அரசாங்கத்திற்கு அச்சாணியாக இருப்பவர்கள் அமைச்சர் கள்தாம். மந்திரிகள்தாம் அரசாட்சியை நடத்துவதிலே முதலிடம் வகிப்பவர்கள். முடி அரசிலும் குடி அரசிலும் அமைச்சர் களுக்குத் தான் பொறுப்பு அதிகம். “அரசன் எவ்வழியோ குடிகள் அவ்வழி” என்பது பண்டைப் பழமொழி. முடி யரசுகள் நிலைத்திருந்த காலத்தில் இருந்த பழமொழி, “அமைச்சர்கள் எவ்வழியோ குடிகள் அவ்வழி” என்ற புதுமொழிதான் இக்காலத்திற்கு ஏற்றதாகும்.
எந்த விதமான அரசு தோன்றினாலும் அதில் மந்திரிகளுக்கு இடம் உண்டு; அவர்களே நாட்டின் நன்மை தீமைகளுக்குப் பொறுப்புள்ளவர்களாயிருப்பர். மந்திரிகள் மதியற்றவர்களா யிருந்தால் - நடுவு நிலைமை அற்றவர்களாயிருந்தால் - வெறுப்பு விருப்புக்கு அடிமைபட்டவர்களாயிருந்தால் - அவர்கள் அளும் நாடு உருப்படாது சிறந்த நிர்வாகம் அந்த நாட்டிலே நடக்காது. தகுதியற்ற அமைச்சர்களால் - நாட்டின் உரிமைக்குக் கூட ஆபத்து வரலாம். ஆதலால் சிறந்த அமைச்சர்களதை் தேர்ந்தெடுப்பதே அறிவுள்ள குடி. மக்களின் கடமை; பொறுப்புள்ள அரசன் கடமையும் அலும்.
அமைச்சர் திறம்
அமைச்சர்கள் யார்? அவர்களுடைய கடமை என்ன? அவர்கள் எப்படிப்பட்டவர்களாயிருக்கவேண்டும்? இவை களைப் பற்றி வள்ளுவர் நூறு குறட்பாக்களிலே குறிப்பிடுகின்றார். பத்து அதிகாரங்கள் அமைச்சர்களைப் பற்றிச் சொல்லுகின்றன. திருக்குறளிலே மற்றப் பகுதிகளைப் படிக்காவிட்டாலும், இப் பகுதியையாவது நமது நாட்டு மக்கள் அனைவரும் படித்தறிய வேண்டும். சிறப்பாக அரசியல் வாதிகள் அனைவரும் இப்பகுதியைப் படித்தறிய வேண்டும். நமது நாட்டிலே மந்திரிப் பதவி வகிப்போர் - மந்திரிப் பதவிக்கு வரவிரும்புவோர் அனைவரும் இந்த நூறு குறள் வெண்பாக்களையும் மனப்பாடம் பண்ணியிருக்க வேண்டும். இவற்றின் கருத்தை மறவாமலவிருப்பவர்களாயின் அவர்கள் எக்காலத்திலும் தவறு செய்யமாட்டார்கள். மக்களால் மதிக்கப்படும் சிறந்த அமைச்சர்களாகத் திகழ்வார்கள்.
“தெரிதலும், தேர்ந்து செயலும். ஒரு தலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு
நாட்டின் முன்னேற்றத்திற்கான காரியங்களை ஆராய்ந்து கண்டு பிடித்தல், இக்காரியங்கள் வெற்றி பெறுவதற்கான வழி வகைகளை ஆராய்ந்து அவைகளைத் தொடங்கிச் செய்தல், தான் உண்மையென்று கண்ட கருத்தைத் துணிவுடன் சொல்லுதல், இவைகளிலே வல்லவன்தான் அமைச்சன் ஆவான்” (க.634)
இத்தகைய அறிவும் அற்றலும் அமைச்சர்களுக்கு வேண்டும். தெளிவில்லாமல் இன்றைக்கு ஒரு பேச்சு நாளைக்கு ஒரு பேச்சு; மறுநாள் ஒரு பேச்சு; என்று பேசுகிறவர்கள் அமைச்சர்கள் அல்லர்; அவர்கள் பொதுமக்களின் இகழ்ச்சிக்கு அளாவார்கள்.
“மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாஉள முன் நிற்பவை
நல்ல நூல் அறிவும் நுண்ணறிவும் உள்ளவர்க்கு, அவர் களால் கண்டுபிடிக்க முடியாமல், அவர்கள் முன் நிற்கும் நுட்பமான செய்திகள் எவை உண்டு?” (ஞ..636)
நல்ல கல்விப் பயிற்சியும், நுண்ணறிவும் படைத்தவர்களே மிகவும் சிக்கலான பெரிய காரியங்களில் எல்லாம் அழமாக எண்ணிப் பார்த்து ஒரு முடிவுக்கு வரமுடியும். கல்வியறிவும், நுண்ணறிவும் இல்லாதவர்கள் சிக்கலான காரியங்கள் வரும்போது திண்டாடுவார்கள்; திகைப்பார்கள். காரியத்தையும் கெடுத்து விடுவார்கள். அதலால் அறிவும் கல்வியும் இல்லாதவர்கள் அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர்கள்.
“ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு லாபமும், நட்டமும் சொல்கின்ற சொல்லின் மூலம் வருவதனால், தன்னுடைய சொல்லில் தவறு உண்டாகாமல் காத்துக்கொள்ள வேண்டும்” (கு.42) இது அமைச்சர்க்குரைத்த சிறந்ததோர் அறிவுரையாகும்
“இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்,
நடுக்கு அற்ற காட்சி அவர்”
எது வந்தாலும் கலங்காமல் காரியம் செய்யும் அறிவுள்ளவர்கள், தாம் எவ்வளவு பெரிய துன்பத்தில் மாட்டிக் கொண்டாலும் நிதானம் தவறமாட்டார்கள்; தம் துன்பத்தை நீக்கிக் கொள்ளுவதற்காக இழிவான செயல்களைச் செய்யமாட்டார்கள்” (ஞு.65:4.) எக்காலத்திலும் நேர்மையும் நிதானமும் இழக்காதவர்களே அமைச்சர் பதவிக்குத் தகுதியுள்ளவர்கள்.
“வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்;
மற்றைய எல்லாம் பிற”
ஒரு தொழிலை உறுதியுடன் நின்று செய்து முடிக்கும் தன்மையென்று சொல்லப்படுவது ஒருவன் நெஞ்சுறுதியே யாகும்; மற்றவை யெல்லாம் வேறானவை” (கு.667.)
எடுத்துக்கொண்ட செயலை உறுதியுடன் நின்று நிறை வேற்றும் வலிமை அமைச்சர்களுக்கு இன்றியமையாதது. இவர் களால்தான் மக்களுக்கு நன்மை செய்ய முடியும். உள்ளத்திலே உரம் - உறுதி - வலிமை உள்ளவர்களால்தான் எடுத்துக்கொண்ட செயலை வெற்றியுடன் நிறைவேற்ற முடியும். அதலால் மந்திரிகளுக்கு மன உறுதி வேண்டும் என்று இக்குறள் கூறிற்று.
எதிரிகளை அடக்கல்
“நாட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்
நண்பர்களுக்கு நல்ல உதவி செய்வதைக் காட்டிலும் பகைவர்களைத் தம்முடன் சேர்த்துக் கொள்ளுதலே மிகவும் விரைவில் செய்ய வேண்டிய வேலையாகும்” (கு.679.) இது ஒரு சிறந்த அரசியல் நுட்பத்தை விளக்கும் குறள். பகைவர்களுடன் சண்டை போடுவதைவிட அவர்களைச் சமாதானமாகச் சேர்த்துக்கொள்ளுவதே நலம். இப்படிச் செய்வதன் மூலம் போரைத் தடுக்க முடியும். சண்டை போடுவது எளிது; சமாதானத்தைப் பாதுகாப்பதுதான் அரிது. காரியத்தையும் விட்டுக் கொடுக்காமல் பகைவர்களையும் சமாதானப் படுத்துவதென்றால் அதற்கேற்ற திறமையும் தந்திரமும் வேண்டும்.
ஒரு நாட்டுக்கும் மற்றொரு நாட்டுக்கும் கருத்து வேற்றுமை ஏற்படும்போது, அதைப்பற்றி இரண்டு நாடுகளும் கலந்து பேசி முடிவு காணவேண்டும். இப்படிக் கலந்து பேசினால் நல்ல முடிவைக் காணலாம். இப்படிக் கலந்து பேசுகின்றவர்களுக்குத் தூதர்கள் என்று பெயர். இக்காலத்தில் வெளிநாட்டு மந்திரிகள் என்று ஓவ்வொரு அரசாங்கத்திலும் தூதர்கள் இருந்தனர். இவர் களும் மந்திரி சபையில் அங்கம் வகித்து வந்தனர் வெளிநாட்டு மந்திரிகளையே அக்காலத்தில் தூதர்கள் என்று அழைத்தனர். இவர்கள் திறமை எப்படியிருக்கவேண்டும் என்பதைப் பற்றிப் பத்துக் குறள்களிலே உரைக்கின்றார் வள்ளுவர்.
“அறிவு, ௨௫, ஆராய்ந்த கல்வி இம்மூன்றன்
செறிவுஉடையான் செல்க வினைக்கு”
யற்கையான நுண் அ , கண்டவார்களைத் கவரத்தக்க ற ஆ ய் ற த்த தோற்றம். நல்ல அஆராய்ச்சியுள்ள இம்மூன்றும் நிறைந்திருப்பவனே தூதுரைக்கும் வேலைக்குப் போக வேண்டும்” (க..688)
“தூய்மை, துணைமை, துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழி உரைப்பான் பண்பு
நல்ல நடத்தை, உற்ற துணைவர்கள், நல்ல துணிச்சல் இம்மூன்றும் வாய்ந்திருப்பதே தூதுரைப்பவனுக்குச் சிறந்த பண்பாகும்” (ஞ.688) இவைகள் அமைச்சர்களுக்கு எத்தகைய, திறமையும் அறிவும் பண்பும் வேண்டும் என்பதை வலியுறுத்தின.
“வாளொடுஎன் வன்கண்ணர் அல்லார்க்கு; நூலொடுஎன்
நுண்அவை அஞ்சு பவர்க்கு”
அஞ்சாத வீரர்களைத் தவிர மற்றவர்களுடன் வாளுடன் என்ன தொடர்பு? நுண்ணறிவுள்ளவர்கள் கூடியிருக்கும் அவையிலே, பேச அஸஞ்சுகின்றவர்களுக்கு நூல்களுடன் தொடர்பிருந்தும் என்ன பயன்?” (726.
அமைச்சர்கள் படித்திருந்தால் மட்டும் போதாது , சிறந்த அறிஞர்கள் -நிபுணர்கள்- கூடியிருக்கும் கூட்டத்திலே துணிந்து பேசும் திறமை வேண்டும். எல்லாத் துறைகளைப் பற்றியும் அடிப்படியான அறிவாவது இருந்தால்தான் அறிஞர்கள் கூட்டத்திலே அமைச்சர்களால் பேச முடியும். ஆகையால் பல துறைகளைப் பற்றிய நுண்ணறிவும் அமைச்சர்களுக்கு அவசியமானதாகும்.
நாட்டின் முனனேற்றத்திற்கான நல்ல திட்டங்களை வகுக்கும் திறமை நூலோடு கூடிய நுண்ணறிவு; தளராத மன உறுதி; பகைவர்களை வசமாக்கிக் கொண்டு சமாதானத்தை காப்பாற்றும் திறமை; தூய ஒழுக்கம் பலகலைகளிலும் தேர்ச்சி; இவைகள் எல்லாம் அமைச்சர்களுக்கு வேண்டிய தகுதிகள். இவைகளைப் பற்றி வள்ளுவர் விரிவாக சொல்லியிருக்கின்றார். அமைச்சர்களைப் பற்றி சொல்லும் பத்து அதிகாரங்களிலும் இவற்றைப் படித்தறியலாம்.