பண்டைய தமிழகத்தை அறிய சங்க இலக்கியங்கள் முக்கியமான வரலாற்று மூலங்களாக உள்ளன. சங்க இலக்கியப் பாடல்கள் அன்று பல சிறுகுறு நாடுகளாக இருந்த 200க்கும் அதிகமான அரசர், போர்படைத் தலைவர்களை குறிப்பிடுகின்றன. தொல்லியல் ஆதார மூலங்கள் நம்மால் சரியாக காலம் குறித்துள்ளது. பண்டைத் தமிழர் வரலாறு பொமு 1ம் நூற்றாண்டு பிற்பகுதி முதல் அடுத்த 600 ஆண்டுகளில் வாழ்நிலை, சமூக நிலை, நம்பிக்கைகள் பற்றிய முக்கிய வரலாற்று ஆதாரமாக சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன.
சங்க இலக்கியம் அகம்- தாமிழர் காதல் & மண வாழ்க்கை; புறம்- வீரம், போர், அரசியல், வணிகம் போன்றவற்றை உள்ளடக்கியது. இப்பாடல்களில் தமிழ் கலாச்சாரம், கலை, விளையாட்டு, உணவு, ஆடைகள், கொண்டாட்டங்கள், தத்துவம், சமயங்கள், மரபுகள், சடங்குகள் பற்றிய விரிவாக தரப்பட்டுள்ளன. நாம் தெய்வ நம்பிக்கை மெய்யியல் குறிப்புகளை காண்போம்
ஆரிய இனவாதப் பொய்களும் - தமிழ் ஆய்வின் தொய்வும்: இந்தியாவை அடிமைப் படுத்தி ரூ.4000 லட்சம் கோடியை அள்ளிச் சென்றும், 20 கோடி இந்தியர்களைக் கொன்றது கிறிஸ்துவ ஆங்கிலேய ஆட்சி. தன் கொடுங்கோல் ஆட்சியை தக்க வைக்க மொழியியல் அடிப்படையில் ஆரிய - திராவிட இனவாதம் என்ற ஊகங்கல் பரப்பப்பட்டன. சிந்து வெளியில் கிடைத்த மொஹஞ்சதாரோ, ஹரப்பாவில் கிடைத்த அகழாய்வு ஆதாரங்களை ஆரம்பக் கட்டத்தில் ஆரியப் படையெடுப்பு ஆதாரம் எனப் பரபினர், ஆனால் அவை முழுவதும் தவறு என்று தெளிவாக அறிவியல் காட்டியது. ஜான் மார்ஷல் நூல் கூறுவது
தமிழ் ஆய்வு, கல்வி நிறுவனக்களில் நுழைந்த தமிழ் மரபிற்கு மாறான இடது சாரிகளும் அன்னிய மதமாற்ற சக்திகள் துணையான திராவிடியார் புலவர்களும் சங்க இலக்கியத்தில்
இவ்வுலகில் மனிதன் பிறப்பு இறப்புகள்; இன்ப துன்பங்களுக்கான காரணங்கள் தன்னை விட உயர்ந்த தெய்வீக சக்தியை உணர்ந்து, உயிர் மீண்டும் மீண்டும் பிறந்து வாகிறது எனும் மெய்மையை உணர்ந்து இறைவன் சார்ந்து செயற்படுவதே மெய்யியல் சமயம் ஆகும்.
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியினைக் காரிக்கிழார் பாடிய
"வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும்"
என்ற புறநானூற்றுப் பாடலில் இமயமலைதான் தமிழகத்தின் வடக்கெல்லை என்று கூறப்பட்டுள்ளது.
“வடக்கின் கண்ணது பனிதங்கிய நெடிய இமயமலையின் வடக்கும், தெற்கின் கண்ணது உட்குந்திறம் பொருந்திய கன்னியாற்றின் தெற்கும், கீழ்க்கண்ணது கரையைப்பொருகின்ற சகரரால் தோண்டப்பட்ட சாகரத்தின் கிழக்கும், மேல்கண்ணது பழைதாய் முதிர்ந்த கடலின் மேற்கும்” என்பதே அந்த வரிகளுக்கான பொருளென அப் புறநானூற்றுக்கான பழைய உரை கூறுகிறது.
இதனால், அம் முதுகுடுமிப் பெருவழுதிக் காலத்தில் ‘வடாஅது பனிபடு நெடுவரை’ எனப்படும் இமயமலைதான் தமிழர்களின் வடவெல்லையாயிருந்தது என்பது உறுதிப்படுகிறது.
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால் தளைப்படுத்தப்பட்டிருந்த யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைக் குறுங்கோழியூர்க்கிழார் பாடிய புறநானூற்றுப் பாடலிலும்,
எனப் புறநானூற்றின் பழைய உரை அவ் வரிகளுக்குப் பொருள் கூறுவதும் அதனை உறுதிசெய்கிறது. அதேபோல்,
"தென்குமரி வடபெருங்கல்
குணகுட கடலாஎல்லைத்
தொன்றுமொழிந்து தொழில்கேட்ப"
எனும் "மதுரைக் காஞ்சி" வரிகளுக்குப் பொருள் கூறுகிற நச்சினார்க்கினியர்,
“தென்திசைக்குக் குமரி எல்லையாக வடதிசைக்குப் பெரியமேரு எல்லையாகக் கீழ்த்திசைக்கும் மேற்றிசைக்கும் கடல் எல்லையாக இடையில் வாழ்வோரெல்லாம் தம்முடன் பழமையைச் சொல்லி ஏவல் கேட்கும்படி” என்று கூறுகிறார்.
இதனால், பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் காலத்திலும்கூட இமயமலையே தமிழர்களின் எல்லையாயிருந்தது என்பது உறுதிப்படுகிறது.
இந்த நிலையே சிலப்பதிகாரம் இயற்றப்பட்ட காலம் வரையில் நீடித்தது என்பதைப்
"பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசை ஆண்ட தென்னவன் வாழி!" எனும் சிலப்பதிகார வரிகள் காட்டுகின்றன.
வடவேங்கடம் என்பது விந்தியமலையைக் குறிக்கும். ‘வெப்பத்தைக் கடத்தும் மலை’ என்று பொருள்படுகிற 'வெம்+கடம்' என்பதே ‘வேங்கடம்’ என்றானதாம். ஆனால், 'தென்வேங்கடம்' என்பது திருப்பதி மலையைக் குறிக்கும். இதனடிப்படையில் பார்த்தால்,
"வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து" என்ற தொல்காப்பியப் பாயிரத்தில் வரும் ‘வடவேங்கடம்’ என்பது விந்தியமலையைத்தான் குறிக்கும். மிகத் தொன்மையான தொல்காப்பியத்திற்குக் கி. மு. 9ஆம் நூற்றாண்டில்தான் பனம்பாரனர் என்பவரால் பாயிரம் எழுதப்பெற்று நூலின் முன்பு ஒட்டப்பட்டது. இதனால், தொல்காப்பியத்திற்குப் பாயிரம் எழுதப்பெற்ற 9ஆம் நூற்றாண்டில் வடவேங்கடம் எனும் விந்தியமலை தமிழ்ப் பெருநிலத்தின் எல்லையாக சுருங்கியது புலப்படும்.
புறநானூற்றில் கூறியிருப்பது போலவே மதுரைக் காஞ்சியில் மாங்குடி மருதனாரும்,
தென்குமரி வடபெருங்கல்
குணகுட கடலா எல்லை (மதுரைக்காஞ்சி:70-71)
என்று தமிழகத்தின் எல்லையைச் சுட்டியுள்ளார்.
இவ்வடிகளில் பனம்பாரனார் தமிழகத்தின் வடக்கு எல்லையாக வேங்கட மலையையும், தென் எல்லையாகக் குமரிக் கடலையும் குறித்துள்ளார். அதுபோலவே, இளங்கோ அடிகளும் தாம் பாடிய சிலப்பதிகாரத்தில் தமிழகத்துக்கு வேங்கட மலையை வட எல்லையாகவும், கடலைத் தென் எல்லையாகவும் காட்டியுள்ளார்.
நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ் வரம்பறுத்த தண்புனல் நல்நாட்டு (சிலப்பதிகாரம்,வேனிற்காதை:1-2)
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லத நாடு. குறள் 735: நாடு.
இன மொழி, அன்னிய சமய, அரசியல், கருத்து முரண்பாடு வளர்த்து பல்வேறு குழுக்களாகப் பிரிந்து உடனிருந்தே அழிவு செய்யும் பகையும், அரசை நெருக்கடிக்கு உள்ளாக்கும் கொலைகார கலகக்காரர்கள் இல்லாது இருப்பதே நாடு.
வள்ளுவம் இப்படி அறிவுறுத்தியதின் உச்சமே அன்னிய மதமாற்ற சக்திக்ளின் ஆரிய - திராவிடியார் நச்சு ஊகங்கள். பாதிரி கால்டுவெல் மொழியியல் ஆய்வுகள் கூறுவது - தமிழ் மொழி மத்திய ஆசியாவின் ஸித்திய மொழிக் குடும்பம் சேர்ந்தது; இன்றும் பிரகூய் எனும் திராவிடிய மொழி சிந்து பகுதியில் பேசப் படுவது தமிழ் பேசும் மக்கள் கைபர்- போலன் கணவாய் வழியாக நுழைந்த அன்னிய வந்தேறிகள்.