற நரகமாகும்‌” (ஞெ. 919)

வரைவின்‌ மகளிர்‌ என்ற அதிகாரத்தில்‌ உள்ள பத்து வெண்‌ பாக்களும்‌ இவ்வாறே அறிவுரை கூறுகின்றன, (வரைவு இல்மகளிர்‌ - வரைவின்‌ மகளிர்‌; மணமாகாத மாதர்கள்‌.)

ஆண்களுக்கும்‌ கற்பு

அறத்துப்பாலில்‌ இல்லறவியலில்‌ உள்ள பிறனில்‌ பிழையாமை என்னும்‌ அதிகாரமும்‌ குறிப்பிடத்தக்கது. பெண்ணைப்‌ போலவே அண்‌ மகனும்‌ கற்பு நெறியைப்‌ பின்பற்ற வேண்டும்‌; விபசாரம்‌ செய்யும்‌ பெண்களை உலகத்தார்‌ எள்ளி நகைப்பது போலவே விபசாரம்‌ செய்யும்‌ அண்களையும்‌ அவமதிப்பார்கள்‌. இதுவே இவ்வதிகாரத்தின்‌ திரண்ட பொருள்‌.

“பதை, பாவம்‌, அச்சம்‌, பறி என நான்கும்‌ 

இகவா ஆம்‌, இல்‌ இறப்பான்‌ கண்‌ பகை, பாவம்‌, அச்சம்‌, பழி என்று சொல்லப்படும்‌ இந்த நான்கு குற்றங்களும்‌ பிறன்‌ மனைவியிடம்‌ நெறி தவறி நடப்பவனை விட்டு நீங்கமாட்டா; அவனோடு எப்பொழுது நிலைத்து நிற்கும்‌” (கு.746)

“அறன்‌ இயலான்‌ இல்வாழ்வான்‌ என்பான்‌, பிறன்‌ இயலாள்‌

பெண்மை நயவா தவன்‌

அறத்தின்‌ வழியிலே நின்று இல்வாழ்க்கை நடத்து கின்றவன்‌ யார்‌ என்றால்‌ பிறன்‌ மனைவியின்‌ பெண்‌ தன்மையை விரும்பாதவனேயாவான்‌” (கு.150)

இவ்வாறே பிறனில்‌ விழையாமையில்‌ உள்ள பத்து வெண்‌பாக்களிலும்‌ அறிவுரை காணப்படுகின்றன. தன்‌ கணவனைத்‌ தவிர வேறு அடவனை விரும்பாத பெண்ணே கற்புள்ளவன்‌/அதுபோலத்‌ தன்‌ மானைவியைத்‌ தவிர வேறு பெண்ணை விரும்பாத அண்‌ மகனே ஒழுக்கம்‌ உள்ளவன்‌; கற்புள்ளவன்‌; என்று கூறுவதே இவ்வதிகாரத்தின்‌ கருத்தாகும்‌.

ஆணெல்லாம்‌ கற்பை விட்டுத்‌ தவறு செய்தால்‌

அப்போது பெண்மையும்‌ கற்பழிந்திடாதோ

என்று பாரதியார்‌ கேட்கின்றார்‌. இது வள்ளுவர்‌ கருத்தின்‌ விளக்கம்‌ என்றால்‌ அதில்‌ தவறில்லை.

பலதார மணத்திற்கு எதிராக ஏகதார மணத்தைக்‌ குறிப்பாக உரைத்தல்‌, வரைவில்‌ மகளிர்‌ கூட்டுறவை வெறுத்தல்‌, பிறனில்‌ விழையாமையை வலியுறுத்தல்‌, பரத்தையிற்‌ பிரிவு கூறப்படாமை இவைகள்‌ எல்லாம்‌ வள்ளுவரின்‌ முற்போக்கான கொள்கையைக்‌ காட்டும்‌. முன்னோர்‌ முறைக்கு மாறாக ஏகதார மணத்தைக்‌ குறிப்பதும்‌ வேசியர்‌ உறவை வெறுத்திருப்பதும்‌ அக்காலத்திலே வள்ளுவர்‌ காட்டிய புதிய வழியாகும்‌. அணுக்‌கொரு நீதி பெண்ணுக்கொரு நீதி என்ற அநீதியை அவர்‌ ஒப்புக்கொள்ளவில்லை. பெண்‌ இனத்தை அவர்‌ இழிவான எண்ணவில்லை; பெருமையாகவே போற்றுகின்றார்‌.

“கணவனது வருமானத்திற்கு ஏற்றவாறு செலவு செய்ய அறிந்திருக்க வேண்டும்‌ மனைவி” என்று வள்ளுவர்‌ கூறியிருக்‌கின்றார்‌. “வளத்தக்காள்‌' என்ற சொற்றொடரால்‌ இதைக்‌ குறிக்கின்றார்‌. இதனால்‌ பெண்களுக்குக்‌ கல்வியறிவு வேண்டும்‌

என்பதே வள்ளுவர்‌ கருத்தாகும்‌.

கல்வியைப்பற்றி அவர்‌ கூறும்‌ கருத்துக்களும்‌, அண்‌களுக்கும்‌, பெண்களுக்கும்‌ பொதுவாகவே அமைந்திருக்கின்றன. 

இவைகள்‌ எல்லாம்‌ வள்ளுவர்‌ பெண்களிடம்‌ கொண்ட மதிப்பையே காட்டும்‌; அவர்‌ அணும்‌ பெண்ணும்‌ சமம்‌ என்று கருதுகிறார்‌ என்பதையே காட்டும்‌.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard