Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: துறவறத்தின்‌ நோக்கம்‌


Guru

Status: Offline
Posts: 7467
Date:
துறவறத்தின்‌ நோக்கம்‌
Permalink  
 


துறவறத்தின்‌ நோக்கம்‌

இல்லறம்‌ தோன்றி நிலைத்த நெடுங்காலத்திற்குப்‌ பின்பு தான்‌ துறவறம்‌ தோன்றிற்று. இவ்வுலகிலே இன்பம்‌ இல்லை. இறந்தபின்‌ நாம்‌ அடையும்‌ உலகம்‌ வேறு அவ்வுலகிலே இன்பம்‌ நுகர வேண்டுமானால்‌ இவ்வுலக இன்பத்தைத்‌ துறக்கவேண்டும்‌; இவ்வுலக இன்பத்தை வெறுத்து இறைவனை நோக்கி தவம்புரிய வேண்டும்‌. தவந்தான்‌ அடுத்த பிறவியிலே செல்வத்தைத்தரும்‌; செல்வராகப்‌ பிறந்து சிறந்த இன்பங்களைச்‌ சுவைக்கலாம்‌ இப்பொழுது செல்வமும்‌ செல்வாக்கும்‌ பெற்று வாழ்‌கின்றவர்கள்‌ எல்லாம்‌ சென்ற பிறவியிலே சிறந்த தவத்தைச்‌ செய்தவர்கள்‌; தவம்‌ செய்யாதவர்களே இன்று வறியவர்களாய்‌ வாழ்கின்றனர்‌. அதலால்‌ துறவு பூண்டு தவம்புரிய வேண்டும்‌. இதுவே துறவறத்தைப்‌ பற்றிப்‌ பிற்காலத்தினர்‌ கொண்ட கருத்தாகும்‌.

துறவை வலியுறுத்தும்‌ பிற்காலத்து நூல்கள்‌ எல்லாம்‌ இக்கருத்தைத்தான்‌ கொண்டிருக்கின்றன. வள்ளுவர்‌ கூறும்‌ துறவறமும்‌ பெரும்பாலும்‌ இக்கருத்துக்களையே தாங்கி நிற்கின்றது. அனால்‌ பண்டைக்‌ காலத்து மக்கள்‌ துறவறத்தைப்‌ பற்றிக்கொண்டி ருந்த கருத்து வேறானது.

மனைவி மக்களைத்‌ துறந்து காட்டிலோ மலையிலோ சென்று தனித்துறையும்‌ துறவற வாழ்க்கை பண்டைக்காலத்தில்‌ இல்லை. காம உணர்ச்சி மறைந்து போன கடைசிக்காலத்தில்‌ தான்‌ - இல்லற இன்பத்தைப்‌ பரிபூரணமாக அனுபவித்த பிறகு தான்‌? துறவறத்தை மேற்கொள்வர்‌. கணவனும்‌ மனைவியும்‌ தம்மைப்‌ பாதுகாக்கும்‌ மக்களோடும்‌, நன்நெறியிலே ஓழுகும்‌ சுற்றத்தாரோடும்‌ சேர்ந்து வாழ்ந்து சிறந்த செயல்களைச்‌ செய்வார்கள்‌; இது தான்‌ இல்வாழ்க்கையின்‌ பிறகு பின்பற்றப்‌ படும்‌ துறவற வாழ்வு.

“காமம்‌ சான்ற கடைக்கோள்‌ காலை,

ஏமம்‌ சான்ற மக்களளொடு துவன்றி.

அறம்புரி சுற்றமொடு, கிழவனும்‌ கிழத்தியும்‌

சிறந்தது பமிற்றல்‌ இறந்ததன்‌ பயளே”

என்பது தொல்காப்பியம்‌ (தொல்‌, பொருள்‌ புறத்திணை.51)

இதுவே பண்டைத்‌ தமிழர்கள்‌ பின்பற்றி வந்த துறவொழுக்கம்‌. இதனால்‌, தந்தலந்‌ துறந்து, பிறர்‌ நன்மைக்காகப்‌ பணி செய்யும்‌ தூய வாழ்வே துறவறம்‌ என்பதைக்‌ காணலாம்‌. திருவள்ளுவர்‌ கூறுவது இத்தகைய துறவறம்‌ அன்று.

துறவறத்தைவிட இல்லறமே சிறந்தது என்ற கருத்துள்ளவர்‌ வள்ளுவர்‌. அதலால்‌ தான்‌ முதலில்‌ இல்லறத்தைப்‌ பற்றிக்‌ கூறினார்‌. இல்லறத்தை ஒழுங்காக நடத்தினால்‌ போதும்‌; துறவறத்தால்‌ அடையும்‌ பயனையும்‌ இல்லறத்திலேயே பெற்று விடலாம்‌; என்று வள்ளுவர்‌ கூறியிருக்கின்றார்‌. இல்லறத்தார்‌ நன்றாக வாழ்ந்தால்தான்‌ துறவிகளும்‌ வாழமுடியும்‌ என்பதே வள்ளுவர்‌ கருத்து. இக்‌ கருத்துக்களையெல்லாம்‌ இல்லறவியலிலே காணலாம்‌.

வள்ளுவர்‌ காலத்திலே இந்நாட்டில்‌ எத்தனையோ மூடநம்பிக்கைகள்‌ வலுப்பெற்றிருந்தன. அவைகள்‌ அவர்‌ காலத்திற்கு முன்பே தோன்றியவை; தலைமுறை தலைமுறையாகவே மக்கள்‌ மனதில்‌ படிந்திருப்பவை. அவற்றுள்‌ பலவற்றைக்‌ கடந்து செல்ல வள்ளுவர்‌ வழிகாட்டியிருக்கின்றார்‌. ஆயினும்‌ சில மூடநம்பிக்‌கைகளுடன்‌ அவரால்‌ எதிர்த்துப்‌ போராட முடியவில்லை. அவைகள்‌ சிலவற்றில்‌ அவருக்கே நம்பிக்கை உண்டென்றும்‌ உரைத்துவிடலாம்‌. இதற்கு எடுத்துக்காட்டாகத்‌ துறவறத்தில்‌ வள்ளுவர்க்கிருந்த நம்பிக்கையைக்‌ கூறலாம்‌.

“ஒன்னார்த்‌ தெறலும்‌, உவந்தாரை ஆக்கலும்‌

எண்ணின்‌, தவத்தாள்‌ வரும்‌

தமக்குத்‌ இமைசெய்யும்‌ பகைவரை அழிப்பதும்‌, தமக்கு நன்மை செய்யும்‌ நண்பரை உயர்த்துவதும்‌, நினைத்த அளவில்‌ தவத்தின்‌ வலிமையால்‌ உண்டாகும்‌” (ஞ.764)

“வேண்டிய வேண்டியாங்கு எய்தலால்‌ செய்தவம்‌

ஈண்டு முயலப்‌ படும்‌”

தான்‌ வேண்டிய நன்மைகளையெல்லாம்‌ வேண்டியவாறே பெறமுடியும்‌; ஆதலால்‌ செய்யத்தக்க தவத்தை இவ்வுலகிலே செய்ய வேண்டும்‌ (௫. 265)

“கூற்றம்‌ குதித்தலும்‌ கைகூடும்‌, நோற்றலின்‌

ஆற்றல்‌ தலைப்பட்ட வர்க்கு

தவம்‌ செய்வதால்‌ அடையக்கூடிய வல்லமையைப்‌ பெற்ற வார்களுக்கு எமன்‌ கையில்‌ அகப்படாமல்‌ தப்பித்துக்‌ கெண்டும்‌ உயிர்‌ வாழ முடியும்‌” (கு .260)

தவம்‌ என்ற அதிகாரத்தில்‌ உள்ள இவ்வெண்பாக்கள்‌ தவத்தின்‌ பெருமையைக்‌ கூறுகின்றன. தவத்தினால்‌ யாரையும்‌ வெல்லலாம்‌ உயர்வாக வாழலாம்‌; விரும்பிய இன்பங்களை யெல்லாம்‌ பெறலாம்‌. இறக்காமலும்‌ உயிர்‌ வாழலாம்‌; என்ற நம்பிக்கைகளைப்‌ போதிக்கின்றன.

வள்ளுவர்‌ காலத்திலே, இக்கருத்துக்களை நம்பியவர்கள்‌ பலர்‌ தமிழகத்தில்‌ வாழ்ந்தனர்‌ இவ்வுலகிலே இன்ப வாழ்வு பெற முடியாமல்‌ வாடித்‌ திரிந்தவர்களின்‌ நெஞ்சிலே தவத்தைப்‌ பற்றிய கருத்துக்கள்‌ ஒரு நம்பிக்கையை ஊட்டின; தவத்தால்‌ நமது துன்பங்களைத்‌ தொலைப்போம்‌ இப்பிறப்பில்‌ இன்பம்‌ இல்லாவிட்டாலும்‌ மறு பிறப்பிலாயினும்‌ இன்பத்தை எய்துவோம்‌; இனிது வாழ்வோம்‌; என்ற எண்ணத்தை எழுப்பின. ஆயினும்‌ இல்லறத்திற்கு அடுத்தபடிதான்‌ துறவறம்‌ என்பதை அவர்‌ சொல்லத்தவறவில்லை.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard