வள்ளுவர் காலத்திலே இந்த நாட்டிலே வறுமையால் வாடும் மக்கள் வாழ்ந்தனர்; செல்வத்தால் இன்புற்று மகிழும் மக்களும் வாழ்ந்தனர். அவர் காலத்துச் சமுதாயம் ஏற்றத் தாழ் வுள்ள சமுதாயந்தான், சமாயத்திலே பலர் துன்புறு வதையும், சிலர் மட்டும் இன்புறுவதையும் அவர் விரும்பவில்லை. மக்கள் மகிழ்ந்து வாழ வேண்டும் என்பதே கருத்து.
வறுமையின் கொடுமையை எவ்வளவு விரித்துரைக்க முடியுமோ அவ்வளவு விரித்து விளக்கி யிருக்கின்றார். வறுமை யால் வருந்துவோர்க்குச் செல்வம் உள்ளவர்கள் உதவி செய்ய வேண்டியது கடமை என்பதையும் வலியுறுத்தி யிருக்கின்றார்.
இல்லாதவர்கள் - உள்ளவர்களிடம் போய்ப் பொருள் கேட்பது-இரப்பது - குற்றம் அன்று என்றும் கூறினார். இதன் பிறகு எந்த மனிதனும் பிறரிடம் ஏதொன்றையும் இரக்கக்கூடாது. இரப்பதைப் போல இழிவானது வேறொன்றும் இல்லை. இரப்பது மனிதத் தன்மையே அன்று; ஒருவன் பிச்சையெடுத்துத்தான் வாழ வேண்டும் என்பது தலைவிதி அன்று; இவ்வாறு எந்த மனிதனையும் கடவுள் படைக்க வில்லை; என்று அணித்தரமாகக் கூறி யிருக்கின்றார் வள்ளுவர்.
வறுமைக் கொடுமை
கொடுக்கும் சமுதாயம், வாங்கும் சமுதாயம் என்று வேற்றுமை இருப்பதை வள்ளுவர் மறைமுகமாகக் கண்டிக்கின்றார். இந்த உண்மையை நல்குரவு, இரவு, இரவச்சம் என்ற மூன்று அதிகாரங்களில் முப்பது குறள்களால் விளக்கியிருக்கின்றார். வறுமையைப் பற்றி அவர் சொல்வகைக் கேட் வர்களின் உள்ளம் உருகாமல் போகாது.
“இன்மையின் இன்னாதது யாதுஎனின்? இன்மையின்
இன்மையே இன்னா தது.
வறுமையைப் போலத் துன்பமுள்ளது வேறு யாதென்்றால், வறுமையைப் போன்ற துன்பம் உள்ளது வறுமையே தான். (மூ.1041)
“இன்மை என ஒரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.
வறுமையென்று சொல்லப்படும் ஒரு பாவி ஒருவனிடம் அணுகும்போது, அவனுடைய மறுமையின்பமும் இம்மையின் பமும் இல்லாமல் அழியும்படி. வரும்.”
இவற்றை விட வேறு விளக்கமான முறையிலே வறுமையைச் சித்தரிக்க முடியாது. வறுமையைப்போல் துன்பம் தரக் கூடியது வேறு எதுவுமேயில்லை. எல்லாத் துன்பங்களுக்கும் அதுதான் ஊற்றுக்கேணி. வறுமை நோய்க்கு அளானவன் இம்மையிலே எந்த இன்பத்தையும் பெறமாட்டான். அவன் வாழ்நாள் முழுவதும் துன்பத்தால் வருந்துவான். இது கண் கூடான காட்சி.
வறியவன் தன் வயிற்றுப் பாட்டைத் தணித்துக் கொள்ள எதுவும் செய்வான். நாம் செய்வது நன்மையா? தீமையா? நீதியா? அநீதியா? என்று எண்ணிப் பார்க்கமாட்டான்; இவ்வாறு எண்ணிப் பார்க்கும் பொறுமையோ,அறிவோ அவனிடம் இராது. அதலால் நெறியில்லா நெறியிலே சென்று அடாத செயல்களைச் செய்வான். அவனுக்கு மறுமையின்பமும் இல்லை. இம்மையின்பமும் இல்லை; இத்தகைய கொடுமையுள்ளது வறுமை.
வறுமைக்கு அளானவன் என்றும் கவலையால் கவ்வப்பட்டுக் கலங்கித் திரிவான். உயிர் வாழ்வதற்கு உணவு அடிப்படை; மானத்தை காக்க உடை முதன்மை; உடல் நலம்பெற உறைவிடம் வேண்டும். இவை மூன்றும் வறுமையுள்ளோர்க்குக் கிடைப்பதில்லை. இவை மூன்றுக்கும் கவலைப்படுவோர்க்கு மன அமைதி ஏது? உள்ளத்திலே அமைதியில்லாவிட்டால் உறக்கம் எப்படி வரும்? நெருப்பின் மத்தியிலே இருப்போர் உறங்கினாலும் உறங்கலாம். வறுமையில் பிணிப்புண்டி ருப்போர் உறங்கவே முடியாது. இக்கருத்துக்களை மேலே காட்டிய குறள்கள் எடுத்துக் காட்டின.
வறுமையுள்ளவர்கள் எல்லோரும் மானமுடன் வாழ முடியாது. உயிர் வாழ விரும்பும் வறியவர்களின் பிறரிடம் பிச்சை கேட்கத்தான் செய்வார்கள். உயிரை வைத்துக் கொள்ள ஏதாவது செய்து தரவேண்டும். அல்லவா? இரப்பதை வள்ளுவர் விரும்பவில்லை. ஆயினும் வறுமையால் இரப்போரை அவர் தடுக்கவும் இல்லை. கண்டவர்களிடமெல்லாம் கையேந்தி நிற்க வேண்டாம். கருணைநிரம்பியவர்களிடம் இரக்கலாம்; பொருள் பெறலாம் என்று கூறுகின்றார்.
தன்னிடம் இருப்பதை இரப்போர்க்கு ஈயாமல் ஒளித்துக் கொள்ளுவதைப் பற்றிக் கனவில் கூட நினைக்காதவர்கள் உண்டு; அவர்களிடம் சென்று ஓன்றை இரத்தல் இரத்தலாகாது; அது ஈவதைப் போலவே இன்பந் தரும்.” (கு.1054)
இந்த மூன்று குறள்களும் இரத்தலால் இழிவில்லை என்று கூறின. ஈகைக் குணம் படைத்தவரிடம் இரக்கலாம். ஈயாதாரிடம் இரப்பதுதான் குற்றம். வேண்டிய பொருள் எளிதிலே கிடைக்குமானால் இரப்பதிலும் ஒரு இன்பம் உண்டு. ஒளிக்காமல் உள்ளம் கனிந்து, உதவும் உத்தமர்களிடம் இரப்பதே நலம். இதனால் துன்பம் இல்லை.. அது கொடுப்பதைப் போன்ற இன்பத்தையே தரும். இக்கருத்துக்களே மேலே காட்டிய மூன்று குறள்களிலும் கூறப்பட்டவை.
வள்ளுவரின் உண்மைக் கருத்தை இரவச்சம் என்ற அதிகாரத்திலே காணலாம். இரவு அச்சம் - இரப்பதற்கு அஞ்ச வேண்டும். அவ்வதிகாரத்தில் உள்ள பத்து வெண்பாக்களையும் நுணுகிப் படிப்போர் இரத்தலைப் போல் இழிவில்லை என்பதைக் காண்பார்கள்.
“கரவாது உவந்துஈயும்கண் அன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும்.
உள்ளத்தை ஒளிக்காமல் மகிழ்ச்சியோடு கொடுத்து உதவுகின்ற கண்போல சிறந்தவரிடத்திலும், ஒன்னை இரந்து வாங்கிக் கொள்ளாமல் இருப்பது கோடி மடங்கு நல்லதாகும்” (ஞூ.7071)
“ இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலக இயற்றியான்.
இவ்வுலகில் சில மக்களை இரந்தும் உயிர் வாழ வேண்டும் என்று கடவுள் விரும்பினால், இத்தகைய உலகைப் படைத்த கடவுள், அந்த இரவலரைப் போலவே எங்கும் அலைந்து அழிக” (ஞு.1062)
பசுவிற்குத் தண்ணீர் வேண்டும் என்று இரந்து கேட்டாலும் இழிவு தான். அந்த இரத்தலை விட நாவிற்கு இழிவானது வேறொன்றும் இல்லை” (க..1066).
“அபத்திற்குப் பாபம் இல்லை' என்பர். பசு தண்ணீர் இல்லாமல் தவித்தாலும் சரி, அதன் பொருட்டு இரத்தலும் கூடாது. அதன் உயிரைக் காப்பாற்றுவதற்குத் தன் முயற்சியாலேயே தண்ணீரைத் தேடித் தரவேண்டும். தரும காரியத்திற்காக யாசிப்பதில் குற்றமில்லை என்று கருதிப் பிறரிடம் இரப்பதும் குற்றமேயாம். அது இழிவுக்கே இடமாகும். இதை வலியுறுத்தியது இக்குறள். இரப்பதை எவ்வளவு வன்மையாக எதிர்க்கிறார் என்பதை இக்குறளால் காணலாம்.
“தெண்ணீர் அடுப்புற்கை ஆயினும் தாள் தந்தது
உண்ணலின் ஊங்கு இனியது இல்.
தெளிந்த நீர் போல் சமைத்த கூழாயிருந்தாலும் சரி, தன் முயற்சியால் கிடைத்த அவ்வுணவை உண்பதைவிட இனிய உணவு வேறு ஓன்றும் இல்லை”. (க..1065)
தன் முயற்சியால் வாழ்வதே உயர்ந்த வாழ்வு; அறுசுவை உண்டிக்கு வழியின்றி வெறும் கூழை உண்டாலும் அதுவே சிறந்த வாழ்வு; எவருடைய இகழ்ச்சிக்கும் அளாகாத மானமுள்ள வாழ்வு; என்பதை இக்குறள் வலியுறுத்தியது.
நல்குரவு (வறுமை) இரவு என்ற இரண்டு அதிகாரங்களிலும் உள்ள கருத்துக்கள் வள்ளுவர் காலத்தில், தமிழர் சமுதாயம் இருந்த நிலையைக் காட்டுகின்றன. ஏற்றத்தாழ்வுள்ள சமுதாயத்தில் - இல்லாதவர் உள்ளவர் என்ற வேற்றுமையுள்ள சமுதாயத்தில் - கொடுப்போரும் கொள்வோரும் இல்லாமலிருக்க முடியாது; இருந்தே தீர்வார்கள்; இவ்வுண்மையை அவ்வதிகாரங்கள் விளக்கின.
இரவச்சம் என்ற அதிகாரம், கொள்வோரும் கொடுப்பாரும் இல்லாத சமுதாயத்தையே - வேற்றுமையற்ற ஒன்று பட்ட சமுதாயத்தையே - வள்ளுவர் விரும்புகின்றார் என்பதை விளக்கிற்று. வள்ளுவரின் இக் கருத்து இன்று உலகமெங்கும் பரந்து வளர்ந்து வருவதைக் காண்கின்றோம்.