செல்வத்திலே சிறந்த நாடுதான் வளம்பெற்ற நாடாகும்; பலவகை வளங்களும் நிறைந்திருக்கும் நாட்டிலேதான் அமைதியும் இன்பமும் குடி கொண்டிருக்கும்; மக்கள் ஒற்றுமையும் ஒழுக்கமும் உள்ளவர்களாக வாழ்வார்கள். செல்வம் நிலையற்றது; செல்வத்தால் துன்பமேயன்றி இன்பம் இல்லை; என்பது அரசியலுக்குப் பொருந்தாத பேச்சு. இது சோம்பேறிகளின் பேச்சு; உலக வாழ்க்கையில் சலிப்புக் கொண்டவர்களின் வார்த்தை. எந்தத் தனிப்பட்ட குடும்பமும் செவ்த்தால்தான் நல்வாழ்வு வாழ முடியும். எந்த அட்சியும் பணபலம் இருந்தால் தான் பல நல்ல திட்டங்களை நிறைவேற்ற முடியும். இவ்வுண்மையைத் திருவள்ளுவர் விளக்கமாக சொல்லியிருக்கின்றார்.
இயற்கை வளம்
“தள்ளா விளையும், தக்காரும், தாழ்வு இலாச்
செல்வரும் சேர்வது நாடு.”
குறையாத விளையபொருள்களும், சிறந்த அறிஞர்களும், நிறைந்த செல்வம் உள்ளவர்களும் சேர்ந்திருப்பது தான் உயர்ந்த நாடாகும். (ஞு.731.)
விளைபொருள்கள் இல்லாத நாடுகள் பஞ்சத்தால் பரிதவிக்கும். விவசாயத்தை வளர்த்து விளைபொருள்களைப் பெருக்க வேண்டியது ஒரு அரசாங்கத்தின் முதல் கடமை.
நாட்டின் வளத்தைப் பெருக்க அறிஞர்களின் அலோசனையும், உதவியும் அவசியமாகும். ஒவ்வொரு துறையிலும் தோர்ந்த நிபுணர்கள் தேசத்தின் செல்வமாவார்கள் விவசாயம், கைத்தொழில், கட்டிடக் கலை முதலியவைகளிலே அராய்ச்சியும் அனுபவமும் உள்ளவர்களால் தான் அவைகளை வளர்க்க முடியும். ஏனைய கலைகளில் தேர்ந்தவர்களும் ஏராளமாக இருக்க வேண்டும்.
வள்ளுவர் காலத்திலே செல்வம் உள்ளவர்கள், ஏழைகள் என்ற வேற்றுமை தமிழகத்திலே வலுப்பெற்றிருந்தது. அவர் காலத்திற்கு முன்பே அவ்வேற்றுமை வேரூன்றி இருந்தது.
அக்காலத்துச் செல்வார்கள் சமுதாயத்திலே மிகவும் செல்வாக் குடன் இருந்தனர். அவர்கள் செல்வம் பலவகைப்பட்டவை. ஆடு, மாடு விளை நிலங்கள் சிறந்த செல்வங்களாக எண்ணப் பட்டன; இவைகளிலிருந்து கிடைக்கும் வருமானங்கள் வாழ்க்கையை வளம்படுத்தி வந்தன. இத்தகைய செல்வம் படைத்தவர்கள் ஏழைகள் பலர்க்கும் உதவி செய்து வந்தனர்; இல்லாதவர்களுக்கு உதவி புரிவது தங்கள் கடமை என்று கருதி வந்தனர் இவர்கள் புலவர்களையும், கலைஞர்களையும் அதரித்து வந்தனர். இவர்களுடைய அதரவாலேயே இன்பக் கலைகள் பல வளர்ந்தன. அகையால் ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்குச் செல்வம் படைத்தவர்களும் அவசியமானவர்கள் என்று எண்ணினார் வள்ளுவர். இக்கருத்தமைந்ததே மேலே காட்டிய குறள்.
பலவகை மாறுபட்ட கருத்துக்களையுடைய சுயநலக் கும்பல்களும், நாட்டை நாசமாக்கும் உள்நாட்டு விரோதிகளும், வேந்தனைக் துன்புறுத்தும் கொலைகாரக் குறுநில மன்னர் களும் இல்லாத நாடே சிறந்த நாடாகும்” (க.735)
பலவகையான கருத்து வேற்றுமைகளைக் கொண்ட சிறு கும்பல்களால் நாட்டுக்கு நன்மையில்லை இத்தகைய நாட்டிலே அக்கவேலைகள் அமைதியுடன் நடைபெற மாட்டா நாட்டின் நலத்தைக் குறிக்கோளாகக் கொண்ட அரசியல் கட்சிகள் இருக்கலாம். நாட்டு மக்களின் வாழ்வைப் பற்றிக் கவலைப் படாமல், தங்கள் நலத்தையே நாடுவோர் உண்டு. தங்களுக்குப் பெருமையும், புகமும் செல்வமும் தேடி கொள்ளுவதற்கே பொதுப் பணியாளர் என்று நடிப்போர் உண்டு. இவர்கள் அரசியல் போர்வையிலே, சமுதாயப் போர்வையிலே, மதப் போர்வையிலே இனப் போர்வையிலே, மொழிப் போர்வை யிலே புகுந்து கொண்டு நாட்டின் ஒற்றுமைக்கு உலை வைப்பார்கள். இக்கும்பல்களால் நாட்டுக்கு நலம் இல்லை. இக்கும்பல்கள் வளர்வதற்கு இடந்தரக் கூடாது.
இவர்களுக்கு அடுத்தபடி. நாட்டை நாசம் பண்ணுகின்ற வர்கள்; தேசீயப் பற்று இல்லாதவர்கள்,. இவர்கள் நாட்டைப் பற்றி நாட்டு மக்களைப் பற்றி எள்ளளவும் கவலைப்பட மாட்டார்கள்; எப்படியேனும் தாங்கள் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று நினைப்பார்கள் இவர்கள் சமயம் வரும்போது நாட்டின் உரிமையைப் பலி கொடுக்கவும் தயங்கமாட்டார்கள். தேசயச் செல்வத்தை வளர்ப்பதற்குத் துணைசெய்ய மாட்டார்கள்; தேசீயத் திட்டங்களுக்கெல்லாம் எதிர்ப்பாகவே யிருப்பார்கள்; இவர்கள் எல்லாம் உள் நாட்டுப் பகைவர்கள். இவர்களாலும் நாட்டின் செல்வம் நாசமாகும். இவர்களுக்கு அடுத்தபடி நாட்டின் முனனேற்றதிற்கு முட்டுக்கட்டைகளாக இருப்பவர்கள் குறு நில மன்னர்கள்; சிற்றரசர்கள்; நிலப் பிரபுக்கள் இவர்களுக்கும் நாட்டுப் பற்று இருக்க முடியாது. இவர்கள் தங்கள் அடம்பர இன்ப வாழ்வுக்காக எதையும் செய்வார்கள். எந்த நாட்டில் குறுநில மன்னர்கள் ஏராளமாக இருக்கின்றார்களோ அந்த நாட்டை அந்நியர்கள் கைக்கொள்வது எளிது. இதற்கு நமது நாட்டு வரலாறே, உதாரணம். பல சிற்றரசுகள் நமது நாட்டிலே நிலை பெற்றிருந்த காலத்தில்தான் அந்நியர்கள் சண்டை போடாமலே இந்நாட்டை எளிதிலே கைப்பற்றிக் கொண்டனர் நமது நாட்டு மன்னர்கள் ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு அந்நியர்களை வரவேற்றனர்; அவர்கள் அள இடங்கொடுத்தனர். இதனாலேயே இந்நாடு பல நூற்றாண்டுகள் அடிமைச் சங்கிலியால் கட்டுண்டு கிடந்தது.
சுயநலமுள்ள கும்பல்கள் உள்நாட்டுக் துரோகிகள், குறுநில மன்னர்கள் இவர்களால்தான் ஒரு நாட்டின் செல்வம் கெடும் என்பதற்கு நமது நாட்டு வரலாறே உதாரணமாக விளங்குகின்றது. இவ்வுண்மையை மேலே காட்டிய குறள். விளக்கி நின்றது. இக்குறள் எக்காலத்திற்கும் ஏற்றது. உயிரோட்டம் உள்ள சிறந்த குறள்களிலே இதுவும் ஒன்றாகும்.
பாதுகாப்பு
“எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்து உதவும்
நல் ஆள் உடையது அரண்.”
நாட்டு மக்களுக்கு வேண்டிய எல்லாப் பொருள்களையும் உடையதாய், ஆபத்துக் காலத்திலே உதவி செய்யக்கூடிய சிறந்த வீரர்களை உடையதே ஓரு நாட்டுக்குப் பாதுகாப்பாகும்” (ஞ.746) வேண்டும். இதுவும் வள்ளுவர் கொள்கை. படைப்பெருக்கம், வலித்து மற்றொரு நாட்டின் மீது படையெடுப்பதற்காக அன்று, மற்றொரு நாட்டுக்கு அடிமைப்படாமல் உரிமையுடன் வாழ்வதற்காகத்தான் படை பலம். அந்நியர் நம் நாட்டிலே புகுந்து, நமது நாட்ட வளங்களைக் கொள்ளையிடாமலிருப்பதற்காகவே படை பலம் வேண்டும். அப்படையின் பண்பு எப்படி இருக்க வேண்டும் என்பதையும் விளக்கமாக உரைத்திருக்கின்றார் வள்ளுவர்.
“மறம், மானம், மாண்ட வழிச்செலவு, தேற்றம்
என நான்கே ஏமம் படைக்கு.”
வீரம், மானம், சிறந்த நெறியிலே நடக்கும் தன்மை, தலைவருடைய நம்பிக்கைக்கு உரியதாயிருத்தல், இந்த நான்கு தன்மைகளும் ஒரு படைக்குரிய சிறந்த பண்பாகும்” (ஞ.766) இதுவே மேலே குறித்த கருத்தை விளக்கும் குறள். இத்தகைய சிறந்த - நாட்டுப் பற்றுள்ள - நம்பிக்கைக்குரிய படைகளைக் கொண்ட நாட்டின் செல்வமும் சிதையாது; சிறந்து வளரும்.
செல்வந் தேடும் வழி
அரசாங்கத்தின் செலவுக்கு வேண்டிய பொருளை எந்தெந்தத் துறைகளின் மூலம் தேடவேண்டும் என்பதையும் வள்ளுவர் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
“உறுபொருளும், உல்குபொருளும், தன்ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.”
குடிகளிடமிருந்து வருகின்ற வரிப்பொருள்; அந்நிய நாட்டு பண்டங்கள் நமது நாட்டுக்கு வியாபாரத்திற்காக வரும்போது, அவைகளின் மேல் விதிக்கப்படும் சுங்க வரியின் வாயிலாகக் கிடைக்கும் பொருள்; தனது ஆட்சிக்கு விரோதமாயிருப்பவர் களை அழித்து அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்படும் பொருள்; இவைகளே அரசனுடைய பொருளாகும்” (க.756).
இந்த மூன்று துறைகளிலும் கிடைக்கும் வருமானம் போதாவிட்டால், மேலும் வருமானம் கிடைக்கக்கூடிய வழிகளைக் கண்டு பிடிக்க வேண்டும். அவைகளின் மூலம் புதிய வருமானங்களைத் தேட வேண்டும். இதனை இயற்றலும் ஈட்டலும் (கு.385) என்னும் குறளால் கூறினார் வள்ளுவர். இது “அளத்தகுந்தவன்” என்னும் பகுதியிலே விளக்கப்பட்டுள்ளது. பொருள் தேடும் வழியைக் காட்டும் இடத்திலும் இக்கருத்தை வலியுறுத்துகின்றார் வள்ளுவர்.
“செய்க பொருளைச்; செருநர் செருக்கு அறுக்கும்
எஃகு அதனில் கூரியது இல்.”
பொருள் வரும் வழிகளைக் கண்டறிந்து அப்பொருளைச் சேர்க்க வேண்டும், ஏனென்றால், பகைவர்களின் செருக்கை அறுத்துச் சிதைக்கின்ற வாள் அதுதான். அதை விடக் கூர்மை யான படைவேறு ஒன்றும் இல்லை” (க..759). இதுவே மேலே காட்டிய கருத்தைக் கொண்ட குறள் வெண்பா.
ஒரு நாடு செல்வத்திலே சிறந்து விளங்கவேண்டுமானால் அந்நாட்டிலே விவசாயம் சிறந்திருக்கவேண்டும். பல துறை களிலும் தேர்ந்த அறிஞர்கள் அந்நாட்டிலே இருக்கவேண்டும்; நாட்டின் முன்னேற்றத்திலே கவலையுள்ள செல்வர்களும் வாழ வேண்டும்; தந்நதலத்தையே நோக்கமாகக் கொண்ட தலைவர் களால் நடத்தப்படும் இயக்கங்கள் நாட்டுக்கு அபத்தானவை/ உள்நாட்டுப் பகைவர்களாலும் நாட்டு வளம் நாசமாகும்; சிற்றரசர்களாலும் நாட்டின் உரிமை பறிபோகும்; எல்லா வளங்களும் நாட்டிலே நிரம்பியிருக்கவேண்டும்; நாட்டைப் பாதுகாக்கும் தேசப் பற்றுள்ள வீரர்கள் நாட்டிலே நிறைந்திருக்க வேண்டும்; மக்கள் மனம் உவந்து கொடுக்கும் பொருளையே ஆட்சியாளர் வரியாகப் பெற்றுக் கொள்ள வேண்டும்; சிறந்த பண்பமைந்த படையுள்ள நாட்டில் தான் அமைதி நிலவும்; செல்வம் பெருகும். மக்கள் மனங் கோணாமல் கொடுக்கும் வரி; சுங்க வரி; பகைவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்படும் பொருள்; இவைகளே அரசாங்கத்தின் வருமானம். இவ்வருமானம் போதாவிட்டால் வேறு வகைகளில் வருமானத்தைத் தேடிக்கொள்ளவேண்டும். இவைகளே ஆரசாங்கத்திற்கு வருமானந் தேடற்குரிய வழிகள் என்று கூறியிருக்கின்றார்.
வள்ளுவர் காலத்திலே ஆட்சியாளர் இம்முறையைப் பின்பற்றியே செல்வம் சேர்த்து ஆட்சி நடத்தினர் என்று கொள்ளலாம்; மக்கள் மனந்துடிக்கும்படி, அவர்கள் தலையிலே வரிசைச் சுமத்தி கொடுமைப்படுத்தும் கொள்ளை வள்ளுவர் காலத்தில் இல்லை. இக்கொள்கையை அவர் ஒப்புக் கொள்ளவும் இல்லை. இவ்வுண்மையே மேலே காட்டிய குறள் வெண்பாக்களைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம்.