Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சேகர்பாபு - இந்து சமய அறக்கட்டளைத் துறை


Guru

Status: Offline
Posts: 7695
Date:
சேகர்பாபு - இந்து சமய அறக்கட்டளைத் துறை
Permalink  
 


திருமண மண்டபம் கட்ட பக்தர்கள் நன்கொடை தரவில்லை: தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து 17 Sep, 2025

புதுடெல்லி: திருமண மண்​டபம் கட்ட பக்​தர்​கள் நன்​கொடை தரவில்லை என்​றும், கோயில் நிதி​யில் திருமண மண்​டபம் கட்​டு​வதற்கு பதிலாக கல்வி நிலை​யங்​களை​யும், மருத்​து​வ​மனை​களை​யும் கட்​டலாம் எனவும் தமிழக அரசின் மேல்​முறை​யீட்டு வழக்கை விசா​ரித்த உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் கருத்து தெரி​வித்​துள்​ளனர்.

இதுதொடர்​பாக மதுரை மாவட்​டம் எழு​மலையைச் சேர்ந்த ராம ரவிக்​கு​மார் என்​பவர் உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில், “பழநி தண்​டா​யுத​பாணி சுவாமி கோயிலுக்கு சொந்​த​மான நிதி​யிலிருந்து ரூ.4.54 கோடி மதிப்​பீட்​டில் உத்​தம​பாளை​யத்​தில் திருமண மண்​டபம் கட்ட முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இது அறநிலை​யத்​துறை விதி​களுக்கு எதி​ரானது. கோயில் நிதி​யில் திருமண மண்​டபம் கட்​டக்​கூ​டாது. உத்​தம​பாளை​யம் திருக்​காளத்​தீஸ்​வரர் மற்​றும் நரசிங்​கப் பெரு​மாள் கோயில் பெயரில் உத்​தேச​மாக ரூ.400 கோடி நிதி உள்​ளது. இந்​நிலை​யில், பழநி கோயில் நிதியை பயன்​படுத்தி உத்​தம​பாளை​யத்​தில் திருமண மண்​டபம் கட்ட தடை விதிக்க வேண்​டும்” எனக் கோரி​யிருந்​தார்.

 

இந்த வழக்கை விசா​ரித்த உயர் நீதி​மன்ற மதுரை கிளை, அது தொடர்​பான அரசாணையை ரத்து செய்து கடந்த மாதம் உத்​தர​விட்​டது.

இந்த உத்​தரவை எதிர்த்து தமிழக அரசு சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது. இந்த மனு மீதான விசா​ரணை உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் விக்​ரம்​நாத், சந்​தீப் மேத்தா ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நடந்​தது. அப்​போது இதுதொடர்​பாக உயர் நீதி​மன்ற மதுரை கிளை பிறப்​பித்​துள்ள உத்​தர​வுக்கு இடைக்​கால தடை விதிக்க மறுத்த நீதிப​தி​கள், பக்​தர்​கள் அளிக்​கும் காணிக்கை திருமண மண்​டபங்​களை கட்​டு​வதற்​காக அல்ல. அந்த திருமண மண்​டபங்​களில் ஆபாச பாடல்​களை ஒலிபரப்ப கோயில் நிலம் பயன்பட வேண்​டுமா என்​றும் கேள்வி எழுப்​பினர். மேலும் திருமண மண்​டபங்​களுக்கு பதிலாக பள்​ளி, கல்​லூரி​கள் என கல்வி நிலை​யங்​களை​யும், மருத்​து​வ​மனை​களை​யும்​ கட்​டலாம்​ என கருத்​து தெரி​வித்​து வி​சா​ரணை​யை நவ.19-க்​கு தள்​ளி வைத்​துள்​ளனர்​.



__________________


Guru

Status: Offline
Posts: 7695
Date:
Permalink  
 

தமிழகத்தில் கோயில் நிதியில் கல்வி நிறுவனங்கள், வணிக வளாகம் கட்ட கூடாது: நீதிமன்றம்

மதுரை: தமிழகத்​தில் கோயில் நிதி​யில் திருமண மண்​டபம், வணிக வளாகம், கல்வி நிறு​வனங்​கள் கட்​டு​வது தொடர்​பாக 2021-22, 2022-23 2023-24, 2024-25, 2025-26 ஆண்​டு​களில் அறநிலை​யத் துறை பிறப்​பித்த அறி​விப்​பாணை​களை ரத்து செய்​யக் கோரி செந்​தில்​குமார், பாண்​டிதுரை, கனக​ராஜ், நாச்​சி​யப்​பன், ராம ரவி​கு​மார் ஆகியோர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்தனர்.

இந்த மனுக்​களை நீதிப​தி​கள் எஸ்​.எம்​.சுப்​பிரமணி​யம், ஜி.அருள்​முரு​கன் அமர்வு விசா​ரித்​தது. அறநிலை​யத் துறை சார்​பில் அரசு வழக்​கறிஞர் பி.சுப்பாராஜ், மனு​தா​ரர்​கள் சார்​பில் வழக்​கறிஞர்​கள் ராம.அருண்​சு​வாமி​நாதன், ஜெய​ராம் சித்​தார்த், ஏ.ஆர்.லக் ஷ்மணன், விஷ்ணுவர்த்​தன் ஆகியோர் வாதிட்​டனர்.

 

பின்​னர் நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தர​வு: கோயில் உபரி நிதி​யில் திருமணமண்​டபம், வணிக வளாகங்​கள், கல்வி நிறு​வனங்கள் கட்ட அரசு முடிவு செய்​துள்​ளது. இதை யடுத்து அறநிலை​யத்துறை பட்​ஜெட் நிதி மற்​றும் கோயில் உபரி நிதி​யில் கோயில் வளாகம் மற்​றும் பிற இடங்​களில் திருமண மண்டபம் மற்​றும் வணிக வளாகங்​கள் கட்ட அறி​விப்​பாணை​களை பிறப்பித்​துள்​ளது.

 

இந்த அறி​விப்​பாணை​கள் வணிக நோக்​கத்​தில் பல்​வேறு கட்​டிடங்​களை கட்​டு​வதன் மூலம் அறநிலை​யத் துறை வணிக நடவடிக்​கை​யில் இறங்​கி​யிருப்​பதை காட்​டு​கிறது. கோயில் உபரி நிதி​யில் திரு​மணம் கட்​டும் விவ​காரத்​தில் உயர் நீதி​மன்​றத்​தில் ஏராள​மான வழக்​கு​கள் தொடரப்​பட்​டு, அந்த வழக்​கு​களில் விரி​வாக விவாதம் நடத்​தப்​பட்டு உத்​தர​வு​கள் பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளன. அந்த வழக்​கு​களில் எழுப்​பப்​பட்​டுள்ள விவ​காரங்​கள்​தான் இந்த வழக்​கு​களி​லும் எழுப்​பப்​பட்​டுள்​ளன.

 

இதனால் அவற்​றின் உத்​தரவு இந்த வழக்​கு​களுக்​கும் பொருந்​தும். அந்த உத்​தர​வின்​படி, கோயில் நிதியை இந்து மத நிகழ்​வு​கள், கோயில் மேம்​பாடு, பக்​தர்​களின் நலன் ஆகிய​வற்​றுக்​குத்​தான் பயன்​படுத்த வேண்​டும். இதைக் கருத்​தில் கொள்​ளாமல் கோயில் நிதி​யில் வணிக ரீதி​யாக கட்​டிடங்​கள் கட்ட முடிவு செய்து அறி​விப்​பாணை​கள் வெளி​யிடப்​பட்​டுள்​ளன. இது அறநிலை​யத் துறை சட்​டத்​துக்கு எதி​ரானது. எனவே, கோயில் நிதி​யில் திருமண மண்​டபம் கட்​டு​வது தொடர்​பான அரசாணை ரத்து செய்​யப்​படு​கிறது எனக் கூறப்​பட்​டுள்​ளது.

 

இந்த உத்​தர​வின்​படி கோயில் நிதி​யில் திருமண மண்​டபம், வணிக வளாகம், கல்வி நிறு​வனங்கள் கட்​டு​வது தொடர்​​பான அரசு மற்​றும்​ அறநிலை​யத்​ துறை​யின்​ உத்​தரவு மற்​றும்​ அறி​விப்​​பாணை​கள்​ ரத்​து செய்​யப்​படு​கின்​றன. இவ்​​வாறு நீதிப​தி​கள்​ உத்​தர​வில்​ கூறியுள்​ளனர்​.

https://www.hindutamil.in/news/tamilnadu/1375538-court-orders-educational-institutions-shopping-malls-should-not-be-built-with-temple-funds-in-tn-1.html 



__________________


Guru

Status: Offline
Posts: 7695
Date:
Permalink  
 

கோயில் நிதியில் வணிக வளாகங்கள் கட்ட தடை: கட்டுமானப் பணிகளை நிறுத்திவைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு 26 Jun, 2025  https://www.hindutamil.in/news/tamilnadu/1366994-court-bans-construction-of-commercial-complexes-with-temple-funds.html 

 

 

கோயில் நிதியில் இருந்து வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் போன்றவற்றை கட்டுவதற்கு தடை விதித்துள்ள உயர் நீதிமன்றம், கட்டுமானப் பணிகளை நிறுத்திவைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவர் மயிலாப்பூர் டி. ஆர். ரமேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கோயில்களின் உபரி நிதியைக் கொண்டு வணிக வளாகம் கட்டுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளக் கூடாது என உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றமும் அதை உறுதி செய்துள்ளது.

 

ஆனால், இதை மீறி தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களின் நிதியைக் கொண்டு, திருமண மண்டபங்கள், கலாச்சார மையங்கள், நிர்வாகக் கட்டிடங்களை அறநிலையத் துறை கட்டி வருகிறது. இதுபோன்ற பணிகளை மேற்கொள்ளும் முன் பக்தர்களின் கருத்துகளை கேட்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட கோயிலின் அறங்காவலர்கள் குழுக் கூட்டத்தைக் கூட்டி, ஆட்சேபனையும் இல்லையென்ற பிறகே கட்டுமானப் பணிகளை தொடங்க வேண்டும்.

 

ஆனால், தமிழக அரசும், அறநிலையத் துறை அதிகாரிகளும் விதிமுறைகளுக்குப் புறம்பாக, தமிழகம் முழுவதும் தற்போது பல நூறு கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு கோயில்களில் கட்டுமானப் பணிகளை சட்டவிரோதமாக மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, மயிலாப்பூர் கபாலீஸ்வரர், சுசீந்திரம் குமாரசாமி, பழனி தண்டாயுதபாணி சுவாமி, ராமேசுவரம் ராமநாத சுவாமி, பவானி சங்கமேஸ்வரர், ஆனைமலை மாசாணியம்மன், பண்பொழி திருமலைக்குமார சுவாமி, காட்டுமன்னார் கோவில் பேசும்பெருமாள், ஈரோடு பண்ணாரி மாரியம்மன், திருநெல்வேலி நெல்லையப்பர், எழும்பூர் சீனிவாசப்பெருமாள், பாடி திருவல்லீஸ்வரர், ஸ்ரீவில்லிபுத்தூர் நாச்சியார், வீரபாண்டி கவுமாரியம்மன் உள்ளிட்ட கோயில்களின் நிதியில் இருந்து கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரப்பட்டு, பல இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

 

எனவே, கோயில் நிதியில் இருந்து எந்த கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என தடை விதி்க்க வேண்டும். மேலும், இது தொடர்பான டெண்டர் அறிவிப்பாணைகளையும் ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் வலியுறுத்தியிருந்தார்.

 

இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் பி.ஜெகந்நாத், நிரஞ்சன் ராஜகோபாலன் ஆஜராகி வாதிட்டனர். அறநிலையத் துறை தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ஆர்.ஆர்.அருண் நடராஜன், தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர் கே. கார்த்திக் ஜெகந்நாத் ஆகியோர் வாதிட்டனர்.

 

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "கோயில் நிதியைக்கொண்டு வணிக வளாகம், திருமண மண்டபம் போன்ற கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என ஏற்கெனவே பி.பாஸ்கர் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை அதிகாரிகள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இந்த வழக்கில் அறநிலையத் துறை தரப்பில் இரு வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஜூலை 24-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர். மேலும், அதுவரை எந்த கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது, தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும் அறநிலையத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 7695
Date:
Permalink  
 

திருச்சி லுத்தரன் சர்ச் -பிஷப் ஹைமன் நினைவு தொடக்கப்பள்ளி HM கிரேஸ் சகாய ராணி மகன் Dr. சாம்சன் டேனியல் ஹாஸ்டல் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை. கைது

 

 

திருச்சியில் அதிர்ச்சி... பிஷப் ஹைமன் நினைவுத் (தமிழ் சுவிசேஷ லுத்தரன் சர்ச் ) தொடக்கப்பள்ளி  ஹாஸ்டல் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை; தாய் தலைமையசிரியர். கிரேஸ் சகாய ராணி மகன் டாக்டர்  சாம்சன் டேனியல் மகன் அதிரடியாக கைது By : திருச்சி தீபன் | Updated at : 04 Sep 2024 

TELC%20d.png
 
 
 
 

 

 
 



கடந்த 6 மாத காலமாக, பள்ளி விடுதி மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அரசு மருத்துவர் சாம்சன்  போக்சோவில் கைது.

தமிழ்நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தொடர்ந்து பாலியல் ரீதியாக குற்ற சம்பவங்கள் வெளிவரும் நிலையில் திருச்சி தனியார் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக மருத்துவர் துன்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

https://tamil.abplive.com/news/trichy/trichy-news-school-students-molested-mother-son-arrested-tnn-199447

TELC%20school.jfif new-project-2024-09-04t183156.938-750x394.pngதிருச்சி மாநகர் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகள் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். மேலும் பள்ளியின் தலைமை ஆசிரியராக கிரேஷ் சகாயராணி பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் தலைமை ஆசிரியர் கிரேஸ் சகாயராணி என்பவரது மகன் சாம்சன் லால்குடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக உள்ளார். 

மேலும், தாய், பள்ளியின் தலைமை ஆசிரியையாக இருப்பதால், அவ்வப்போது, சாம்சன் டேனியல், பள்ளி விடுதிக்கு சென்று வருவதை யாரும் கண்டுகொள்வதில்லை. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி மாணவிகள் சிலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, குழந்தைகள் உதவி மையம் 1098 எண்ணிற்கு புகார் வந்ததன் அடிப்படையில், திருச்சி மாவட்ட சமுக நலத்துறை அலுவலர் விஜயலட்சுமி, திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒருங்கிணைந்த கோட்டை காவல் நிலையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரை அடுத்து சாம்சங் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து, கோட்டை அனைத்து மகளிர் பெண் காவலர்கள் சம்பவம் நடைபெற்ற பள்ளியில் சக பள்ளி குழந்தைகளிடம் தனித்தனியே விசாரணை நடத்தினர். 

மேலும் விசாரணை மேற்கொண்ட போலீசார் கூறுகையில்.. 

பாதிக்கப்பட்ட மாணவிகள், தலைமை ஆசிரியையின் மகன் என்பதால், வெளியே சொல்வதற்கு தயக்கம் காட்டியதாக கூறப்படுகிறது. அவரது அத்துமீறல் அதிகரிக்கவே, பாதிக்கப்பட்ட மாணவிகள், பெற்றோர் மற்றும் வார்டன் ஆகியோரிடம் தெரிவித்தனர். விசாரணையில், சாம்சன் டேனியல் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. 

மேலும், குற்றத்தை மறைத்ததாக கூறி பள்ளி தலைமை ஆசிரியை கிரேஸ் சகாய ராணியையும் நேற்று இரவு போலீசார் கைது செய்தனர். சாம்சன் டேனியில் சிகிச்சைக்கு வந்த பெண்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்தாரா என விசாரணை நடக்கிறது. 

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; அரசு மருத்துவர், அவரது தாய் கைது!    

 https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/trichy-melapudur-area-bishop-hyman-memorial-primary-school-incident
திருச்சி லேடீஸ் ஹாஸ்டல்ல பெண்கள் மீது "கை" வைத்த அரசு டாக்டர்.. அம்மா பண்ற வேலையா இது? ஸ்கூல் HM வேற

Read more at: https://tamil.oneindia.com/news/trichirappalli/trichy-government-school-head-mistress-and-lalgudi-gov-doctor-arrested-for-girls-students-hostel-iss-635579.html


__________________


Guru

Status: Offline
Posts: 7695
Date:
Permalink  
 

 

போலி NCC முகாம்கள் வழக்கு: தமிழ்நாடு அரசு ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் அறிக்கை தாக்கல் செய்ய மெட்ராஸ் உயர்நீதிமன்றம் உத்தரவு

வெளியீடு: நவம்பர் 21, 2024
ஆதாரம்: The New Indian Express

சென்னை: கிருஷ்ணகிரி மற்றும் பிற மாவட்டங்களில் நடைபெற்ற போலி NCC (தேசிய மாணவர் பயிற்சி படை) முகாம்களில் மாணவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கு தொடர்பாக, தமிழ்நாடு அரசு ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் விசாரணையின் முன்னேற்றம் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று மெட்ராஸ் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிபதிகள் டி. கிருஷ்ணகுமார் மற்றும் பி.பி. பாலாஜி அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு, இந்த உத்தரவை புதன்கிழமை (நவம்பர் 20, 2024) வழங்கியது. வழக்கறிஞர் ஏ.பி. சூர்யபிரகாசம் தாக்கல் செய்த பொது நல வழக்கு (PIL) மனுவை விசாரித்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மனுதாரர், பாலியல் வன்கொடுமை வழக்கை CBI (மத்திய புலனாய்வு அமைப்பு) விசாரிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

நீதிமன்றம், அரசு இந்த புகார்களுக்கு எதிராக விரைவாக நடவடிக்கை எடுத்ததை சுட்டிக்காட்டி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் தலைவரை விசாரணைகளை கண்காணிக்கவும், பள்ளி மாணவர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு ஆலோசனைகளை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டது.

மேலும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 1.7 கோடி ரூபாய் இழப்பீடு தொகையை உடனடியாக வழங்குமாறு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அரசு தரப்பு வழக்கறிஞர் (Advocate General) பி.எஸ். ராமன், நீதிமன்றத்திற்கு தெரிவித்ததாவது: ஒரு காவல் துறை தலைமை ஆய்வாளர் (IGP) தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழு (SIT) இந்த புகார்களை விசாரித்து வருகிறது. மேலும், பல துறைகளை உள்ளடக்கிய குழு, இதர தொடர்புடைய விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறது.

இந்த உத்தரவு, வழக்கு தொடர்பான விசாரணையில் வெளிப்படைத்தன்மையையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதையும் உறுதி செய்யும் முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது.

Fake NCC camps case: Madras HC directs TN government to file report every three months

The bench also directed the authorities concerned to disburse the compensation amount of Rs 1.7 crore to the affected children.
 
Updated on: 
21 Nov 2024, 9:00 am
 
1 min read
 
 

CHENNAI: The Madras High Court has directed the state government to file a report once in three months on the progress of the investigation and other actions taken in connection with the sexual assault of students at fake NCC camps held in Krishnagiri and other districts.

A division bench of Justices D Krishnakumar and PB Balaji passed the orders on Wednesday while disposing of a PIL petition filed by advocate AP Suryaprakasam seeking a CBI probe into the sexual assault.

Pointing out the swift action taken by the government on the complaints of sexual assault, the bench directed the district legal services authority head to monitor the inquiries and continuously interact with school children and submit suggestions.

The bench also directed the authorities concerned to disburse the compensation amount of Rs 1.7 crore to the affected children.

AG PS Raman informed the court that the special investigation team led by an IGP is probing into the complaints and the multi-departmental team is concentrating on other related matters.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard