ஏசு கிறிஸ்து எனப்படும் உலகில் மிக அதிகமான செலவில் பரப்பப்படும் கிறிஸ்துவப் புராணக் கதை நாயகன் இஸ்ரேலில், பொ.ஆ. முதல் நூற்றாண்டில் இஸ்ரேல் நாட்டை ரோமன் ஆட்சி செய்தபோது வாழ்ந்ததாராம். ஏசு தன்னை உலக முடிவில் வரவேண்டிய யூதர்களின் கிறிஸ்து- ராஜா என்பதாக இயக்கம் நடத்திட ரோம் ஆட்சியின் கவர்னர் பிலாத்து கைது செய்து மரண தண்டனையில் இறந்தார் என சுவிசேஷக் கதைகள் கூறுகிறது. ஏசு பற்றி இவருடைய சம காலத்தவர் யாரும், நேரடியாக பார்த்து பழகியோர் ஏதும் எழுதிவிட்டு செல்லவில்லை. ஏசு மரணத்திற்கு 40 வருடம் தொடங்கி அடுத்த அரை நூற்றாண்டில் மதம் பரப்ப புனையப்பட்டவை புதிய ஏற்பாடுசுவிசேஷக் கதைகள் .
ஏசு பற்றிய கதைகளின் ஒரே தரவு தரும் புதிய ஏற்பாடு ஏசு கதை சொல்லும் சுவிசேஷக் கதைகளீல் ஏடுகள் நம்பகத்தன்மை உள்ளதா என சோதனைகள் மூலம் பார்க்கலாம்.
1. BIBILOGRAPHICAL TEST : பைபிளொகிராபி சோதனை நம்மிடம் எத்தனை சுவடிகள், சொல்லப்படும் நபர்க்கும் சுவடிகளுக்கும் உள்ள இடைவெளி, இதை வைத்து NT-புஏ கதைகள் நம்பிக்கைக்கு உரியதாக புனைகின்றனர். அதாவது புஏ ஏடுகள் ஏசு மரணத்திலிருந்து 100 வருடத்திலிருந்து தெளிவான ஏடுகள் உள்ளதாம், 4ம் சுவிசேஷம் எழுதி 50 ஆண்டிற்கு உள்ளான கோடக்ஸ் பிரதி உள்ளது என்பர் 25000 மேலான சுவடிகள் உள்ளதாம். மழுப்பலாளர் சொல்வது அலக்சாண்டர் திருவள்ளுவரோ, அசோகரோ இவர்கள் பற்றி உள்ள ஏடுகள் அவர்கள் மரணத்திற்கு 1000 வருடம் பின்பு மிகச் சில ஏடுகள் மட்டுமே கொண்டு அவர்களை வரலாற்று நபர் என ஏற்கிறீர்கள். ஆனால் ஏசு பொ.கா.30 வாக்கில் மரணம், 130ஐ சேர்ந்த் பைபிள் ஏடுகள் உள்ளது என்கின்றனர்.
பழமையான ஏடுகள் 127: நாம் NTபுஏ- வின் பெரும்பாலன ஏடுகள் 127, மிகபபழமையானவை, இவை எங்கே உள்ளது எனும் இணையப் பக்கத்தைத் தருகிறோம் . இவை 2ம் நூற்றண்டின் இறுதியில் இருந்து 8ம் நூற்றாண்டு வரையிலானது எனப் பட்டியல் உள்ளது, இந்த ஏடுகளில், எந்த் NT-பூஏ புத்தகத்தில் எந்த அதிகாரம் உள்ளது என உள்ளது.இவற்றில் ஒரு ஏடு கூட 27 புத்தகங்களின் ஒரு புத்தகத்தின் முழு ஏடு கிடையாது.
http://en.wikipedia.org/wiki/List_of_New_Testament_papyri
இதில் மிகப் பழமையானது ஏடு பி.52 ஜான் ரைலேண்ட் ஏடாம்- 125 ஆனது என்கிறது. இந்த ஏடின் படம் கீழே ; அது பற்றிய இணைப்பும் தருகிறோம்.
http://en.wikipedia.org/wiki/Rylands_Library_Papyrus_P52
ஒரு கடன் அட்டையினை குறுக்கில் கிழித்த அளவு, முழுமையாக ஒரு வசனம் கூடக் கிடையாது. இந்த ஏட்டின் காலம் பற்றி கருத்து ஒற்றுமை இல்லையாம், தற்போதைய எழுத்தியல் ஆய்வு இந்த ஏட்டின் எழுத்துரு பொஆ 175 - 225 காலத்தது என்கின்றனர்.

இதற்கு அடுத்தது ஆக்ஸ்ரைன்கஸ் ஏடு Papyrus Oxyrhynchus 90 & 104
http://en.wikipedia.org/wiki/Papyrus_90 http://en.wikipedia.org/wiki/Papyrus_104
இதன் காலம் 150 – 200 எனப் படுகிறது. இவை தான் 2ம் நூற்றாண்டின் மிக முக்கிய ஏடுகள்
இந்த ஏடுகள் பைபிள் ஏடு என்பதால் இதை சுவிசேஷப்படி ஆக இருக்கலாம் என ஊகம் ஏற்பு; வேறு புத்தக ஏடு ஆக இருந்தால் இவை நிராகரிக்கப் பட்டு இருக்கும். இந்த ஏடுகள் எந்த விதத்திலும் பைபிளிற்கு நம்பகத் தன்மை தரவில்லை.
நாம் இந்த சோதனையில் இம்முடிவிற்கு வர மற்ற காரணிகள் இன்னும் எளிமையாக விளக்கும்