குடிகளைக் கொடுமைப்படுத்தும் அரசாங்கம் குலைந்து விடும்; மக்களின் கருத்துக்கு மதிப்புக் கொடுக்காத ஆட்சி மறைந்து விடும். குடி அரசோ மூடி அரசோ பொது மக்கள் விருப்பத்தின்படி. ஆட்சி புரியுமானால் அந்த ஆட்சி நிலைத்து நிற்கும். அதை யாரும் அசைத்து விட முடியாது.
படைபலம் மட்டும் வெற்றி தராது; மக்களுடைய ஓத்து ழைப்பே சிறந்த படைபலம்; குடிமக்களின் கூட்டுறவு இருந்தால் தான் நிலைத்து நின்று அளமுடியும்.” இவ்வுண்மையை ஒவ்வொரு அரசும் உணர்ந்திருக்க வேண்டும்.
குற்றம் இழைப்பவர்களைத் தண்டிப்பது அரசாங்கத்தின் கடமை; அது கொடுங்கோன்மையன்று; செங்கோன்மையாகும். ஆனால் உண்மையான குற்றவாளிகளைத் தான் தண்டிக்க வேண்டும்.
குடிகளின் குறைகளுக்குச் செவி சாய்க்காமல், அடக்குமுறையால் குறை கூறுவோர்களை அடக்கி வைக்கக் கூடாது.
அடக்கு முறையைத் துணையாகக் கொண்டு வாழ நினைக்கும் ஆட்சி அழிந்தே போகும். அது எத்தகைய வலிமை படைத்த வல்லரசாயினும் குடிமக்களின் வெறுப்புக்கும், எதிர்ப்புக்கும் முன்னிற்க முடியாது.
“குடி தழீஇக் கோல்ஓச்சும் மாநில மன்னன்
அடி தழீஜ நிற்கும் உலகு.
குடி. மக்களின் கருத்தைத் தழுவி, அவர்களை அன்புடன் அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்துகின்ற மன்னனுடைய அடியிலே உலகம் வாழும்.” (ஞ..544)
“வேல் அன்று வென்றி தருவது; மன்னவன்
கோல்; அதுஉம் கோடாது எனின்.
அரசனுக்கு வெற்றி தருவது படைபலம் அன்று; அவனுடைய ஆட்சி முறைதான் அவனுக்கு வெற்றிதரும்; அவ்வாட்சி கொடுங்கோல் ஆட்சியாக இல்லாதிருக்குமானால்தான் அவன்
வெற்றி பெறுவான்.” (கு.546)
ஒரு நேர்மையுள்ள அரசாங்கம் எப்படி நடக்க வேண்டும் என்பதை இவைகள் எடுத்துக் காட்டின. இவ்வாறு ஆளும், ஆட்சி, வள்ளுவர் காட்டும் இவ்வழிதான் என்றும் அழியாமல் நிலைத்து நிற்கும் வழியாகும்.
தண்டனை வேறு, அடக்கு முறை வேறு. உண்மையான குற்றவாளிகளை ஓடுக்குவது - ஓஒறுப்பது தண்டனை, நீதிக்கு -நேர்மைக்கு - உண்மைக்கு - உரிமைக்குப் போராடுகின்றவர்களை ஒடுக்குவது அடக்குமுறை இவ்விரண்டைப் பற்றியும் திருவள்ளுவர் தெளிவாக விளக்கியிருக்கின்றார்.
இவற்றை விளக்கும் அதிகாரங்கள் மூன்று அவை, செங்கோன்மை, கொடுங்கோன்மை, வெருவந்த செய்யாமை என்பன.
செங்கோன்மை - நீதியுடன் அளுவது; கொடுங்கோன்மை - நீதிக்கு முரணாக ஆளுவது; வெரு வந்த செய்யாமை - அஞ்சத் தக்க செயல்களைச் செய்யாமை. இம்மூன்று அதிகாரங்களிலும் உள்ள முப்பது வெண்பாக்களிலே தண்டனை என்பது என்ன? அடக்கு முறையாவது யாது? என்பவைகளைக் காணலாம்.
இம்மூன்று அதிகாரங்களில் செங்கோன்மையில் தண்டனையைப் பற்றி அறியலாம்; அடக்கு முறையைப் பற்றி கொடுங்கோன்மையிலும், வெருவந்த செய்யாமையிலும் காணலாம்.
ஒரு நல்ல அரசாங்கம் அது தன் குடி. மக்களின் வாழ்வையே குறிக்கோளாகக் கொண்டது. மக்களுடைய குறைகளைக் கண்டறிந்து அவைகளைப் போக்குவதற்கே அல்லும் பகலும் பாடுபடுகின்றது. எல்லாத் துறைகளிலும் நாடு முன்னேற வேண்டும் என்பதே அந்த ஆட்சியின் நோக்கம். அதற்கான பல திட்டங்களை வகுத்திருக்கின்றது. அவைகளை வெற்றியுடன் நிறைவேற்ற முயற்சியுடன் முனைந்து வேலை செய்கின்றது. இத்தகைய அரசாங்கத்தின் திட்டங்களைச் சிதைப்பதற்கு முயற்சிப்பவர்கள் குற்றவாளிகள்; இவர்கள் பொது மக்களுக்கும் துரோகம் பண்ண முயற்சிப்பவர்கள். அமைதியாக வாழும் குடிமக்களை அவதிக்கு அளாக முயற்சிப்பவர்களும் குற்றவாளிகளே. இவர்களை அரசாங்கம் தண்டிக்க வேண்டியதுதான்.
“கடிபுறம் காத்து ஓம்பிக் குற்றம் கடிதல்
வடுஅன்று; வேந்தன் தொழில்.”
குடிகளைப் பிறர் துன்புறுத்தாமல் காப்பற்ற வேண்டும்; தானும் அவர்களைத் துன்புறுத்தக் கூடாது; அவர்களில் யாரேனும் குற்றவாளிகள் இருப்பார்களாயின் அவர்களைத் தண்டித்துக் குற்றத்தை நீக்க வேண்டும். இவ்வாறு செய்வதனால் அரசனுக்குப் பழி உண்டாகாது. இது அரசன் கடமை. (ஞ..549).
“கொலையில் கொடியாரை வேந்துஒறுத்தல், பைங்கூழ்
களை கட்டதனொடு நேர்.”
கொலை செய்வதுபோன்ற கொடுமை செய்கின்றவர்களை அரசன் கொலைத் தண்டனை கொடுத்துத் தண்டித்தல் தவறு அன்று அது, பயிரைக் காப்பாற்ற, அதன் இடையிலே முளைத்த களையைப் பிடுங்கி எறிவது போன்ற செயலாகும்.” (கு.550)
கொலையைப் போன்ற கொடுமை செய்கின்ற குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை கொடுப்பது தவறன்று என்ற கருத்தையே இக்குறள் வலியுறுத்துகின்றது. பண்டைக் காலத்தில் சிறு குற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகள் விதித்து வந்தனர். கடுந்தண்டனைகளால்தான் குற்றங்களைக் குறைக்க மூடியும் என்பதே முன்னோர் கொள்கை. திருட்டுக்குக் கொலைத் தண்டனை விதிக்கும் வழக்கம் உண்டென்பதை “கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று” என்று சிலப்பதிகாரம் கூறுவதால் காணலாம். கடன் வாங்கினவன் தான் கடன் வாங்கவில்லை என்று பொய் சொன்னால் அவனைப் பாம்பை அடைத்து வைத்திருக்கும் குடத்திலே கைவிடும்படி. கூறுவர். இது பண்டைக் காலத் தண்டனை முறை என்ற நூல்களிலே காணப்படுகின்றன. பாம்புள்ள குடத்திலே கைவிட்டால் பாம்பு சும்மா இருக்குமா? ஆகையால் இத்தகைய தண்டனைக்குப் பயந்து கடன் வாங்கினோர் வாங்கவில்லையென்று பொய் சொல்ல மாட்டார்கள்.
ஆகையால் இக்குறள் கொலைத் தண்டனை விதிப்பதை அதரிப்பதாகவே கொள்ள வேண்டும்.
சமூகத்திலே குற்றவாளிகள் பெருகாமலிருப்பதற்கு இத்தகைய தண்டனைகளை எந்த அரசாங்கமும் கையாளலாம். குற்றங்களை தடுப்பதற்கும் கடுமையான தண்டனை வேண்டும். குற்றவாளிகளைத் திருத்துவதற்கும் கடுமையான தண்டனை வேண்டும் இதற்கான சட்டங்களும் நீதி மன்றங்களும் நாட்டில் அமைந்திருக்க வேண்டும். இது வள்ளுவர்க்கு உடன்பாடான கருத்தாகும்.
ஒரு நல்ல அரசாங்கத்திலே அடக்கு முறைக்கு வேலையே கிடையாது. அடக்குமுறையைக் கையாள வேண்டிய அவசியமே ஏற்படாது. அதிகாரத்திற்கும் - தந்நலத்துக்கும்- ஆசைப் பட்டவர்கள் அளும் ஆட்சியிலேதான் அடக்கு முறைப் பேய் தலைவிரித்தாடும் அந்த அடக்கு முறைப் பேய் சிலகாலம் மக்களைத் துன்புறுத்தலாம்; இறுதியில் அதை அவிழ்த்துவிட்ட ஆட்சியே அதற்கு இரையாகிவிடும். இதுவே வரலாறு கண்ட உண்மை.
“நாடோறும் நாடி முறைசெய்ய மன்னவன்
நாடொறும் நாடு கெடும்,”
ஒவ்வொறு நாளும் தன் ஆட்சியிலே விளையும் நன்மை தீமைகளை அராய்ந்து நீதிமுறை செய்யாத மன்னவன் ஓவ்வொரு நாளும் சிறிது சிறிதாகத் தன் நாட்டை இழந்துவிடுவான்.” (ஞூ..553)
கொடுங்கோல் அரசாங்கம் நீதி வேண்டும், என்று முறையிடுவோரை அடக்கத்தான் முன்வரும்; இதனால் குடிமக்கள் வெறுப்படைவர். அந்த அரசாங்கத்தை ஒழிக்கவே ஒன்று கூடி மூயற்சிப்பார்கள்.
கடுமையான சொல்லும் அளவுக்கு மீறிய தண்டனையும், அரசனுடைய அடக்குமுறை வலிமையைத் தேய்க்கும் அரமாகும்.” (ஞூ.567.)
இம்மூன்று குறள்களும் அடக்குமுறையின் கொடுமையை விளக்கின. அதிகாரச் செருக்குள்ளவர்கள் பொது மக்களை ஆட்டுமந்தைகளாக மதிக்கலாம். அதிகார வெறியால் அவர்களை அடக்கியான நினைக்க இத்தகையவர்களின் ஆட்சிதான் கொடுங்கோல் ஆட்சி. அதிகாரத்தைக் கொண்டும், ஆயுத பலத்தைக் கொண்டும் மக்களை அடக்க நினைப்பவர்கள் நீண்ட நாள் நிலைத்திருக்க முடியாது; விரைவில் மண்ணைத்தான் கவ்வுவார்கள்.
கொடுங்கோல் அரசாங்கம் கொஞ்சம் நாட்களுக்குத் தான் குடிமக்களை அடக்கி வைக்க முடியும், குடிமக்களும் ஒன்றும் செய்ய முடியாமல் சில நாட்கள் அடங்கியிருக்கலாம். அனால் அடியோடு அடங்கிவிடமாட்டார்கள். இக்கொடுங்கோல் ஆட்சி என்றுதான் ஓழியுமோ என அவர்கள் ஏங்கிக் கிடப்பார்கள்; கண்ணீர் வடிப்பார்கள். அவர்கள் ஏக்கமும் கண்ணீரும் வீண் போகமாட்டா. நாட்டு மக்களை ஒன்றுபடுத்தும். ஆட்சிக்கு எதிராக்கும். கொடுங்கோலாட்சிக்குக் குழிதோண்டி விடும்.
குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டியது அரசின் கடமை. அது குற்றமாகாது. ஆட்சியில் உள்ள குறைகளை எடுத்துக் காட்டுவோரை அடக்குவது தகாது. அவர்களை அடக்குவது அடக்குமுறையாகும். கொடிய அடக்குமுறை ஆட்சி கொடுங்கோல் ஆட்சியேயாகும். இதுவே வள்ளுவர் கருத்து. இக்கருத்தை மேலே கூறியவற்றைக் கொண்டு உணரலாம்.