Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: புலிமான்கோம்பை - சங்க கால நடுகற்கள் கண்டுபிடிப்பு - கா. ராஜன்


Guru

Status: Offline
Posts: 7474
Date:
புலிமான்கோம்பை - சங்க கால நடுகற்கள் கண்டுபிடிப்பு - கா. ராஜன்
Permalink  
 


சங்க கால நடுகற்கள் கண்டுபிடிப்பு
- கா. ராஜன்

 

இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட பழந்தமிழ் (தமிழ்ப் பிராமி) எழுத்துப் பொறிப்புப் பெற்ற மூன்று சங்ககால நடுகற்களை முதன்முதலாகத் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். தமிழகத்தில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டத்தில் அமைந்துள்ள புலிமான்கோம்பை என்ற சிற்றூரில் இந்நடுகற்கள் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டன. இச்சிற்றூரான புலிமான்கோம்பை வைகை ஆற்றின் தென்கரையில் வத்தலக்குண்டிலிருந்து தெற்கே 15 கி.மீ. தொலைவிலும் ஆண்டிப்பட்டியிலிருந்து 19 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

Old Stonesஇந்தியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவற்றில் மிகப்பழமையானவை என்ற பெருமையை இந்நடுகற்கள் தட்டிச் செல்கின்றன. வரலாற்றுச் சிறப்பு மிக்க இச்சங்ககால நடுகற்களின் கல்வெட்டுப் பொறிப்பு இதுவரை தமிழகத்தில் கிடைத்த பழந்தமிழ் (தமிழ் பிராமி) கல்வெட்டுகளில் காலத்தால் முந்தியதாகும். மூன்றடி உயரமும் ஒன்று முதல் ஒன்றரை அடி அகலமும் கொண்ட இந்நடுகற்கள் நிலத்தில் ஓர் அடி ஆழத்தில் நடப்பட்டிருந்தன. இந்நடுகற்கள் சங்ககாலத்தைச் சார்ந்த முதுமக்கள் தாழிகளை உட்கொண்ட ஈமச்சின்னத்தின் ஒரு பகுதியாக நடப்பட்டிருந் ததால் தமிழக வரலாற்றாய்விலும் சங்ககால ஆய்விலும் சிறப்பான இடத்தை பெற்றுத் திகழ்கின்றன.

சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பெறும் நடுகற்கள் தற்பொழுது முதன்முதலாகக் கிடைத்துள்ளதால் சங்க இலக்கிய ஆய்விற்கு ஒரு புதிய பரிமாணம் கிடைத்துள்ளது. இதுகாறும் தமிழகத்தில் சமணர் உறைவிடங்களிலேயே பழந்தமிழ் (தமிழ் பிராமி) கல்வெட்டுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவ்வரிய கண்டு பிடிப்பின் மூலம் தமிழக மக்கள் பரவலாக எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பது உறுதிப்படுகிறது.

ஈமச்சின்னத்தின் ஒரு பகுதியாகக் காணப்பெற்ற இந்நடு கற்கள் விவசாயத்திற்காக நிலம் பண்படுத்தப் பெற்றபொழுது அப்புறப்படுத்தப்பட்டுக் கிடந்தன. பின், கால ஓட்டத்தில் மண்ணுக்குள் புதையுண்டும் போயின. ஏராளமான முதுமக்கள் தாழிகள் புலிமான்கோம்பையிலும் பரல் உயர் பதுக்கைகள் இவ்வூரின் எதிர்ப்புறம் வைகை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள பூம்பட்டியிலும் காணக் கிடைக்கின்றன. புலியன் கோம்பைக்குக் கிழக்கே இரண்டு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தெப்பத்துப்பட்டி என்ற சிற்றூரிலும் ஈமச் சின்னங்கள் காணப்படுவதால் சங்ககாலத்தில் இப்பகுதி சிறந்த நிலையில் இருந்திருக்க வேண்டும் என்பது உறுதிப்படுகிறது.

கிடைக்கப் பெற்ற மூன்று நடுகற்களுள் ஒன்றில் “கல் பேடு தீயன் அந்தவன் கூடல் ஊர் ஆ கோள்” என்ற எழுத்துப் பொறிப்புள்ளது. இதற்கு, “கூடல் ஊரில் நடைபெற்ற ஆகோள் பூசலில் உயிர்நீத்த பேடு தீயன் அந்தவன் என்பவனுக்கு எடுப்பித்த கல் எனப் பொருள் கொள்வதால் இது வெட்சிப் பூசலில் (போரில்) ஈடுபட்ட வீரனுக்கு எடுக்கப் பெற்றதாகும். சங்க இலக்கியமான மலைபடு கடாம் கல்லெறிந்து எழுதிய நல்லரை மராஅத்த கடவுள் ஓங்கிய காடுஏசு கவலை எனவும் திருக்குறள் எந்தைமுன் நில்லன்மின் தெவ்விர் பலர் என்ஐ முன்னின்று கல் நின்றவர் எனவும் குறித்தலால் கல் என்ற சொல் நடுகல்லையே குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம். ஆகோளைப் பற்றி வரும் தெளிவான முதல் நடுகல் இது என்பது இங்குக் குறிப்பிடத்தகதாகும். தொல்காப்பியம் இதனை ‘ஊர் கொலை ஆகோள் பூசன் மாற்றே’ (தொல் 20:3) என்று கூறும்.

அடுத்த நடுகல்லின் முன்பகுதி உடைந்துபோய் உள்ளது. கி.மு.மூன்றாம் நூற்றாண்டிற்கும் முற்பட்ட பழந்தமிழ்ப் பிராமி வரிவடிவத்தில் எழுதப் பெற்ற இந்நடுகல்லில் இரு வரிகள் காணப் பெறுகின்றன. முதல் வரி ‘அன் ஊர் அதன்’ என்றும் இரண்டாவது வரியில் ‘....ன் அன் கல்’ என்றும் காணப் பெறுகின்றன.

அடுத்த நடுகல்லில் ‘வேள் ஊர் பதவன்’ எனக் காணப் பெறுகிறது. இதற்கு ‘வேள் ஊரைச் சார்ந்த பதவன்’ அவ்வன் என்பவனுக்கு எடுக்கப்பெற்ற நடுகல் எனப் பொருள் கொள்ளலாம்.

மேற்குறிப்பிட்ட மூன்று நடுகற்களில் இரண்டாவது மற்றும் மூன்றாவது நடுகற்கள் கி.மு.மூன்றாம் நூற்றாண்டிற்கும் முற்பட்ட காலத்தைச் சேர்ந்தவையாகும். ஆ கோளைப் பற்றிக் குறிப்பிடும் முதல் நடுகல் கி.மு. மூன்றாம் நுற்றாண்டைச் சேர்ந்ததாகக் கணக்கில் கொள்ளலாம். உயிரெழுத்துக்களில் பிரித்தெழுதப்படுதல் பழ மரபு. அதே மரபு இங்கும் பின்பற்றப்பட்டுள்ளது. எனவே இக்கல்வெட்டுகள் மூன்றும் காலத்தால் முற்பட்டவை எனக் கருதலாம். தொல்லெழுத்தியல், எழுத்தமைப்பியல் மற்றும் மொழியியல் ஆகியவற்றின் அடிப்படையில் இக்கல்வெட்டுக்கள் காலத்தால் முந்தியவை.

நடுகற்களைப் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் விரவிக் கிடக்கின்றன. இருபத்தைந்திற்கும் மேற்பட்ட சங்க காலப் புலவர்கள் இவற்றை வியந்து கூறியுள்ளனர். தொல்காப்பியம், அகநானூறு, புறநானூறு, மலைப்படு கடாகம், ஐங்குறுநூறு, பட்டினப்பாலை போன்ற இலக்கியங்கள் நடு கற்களைப் பற்றியும் அவற்றில் காணப்பெறும் எழுத்துக்களைப் பற்றியும் சிறப்புறக் கூறுகின்றன. சீத்தலைச் சாத்தனார், “விழுத்தொடை மறவர் வில்இட வீழ்ந்தோர், எழுத்துடை நடுகல்” (அகம்:53) எனவும் ஓதலாந்தையார், “வழுத்தொடை மறவர் வில்லிடத் தொலைந்தோர், எழுத்துடை நடுகல்” (ஐங்குறுநூறு:352) எனவும், மதுரை மருதன் இளநாகனார், “பேஎம் முதிர் நடுகல், பெயர் பயம் படரத்தோன்றும் குயில் எழுத்து” (அகம் :297), “மரம்கோள் உமண்மகன் பெயரும் பருதிப், புன்தலை சிதைத்த வன்தலை நடுகல்,கண்ணி வாடிய மண்ணா மருங்குல், கூர் உளி குயின்ற கோடுமாய் எழுத்து” (அகம்: 343) எனவும் குறிப்பிடுகின்றன. இக் குறிப்புகள் அனைத்தும் சங்க காலத்தில் எழுப்பப்பெற்ற நடுகற்களில் எழுத்துக்கள் இருந்தன என்பதைப் புலப்படுத்துகின்றன. இப்போது கிடைத்துள்ள சங்ககால நடுகற்கள் மூலம் முதன்முறையாக இவ்வுண்மை உறுதிப்படுத்தப் பெறுகிறது.

5dd%2Bpuliman%2Bkombais.jpg

இந்நடுகல்லின் ஒளிப்படத்தைப் பார்வையுற்ற மூத்த கல் வெட்டறிஞரும் தமிழ்ப் பிராமி வரிவடிவ ஆய்வில் ஆழ்ந்த புலமை பெற்றவருமான ஐராவதம் மகாதேவன் அவர்கள் இந்நடுகற்களைக் கண்டுபிடித்த ஆய்வுக் குழுவிற்குத் தமது பாராட்டுக்களையும் மகிழ்வையும் தெரிவித்துக் கொண்டார். மேலும், இந்நடுகற்களைக் குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு: எழுத்தமைதியின் அடிப்படையில் இந்நடுகற்கள் மாங்குளம் தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுக்களை ஒத்திருப்பதால் இவற்றின் காலத்தை கி.மு.இரண்டாம் நூற்றாண்டின் துவக்கக் காலத்திற்கு முன்பாக எடுத்துச் செல்லலாம்; இந்தியாவில் கிடைத்த நடுகற்களில் காலத்தால் முந்தைய நடுகற்கள் என்ற பெருமையை இந்நடுகற்கள் பெறுகின்றன; தமிழகத்தில் கிடைத்த தமிழ்ப் பிராமி கல்வெட்டுக்களில் பிராகிருதச் சொற்கள் கலந்து வரும் நிலையில் இந்நடுகற்கள் பிராகிருதச் சொற்களின் கலப்பின்றித் தூய தமிழ்ச் சொற்களைக்கொண்டு எழுதப் பெற்றுள்ளன; சங்க காலத்தில் தமிழகம் முழுவதும் கல்வி அறிவைப் பெற்றுத் திகழ்ந்திருந்ததை இக்கண்டுபிடிப்பு உணர்த்துகின்றன’.

இந்நடுகற்களைப் படித்துணர்வதற்குத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியரும் இந்திய வரலாற்று ஆய்வுக்கழகத்தின் உறுப்பி னருமான பேராசிரியர் எ.சுப்பராயலு அவர்கள் பெரிதும் துணைபுரிந்தார். முன்னாள் கல்வெட்டியல் துறைத் தலைவர் பேராசிரியர் செ.இராசு அவர்கள் இலக்கியச் சான்றுகளை அளித்துதவினார். மத்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையைச் சார்ந்த முனைவர் சு.இராசவேலு, டாக்டர் இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையத்தின் இயக்குநர் முனைவர் இல. தியாகராஜன் மற்றும் கல்வெட்டறிஞர்கள் முனைவர் சூ.சுவாமிநாதன், முனைவர் மு.நளினி போன்றோர் கல்வெட்டுக்களைக் கண்ணுற்று இக்கண்டுபிடிப்பை நிகழ்த்திய ஆய்வுக்குழுவைப் பாராட்டினர்.

இந்நடுகற்கள் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையின் தலைவர் முனைவர். கா.ராஜன் தலைமையில் இயங்கிய ஆய்வாளர்கள் திரு.வி.பி. யதீஸ்குமார் மற்றும் திரு.சி.செல்வ குமார் ஆகியோர் கள ஆய்வில் கண்டுபிடித்தனர். ஆய்வாளர் முனைவர் மா.பவானி மற்றும் திரு.ச.வெங்கடாசலம் ஆகியோர் நடுகற்கள் கிடைத்த இடத்திற்கு வந்து கல்வெட்டுக்களைப் படிக்க உதவி புரிந்தனர். இக்களப் பணி ஃபோர்டு அறக்கட்டளைத் திட்ட நல்கையிலும் பல்கலைக்கழக மானியக்குழுத் திட்ட நல்கையிலும் மேற்கொள்ளப் பெற்றது.

5dd%2BThathappaddi.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
RE: புலிமான்கோம்பை - சங்க கால நடுகற்கள் கண்டுபிடிப்பு - கா. ராஜன்
Permalink  
 


Discovery of Memorial Stones  - K. Rajan

The Tamil University of Archeology and Archeology has discovered the first of three sociological inscriptions that date back to two thousand three hundred years. These traces were recently discovered in Pulimankompai, a small town located in the Andipatti circle of Theni district in Tamil Nadu. Pulimankompai, 15 km south of Vattalakund, on the banks of the Vaigai river. It is 19 km from Andipatti. Located far away.

 

The Old Stones boast of being the oldest discovered in India. The earliest inscriptions of this period of historical history date back to the oldest Tamil Brahmi inscriptions ever found in Tamil Nadu. These Stones, which are three feet high and one and a half feet wide, were planted in the ground one and half foot deep. These areas are a part of the Sangam age-and burial stones of the Sangam age and have a special place in the history and sociology of Tamil Nadu.

Since the basics of association literature are now available for the first time, a new dimension to the study of Sangam literature. Ancient Tamil (Tamil Brahmi) inscriptions have been found in Jain enclosures in Tamil Nadu. It is certain that the people of Tamil Nadu were widely literate by this invention.

These stones, which were part of the Burial, were discarded when the land was cultivated for agriculture. Then, in the course of time, the soil was buried. Numerous elder Memorial stores are found in the Pulimankombai and the high-pitched buoys are located on the northern bank of the Vaigai river. Two km east of Puliyan Kombu. Ancient Burial spots is also visible in the distance of Theppattupatti, which is believed to have been in good condition during the Sangam period.

One of the three Stones discovered has the inscription

 "Kal Badu thiiyan Aanthavan Koodal Ur a kol".

 

It is said to be the stone that was given to Badu Devayan Andavan, who died in the Akhil conflict in Kootal, which was taken for a warrior. The Memorial stone of the Sangam literature(Malaipadukadam), the name of the Goddess of the Goddess of Goddess, is the concern of the forest, and the fact that many of the people of Nikkunnil Thevir of Thirukkural Etiyamun Nilmanin Tevir stood before the stone. Significantly, this is the first clear-cut plant about Akol. Tolkappiyam refers to this as a substitute for the local murder (Tol 20: 3).

 

The front of the next stone is broken. Two lines are found in this stone, written in the ancient Brahmi script, dating back to earlier than third century BC. The first line appears as                    “an uu a than” and the second line as “n a n kalr”.

 

In the next Stone, it is read as “vel ur av van  pa ta va n”. This may mean the Memorial stone was erected for patavan avvan of Vel town .

The second and third of the three stages date back to the third century BC. The first plant to refer to the planet The third can be considered as belonging to the microcosm. Extracting in vowels is a fruit tradition. The same tradition has been followed here. So these arguments can be thought of as a three-period process. These artefacts date back to the time of archeology, typology and linguistics.

References to corpses are scattered throughout the Sangam literature. More than twenty-five Sangam age scholars have wondered this. Literature such as Tolkappiyam, Akanaguru, Suburban, Mountaineering, Five hundred and Pattanapalla specializes in medieval stones and the writings found in them. Seethalayan satanar, "Pattukkodu Maravaru Vildevadal, Spell Planting" (cf. 53) was also read, "Palludodu Maravar Viditatal Vidhathil, Spelling Plant" (Five hundred: 352), Madurai Marudan Illanganal, "Beam Mudimir Nadugal," ”(Cf. 297),“ The name of the wooden pole is also referred to as cottonwood, mulch, mulch, mud mud, and chisel. ”(Cf. 343). All these notes indicate that there were alphabetical inscriptions emerging during the Sangam period. This is the first time the association has been confirmed by the sociological practices available.

Irawatham Mahadevan, a veteran epigraphist of Tamil Brahmi script, who had seen the photos, expressed his appreciation and gratitude to the research team who discovered the Memorial stone. Moreover, his comments on these inscriptions are as follows: the letter type resembles the Tamil inscription of Mangulam, which dates back to the early second century BC; and could be the earliest surviving Memorial stones; In the Tamil Brahmi inscriptions found in Tamil Nadu, normally the Prakrit words are mixed with tamil words, these stone inscriptions are without the mix of Prakrit words; The discovery indicates that the Tamils ​​throughout the Sangam era were educated.

Former Professor of Tamil Studies and Member of the Indian Institute of History, Prof.Suparayalu contributed greatly for reading this Memorial stone study and deciphering. Former HOD of Epigraphy Professor Prof. S.Raju gave literary proofs. Dr. Rajvelu of Central ASI. Dr . Thiagarajan of Doctor Rajamanikanar Center for Historical Research and the etymologists Dr. Su.Swaminathan and Dr.M.Nalini hailed the inspection of the inscriptions.

These Stones were found by a team of Analysts led by K. Rajan headed by  are the head of the Department of Archeology and Archeology at the Tamil University. Analysts Mr.V.P. Yateskumar and Mr. C. Selva Kumar found it in the field study. Analyst Dr. M.Pavani and Mr. S. Venkatachalam came to the site and helped to read the inscriptions. This work was carried out in the Ford Foundation project and the University Grants Commission project.

This is a rough Translation of Article by Dr. Rajan to a Tamil Net Magazine Keetru

http://www.keetru.com/puthuezhuthu/jul06/rajan.php?fbclid=IwAR2gbXzIn0ykt0vnLvWUtTW7QQ6icTCzozYsJAe9NZcTlQGXdp3d_UEILLE&__cf_chl_jschl_tk__=52da8bb28ec43bf1d6a8d7628e7f2edd0ae1c944-1592730677-0-AekcPkdHszAUcJi_hvbOoVRfV-4PI4egFlfcxUPwOHhpAIrBwpJTNCGRejcbRqyHBlSV-VEWZcA8vihIrUtVTmXGGeqJLmiRDqBp8q-x1Kej5qpTVPDhR7YjPTYGYc2mdmwPL3wGEAfhZ9t7cfiurBE5K6S0X-24Z8dAwNVtXO0uHBU0-f1fzdtRJWATdHx4kXNl5JtdIRHZws12arm9ebFK8S0xSDefZWxWEksq1Fnfe8ZgHHd2wg3P1-E34cEjF0H7sZpZT_GyDBZ7Xrp_yk8cnJ2Zv-juD0T8EBtRw3CuA56KzsmTEMzDlDH7Y-BhcdNcchUboMXQpFVcagb637Z1vE-GyfOyjU-XLFp718la6FXil7sNKV8uvVHi4ztt7Zctekn50FOJY4ouPGv9ia_whdfUVtTnAQ9SCg8UYWFCjb4rPCRllZdIV36QVnrBZHN8nKLijd2qdZvG57iSElU



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
புலிமான்கோம்பை - சங்க கால நடுகற்கள் கண்டுபிடிப்பு - கா. ராஜன்
Permalink  
 


Stone with Tamil Brahmi script lies forgotten

 
 
 
 Dadappatti.png
The ancient stone at a village in Dindigul. (inset) Epigraphists reproduced the text that said it is a memoria...Read More
 
CHENNAI: The excavations at Keeladi, where scientific findings revealed the date of the Tamil Brahmi script to be 600BC, would have been expected to create an interest around the ancient script. But a menhir (memorial stone) with ancient Tamil Brahmi inscription discovered more than a decade ago lies neglected under an overgrowth in a remote village in Dindigul.
Considered one of the earliest memorial stones, dating to 300BC with Tamil Brahmi inscriptions, it was discovered in 2007 in Thathapatti , a remote village near Vatalagundu in Dindigul. The three other hero stones with Brahmi inscriptions discovered in the nearby Pulimankombai had been shifted to the Tamil University in Thanjavur long ago. But when epigraphists tried to remove the stone from Thathapatti, locals objected saying it was worshipped. But today it lies forgotten.
 
It was archeologist V P Yatheeskumar who discovered the memorial stone in Thathapatti in 2007. Senior epigraphist K Rajan who visited the spot then, said he wanted to preserve it. "When we were about to lift it, the locals said ‘it was under worship’. We had no other option but to leave it there," said Rajan.
A couple of years later, Rajan revisited the site, but he couldn’t locate the memorial stone. "It was covered under the bushes. It took some time for us to clear it. My idea was to place it horizontally so that the Tamil Brahmi script inscribed on it would be visible. But the locals again intervened. I made another suggestion to shift it to the nearby school, but that too didn’t work out," said Rajan, author of ‘Early writing system: A journey from Graffiti to Brahmi’. Rajan feels the state archaeology department should intervene and take the stone to a museum. But an official from the department said they would look into the matter since it is under worship.
The memorial stones with Tamil Brahmi inscriptions found in Pulimankombai and Thathapatti are considered to be one of the oldest to be found in Tamil Nadu. While three other Tamil Brahmi inscriptions on memorial stones found in Pulikankombai speak of cattle raids, the one-metre-tall memorial stone in Thathapatti is associated with an urn burial. It reads ‘n ation pakal paliy kal’, which means the memorial stone erected for a servant by his master.
The memorial stones discovered in Pulimankombai and Thathapatti lie on the banks of Vaigai river and the villages close to Madurai, which is near the ancient trade route connecting the Pandya capital with the Chera country. Heritage expert K T Gandhirajan said a shelter is to be built to cover the memorial stone. K Santhana Durai, owner of the land on which the menhir, said he is ready to offer help if anyone comes forward to preserve the menhir.


-- Edited by admin on Monday 22nd of June 2020 06:55:43 AM

__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 



-- Edited by admin on Monday 6th of July 2020 09:04:40 AM

__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

5dd%2BThathappaddi.jpg Dadappatti.png

Pulimankombbai.png



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
RE: புலிமான்கோம்பை - சங்க கால நடுகற்கள் கண்டுபிடிப்பு - கா. ராஜன்
Permalink  
 


5dd%2Bpuliman%2Bkombais.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

%25E0%25AE%2595%25E0%25AF%2580%25E0%25AE keezhadi-brami%2Bscript.bmp 

உள்ள தரவுகள் அடிப்படையில் தான் படிக்க இயலும், அதன் முடிவுகள் பிராமி வடமொழிக்கு உருவானது, தமிழ் அதை ஏற்று வளப் படுத்தியதுஉள்ள தரவுகள் அடிப்படையில் தான் படிக்க இயலும், அதன் முடிவுகள் பிராமி வடமொழிக்கு உருவானது, தமிழ் அதை ஏற்று வளப் படுத்தியது

ஆதன் என்னும் பெயரிலும் அ என்னும் குறில்தான் உள்ளது 

பிராமி கல்வெட்டுகளில் குற்றியல் எகரம் உகரம் இல்லை, ஆனால் வடமொழி வர்க்க எழுத்துக்களுக்கு எழுத்து உரு உள்ளது, வடமொழி எழுத்துருவை தமிழ் பெற்றுக் கொண்டது என உலகின் நடுநிலை கல்வெட்டு படிப்பு துறை, மற்றும் எழுத்தின் வளர்ச்சி ஆராய்ச்சியாளர் epigraphy & paleography ஏற்கின்றனர்.

ஹார்வர்டு வரலாற்று ஆசிரியர் சீ பார்மர் தளத்தில் தொல்காப்பியம் காலம் என உள்ள கட்டுரை.
மொழியியல் என்பது இலக்க்கண ஆடிப்படையில் நேர்மையாய் செய்ய வேண்ட்டும். முன்பு அறிவு பூர்வமற்றபடி வேர் சொல்கிறேன் என அவரவர் கூறியது எதையும் பன்னாட்டு பல்கலைக் கழக தமிழ் சேர்கள் ஏற்கவில்லை, மேலும் இப்போது அதே நடைமுறையில் வேர் தெலுங்கு என கட்டுரைகளும் உள்ளது http://www.safarmer.com/Indo-Eurasian/bglswamy.pdf

மதுரை தேனூரில் 2009-ம் ஆண்டு கிடைத்த தங்கக் கட்டியில் உள்ள பிராமி எழுத்துக்களை "போகுல் குன்றக் கோதை'" என உள்ளது என மிக வளமான புனையல், ஆனால் அதையே படித்த டாக்டர்.இரா.கிருஷ்ணமூர்த்தி, "அரசன்கு கொற்கொய்கோன்' என்கிறார் - இப்படியானவற்றை என்ன செய்வது

பிராமியின் உருவாக்கம் பற்றிய அறிவு சார் பன்னாட்டு அறிஞர்கள் யாரும் நீங்கள் கூறும் தமிழ் பிராமி முன்னர் என்பதை ஏற்கவில்லை, பொருந்தல், கொடுமணல், கீழடி, இலங்கை அனுராதபுரம் பானை கீறல்களில் பல வடமொழி எழுத்தோடான பெயர்கள் படிக்கப் பட்டமை அதை மேலும் உறுதி செய்கின்றன, பானை கீறலை பேலியோக்ரேபி முறையில் ஆராய்ந்தால் மேலும் தெளிவு வரும்.

Arunkumar Pankaj பொருந்தலில் கிடைத்தது ஒரேயொரு வார்த்தை தான்..

ஆகவே தான் பேரா.கா.ராஜன் அதனை தனித்து காட்டாமல் அதற்கு இணையான காலகட்டத்தை சேர்ந்த கொடுமணல் ஆய்வுகளுடன் காலத்தை பொறுத்திக் காட்டுகிறார். கொடுமணலில் கிடைத்த பானைக்கீறல் எழுத்துக்களை அட்டவணைப்படுத்திய அவர், கொ
டுமணல்-பொருந்தல் ஆய்வு அசோகருக்கு முற்பட்ட காலத்தில் தமிழ் எழுத்துக்கள் மட்டுமல்ல வடமொழி எழுத்தும் இருந்தமைக்கும் சேர்த்தே சான்று பகர்வதாக தனது "Early writing system" புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்..

கொடுமணலில் உள்ள சாத்தன் பெயர்கள் பெரும்பாலும் "ஸாத்தன்" என்றே உள்ளன. இதெல்லாம் அப்பவே ஒழுங்கா படிச்சிருந்தா "வடமொழி புழக்கத்தில் இல்லாத காலத்திலேயே இங்கு தமிழ் தனித்து இருந்தது" என்று உளறிக்கொண்டு இருக்க மாட்டார்கள்..

Vicky Kannan பிராக்கிருதத்தை எவ்வாறு அணுகுவதுனு லாம் நல்லாவே தெரியும். தொல்காப்பியம் லாஜிக் ஓட்டாண்டிகள் எல்லாம் இருக்கட்டும் அந்த கிமு 500 பாணிணி க்கு எதுனா ஆய்ந்து அறிந்திருந்தா என்னைபோன்ற நுணிப்புல் மேய்ந்தவர்களுக்கு தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். பிராக்கிருத பிராமி தமிழ நாட்ல கிடைச்ச மாதிரி வட இந்தியால எங்கேயாவது கிடைத்திருந்தாலும் சொல்லவும் ஏன்னா நாங்க நுணிப்புல் கோஷ்டி.. சர்வாள் தொல்லியலில் நீந்துபவர்.

Arunkumar Pankaj 1. தமிழ்நாட்டில் தான் பானை கீறல்கள் எழுத்துக்களோடு கிடைக்கின்றன.

2. பானையில் அதன் உரிமையாளரோ பானை வனையும் குயவரோ தான் எழுதியிழுக்க முடியும்.


3. ஆக, அக்கால தமிழகத்தில் பாமரர்களும் கல்வியறிவோடு திகழ்ந்தது புலனாகிறது.

4. கிடைக்கும் பானை பொறிப்புகளில் வடமொழி எழுத்துக்களும் கலந்த வார்த்தைகளும் உள்ளன

5. ஆக அக்கால பாமர தமிழர்கள் தமிழ் மட்டுமல்ல வடமொழியில் எழுதவும் படிக்கவும் தேர்ச்சி பெற்றிருந்தனர்..

6. கிடைக்கும் வார்த்தைகள் அனைத்தும் தனிநபர் பெயர்களே.

7. ஆக தமிழர்கள் இன்று போலவே அக்காலத்திலும் வடமொழியிலும் பெயர்கள் வைத்திருந்தனர்.

8. 7வது point லாஜிக் இடிக்குது - வடமொழி எழுத்து கலந்த தமிழ்பெயர்கள் வைத்திருந்தனர்.

9. 8வது பாயிண்டுக்கு 7வது பாயிண்டே பரவாயில்லை.

10. எப்படி சமாளிக்கறது?!! அந்த வடமொழியையும் தமிழர்கள் தான் கண்டுபிடித்தனர்னு சொல்லிட்டா எல்லாம் tally ஆகிடும். எப்படி ஐடியா?!!



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

Jayabalan Govindhasami குவிரன் தமிழ்ப்பெயராக இருந்தால் சங்க இலக்கியத்தில் எங்கும் வரவில்லையே ஏன்?

Muthalagan Jayabalan Govindhasami சங்க நூல்கள் பெயர்ப் பட்டியல்கள் அல்ல,
கல்வெட்டுகளிலும் பானையோடுகளிலும் காணப்படும் பலநூறு பெயர்கள் தமிழ் இலக்கியங்களில் இல்லை என்பதாலேயே அவை தமிழ்ப்பெயர்கள் அல்ல என்ற முடிவுக்கு வருதல் அறியாமையே.
வேர்ச் சொல் நோக்கியே முடிவு செய்தல் வேண்டும்.

Jayabalan Govindhasami Muthalagan
கபிலர், தாமோதரனார், உருத்திரங் கண்ணனார், விண்ணந்தாயனார், உக்கிரப் பெருவழுதி இவற்றுக்கு வேர்ச்சொல் ஆய்வு சொல்லுங்க!

Muthalagan Jayabalan Govindhasami கபிலர். உக்கிரப்.. தாமம் எனும் சொற்கள் வட சொல்லாக இருப்பது உண்மை.இது போல் கலந்து விட்ட வட சொற்களை அறிஞர்கள் விவரித்துள்ளனர். அதற்காக குவிரன் என்ற சொல்லைக் குபேரன் என்ற சொல்லிருந்துதான் வந்தது எனும் ஐராவதத்தில் கருத்தை எப்படி ஏற்க முடியும்?
குவி என்பதற்குச் "சேர்தல் " "நிறைதல் " "ஒன்றாதல் "எனப் பல பொருள் உணர்த்தும் சொல்லிருந்துதான் குவியல் எனும் சொல் உருவாகும். செல்வன் எனும் பொருள் தரும் குவிரன் குவியன் முதலிய தோன்றியிருக்கும்.

தமிழ் நாட்டில் பல இடங்களில் கிடைத்த பானையோடுகளில் இப்பெயர் உள்ளது. பரவலாக அப்பெயர் வைக்கும் மரபுள்ளதை அறியலாம்.

சங்க இலக்கியத்தில் வடமொழிப் பெயர் வருதல் உண்மையே. அதை நான் மறுக்கவில்லை.
குவிரன் எனும் சொல் வட சொல் என்பதற்கு வடமொழி வேர்ச் சொல் காட்டுக நண்பரே.

Jayabalan Govindhasami Muthalagan
அய்ராவதம் அய்யர் சொல்லிவிட்டார் என்பதற்காக மறுத்தே ஆக வேண்டும் எனப் பிடிவாதமாக இருக்கக் கூடாது.


ஸ என்ற எழத்தே தமிழில் கிடையாது. வட பிராமி எழுத்து. அந்த எழுத்தை வைத்து 'ஸாலகன்' என்ற பெயர் கொடுமணலில் கிடைத்துள்ளதைப் பாருங்கள்.

ஆக, பழமையில் மாட்டுவது எல்லாம் தமிழ்தான் என மல்லுக்கட்டக் கூடாது.

பலவகைகளில் குறுக்காய்வு( Cross check) செய்தே ஏற்க வேண்டும்.

சங்கப்பாடல்களில் ஆயிரக்கணக்கான பெயர்கள் வந்துள்ளதை நண்பர் கவனிக்க வேண்டுகிறேன்

Muthalagan Jayabalan Govindhasami சங்கப் பாடலில் ஆயிரக் கணக்கான வட சொற்கள் இல்லை. நூற்றுக்கணக்கில்தான் உள்ளன. நம் வாதம் அதுவன்று
குவியன் எனும் சொல் வடசொல் என்றால் அதற்கான சான்றை நிறுவுக. மானியர் வில்லியம்ஸ் அகராதியையும் துணைக்கு வைத்துக் கொள்க.


பல அகழாய்வில் கிடைத்திருக்கும் வடமொழிச் சொற்கள் குறித்து நன்கு அறிவேன்.

பிறவற்றைப் பேச இது இடமில்லை. அருள்கூர்ந்து குவிரன் என்பதற்கு வேர்ச்சொல் காட்டுக.

Jayabalan Govindhasami Muthalagan
குபேரன் என்ற வடசொல்லே 'குவிரன்' எனத் தமிழில் திரிந்து வழங்கி உள்ளது என்பது என் கருத்து.


குபேரன் இந்து மதம் தமிழ்நாட்டில் நுழைவதற்கு முன்பே சமண, பவுத்த மத பரவலால் வந்திருக்கிறது.

நான் சங்கப்பாடல்களில் ஆயிரக்கணக்கான தமிழ்ப்பெயர்கள் வந்துள்ளன.அவற்றில் குவிரன் எங்கும் காணப்படவில்லை என்பதையே கூற வந்தேன்.

Jayabalan Govindhasami Muthalagan குவிரன் காணப்படவில்லை.

ஆனால், கபிலர், தாமோதர் என்ற வடசொல் சங்க காலத்திலேயே வந்துவிட்டதற்கு சான்று உள்ளது.


சங்கப்புலவர் தாமோதரனார் யார்?
'தாமோதர' என்ற வடசொல் பெயரில் இருந்து எழுந்ததுதானே!

விண்ணந்தாயனார் யார்?
'விஷ்ணுதாச' என்ற வடசொல்லில் தமிழின் 'அன்' விகுதி சேர்த்து 'விஷ்ணுதாசன்' ஆக்கி உள்ளனர்.

'விஷ்ணு கிரஹம்' தமிழில் 'விண்ணகரம்' ஆகி 'நந்திபுர விண்ணகரம்' என பழையாறை ஜெகநாதப் பெருமாள்கோவிலுக்குப் பெயராயிற்று.

ஆக, விஷ்ணுதான் 'விண்ணு'. தாஸன்- தாயன் என 'ஸ' வை விலக்கி தமிழ்ப்படுத்தப்படுகிறார்.

அதுவே, விண்ணந்தாயன் என்ற புலவர் பெயர்.

சங்க இலக்கியத்திலேயே இப்படி ஒரு சில புலவர்கள் பெயர்கள் வடமொழிப் பெயர்களாக நுழைந்திருக்கும்போது ரோம், கிரேக்கம் போன்ற நாடுகளினுடேயே கீழடி மக்கள் வணிகம் செய்ததற்கு ஆதாரம் கிடைத்திருக்கையில் வட இந்தியாவுடனும் வாணிகத் தொடர்பு வைத்து , அதன்வழி சமணம், பவுத்த தாக்கம் கீழடியிலும் ஏற்பட்டு டப்புக்கே' அதிபதியாகிய 'குபேரன்' பெயரில் பேரார்வம் ஏற்பட்டு அதை ஏன் 'குவிரன்' என மாற்றி வைத்திருக்கக் கூடாது?

இதையும் எண்ணிப் பாருங்கள்!

Jayabalan Govindhasami அதில் 196- ம் பக்கத்தில், "தமிழ்ப் பொறிப்புகளில் உள்ள குவிரன் (குபேரன்) போன்ற பெயர்களும் வணிகர்களால் விரும்பி ஏற்ற பெயர்களாகும்!" என அவர், குபேரன் என்ற வடமொழிப்பெயர்தான் 'குவிரன்' என ஆகியுள்ளது என்று குறிப்பிட்டு இருப்பதைப் பாருங்கள்.

இதில், வடமொழி 'ஸ' வர 'விஸாகீ' என்ற வடமொழிப் பெயர் கொடுமணலில் கிடைத்துள்ளதைப் பாருங்கள்.

Muthalagan Jayabalan Govindhasami அதற்கான மறுப்புதான் என் பதிவு. வழக்கத்தில் சிற்றூர்களில் குவியன் எனப் பெயர் வைக்கும் முறையுள்ளது அதை நான் சுட்டிக்காட்டு உள்ளேன். ஐராவதம் கருத்தைத்தான் சுப்புராயலு தெரிவித்துள்ளார். வட மொழி வேர்ச்சொல் காட்டாமல் வேறு பேசுவதால் பயனில்லை.

Jayabalan Govindhasami தொல்காப்பியத்தின்படி 'ச' வில் தமிழ்ப்பெயர் தொடங்காது. ஆனால், இங்கு அதற்கு மாறாக 'சம்பன்' என்று பொறித்த பானை ஓடு கொடுமணலில் கிடைத்துள்ளதைப் பாருங்கள்!

இதில் வடமொழி 'ஸ' முதலில் வர 'ஸந்ததன்' என்ற வடமொழிப் பெயர் தமிழ்பிராமி எழுத்து உள்ள காலத்திலேயே வந்துள்ளதைப் பாருங்கள்!

Jayabalan Govindhasami இதில், 'விஸகன் அதன்' என 'ஸ' வர வடமொழி பெயர் பொறித்த பானை ஓடும் கொடுமணலிலேயே கிடைத்திருப்பதைப் பாருங்கள்!

Muthalagan Jayabalan Govindhasami இவை எல்லாம் எனக்கும் தெரியும். வாதத்திற்கு நேர் பதில் வேண்டும் சான்றுடன் . வேறு கதை பேசி என் நேரத்தை வீணடிக்க வேண்டாம்

Jayabalan Govindhasami இங்கு காலையில் குறிப்பிட்ட 'ஸாலகன்' என்ற வடமொழிப்பெயர் தமிழ் பிராமி எழுத்தில், சங்க காலத்திலேயே வந்துவிட்டதற்கான ஆதாரத்தைச் சொன்னேன்.

அது கொடுமணல் என கூறியது தவறு. மதுரை மாங்குளத்தின் பாண்டியன் நெடுஞ்செழியனைக் குறிப்பிடும் புகழ் பெற்ற தமிழ் பிராமி க
ல்வெட்டு.

அதில் ' ஸாலகன்' என்ற வடமொழிப் பெயர் வந்திருப்பதையும், நெடும்செழியனை, 'நெடுஞ்சழியன்' என்றும், இளஞ்செழியனை 'இளஞ்சடிகன்: என்று குறிப்பிட்டு இருப்பதையும் பாருங்கள்.

நெடுஞ்செழியனைக் குறிப்பிடுவதால் இது சங்ககால கல்வெட்டுதான்!

Jayabalan Govindhasami குபேரன் வடசொல்தான் என்பதற்கான சான்றுகளைப் பின்னர் தருகின்றேன்.

Jayabalan Govindhasami Muthalagan
தாமோதரன் என்ற பெயரை சங்க காலத்திலும்தான் வைத்திருக்கிறார்கள் இன்றும்தான் வைத்து இருக்கிறார்கள்.


அதனால் அது தமிழ்ப்பெயர் ஆகிவிடுமா?

குபேரன் என்ற வடமொழிப் பெயரை திரித்து 'குவிரன்' என கீழடி காலத்திலேயே, சங்க காலத்திலேயே வைத்துவிட்டார்கள்.

தாமோதரன் என்ற பெயரை விடாமல் இன்றுவரை போட்டுவருவது போல நீங்கள் சொல்லும் ஊரிலும் குவிரன் என்ற பெயரை இன்னும் திரித்து, 'குவியன்' என்று சொல்லி வரலாம்.

அதனால் தமிழ்ப் பெயர் ஆகிவிடுமா?

'குவியன்' தமிழ்ப் பெயர் என்றால் இடைக்கால கல்வெட்டுச் சான்றுகள், தேவாரம் முதல் சிற்றிலக்கியம் ஈறாக ஆதாரங்கள் காட்டுங்கள்!

Jayabalan Govindhasami குவிரனும், குவியனும் ஒன்றுதான் என்பதற்கு முதலில் சான்று தாருங்கள்!

குவிப்பவன் 'குவியன்' என்றால் கீழடியிலும் அப்படியே வரவேண்டியதுதானே!


குவியன் என வராமல் ஏன் 'குவிரன்' என வருகிறது.

கி.மு. 6- ம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்ற சமுதாயம், சிந்துவெளி நாகரிகத்து இணையா வாழ்ந்தவங்க கீழடி தமிழர்கள், இப்படி 'குவியனை'ப் போய் 'குவிரன்' னு தப்புத்தப்பா எழுதுவாங்களா?

டேலி ஆகலையே!

Muthalagan Jayabalan Govindhasami வீண் வாதம் வேண்டா. உங்கள் வாதத்தை ஏற்றுக்கொண்டால் குபேரனைக் குவிரன் என்று எழுதாமல் குபேரன் என்றுதான் எழுதியிருக்க வேண்டும் .ஏன் குவிரன் என்று எழுதினர்கள்.
அன்பு நண்பரே!
குவி எனும் சொல் செல்வத்தை அல்லது குபேரனைக் குறித்து வந்ததா எனப் பிராகிருத சமஸ்கிருத அகராதியில் பாருங்கள் நானும் பார்க்கிறேன். தேடுவோம் உண்மையைக் கண்டறிவோம்

Jayabalan Govindhasami Elanchezian Sav சரி!
அதுக்கு அப்புறம் வந்துள்ள இலக்கியங்களிலாவது இருக்கா நண்பரே!


சங்க இலக்கியத்தை உட்டுடுவோம்.

பின்னாடி குவிரன், நவிரன் வந்ததுக்கு ஆதாரம் காட்டுங்க!

2000 வருஷத்துக்கு முன்னாடி இருந்த குவிரன், நடுப்புற எந்த இணைப்பும்,தொடர்ச்சியும் இல்லாம திடீன்னு 2000 ஆண்டு கழிச்சு புதுக்கோட்டைல மட்டும் வந்து, 'குவியன்' னு முளைக்குதா?

Jayabalan Govindhasami Muthalagan
விஷ்ணுதாஸனை 'விண்ணந்தாயனார்'ன்னு எழுதினா மாதிரிதான்!


நெடுஞ்செழியனை 'நெடுஞ்சழியன், இளஞ்செழியனை ' இளஞ்சடிகன்'னு எழுதினா மாதிரிதான்.

அக்காலத்தில் Ba ஒலி தமிழர் வாயில் வராமல் இருந்திருக்கலாம். இன்றும் கி.ராஜநாராயணன் அய்யாவின் நண்பரான கோவில்பட்டியைச் சேர்ந்த ஒரு செட்டியார் 'ஜ' வராத காரணத்தால் "வாங்க ராச நாராயணன்!" என்றுதான் அழைப்பாராம்.

அதேபோல, குbeரன் என்பதை ba வராததால் 'குவேரன்' என்றிருக்கலாம். அது 'குவிரன்' என்று ஆகி இருக்கலாம்.

இந்த கீழடி 'வெள்ளிச் சந்தை புதூர்' எனப்பட்டிருக்கிறது.
ஆக, நீண்டகாலமாக இங்கு சந்தை,வணிகம் இருந்து வந்துள்ளதால்தான் இந்த பெயர்.

வணிகர்கள் காசு, பணம், துட்டு, டப்புவில் மிகவும் நாட்டம் உள்ளவர்கள்.அப்படியாப்பட்டவர்கள் பணங்காசுக்கு அதிபதியான் 'குபேரன்' மீதும், அந்தப் பெயரின்மீதும் அதிக நாட்டம் காட்டுவது இயல்புதானே!

பிறகு, 'குபேரன்' என்ற பெயரைத்தான் தமிழ்ப்படுத்தி 'குவேரன்' என வைத்து, அது பின்னர் ஏன் 'குவிரன்' ஆகி இருக்கக்கூடாதா?

லக்ஷமணன் என்பதற்கும் 'இலக்குவன்' என்பதற்கும் சடாரென்று பார்த்தால் தொடர்பு தெரிகிறாதா?

டக்கென்று பார்த்தால் 'இலக்கியம்' என்ற சொல்லில் இருந்து வந்தா மாதிரி அல்லவா தெரிகிறது.

அதுவா சரி சகோ?



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

69565511_923903841300498_429296112107100 71499959_923901324634083_914311096079220 71576834_923893784634837_125336577445462 71576834_923893784634837_125336577445462  72196796_923899911300891_688413855172263



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

Arunkumar Pankaj பொருந்தலில் கிடைத்தது ஒரேயொரு வார்த்தை தான்..


ஆகவே தான் பேரா.கா.ராஜன் அதனை தனித்து காட்டாமல் அதற்கு இணையான காலகட்டத்தை சேர்ந்த கொடுமணல் ஆய்வுகளுடன் காலத்தை பொறுத்திக் காட்டுகிறார். கொடுமணலில் கிடைத்த பானைக்கீறல் எழுத்துக்களை அட்டவணைப்படுத்திய அவர், கொ
டுமணல்-பொருந்தல் ஆய்வு அசோகருக்கு முற்பட்ட காலத்தில் தமிழ் எழுத்துக்கள் மட்டுமல்ல வடமொழி எழுத்தும் இருந்தமைக்கும் சேர்த்தே சான்று பகர்வதாக தனது "Early writing system" புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்..

கொடுமணலில் உள்ள சாத்தன் பெயர்கள் பெரும்பாலும் "ஸாத்தன்" என்றே உள்ளன. இதெல்லாம் அப்பவே ஒழுங்கா படிச்சிருந்தா "வடமொழி புழக்கத்தில் இல்லாத காலத்திலேயே இங்கு தமிழ் தனித்து இருந்தது" என்று உளறிக்கொண்டு இருக்க மாட்டார்கள்..



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

 வீரக்கை என்னும் சதிக்கல்

 
முன்னுரை
இரண்டு ஆண்டுகளுக்குமுன், திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டத்திலிருக்கும் சேவூரில் “தினமலர்”  நாளிதழின் திருப்பூர்ப் பகுதிச் செய்தியாளர் மகேஷ் அவர்கள் தாம் பார்த்திருந்த ஒரு நடுகல் சிற்பத்தைப்பற்றித் தந்த தகவலின் அடிப்படையில், கட்டுரை ஆசிரியரும் அவிநாசியைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலரான ஜெயசங்கரும் சேவூரில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
 
வெட்டப்பட்ட ஒரு கையின் சிற்பம்
சேவூர்-புளியம்பட்டிச் சாலையில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு அருகில் சாலையோரம், “தினமலர்” செய்தியாளர் குறிப்பிட்ட அந்த நடுகல் சிற்பம் இருந்தது. இது 13.4.2014 அன்று வைக்கப்பட்ட நடுகல். தேதி, நடுகல்லில் பொறிக்கப்பட்டிருந்தது. கருங்கல்லில் நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட சிற்பத்துடன் கூடிய நெடிய பலகைக்கல். சந்திரன் மற்றும் சூரியன் ஆகியவற்றின் உருவங்கள் கல்லின் உச்சிப்பகுதியில் செதுக்கப்பட்டு, அதன் கீழ்ப்புறம் இரு பெண்கள் மலர்கொண்டு பூசிக்கும் தோற்றத்தில் ஒரு சிவலிங்கமும் அதன் கீழாக உயர்த்திய நிலையில் ஒரு கையும் செதுக்கப்பட்டிருந்தன. அங்குள்ள மக்களிடம் இந்த நடுகல்லைப்பற்றிக்கேட்டபோது, அவர்கள் சொன்னதாவது:
 
 
                                              சேவூர்  நடுகல் 
Copy%2B%25282%2529%2Bof%2BP1110128.JPG

 

Copy%2Bof%2BP1110128.JPG
 
 
மக்களிடை வழங்கும் செய்தி
இந்த நடுகல்லில் காணப்படுவதுபோலவே சிற்பங்கள் செதுக்கப்பட்ட பழங்கால நடுகல் ஒன்று முன்பு இங்கு சாலையோரம் இருந்தது. சரக்குந்து ஊர்தியொன்றால் அது தாக்குண்டு உடைந்து போனது. உடைந்த துண்டுகளை ஆற்றில் எறிந்துவிட்டனர். பழமையான நடுகல் திப்புசுல்தான் காலத்ததாகும்.வீரன் ஒருவன் கை வெட்டுப்பட்ட நிலையில் இறந்துபடுகிறான். அவன் நினைவாக, கையை முன்னிலைப்படுத்தி எழுப்பப்பட்ட நடுகல். பழங்கல்லில் இருந்தவாறே உருவங்களை அமைத்து, தற்போது இக்கல் எழுப்பப்பட்டுள்ளது.  மக்கள் சாமிக்கல் என்று அழைத்து வழிபடுகின்றனர். பழங்கல் பாதுகாக்கப்படவில்லையே என்னும் வருத்தம் தோன்றினாலும் அதன் நினைவைக் காக்கின்ற முயற்சியாகப் புதியதொரு கல்லையாவது பழமையின் கருத்து மறையாமல் இருக்கும் வண்ணம் நாட்டியுள்ளனர் என்பது ஆறுதல் தருகிறது. பழங்கல்லின் காலம் கி.பி. 18-ஆம் நூற்றாண்டு ஆகும்.
 
மீளாய்வு
மேற்படி நடுகல்லில், வீரனின் உருவம் எதுவும் காணப்படாததும், கை மட்டுமே மையப்படுத்தப்பட்டுள்ளதும், இந்நடுகல் வழக்கத்துக்கு மாறாயுள்ள ஒரு நடுகல் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியதோடல்லாமல், மீளாய்வு நோக்கில் கருத்துகளைத் தேடவேண்டும் என்ற எண்ணத்தையும் வலுவாக்கியது. நடுகல்லில் காணப்படும் கை ஓர் ஆணின் கையல்ல. பெண்ணின் கை. கையில் வளையல்கள் காணப்படுகின்றன. வீரர்களுக்கு எடுக்கப்படும் நடுகற்களில், குறிப்பாகக் கையை மட்டும் புடைப்புச் சிற்பமாகக் கொண்ட நடுகல் பற்றிய செய்தி கேள்விப்பட்டிராத ஒன்று. எனவே, இந்த நடுகல் வேறு வகையினதாக இருக்கவேண்டும்; இதுபற்றி மக்களிடையே வழங்கும் செய்திகள் சரியானவையாக இருக்கவாய்ப்பில்லை. இந்தக்கோணத்தில் தேடுதல் தொடர்ந்த வேளையில், 1918-ஆம் ஆண்டின் தொல்லியல் ஆண்டறிக்கையில் ஒரு குறிப்பு, மேற்படி நடுகல்லைப்பற்றிய தெளிவைத் தந்தது. 1917-ஆம் ஆண்டு, ஆந்திரப்பகுதியில் அனந்தபூர் மாவட்டத்தில் வனவோலு என்னும் ஊரில் கோட்டைகருகில் ஒரு சதிக்கல் கல்வெட்டுகண்டறியப்பட்டுப் பதிவானது பற்றி எழுதப்பட்டிருந்தது.    
 
வீரக்கை (HERO-HAND) என்னும் சதிக்கல்
 
பெனுகொண்டா என்னும் ஊரில், இராமதேவ நாயக்கன் என்பான் இறந்ததும், அவன் மனைவி கங்காசானி என்பவள் தீப்பாய்ந்தாள். அவளுடைய இச்செயலைப் பெருமைப்படுத்தும் வகையில், திப்ப நாயக்கன் என்பவன் ஒரு நந்தவனத்தை அமைத்து அதன் முன்பாக ஒரு வீரக்கை  (HERO-HAND)நடுகல்லை நிறுவினான். இச்செய்தியைக் கொண்ட கல்வெட்டு கன்னடமொழியில் எழுதப்பட்டுள்ளது. கல்வெட்டின் காலம் கி.பி. 1405
 
குற்றாலத்தைச் சேர்ந்த சொ. சந்திரவாணன் என்பவர், தம்முடைய“தமிழகத்தில் சதி”  என்னும் ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிடுவதாவது: உடன் உயிர் விடும் ப்ழக்கம் மன்னரில் தொடங்கி அனைவரிடமும் பன்னெடுங்காலம் இருந்துள்ளது. தீப்பாய்ந்த அம்மன், மாலையிட்ட அம்மன், பாவாடைக்காரி என்று பலவாறு வணங்கப்படும் பெண் தெய்வங்கள் இவ்வாறு உடன் உயிர் நீத்த “சதிப் பெண்களே. கணவனோடு சுமங்கலியாகச் சுவர்க்கம் புகுதல், சமுதாயம் சதிப்பெண்களைத் தெய்வமாகப் போற்றுதல் ஆகிய நம்பிக்கையின் அடிப்படையில் “சதி” என்னும் மரபு சமுதாயத்தில் தொடர்ந்தது.
 
தமிழகத்தில் பெரும்பாலும், கையில் வாள் பிடித்த நிலையில் ஆணின் உருவமும், பூச்செண்டு, கண்ணாடி, குங்குமச்சிமிழ், அல்லது பழம் போன்றதோர் உருண்டைப்பொருளைக் கையில் பிடித்த நிலையில் பெண்ணின் உருவமும் பொறிக்கப்பட்ட சதிக்கற்கள் காணப்படுகின்றன. சில சதிக்கற்களில் கல்வெட்டுப் பொறிப்பும் உண்டு. பொறிப்புகளில் கணவனைப் பிரியாதாள்”,  “துணைவனைப் பிரியாதாள்”  ஆகிய தொடர்கள் காணப்படுகின்றன. ஆளுருவங்களே அன்றி, ஒருசில மங்கலப்பொருள்களால் உணர்த்தியும் சதிக்கற்கள் அமைவதுண்டு. ஒரு பெண்ணின் வலது கை, தோளிலிருந்து “ட” வடிவம் போல உயர்த்திக்காட்டப்பட்டு பூணிடப்பட்ட கம்பத்தில் அந்தக்கை இணைக்கப்பட்டுக் காணப்படுவதுண்டு. சென்னை அருங்காட்சியகத்தில் இது போன்ற கம்பங்கள் உள்ளன. இக்கம்பங்கள் உள்ள இடங்கள், வீரமாத்தி என்னும் பெயரில் அழைக்கப்படுகின்றன. ஒரு கல்வெட்டு “தோளும் கையும் கொடுத்த கம்பம்”  என்று இதைக்குறிப்பிடுகிறது.
 
இந்திய அளவில் சதிக் கற்கள்
 
 
Sati%2Bstone-1.jpg




sati%2Bstone-2.jpg



                இறந்த கணவனின் காலைத் தழுவியவாறு “சதி”

Sati%2Bstone-3.jpg
 
 
இந்திய அளவில், இந்தியாவின் மைய மாநிலப்பகுதி, குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சதிக்கற்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. இவ்விடங்களில் பெரும்பாலும், சதிக்கற்கள் ஓரிரு அடுக்குகள் கொண்டதாக உள்ளன. மேல் அடுக்கில், ஒரு பெண்ணின் கை புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டிருக்கும். செங்கோணத்தில் (90 பாகை) மடித்த நிலையில் தோளும், செங்குத்தாக உயர்த்திய நிலையில் முன்கையும் காணப்படும். சில போது, பெண் தன் கையில் பெருவிரலுக்கும் முன்விரலுக்கும் இடையில் எலுமிச்சம் பழமொன்றை ஏந்தியிருப்பாள். கைக்கு மேற்புறம், நிலவும், கதிரும் வடிக்கப்பட்டிருக்கும். சில போது, நிலவு, கதிர் ஆகியவற்றோடு பூச்செண்டு, தேங்காய் ஆகியன காணப்படும். அருகில் சிவலிங்கம் இருப்பதும் உண்டு. இன்னொரு அடுக்கில், வீரன் வாளொடு நின்ற நிலையிலும், அவனருகில் அவன் மனைவி (சதி) நின்ற நிலையிலும் இருப்பது போன்ற தோற்றம். சில போது, மற்றுமொரு அடுக்கில், வீரன் குதிரையின் மீது அமர்ந்த நிலையில் (போர்க்காட்சியை உணர்த்துவது) இருப்பது போன்ற தோற்றம். வீரனின் தலைக்குமேல் குடை இருந்தால், அவன் அரசனாகவோ அல்லது படைத்தலைவனாகவோ இருப்பான். இறந்துபோன கணவனின் காலைத் தழுவிய நிலையில் மனைவி இருப்பதாக வடிக்கப்பட்ட சதிக்கற்களும் உள்ளன. சதிப்பெண்ணை வணங்குகின்றவர்களுக்கு அவள் நலமும், வளமும் சேர்ப்பாள் என்பது மக்கள் நம்பிக்கை.
 
கருநாடகத்தில் சதிக்கற்கள்
 
                                  சாமராஜநகர் சதிக்கல் - தோளும் கையும் கொடுத்த கம்பம் 
                                                             கையில் ஏந்திய எலுமிச்சை
Copy%2Bof%2BP1130530.JPG
 
 
கருநாடகத்தில் வீரக்கற்கள் என்னும் நடுகற்களைப்போலவே சதிக்கற்கள் என்னும் நடுகற்கள் மிகுதியும் காணப்படுகின்றன. சென்ற ஆண்டு நண்பர்களோடு “ஹம்பி”  என்னும் விஜயநகரம் சென்றபோது, சாமராஜ நகரம்என்னும் ஊருக்கு நாலுகல் தொலைவில் சாலையோரம் ஒரு நடுகல்லைப் பார்த்தோம். மகிழுந்தை நிறுத்தி அதனை ஒளிப்படம் எடுத்துக்கொண்டோம். அப்போது அது ஒரு நடுகல் என்ற பொதுக்கருத்து மட்டுமே மனதில் நின்றது. சேவூர் நடுகல்லை மீளாய்வு செய்கையில், சாமராஜநகரத்து நடுகல், “தோளும் கையும் கொடுத்த கம்பம் என்ற வகையைச் சேர்ந்த “சதிக்கல்” லுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு என்பது உணரப்பட்டது. இந்தச் சதிக்கல் சிதைவு ஏதுமின்றித் தெளிவான புடைப்புச் சிற்பங்களைக் கொண்டுள்ளது. சதி” என்னும் மரபுப்படி, உயிர் நீத்த பெண்ணின் வளைகள் அணிந்த ” வடிவக் கை; அக்கை பிணைக்கப்பட்ட, வேலைப்பாடுகளோடு காணப்படும் கம்பம்; இறந்து பட்ட வீரனைத் தேவமகளிர் விண்ணுலகத்துக்கு அழைத்துச் செல்லும் காட்சி; வீரன் விண்ணுலகு அடைந்ததைக் குறிப்பால் உணர்த்தும் சிவலிங்க வழிபாடு; நடுகல்லின் கீழ்ப்பகுதியில் “சதிப் பெண்ணை வணங்குகின்ற பெண்மக்கள் ஆகிய அனைத்துக் கூறுகளும் இச்சிற்பத்தில் உள்ளன.. இந்தச் சதிக்கல்லில்சதிப்பெண் தன் கையில் பெருவிரலுக்கும் முன்விரலுக்கும் இடையில் எலுமிச்சம் பழமொன்றை ஏந்தியிருப்பது சிறப்பான கூறு.
 
சதிக்கற்களில் உள்ள உருவங்கள் உணர்த்தும் உள்ளுறைக் கருத்துகள்
 
சதிக்கற்களில் காணப்பெறும் புடைப்புச் சிற்ப உருவங்கள் பல கருத்துகளை உணர்த்துவதாக அமைகின்றன. நிலவு, கதிர், சிவலிங்கம் ஆகியவை சுவர்க்கம் என்னும் விண்ணுலகைக் குறிப்பன. பெண்ணின் கையில் உள்ள வளை, “சதிப்பெண்ணை வணங்குவோருக்கு அவள் அருளும் ஆசியைக்குறிக்கும்.
 
சேவூர் நடுகல்லும் சதிக்கல்லே
 
மேற்குறித்த செய்திகளின் அடிப்படையில், சேவூரில் காணப்படும் நடுகல், ஒரு சதிக்கல் என்பது தெளிவாகிறது. நடுகல்லில் மேற்பகுதியில் நிலவும், கதிரும் காணப்படுகின்றன. அதனை அடுத்து, இரு பெண்கள் சிவலிங்க வழிபாடு செய்யும் காட்சி உள்ளது. அதனை அடுத்து, வளை அணிந்த “சதிப்பெண்ணின் கை. வீரக்கை (HERO-HAND) என்னும் சதிக்கல்லின் உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளதில் ஐயமில்லை. திப்புசுல்தான் காலத்தைச் சேர்ந்த ஒரு சதிக்கல்லின் மூல நடுகல்லான அரியதொரு தொல்லியல் சின்னத்தை நாம் இழக்க நேர்ந்தது வருத்தமளித்தாலும், வியப்பை அளிக்காது. காரணம், தொல்லியல் சார்ந்த எவ்வளவோ எச்சங்களை அவ்ற்றின் அருமை அறியாதார் அழிப்பதும், அருமை அறிந்தவர் அவற்றை அழிவிலிருந்து காக்கும் வழியறியாது விழிப்பதும் தொடர்ந்து நடைபெறுகின்றனவே. தொல்லியல் துறையும், அரசும் அக்கறை கொள்ளவேண்டும். சேவூரின் வீரக்கை வகைச் சதிக்கல்லின் மூலவடிவத்தை மறந்துபோகாமல் நினைவூடும் வண்ணம் அதே வடிவில் படியெடுத்ததுபோல் மற்றொரு நடுகல்லை மக்கள் அதே இடத்தில் வைத்து வழிபடுவதைப் பாராட்டியே ஆகவேண்டும்.
 
 
நன்றி –1 இணையம் வழி பார்த்த ஓர் ஆய்வுப்பதிவு.
        The  iconography of Sati: An Archaeological study of sati memorial
                    Pillars of Central Asia-by Ameeta Singh, Sarojini Naidu Govt. Girls
                    College, Bhopal.

               2    தமிழகத்தில் சதி-ஆய்வுக்கட்டுரை-சொ.சந்திரவாணன்.

               3    இணையத்தில் கிடைத்த படங்களுக்காக. 
 
  
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156. 


__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

#ஆய்த_எழுத்து!

தொல்காப்பியர் சொல்லதிகாரம் நூற்பா இரண்டில், சார்பு எழுத்துக்கள் பற்றி இவ்வாறு கூறுகிறார்.

"அவைதாம்
குற்று இயல் இகரம், குற்று இயல் உகரம்
ஆய்தம் என்ற‌ #முப்பால் #புள்ளியும் எழுத்து ஓர் அன்ன".

இதன் பொருள்:

சார்பு எழுத்துக்கள் என்பன குறுகிய ஓசையை உடைய இகரம், குறுகிய ஓசையை உடைய உகரம் மற்றும் மூன்று புள்ளிகளை உடைய ஆய்த எழுத்து என்பன. இவை எழுத்துக்களை ஒத்து அமைவன.

ஆக, தொல்காப்பியர் காலத்தில் 'ஆய்த எழுத்து' இன்று போல மூன்று புள்ளிகளை உடையதாக இருந்திருக்கிறது எனத் தெரிகிறது.

நான் தமிழ் பிராமி, வட்டெழுத்துக்களை ஆராய்ந்த போது, தமிழ் பிராமி எழுத்தில் ஃ என்ற எழுத்து கிடைக்கோடிட்டு, அதன் மேலும் கீழும் புள்ளிகள் இட்டு, இன்றைய 'வகுத்தல் குறியீடு' போல உள்ளது. வட்டெழுத்துக் காலத்திலும் அந்த கிடைக்கோடு சற்று நீளம் குறைந்து அதே வகுத்தல் குறி வடிவில்தான் உள்ளது.

Tholkappiya%2Bdating%2Bwith%2Bayutha%2Be

தொல்காப்பியம் குறிப்பிடும் 'மூன்று புள்ளிகளை உடைய ஆய்த எழுத்து' இரு எழுத்து வடிவங்களிலும் காணவில்லை.

கீழே காணும் படங்களில் இன்றைய ஃ எழுத்தாக காணப்படும் இடத்தில்தான் 'மூன்று புள்ளிகள் உள்ள அஃகன்னா' எழுத்து காணப்படுகிறது.

ஏன் தொல்காப்பியம் தமிழ் பிராமி எழுத்து ஃ எழுத்துக்காக காட்டும் வகுத்தல் குறி எழுத்து வடிவத்தைக் குறிப்பிடவில்லை?

அப்படியானால், தொல்காப்பியம் தமிழ்பிராமி வழக்கில் இருந்த #சங்க #காலமான கி.பி.5- ம் நூற்றாண்டுவரை எழுதப்படவில்லையோ; பிற்காலத்ததோ? என்ற அய்யத்தை ஏற்படுத்துகிறது.

இதை தெளிவுபடுத்திக்கொள்ள, சங்க இலக்கியங்கள் எதிலாவது தொல்காப்பியம் குறிப்பிடப்படுகிறதா?

முதன்முதலில் எந்த தமிழ் இலக்கியத்தில் தொல்காப்பியம் பற்றிய செய்தி கிடைக்கிறது? என்பது பற்றிய விபரங்களை, தமிழ்ப் பற்று கொண்ட நண்பர்கள் இங்கே தெரிவியுங்களேன்! 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

Nadukal%2B01.jpgNadukal%2B02.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

Nadukal%2B03.jpg Nadukal%2B04.jpg 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

Nadugal%2B01.pngNadugal%2B02.pngNadugal%2B04.pngNadugal%2B05.pngNadugal%2B05.pngNadugal%2B06.png 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

Nadugal%2B07.png Nadugal%2B08.png Nadugal%2B09.png

Nadugal%2B10.png  Nadugal%2B11.pngNadugal%2B12.png



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

 Nadugal%2B13.png Nadugal%2B14.png Nadugal%2B15.png 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
புலிமான்கோம்பை - சங்க கால நடுகற்கள் கண்டுபிடிப்பு - கா. ராஜன்
Permalink  
 


siththannavasal.png

சித்தன்னவாசல் தமிழிக் கல்வெட்டு

முனைவர் மா.பவானி
உதவிப் பேராசிரியர்
கல்வெட்டியல் துறை

அமைவிடம்: புதுக்கோட்டை மாவட்டம், ஏழடிப்பாட்டம் என்று அழைக்கப்படும் மலைப்பகுதியிலுள்ள சமணர் கல்வெட்டு
எழுத்து : சங்க காலத் தமிழ் எழுத்து (தமிழி)
காலம்: பொ.ஆ.மு 1ஆம் நூ. ஆம் நூற்றாண்டு

ஊர்ச் சிறப்பு :

புதுக்கோட்டையிலிருந்து 9 கல் தொலைவிலுள்ள இவ்வூர் தமிழக வரலாற்றில் சிறப்பு வாய்ந்தது. இங்கு மலையைக் குடைந்து தோற்றுவிக்கப்பட்ட குகைக் கோயில் ஒன்று உள்ளது. இதில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஓவியங்கள் இருக்கின்றன. இந்த ஓவியங்கள் பொ.ஆ. 8ஆம் நூற்றாண்டில் ஆண்ட ஸ்ரீமாற ஸ்ரீ வல்லபன் என்ற பாண்டிய மன்னன் காலத்தில் தோற்றுவிக்கப்பட்டவை. இது சமணக்குகையாகும். இதே மலையிலேயே இயற்கையாக அமைந்த குகைத்தளத்தில் பல சமணப் படுக்கைகள் உள்ளன. அவற்றில் ஒன்றின் பக்கவாட்டில் இக்கல்வெட்டு உள்ளது. இங்கு வேறுபல கல்வெட்டுக்களும் உள்ளன. இது சிறப்புவாய்ந்ததாகும்.

காலம்: பொ.ஆ.மு1 ஆம் நூற்றாண்டு (தோராயமாக)

sittanavasal.jpg

கல்வெட்டுப் பாடம்

எருமி நாடு குமுழூர் பிறந்த காவுடி ஈதென்கு சிறு போசில் இளயர்
செய்த அதிட்டானம்.

பொருண்மை:

இந்தப் படுக்கையானது எருமி நாட்டு இளயரால் செய்யப்பட்டது. எருமி நாட்டின் குமுழூரைச் சேர்ந்த காவுதிக்குச் சிறுபொசிலைச் சேர்ந்த இளயர் படுக்கை அமைத்துக் கொடுத்ததை கல்வெட்டுக் கூறுகிறது. காவுதி என்பது சமண, புத்த மதத்தின் பெண் துறவிகளைக் குறிக்கும். எருமிநாடு என்பது மைசூரைக் குறிக்கும். இளயர் என்பது பழந்தமிழ் போர் வீரர் இனத்தைக் குறிக்கும்.

வரலாற்றுச் சிறப்பு :

 கர்நாடகா மாநிலம் மைசூரிலிருந்து சமண முனிவர் தமிழ் நாட்டுப் புதுக்கோட்டையைச் சேர்ந்த சித்தன்னவாசலில் உள்ள ஏழடிப்பாட்டம் மலைக்கு வந்து குடியமர்ந்துள்ளார்.

 இதுவே கர்நாடக - தமிழகத் தொடர்பாகக் கிடைத்த முதல் கல்வெட்டுச் சான்றாகும்.

 முன்பே கூறியதுபோல் இளயர் என்பவர் தமிழகத்தின் போரின வீரர்களாவர்

 “ஹொசிலு” என்றால் கன்னட மொழியில் “வாசல்” என்று பொருள் என எம்.டி.சம்பத் கூறுகின்றார். சித்தன்னவாசல் என்ற தமிழ்ச் சொல்லைச் சிறு “ஹொசிலு” என்று பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
RE: புலிமான்கோம்பை - சங்க கால நடுகற்கள் கண்டுபிடிப்பு - கா. ராஜன்
Permalink  
 


 

நடுகல்

சங்கத் தமிழ் முத்துக்கள் –  நடுகல்

https://sangamtamilliterature.wordpress.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-2/

சங்க காலத்தில் வீரர்களுக்கும் மன்னர்களுக்கும், அவர்கள் இறந்த பின், நடுகல் நட்டும் வழக்கம் இருந்தது.  கோப்பெருஞ்சோழன், அதியமான் நெடுமான் அஞ்சி ஆகிய இரு மன்னர்களுக்கு நடுகல் நட்டியதை பாடல்கள் மூலம் அறிகின்றோம். தங்கள் மன்னனின் ஆநிரைகளை பிறர் கவர்ந்துச் செல்லும் பொழுது அதைத் தடுத்து நிறுத்தி உயிர் இறந்த வீரர்களுக்கு நடுகற்கள் நடப்பட்டன.   போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கும் நடுகற்கள் நட்டப்பட்டன.  நட்டிய கற்களில் இறந்தவர்களின் பெயர்களையும் அவர்களது மறச் செயல்களைப் பற்றிய விவரங்களையும் கூர்மையான உளியால் பொறித்தனர். ஆண்களுக்கு மட்டுமே இந்தக் கற்கள் நட்டப்பட்டன.  பெண்களுக்கு நடுகல் நட்டியதாக சங்க இலக்கியத்தில் குறிப்பு எதுவும் இல்லை.

புறநானூறு, அகநானூறு, ஐங்குறுநூறு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகிய சங்க நூல்களில் நடுகல் பற்றிய குறிப்புகள் பல உள்ளன.  அக நூல்களான அகநானூறு ஐங்குறுநூறு ஆகியவற்றில் பாலைத் திணைப் பாடல்களில் மட்டுமே நடுகல் பற்றிய குறிப்புகள் உள்ளன.  இந்தத் திணையில் உள்ள நிலம் வறண்டுப் போனது. அங்குள்ள மரங்களும் செடிகளும் வாடிய நிலையில் இருக்கும்.  மிருகங்கள் குடிக்க நீர் இல்லாது தவிக்கும். பயணம் செய்பவர்களின் பொருட்களைக் கைப்பற்றி அவர்களைக் கொல்லும் கள்வர்கள் அங்கு உண்டு.  தலைவன் பொருள் சேர்க்க பாலை நிலம் வழியாகச் செல்வான்.  தலைவனும் தலைவியும் உடன்போக்கில் இந்த நிலத்தைக் கடந்து செல்வார்கள்.  அங்கு இறந்தவர்களுக்காக நாட்டிய நடுகற்கள் இருக்கும்.

பழந்தமிழர்கள் நடுகற்களை மிகவும் மதித்து, அவற்றை வழிபட்டனர்.  நடுகற்களைச் சுற்றி வேலை நட்டி அவற்றில் கேடயங்களைத் தொங்க விட்டார்கள்.  நடுகற்களை மயில் இறகுகளாலும் மலர்களாலும் அலங்கரித்து,  அவற்றின் மீது கள்ளை ஊற்றி சிறப்பத்தினர்.  துடி அடித்து ஆடுகளை அவற்றிற்குப் பலியாகக் கொடுத்தனர்.

  1. தமிழர்கள் நடுகல்லை எந்த அளவிற்குச் சிறப்பித்தார்கள் என்பதை இந்தப் பாடலின் மூலம் நாம் அறியலாம். மாங்குடி கிழார் மிக அருமையாக இங்கு விவரிக்கின்றார்,

ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே (புறநானூறு 335, 9-12)

“ஒத்துப் போகாத பகைவர்களை (தெவ்வர் = பகைவர்) எதிர்த்து, முன் நின்று தடுத்து ஒளியுடைய, உயர்த்திய தந்தங்களையுடைய யானைகளைக் கொன்று விட்டு வீழ்ந்தவர்களுக்கு நட்டிய கல்லைத் தான் நாங்கள் வழிபடுவோம் (பரவும் = வழிபடும்). நெல்லைத் தூவி வழிபடும் வேறு கடவுள் எதுவும் எங்களுக்குக் கிடையாது.”

  1. நோய் பாடியார் என்ற பெயரையுடைய இந்தப் புலவர் பாலை நிலப் பாதையில் கண்டதைப் பற்றிக் கூறுகின்றார்,

அரம் போழ் நுதிய வாளி அம்பின்
நிரம்பா நோக்கின் நிரயம் கொண்மார்
நெல்லி நீளிடை எல்லி மண்டி
நல் அமர்க் கடந்த நாணுடை மறவர்
பெயரும் பீடும் எழுதி அதர் தொறும்
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்
வேல் ஊன்று பலகை  (அகநானூறு 67, 5-11)

“அரத்தால் பிளக்கப்பட்ட நுண்ணிய முனையையுடைய அம்பினால், முழுப் பார்வையுடன் நோக்காது ஆநிரையைத் திருடுபவர்கள், நெல்லி மரங்களுடைய நீண்ட பாதையில், இரவு நேரத்தில் வந்து கொன்ற நல்ல போர்களில் ஈடுப்பட்ட நாணம் கொண்ட வீரர்களின் பெயரும் புகழும் எழுதப்பட்ட மயில் இறகு சூட்டிய கேடயங்கள் (பலகை = கேடயம்) தொங்கும் ஊன்றிய வேல்களால் சூழப்பட்ட, விளங்கும் நடுகற்கள் இருக்கின்றன எல்லாப் பாதைகளிலும் (அதர் = பாதை).”

  1. பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் தலைவன் பொருள் ஈட்ட போயுள்ளான். பிரிவினால் வருந்திய தலைவி தோழியிடம் பேசுகின்றாள்.  தலைவன் கடந்து சென்ற பாலை நிலத்தைப் பற்றி இந்தப் பாடலில் சீத்தலைச் சாத்தனார் விவரிக்கின்றார்,

கடுங்கதிர் எறித்த விடுவாய் நிறைய
நெடுங்கான் முருங்கை வெண் பூத் தாஅய்
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை
வள் எயிற்றுச் செந்நாய் வருந்து பசிப் பிணவொடு
கள்ளி அம் காட்ட கடத்திடை உழிஞ்சில்
உள் ஊன் வாடிய சுரி மூக்கு நொள்ளை
பொரி அரை புதைத்த புலம்பு கொள் இயவின்
விழுத்தொடை மறவர் வில் இட வீழ்ந்தோர்
எழுத்துடை நடுகல் இன் நிழல் வதியும்  (அகநானூறு 53)

சூரியனின் கடுமையான கதிர்களின் வெட்பத்தால் ஏற்பட்ட நில பிளப்புகளில் பெரிய காட்டின் முருங்கை மரங்களின் வெள்ளை மலர்கள் கொட்டிக் கிடக்கும்.  ஆளில்லாத நீண்ட வறண்ட பாதையில் கூர்மையான பற்களையுடையச் ஆண் செந்நாய் வருத்தத்துடனும் பசியுடனும் தன் துணையுடன், தனிமையான பாதையில் (இயவு = பாதை) மறவர்களின் குறி தப்பாத வில்லிடம் வீழ்ந்தவர்களுக்காக நட்டிய எழுதுக்களையுடைய நடுக்கல்லின் இனிய நிழலில் வசிக்கும். அங்கு கள்ளிச் செடியும் வாகை மரங்களும் இருக்கும் (உழிஞ்சில் = வாகை). அங்கு உட்புறம் வாடிய வளைந்த மூக்கையுடைய நத்தை (நொள்ளை நத்தை) வாகை மரத்தின் சொர சொரப்பான அடியில் பொதிந்து இருக்கும்.

  1. இந்தப் பாடலில், நடுகல்லுக்கு அன்றைய தமிழர்கள் தந்த மரியாதையைப் பற்றிக் கூறுகின்றார் புலவர்,

இல் அடு கள்ளின் சில் குடிச் சீறூர்ப்
புடை நடுகல்லின் நாள் பலி யூட்டி
நன்னீர் ஆட்டி நெய்ந் நறைக் கொளீஇய
மங்குல் மாப் புகை மறுகுடன் கமழும்  (புறநானூறு 329, 1-4)

“வீடுகளில் கள்ளைச் செய்யும் சில குடிகளையுடைய சின்ன ஊரில், நடுகல்லிற்கு தினமும் படைத்து, நல்ல நீரால் அதைக் கழுவி, நறுமண எண்ணையைக் கொண்டு விளக்கு ஏற்றுவார்கள் (நெய் = எண்ணை, நெய்).  அதன் கருமையான பெரும் புகையானது நறுமணத்தோடு தெருக்களில் கமழும்.”

  1. தன்னுடைய அருமையான பெண், அவளுடைய தலைவனுடன் உடன்போக்கில் பாலை நிலத்தின் வழியே சென்றதால், வருந்தி, பாலை நிலத்தில் உள்ளவற்றைப் பற்றிக் கூறுகின்றாள் ஒரு தாய்,

நடுகல் பீலி சூட்டித் துடிப் படுத்துத்
தோப்பிக் கள்ளொடு துரூஉப் பலி கொடுக்கும்
போக்கு அரும் கவலைய புலவு நாறு அரும் சுரம்  (அகநானூறு 35)

“நடுகற்கள் மயில் தோகையால் அலங்கரிக்கப்படும்.   துடி அடித்து அரிசிக் கள்ளை அவற்றின் மீது ஊற்றுவர்.  செம்மறி ஆடுகளைப் பலி கொடுப்பார்கள் (துரூ =  செம்மறி ஆடு).  போக்குவரத்து இல்லாத வளைந்த பாதைகளை உடையது இறைச்சி நாற்றம் அடிக்கும் அரிய பாலை நிலம்.”

  1. ஓதலாந்தையார் யானையின் தும்பிக்கைச் சொர சொரப்பை, எழுத்துக்கள் பொறித்த நடுகல்லுடன் ஒப்பிடுகின்றார்,

விழுத்தொடை மறவர் வில்லிடத் தொலைந்தோர்
எழுத்துடை நடுகல் அன்ன விழுப் பிணர்ப்
பெருங்கை யானை  (ஐங்குறுநூறு 352, 1-3)

“கள்வர்களுடைய வில்லினால் செலுத்திய குறித்தப்பாத அம்புகளால் உயிர் இழந்தோர்களுக்கு நட்டிய எழுத்துக்களையுடைய நடுகற்களைப் போன்று உள்ளது, யானையின் தழும்புடைய பெரிய தும்பிக்கை.”

  1. மலைபடுகடாம் என்ற ஆற்றுப்படை நூலில் ஒரு பாணர் இன்னொரு பாணருக்கு நன்னன் என்ற குறுநில மன்னனின் நாட்டுக்கு செல்லும் வழியைப் பற்றி கூறும் பொழுது நடுகற்களை அவர் காண்பார் என்றுக் கூறுகின்றார்,

 

ஒன்னார்த் தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்தென
நல்வழிக் கொடுத்த நாணுடை மறவர்
செல்லா இல்இசைப் பெயரொடு நட்ட
கல் ஏசு கவலை எண்ணு மிகப் பலவே

இன்புறு முரற்கை நும் பாட்டு விருப்பு ஆக … 390

தொன்று ஒழுகு மரபின் நும் மருப்பு இகுத்துத் துனைமின் (மலைபடுகடாம் 386 – 391)

புறமுதுகு இட்டவர்களை ஏசி நல்ல முறையில் தம் உயிரைக் கொடுத்த நாணமுடைய வீரர்களின் நீங்காத பெரும் புகழுடைய பெயர்களோடு நடுகற்கள் பல உண்டு வளைந்த பாதையில்.  உங்களுடைய பாட்டு இன்பத்தைத் தரும் வகையில் தாளத்தோடு பாடுங்கள். தொன்றுத் தொட்டு வழங்கும் மரபு முறைப்படி உங்கள் யாழை இயக்கி, நடுகற்களை வணங்கி விட்டு நீங்கள் செல்லுங்கள்.

  1. தன்னுடைய நண்பனான மன்னன் அதியமான் நெடுமான் அஞ்சி இறந்தப்பின் ஔவையார் மிகவும் வருத்திப் பாடுகின்றார்,

இல்லாகியரோ காலை மாலை
அல்லாகியர் யான் வாழும் நாளே
நடுகல் பீலி சூட்டி நார் அரி
சிறு கலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லொ
கோடு உயர் பிறங்கு மலை கெழீஇய
நாடு உடன் கொடுப்புவும் கொள்ளாதோனே?  (புறநானூறு 232)

“காலையும் மாலையும் இல்லாமல் போகட்டும்!  என் வாழ் நாள் இல்லாமல் போகட்டும்!  தன் நடுகல்லில் மயில் தோகையைச் சூட்டி சிறிய கிண்ணத்தில் நாரால் வடித்த மதுவை கொடுத்தால் அதை ஏற்றுக் கொள்வானா, ஓங்கிய சிகரங்களையுடைய விளங்கும் மலைகள் நிறைந்த நாட்டையே பிறர் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளாதவன்?”

  1. கோபெருஞ்சோழன் இறந்தப் பின் அவனுக்கு நடுகல் நட்டினார்கள். மன்னனின் நண்பரான புலவர் பொத்தியார் அப்பொழுது வருந்திப் பாடுகின்றார்,

நினையாக் கூற்றம் இன் உயிர் உய்த்தன்று
பைதல் ஒக்கல் தழீஇ அதனை
வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர்
நனந்தலை உலகம் அரந்தை தூங்கக்
கெடுவில் நல்லிசை சூடி
நடுகல் ஆயினன் புரவலன் எனவே   (புறநானூறு 221, 8-13)

“ஆராய்ந்துப் பார்க்காத கூற்றுவன் அவனது இனிய உயிரை எடுத்துக் கொண்டு விட்டான்.  வருந்தும் உங்கள் குடும்பத்தை அணைத்துக் கொண்டு வாருங்கள், உண்மையைப் பேசும் புலவர்களே! நாம் கூற்றுவனைத் திட்டுவோம்.  நம்முடைய புரவலன் இறந்ததால் இந்த பெரிய உலகம் வருந்துகின்றது (அரந்தை = துன்பம்). குறையில்லா நல்ல புகழையுடையவன் (நல்லிசை = நல்ல புகழ்) நடுகல்லாகி விட்டான்.”

  1. மதுரை மருதன் இளநாகனார் பாலை நிலத்தில் உடைந்த நடுகல் ஒன்றைப் பற்றி விவரிக்கின்றார் இந்தப் பாடலில்,

மரம் கோள் உமண்மகன் பெயரும் பருதிப்

புன்தலை சிதைத்த வன்தலை நடுகல்

கண்ணி வாடிய மண்ணா மருங்குல்

கூர் உளி குயின்ற கோடு மாய் எழுத்து  (அகநானூறு 343, 47)

“உப்பு வணிகரின் (உமண்மகன் = உப்பு வணிகர்) மர மாட்டு வண்டியின் சக்கரம் வலுவான நடுகல்லின் மெல்லிய மேல் பகுதியை சிதைத்து விட்டது.  இட்ட மாலை வாடி, நடுகல் கழுவப்படாமல் உள்ளது (மண்ணா = கழுவாது).  கூர்மையான உளியால் அதன் மீது செதுக்கிய எழுத்துக்கள் அழிந்து விட்டன.”

நடுகல் பற்றிய குறிப்புடைய பாடல்கள்: 

அகநானூறு – 35, 53, 67, 131, 289, 297, 343, 365, 387
புறநானூறு – 221, 222, 223, 232, 261, 306, 314, 329
ஐங்குறுநூறு – 352
பட்டினப்பாலை – line 79
மலைபடுகடாம் – lines 388, 395


__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

நடுகல் வழிபாடும் தமிழர் நம்பிக்கையும்

 

நடுகல்பண்டைத் தமிழரின் வாழ்வியல் பதிவுகளை இவ்வுலகிற்கு உணர்த்திடும் சான்றுகளுள் நடுகற்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் நடுகற்கள் ஆங்காங்கே கண்டறியப்பட்டு விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நடுகல் என்பது வெறும் கல் அல்ல, அது பண்பாட்டின் வெளிப்பாடு, நம்பிக்கை, நன்றி பாராட்டல், வெகுமதி என்றுதான் அதனை அணுக வேண்டியுள்ளது. தமிழர்களின் அறக்கோட்பாட்டிற்குச் சான்று பகர்வதிலும் இது முக்கியப் பங்காற்றுகிறது. அத்தகைய நடுகல் பற்றிய நம்பிக்கையினை விவரிப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

செவ்வியல் இலக்கியங்களில் நடுகல் பண்பாடு

வீரன்கல்வீரக்கல்நடுகல்’ எனவும் ‘நினைவுத்தூண்’ என்றும் இக்கற்கள் அழைக்கப்படுகின்றன. வீரயுகக் காலம் என்று அழைக்கப்படுகின்ற காலங்களில் ஏற்பட்ட போர்களில் விழுப்புண்பட்டு மடியும் வீரனுக்காக, அவனது வீரத்தைப் போற்றுகின்ற வகையிலும், அவனது தியாகத்தினை மதிக்கின்ற வகையிலும் கல் ஒன்றினை நட்டு, அதனை வழிபடுவது தமிழரின் மரபாக இருந்துள்ளதனை செவ்வியல் இலக்கியங்கள் வாயிலாக அறிகின்றோம். இதுவரை தமிழகத்தில் கிடைக்கப்பெற்ற நடுகற்கள் பெரும்பாலும் மக்கள் வாழ்கின்ற அல்லது வாழ்ந்ததாக அறியப்படும் ஊருக்கு வெளியில்தான் கண்டறியப்பட்டுள்ளன. ஈமக்காடுகள் உள்ள இடங்களிலும் நடுகற்கள் இருந்துள்ளன. இவை உணர்த்துவது யாதெனின், நடுகற்கள் எடுக்கப்படும் இடங்களை நோக்குகையில், வீரன் மடிந்த போர்க்களமாகவோ அல்லது அவனைப் புதைத்த இடமாகவோ தான் அனுமானிக்க முடிகின்றது.

இதே போன்ற நடுகல் ஒன்று ஈழத்தில் கற்சிலைமடுவில் உள்ளது. வன்னி மன்னன் அடங்காப்பற்றுள்ள வீரம்செறிந்த மன்னன் பண்டார வன்னியன் இறுதியாக உயிர் துறந்த இடமான கற்சிலைமடுவில் இந்த நடுகல் உள்ளது.

நடுகற்களில் வீரனின் உருவம், பெயர், செயல் போன்ற குறிப்புகள் பெரும்பாலும் இருப்பதைக் காணமுடிகின்றது. இலக்கியத் தரவுகளையும், நடுகற்களில் காணப்படும் உருவங்களையும், எழுத்துக்களையும் ஆராய்கின்றபோது ஆகோள் புரிந்தோ, (ஆநிரை கவரவோ, மீட்கவோ) கொடிய விலங்குகளுடன் போரிட்டோ, பலியாகவோ தான் சார்ந்திருக்கும் சமூகத்திற்காக இறக்கும் வீரனுக்கே நடுகல் எழுப்பப்பட்டுள்ளது. தொல்காப்பியர் நடுகல் எடுப்பதற்கான ஆறு நிலைகள் பற்றிக் குறிப்பிடுகின்றார். அவை, காட்சி, கால்கோல், நீர்ப்படை நடுதல், பெரும்படை, வாழ்த்தல் என்பதாகும். இதனடிப்படையில் நோக்குகையில் இவ்வழக்கம் தொல்காப்பியர் காலந்தொட்டே இருந்துள்ளதை அறியலாம்.

“என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்ன
முன்நின்று கல்நின் றவர்” 1

எனப் போரில் இறந்த பகைவர் கல்லாகி (நடுகல்) நின்றதாகத் திருவள்ளுவரும் பதிவுசெய்கின்றார். எனவே நடுகல் மரபு என்பது நீண்ட வரலாற்றுப் பின்புலத்தினைத் தன்னுள் இணைத்துக் கொண்டுள்ளதனை அறியமுடிகின்றது. இன்றைக்கு இராணுவத்தில் பணியாற்றும் வீரன், தீவிரவாதிகளுடனோ, அண்டை நாடுகளுடனோ ஏற்படும் சண்டைகளில் போராடி இறக்க நேரிட்டால் அரசால் வழங்கப்படும் விருதுகள் போல் அன்றைக்கு மக்கள் நடுகற்களை நட்டுக் கௌரவித்தனர்.

“விடுவாய்ச் செங்கனைக் கொடுவில் ஆடவர்
நல்நிலை பொறித்த கல்” 2

கடவுள் குறித்த கோட்பாடுகளும். நம்பிக்கைகளும் தீவிரமடையாத காலங்களில் இனக்குழு மக்கள் நடுகற்களை வழிபட்டுவந்தனர் என்றுணர முடிகின்றது. சங்ககாலச் சிற்றூர் மக்கள் நடுகல்லினைப் போற்றி வணங்கியதைப் புறப் பாடல்கள் வழி அறியலாம். தம் இனத்திற்காக உயிர்துறந்த வீரனுக்குச் செய்யும் மரியாதையாகவும், செய்நன்றி மறவாப் பண்பினையும் இச்செயல் காட்டுகின்றது.

“ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்ததென
கல்லே பரவி அல்லது
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே” 3

நடுகல்லினை மனிதன் என்று எண்ணிய யானை அதைத் தம் காலால் உதைக்கின்றது. நடுகல் சாயவில்லை மாறாக யானையின் கால்நகம் உடைந்தது என்ற செய்திகளை அறிகின்றோம். போர்க்களத்தில் விழுப்புண்பட்டோர் நடுகல் அருகே வந்து அப்புண்ணைக் கிழித்து உயிர் விடுவர். நடுகல்லை வணங்கினால், மழைவரும், அரசன் வெற்றிபெறுவான், பயிர் செழிக்கும் என்கிற நம்பிக்கைகளும் அக்காலத்தில் மக்களிடையே இருந்தன.

“பரலுடை மருங்கின் பதுக்கை சேர்த்தி
மரல் வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொடு
அணிமயிற் பீலிசூட்டி பெயர் பொறித்து
இனி நட்டனரே கல்லும்….” 4

இறந்த வீரனின் பெயரையும் செயலையும் கல்லில் பொறிப்பர். அக்கலுக்கு நீராட்டி, நெய்பெய்து, வாசனைப் புகை காட்டி விளக்கேற்றுவர். அதற்குப் பூச்சொரிவர், மாலை சூட்டுவர், மயிற்பீலி சாத்தி காப்பு நூல் கட்டுவர். ஆட்டுக்கிடாய்களைப் பலியிட்டு துடிப்பறை ஒலிப்பர், எண்ணெய் பூசி கள் படைப்பர், வில், வேல், வாளால் அதனைச் சுற்றி வேலியமைப்பர். இச்செயல்கள் யாவும் நடைபெறுவதற்குக் காரணம், அக்கல்லில் இறந்த வீரனின் சக்தி நிலைகொண்டுள்ளதாக அவர்கள் நம்பினர்.

இறந்த வீரனைப் புதைக்கையில் அவன் பயன்படுத்திய போர்க் கருவிகளையும், புழங்கு பொருட்களையும் புதைகுழியிலிட்டே புதைத்தனர். அண்மைக் காலங்களில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வுகளில் கண்டறியப்பட்ட நடுகற்களின் அருகே, கற்பதுக்கைகளும் அவற்றினுள் கிடைத்த பல உலோகக் கருவிகள், மண்பாண்டங்கள், அணிகலன்களும் இவற்றை மெய்ப்பிக்கின்றன. இறந்தவர்களின் நினைவும், அதுசார்ந்த நம்பிக்கையும் தங்களுக்கு ஆற்றலை வழங்கும் என்ற கருத்தியலின் அடிப்படையிலேயே நடுகல்லினை மக்கள் வழிபட்டிருக்கக் கூடும். பிற்காலங்களில் நடுகல் வழிபாட்டில் ஆடு, கோழி வெட்டிப் பலியிடுவது வழக்கமாகிப் போனது. கல்லுக்குரிய வீரனுக்குப் பிடித்த உணவுகள் படைக்கப்பட்டு வழிபடப்பட்டது. இன்றைக்கும் கிறித்தவ சமயத்தினரிடம் ‘நீத்தார் நினைவு நாள் வழிபாடு’ எனும் நிகழ்வு ஒவ்வொரு வருடமும் கடைபிடிக்கப்படுகின்றது. மறைந்த முன்னோர்க்கு அவர்கள் விரும்பிய பண்டங்களை அடக்கம் செய்த (கல்லறையில்) இடத்தில் படைத்துப் பூமாலை சூட்டி, நறுமணப்புகை காட்டிவழிபடும் வழக்கம் உள்ளது. இதற்கும் நடுகல் வழிபாட்டிற்கும் தொடர்பு உள்ளதை அறியமுடிகின்றது.

“இல்அடு கள்ளின் சில்குடிச் சீறூர்ப்
புடைநடு கல்லின் நாட்பலி ஊட்டி…” 5

“நடுகல் பீலி சூட்டி நார் அரி
சிறுகலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லோ…” 6

“நடுகல் பீலிசூட்டி துடுப்படுத்து
தோப்பிக் கள்ளொடு துரூஉப் பலி கொடுக்கும்…” 7

போன்ற சங்கப் பாடல் வரிகள் நடுகல் வீரனுக்கு விருப்பிய பண்டங்களை படையல் இட்டு வழிபட்டதை விவரிக்கின்றன. படைக்கப்பட்ட பண்டங்களை வீரனின் ஆவி ஏற்றுக்கொள்வதாகவும், அதனால், வெற்றியும் விரும்பியது கிட்டும் என்று மக்கள் நம்பியதை இதன்வாயிலாக உணரமுடிகின்றது.

காலங்கலமாக தமிழர்களிடையே வழங்கப்பட்டு வரும் மரபுகளும் நம்பிக்கைகளும் பண்பாடுகளைப் பறைசாற்றுவனவாகும். அவற்றில் அதீத கற்பனையும், மூடநம்பிக்கைகளும் இருந்த போதிலும், அவை தமிழ்ப் பண்பாட்டுடன் இரண்டறக் கலந்தவை என்பதையும் நாம் உணர வேண்டும்.

குறிப்புகள்:

(குறள் -திருக்குறள், அகம் -அகநானூறு, புறம் -புறநானூறு, மேலது – மேற்சுட்டிய நூல்)

1. குறள் – 771
2. அகம் – 179: 7-8
3. புறம் – 335: 9-12
4. மேலது – 264: 1-4
5. மேலது – 329: 1-2
6. மேலது – 232: 3-4
7. அகம் – 35 : 8-9

நன்றி – ஆக்கம் – முனைவர் ஆ.பிரபு, உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சி – 02



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

 

நடுகல் வழிபாடு பற்றிக் கூறும் சங்க இலக்கியப் பாடல்கள்

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Oct 21, 2017

Share
 
 
 
 

Siragu nadugal2

அண்மையில் கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி தமிழர் பண்பாடு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை நிரூபித்து உள்ளது. அதே போல பழங்காலத் தமிழர் பண்பாடு மூத்தோர் வழிபாடு, நடுகல் வழிபாடு சார்ந்த பண்பாடாகும். பிற்காலத்தில் மதங்கள் தோன்றியிருக்கின்றன. தமிழ் மொழி ஒரு சமயச்சார்பற்ற மொழி என கால்டுவெல் எனும் மொழியியல் அறிஞர் குறிப்பிட்டு உள்ளதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

அந்த வகையில், சங்க இலக்கியப் பாடல்களைப் படிக்கின்றபோது, நடுகல் வழிபாடு நம் தமிழர்களின் வாழ்வியல் முறையாக இருந்திருக்கின்றது எனத் தெரிய வருகின்றது. வீரர்களுக்கும், மன்னர்களுக்கும் அவர்கள் இறந்தபின் நடுகல் வைத்து வணங்கும் பழக்கம் நம்மிடையே இருந்திருக்கின்றது. மதம் என்ற நிறுவனமயம் ஆக்கப்பட்ட அமைப்பு நம்மிடையே சங்க காலத்தில் இல்லை. திணை வழிபாடு இருந்துள்ளது. இயற்கையை தமிழர்கள் வழிபட்டிருக்கின்றனர். ஆனால் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று இருக்கின்றது என்றோ அது தான் இயற்கையை, மனித வாழ்க்கையை கட்டுப்படுத்துகின்றது என்றோ, மனிதர்களை ஒரு கடவுள் தான் படைத்தார் என்ற கருத்து முதல்வாதம் எந்த மதம் சார்ந்தும் வாழாத தமிழர்களிடம் ஆதியில் இல்லை.

நடுகல் வழிபாடு எனப் பார்க்கின்ற போது சங்க இலக்கியத்தில் அதியமான், கோப்பெருஞ்சோழன், சோழன் ஆகியோர்களுக்கு நடுகல் இருந்ததாக நாம் பாடல்களின் மூலம் அறிந்து கொள்கின்றோம். அதே போல் ஆண்களுக்கு மட்டுமே நடுகல் நடப்பட்டதாக குறிப்புகள் கிடைக்கின்றது. புறநானூறு, அகநானூறு, ஐங்குறுநூறு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகியப் பாடல்களில் நடுகல் பற்றிய குறிப்புகள் உண்டு.

நடுகல் மீது மயில் இறகு கொண்டு அலங்கரித்தல், கள் ஊற்றுதல், ஆடுகளை துடி அடித்து பலி கொடுத்தல் எனும் வழக்கம் இருந்துள்ளது. இன்றும் ஈழத்தில் இறந்த மாவீரர்களுக்கு நடப்பட்ட நடுகல் வணக்கத்தை நாம் பார்க்கின்றோம்.

புறநானூற்றுப் பாடல் 335 இல் மாங்குடி கிழார் எழுதியப் பாடலின் மூலம் நடுகல் சிறப்பை அறிந்துகொள்ள முடியும்.

ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே (புறநானூறு 335)

Siragu nadugal1

ஒத்துப் போகாத பகைவர்களை (தெவ்வர் = பகைவர்) எதிர்த்து, முன் நின்று தடுத்து ஒளியுடைய, உயர்த்திய தந்தங்களையுடைய யானைகளைக் கொன்று விட்டு வீழ்ந்தவர்களுக்கு நட்டிய கல்லைத் தான் நாங்கள் வழிபடுவோம். நெல்லைத் தூவி வழிபடும் வேறு கடவுள் எதுவும் எங்களுக்குக் கிடையாது என நடுகல் வழிபாட்டின் சிறப்பினைக் கூறுகின்றது.

அதே போன்று கோப்பெருஞ்சோழன் இறந்தபின் அவனுடைய நண்பரான பொத்தியார் அவனை நினைத்து வருந்திப்பாடுவதாக புறநானூற்றுப் பாடல் 221 இன் மூலம் அறிந்து கொள்கின்றோம்.
நினையாக் கூற்றம் இன் உயிர் உய்த்தன்று
பைதல் ஒக்கல் தழீஇ அதனை
வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர்
நனந்தலை உலகம் அரந்தை தூங்கக்
கெடுவில் நல்லிசை சூடி
நடுகல் ஆயினன் புரவலன் எனவே (புறநானூறு 221)
நம்முடைய புரவலன் இறந்ததால் இந்த பெரிய உலகம் வருந்துகின்றது. குறையில்லா நல்ல புகழையுடையவன் நடுகல்லாகி விட்டானே என வருந்துகின்றார்.

மலைபடுகடாம் எனும் ஆற்றுப்படை நூலில் ஒரு பாணர் மற்றொரு பாணரை அரசனை கண்டு பரிசில் பெற ஆற்றுப்படுத்துவார், அதில் வழி நெடுக நடுகல் இருக்கும் எனும் அடையாளத்தைக் கூறி வழி கூறுவார்.

ஒன்னார்த் தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்தென
நல்வழிக் கொடுத்த நாணுடை மறவர்
செல்லா இல்இசைப் பெயரொடு நட்ட
கல் ஏசு கவலை எண்ணு மிகப் பலவே
இன்புறு முரற்கை நும் பாட்டு விருப்பு ஆக … 390

புகழுடைய பெயர்களோடு நடுகற்கள் பல உண்டு வளைந்த பாதையில். உங்களுடைய பாட்டு இன்பத்தைத் தரும் வகையில் தாளத்தோடு பாடுங்கள். தொன்றுதொட்டு வழங்கும் மரபு முறைப்படி உங்கள் யாழை இயக்கி, நடுகற்களை வணங்கி விட்டு நீங்கள் செல்லுங்கள் என ஆற்றுப்படுத்துவதாக அந்தப் பாடலில் குறிப்புகள் காணப்பெறுகின்றது.

அதே போன்று ஐங்குறுநூற்றில், ஓதலாந்தையார் எனும் புலவர் யானையின் தும்பிக்கையின் சொர சொரப்பை எழுத்துகள் பொறித்த நடுகல்லோடு ஒப்பிடுகின்றார்.
விழுத்தொடை மறவர் வில்லிடத் தொலைந்தோர்
எழுத்துடை நடுகல் அன்ன விழுப் பிணர்ப்
பெருங்கை யானை (ஐங்குறுநூறு 352)
அகநானூற்றுப் பாடல் 343 இல் மதுரை மருதன் இளநாகனார் பாலை நிலத்தில் இருக்கும் உடைந்த நடுகல் ஒன்றைப் பற்றி குறிப்பிடுகின்றார்.
மரம் கோள் உமண்மகன் பெயரும் பருதிப், புன்தலை சிதைத்த வன்தலை நடுகல்(அகநானூறு 343)



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

 

சங்க கால நடுகல் நம்பிக்கையும் வழிபாடும்

 

சங்க கால நடுகல் நம்பிக்கையும் வழிபாடும்
முனைவர் மோ.கோ. கோவைமணி
இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர்
ஓலைச்சுவடித்துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர்-613 010.
சமுதாயத்தில் சிறப்புமிக்க ஒருவரின் நடவடிக்கைகளாலும் அவரின் பண்பாலும் அவரின் இறப்பிற்குப் பின் அவர்களது நினைவாக சுற்றத்தார்களாலும் உற்றவர்களாலும் நடப்படும் கல்லே நடுகல் எனப்படுகிறது.  நடுகல் என்றால் நடப்பட்ட கல் என்று பொருள்படும்.  இதனை சங்க இலக்கியத்தில் ஒன்றான அகநானூறு,
       நட்டபோலும் நடாஅ நெடுங்கல்       (அகம்.269:1)
என்கிறது.  வீரத்தினைப் போற்றும் பண்பின் அடிப்படையில் தோன்றிய நினைவுச் சின்னம் பின்னர் காலப்போக்கில் ஆவி பற்றிய நம்பிக்கையின் பாற்பட்ட நிலையில் நடுகல் வழிபாடாக உருப்பெற்றது.  வீரயுகத்தில் நினைவுச் சின்னமாகக் கருதப்பட்ட ஒன்று காலப்போக்கில் வழிபாடாக மாற்றம் பெற்ற நிலையினை இது காட்டுகிறது. எனவே நடுகல் நடப்படும் வழக்கம் நம்பிக்கை வயப்பட்ட நிலையில் நம்பிக்கை வயப்பட்ட வழக்கமாக மாறியமையினையே நடுகல் வழிபாடு அமைகிறது.
நடுகல் நம்பிக்கை
       பழந்தமிழரின் வீரத்தைப் போற்றும் பண்பும் ஆவி பற்றிய நம்பிக்கையுமே நடுகல் நடுவதற்கு அடிப்படை காரணமாயின.  வீரத்தினையே உயர்வாகக் கருதிய தமிழகத்தில் நடுகல் எடுக்கும் வழக்கம் காலப்போக்கில் வேறு சில சமுதாய மதிப்புப் பெற்ற மனிதப் பண்புகளுக்கும் சிறப்பளித்தமையினை நம்புமானம்புகழ் ஆகியவற்றிற்காக உயிர்நீத்து நடுகல்லான மாந்தரின் வாழ்வியல் நிகழ்ச்சிகள் உணர்த்துகின்றன.  நடுகல் எடுக்கும் வழக்கத்தில் ஏற்பட்ட இடமாற்றம் ஆவிக் கொள்கைக்கு வழியமைத்ததனைப் பிரேசர் என்ற சமூகமானிடவியல் ஆய்வாளர்இறந்தவனது ஆன்மாவைச் சில சடங்குகள் மூலம் குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைக்கலாம்.  அங்குள்ள ஓர் பொருளில் நுழைந்து கொள்ளச் செய்யலாம் என்ற நம்பிக்கை உலகமெங்கும் பண்டைய மக்களின் பண்பாட்டில் காணப்படுகிறது என்று நடுகற்களும் நம்பிக்கைகளும் என்ற தன்னுடைய கட்டுரையில் அறிஞர் நா. வானமாமலை குறிப்பிடுகின்றார்.  மேலும் அவர்போரில் மாண்ட ஆவி சில நாட்களுக்கு உலகில் உலவுவதாகவும் சாவுச் சடங்குகள் கழிந்த பின்னரே வேறுலகு செல்வதாகவும் நம்பினர்.  சாவுச் சடங்குகள் நிகழ்த்துவதற்குமுன் கல்நாட்டிச் சடங்கு செய்தால் ஆவியின் ஒரு பகுதி அங்கு தங்குமெனவும் விழாக்காலங்களில் பழம் பிறப்புணர்வுடைய மேலோர் உலகிலுள்ள ஆவி இக்கல்லுக்கு வரும் என்ற நம்பிக்கை வழிபடுபவர்களுக்கு இருந்தது என்கின்றார்.  நடுகல்லில் இறந்தோர் ஆவி புகுந்ததாக நம்பும்நிலை நடுகல் வழிபாட்டிற்கு வழிகாட்டியமையினை இதன் மூலம் உணரமுடிகிறது.
       இறந்து ஆவியாகிப் போனவர்களுடைய ஆன்மாவிற்கு ஆற்றல் அதிகம் என்றும்அது ஆக்க சக்தியாகவும் அழிவுச் சக்தியாகவும் வெளிப்படலாம் என்றும் எண்ணுவது கல் நாட்டுவோருடைய நம்பிக்கையாகும்.  எலிஸியம் என்பது இறந்த வீரர் புகும் சுவர்க்கம் எனவும் அது இவ்வுலகிலேயே உள்ளதென்றும் பண்டைய கிரேக்கர்கள் நம்பினர்;;;;;; அது போலவே பண்டைய ஜெர்மானியம்ரோமானியர்எகிப்தியர்சீனர்தமிழர் ஆகியோரும் சுவர்க்கம் என்ற கருத்தில் நம்பிக்கை உடையவர்களாக இருந்தனர் என்கிறார் நா. வானமாமலை.
       வீரர்கள் போருக்குச் செல்லும் போது நடுகற்களை வாழ்த்திப் பலி கொடுத்துச் சென்றமை அக்கால நடுகல் நம்பிக்கையினைப் புலப்படுத்துகிறது.  இ;ங்கு வீரர்கள் நடுகல்லில் அடங்கியுள்ள ஆவியின் துணைபெற்றுச் செல்வதே அந்நம்பிக்கையாகும்.  இவ்வழிபாட்டின் எச்சத்தைக் கல்நாட்டுதல் என்னும் சாவுச் சடங்கில் காணமுடிகிறது.
       வடக்கிருந்தார்க்கும் நடுகல் எடுக்கும் வழக்கம் தமிழர்களிடையே பண்டு தொண்டு இருந்து வந்துள்ளது.  இது அவர்களது நினைவுச் சின்னமாகக் கருதப்படுகிறது.  நோக்கங் கருதி வடக்கிருந்து உயிர்விட்ட சான்றோர்க்கு நடுகல் எடுக்கும் வழக்கம் பழந்தமிழரிடையே சிறப்புக் கருதிய நினைவுச் சின்னமாக அமைந்திருந்தனையே வடக்கிருந்தார்வாள் வடக்கிருந்தார் ஆகியோர்க்கு எடுக்கப்பட்ட நடுகற்கள் புலப்படுத்துகின்றன.  நடுகல்லானோர் காலப்போக்கில் வழிபாட்டிற்கு உரிய தெய்வமாக மாறிவிடுவதனைச் சங்க இலக்கியத்திலும் சிலம்பிலும் சுட்டப்பெறும் நடுகல் வழிபாடு உணர்த்துகிறது.  கோப்பெருஞ்சோழன் தன் நிலையில் தாழ்வு வந்துழி மானங்காக்க வடக்கிருந்து உயிர் நீத்ததனை அவனது நண்பர்களாகிய பிசிராந்தையார்பொத்தியார்பெருஞ்சதுக்கப் பூதநாதனார் ஆகியோர் புறநானூற்றில் முறையே 212:5-10, 223, 219 ஆகிய பாடல்கள் வழி உணர்த்துகின்றனர். இப்பாடல்களின் வழி நட்பிற்காக உயிர்துறக்கும் தன்னலங் கருதாத நிலை புலப்படக் காண்கிறோம்.  பாரியின் பெரும்பிரிவு கபிலர் வடக்கிருத்தலுக்குக் காரணமாய் அமைவது கொண்டு மன்னர்-புலவர் உறவு அமையும் விதத்தினை புறநானூறு 236ஆம் பாடல் உணர்த்துகிறது.  நட்புக்கருதி வடக்கிருந்து நடுகல்லாகிய பிசிராந்தையாரைக் கண்ணாகனார் புகழ்ந்ததை புறநானூறு 218ஆம் பாடல் சுட்டக் காணலாம்.  சமணப் பெண் துறவியாகிய கவுந்தியடிகள் உண்ணாநோன்பிருந்து உயிர் விட்டமையை சிலப்பதிகாரம் நடுகல் காதையில் தெளிவுற எடுத்தியம்புகிறது.  இதனைச் சமணர்கள் சல்லேகனை நோன்பாகக் கருதுவர். 
       தமிழரின் வீரத்தைப் பாராட்டு முகத்தான் தோன்றிய நடுகல் வழிபாடு காலப்போக்கில் மனிதனின் பிற பண்புகளைப் பாராட்டும் நிலையினதாக அமைவதனை வடக்கிருந்தார் நடுகற்கள் தெரிவிக்கின்றன.  நடுகல் எடுக்கும் வழக்கம் சங்க காலத்தில் ஆண்களுக்குரிய ஒன்றாகக் கருதப்பட்டது.  காலப்போக்கில் பெண்களுக்கும் நடுகல் எடுக்கும் வழக்கம் தோன்றியது.  இளங்கோவடிகள்தொல்காப்பியர் காட்டும் நெறியில் நின்று கண்ணகிக்குக் கல்நாட்டிக் கடவுளாக்கிய புதுமையினைச் செய்துள்ளார்.  கணவனை இழந்த பெண்டிர் தீப்பாய்ந்து  உயிர்நீத்தபின் அவர்களுக்குக் கல்நடும் வழக்கம் தென்னிந்தியாவில் சங்க காலத்திலேயே பரவலாகக் காணப்பட்டதாயினும் அதனை எந்தவொரு சங்கப் பாடல்களும் சுட்டவில்லை என்பார் ஜி.எல்.ஹார்ட்.  கண்ணகிக்குக் கல் எழுப்பியது காலத்தால் ஏற்பட்ட வழிபாட்டு மாற்றம் எனக் கொள்ளலாம். இருப்பினும் கண்ணகிக்குப் பத்தினிக்கோட்டம் அமைத்தது கடவுள் வழிபாடு பாற்பட்டதாகக் கருதலாமே தவிர நடுகல் வழிபாடு எனக் கருத சற்று தயக்கம் ஏற்படுகிறது. 
       தொல்காப்பியர்,
              காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
              சீர்த்தகு மரபில் பெரும்படை  வாழ்த்தலென்று
              இருமூன்று மரபிற் கல்லொடு புணர    (தொல்.பொருள்.63:19-21)
என்பதால்இங்கு ஆடவர்க்குரிய ஒன்றாகவே நடுகல்லைக் குறிப்பிடுகின்றார்.  சங்க இலக்கியத்திலும் நடுகல் ஆண்களுக்குரிய ஒன்றாகக் காட்டப்பட்டிருப்பது கொண்டு பழந்தமிழர் நடுகல் நாட்டுவதனை ஆண்களுக்குரிய ஒன்றாகக் கருதியமை புலப்படுகிறது. 
போரில் மாய்ந்தோரும்கறவையினை மீட்டோரும்வடக்கிருந்தோரும்பத்தினிப் பெண்டிரும் நடுகல் எடுப்பதற்குரியவர்களாகக் கருதப்பட்டனர்.  போரில் மாய்ந்தோருக்கு நடுகல் எடுக்கப்பெற்ற செய்தியினை அகநானூறு 53ஆம் பாடலும், கறவையினை மீட்டோர்க்கு நடுகல் எடுக்கப்பெற்ற செய்தியினை புறநானூறு 261ஆம் பாடலும், வடக்கிருந்தோர்க்கு நடுகல் எடுக்கப்பெற்ற செய்தியினை புறநானூறு 223ஆம் பாடலும், பத்தினிப் பெண்டிர்க்கு நடுகல் எடுக்கப்பெற்ற செய்தியினைச் சிலப்பதிகாரம் நடுகல் காதையிலும் சுட்டப்பெற்றிருப்பதைக் காணமுடிகிறது.  உயிர்நீத்த பின்னரே நடுகல் எடுக்கும் வழக்கம் நிலவியதனை அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம் போன்றவை எடுத்துரைப்பதனைக் காணமுடிகிறது.  வடக்கிருந்து உயிர் நீத்தவர்கள் நான்கு நிலைகளில் உயிர் நீத்திருக்கின்றனர்.  இதனை சங்கப் பாடல்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன.  தன் நிலைமையில் தாழ்வு ஏற்பட்டதை எண்ணி வடக்கிருத்தலைப் புறநானூறு 213ஆம் பாடலும், புறப்புண்ணுக்கு நாணி வடக்கிருத்தலைப் புறநானூறு 65ஆம் பாடலும்மானத்திற்காக வடக்கிருத்தலைப் புறநானூறு74ஆம் பாடலும், நட்புக்காக வடக்கிருத்தலைப் புறநானூறு 215ஆம் பாடலும் எடுத்துக்காட்டாக அமையக் காணலாம்.  இக்கூற்றுடைய பாடல்களை உற்று நோக்கும் போது மானவுணர்ச்சியும் நட்புமே வடக்கிருத்தலுக்குரிய காரணமாக அமைகிறது எனலாம்.
நடுகல் வழிபாடு
சங்கப் பாடல்கள் சுட்டும் நடுகல் வழிபாட்டுமுறை பழங்கால மக்களின் வழிபாட்டு இயல்புகளைக் கொண்டிருக்கக் காணலாம். நடுகல் வழிபாடு பலியும் கள்ளும் பீலியும் துடியும் பயன்படுத்தியமை பண்டைத் தமிழரின் இயற்கையான வழிபாட்டு முறையினைத் தெரிவிப்பனவாக உள்ளது.  நடுகல் வழிபாட்டினை அகநானூறு 35ஆம் பாடலில் அம்மூவனார் குறிப்பிடுகின்றார்.  இப்பாடலில் கரந்தை மறவர்க்கு நடுகல்நட்ட செய்தியும் வழிபட்ட மரபும் சுட்டப்பட்டு இருக்கிறது.  இப்பாடல் ஒன்றில் மட்டுமே செம்மறியாட்டுக் குட்டியினைப் பலியிட்டு நெல்லாற் சமைத்த கள்ளோடு படைத்தமை குறிப்பிடப்பட்டுள்ளது.  பீலி சூட்டும் மரபு புறநானூறு 232 மற்றும் 260ஆம் பாடல்களில் சுட்டப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது.  மேலும் பீலி சூட்டுவதன் காரணம் அழகுபடுத்தும் நிலையில் அமைந்த ஒன்றா அல்லது ஏதாவது குறியீட்டின் அடிப்படையில் பயன்கொண்ட ஒன்றா என்பது சித்தனைக்குரிய ஒன்றாகும்.  நடுகற் பீலி சூட்டித் துடிப்படுத்து என்று அகநானூற்று (35:8) வரி துடி முழக்குதலே நடுகல் வழிபாட்டில் பேசப்பட்டுள்ளமை கொண்டு சிறுதெய்வ வழிபாட்டு நிலை புலப்படக் காண்கிறோம்.  நடுகல் பெரும்பாலும் மேற்கூரையற்ற நிலையில் காடுகளில் நடப்பட்டிருப்பினும் ஆடையினைப் பந்தராகக் கட்டியமையை அகநானூறு 260ஆம் பாடலும்கூரையமைத்திருந்தமையைப் பட்டினப்பாலை (78-81)யும் குறிப்பிட்டிருப்பதைக் காணமுடிகிறது.
நடுகல்லில் நடுகற்களான வீரனின் பெயரும் சிறப்பும் பொறித்தமையும்அவனது படைக்கலங்களை நடுகல்லுக்கு அருகிலேயே ஊன்றியிருந்தமையையும் அகநானூறு 131ஆம் பாடலில் மருதனிள நாகனார் எடுத்துரைத்திருக்கின்றார். நடுகல்லில் பீடும் பெயரும் எழுதுதல் பெருவழக்காக அமையும்.  இதனை எடுத்துடை நடுகல், பெயரோடு நட்டகல், குயிலெழுத்து, கோடுமாயெழுத்து போன்ற சொல்லாட்சிகளில் சங்க இலக்கியங்களில் குறி;ப்பிடப்பட்டிருக்கின்றன.  எழுத்துடை நடுகல் என்று ஐங்குறுநூறு 352ஆம் பாடலும், பெயரோடு நட்டகல் என்று மலைபடுகடாமும் (வரி. 386-389)> குயிலெழுத்து என்று அகநானூறு 297ஆம் பாடலும், கோடுமாயெழுத்து என்று அகநானூறு 343ஆம் பாடலும் சுட்டக் காணலாம்.  வீரமே நடுகல்லிற்கு அடிப்படையாக அமைகின்ற நிலையில் அவனது படைக்கலங்களும் நடுகல் வழிபாட்டில் வைத்து வழிபாடு செய்யப்பெறுகிறது.  இவ்வாறான காட்சிகளை அகநானூறு 67 மற்றும் 131ஆம் பாடல்களும்பட்டினப்பாலை (வரி.78-81)யும் சுட்டிச் செல்கின்றன.
இவ்வாறு அமைந்த நடுகல் மற்றும் நடுகல் படைக்கலங்களை வழிபடுவதற்குப் பழந்தமிழர்கள் நெல்லையும் மலரையும் தூவி வழிபட்டிருக்கின்றனர்.  நெல்லையும் மலரையும் தூவி தெய்வத்தினை வழிபடும் முறை பழந்தமிழரின் வழிபாட்டு முறைகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது.  இம்முறையே நடுகல் வழியாட்டிலும் காணமுடிகிறது.  நெல்லைத் தூவி வழிபட்டதைப் புறநானூறு 355ஆம் பாடலும்மலரைச் சூட்டி வழிபட்டடை அகநானூறு 343ஆம் பாடலும் எடுத்தியம்புகிறது.
வழிபாட்டில் தூவி வழிபடுவதைப் போல் படைத்து வழிபடுதலும் உண்டு.  நடுகல் வழிபாட்டில் பழந்தமிழர்கள் படைத்தும் வழிபட்டிருக்கின்றனர்.  நடுகல்லுக்குப் படைத்தல் என்பது நடுகல்லானவர்கள் விரும்பிப் பயன்கொண்ட பொருளாகலாம் என்பது நினைத்தற்குரியது.  இன்றைய நடைமுறையில் இறந்தோர்க்குப் படைத்தலில் அவர்கள் விரும்பியபயன்படுத்திய பொருட்கள் இடம்பெறுநிலை நடுகற்கும் பொருந்துவதாக அமைகிறது.  மேலும்நடுகல்லுக்கு நாட்பலி செய்தலும் வழக்கமாக இருந்திருக்கிறது.  இதனை அகநானூறு 289ஆம் பாடலும் புறநானூறு 329ஆம் பாடலும் தெரிவிக்கின்றன.  அதாவது, மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் நடுகல்லுக்கு நாட்பலி ஊட்டிய தன்மையினைப் புறநானூறு 329:1-5இல்  காலையில் நீராட்டி நறிய தூபங்காட்டி வழிபட்டதை உணர்த்துகிறது.  மேலும், மல்லிகைப்பூ காலை வழிபாட்டில் பலியாகப் பயன்பட்டதனை அகனாநூறு 289ஆம் பாடலில் இளங்கீரனார் எடுத்துரைக்கின்றார்.
அள்ள+ர் நன்முல்லையார் நடுகல்லை வழிபட்டு வேண்டியதைப் பெறலாம் என்ற நம்பிக்கையைப் புறநானூறு 306ஆம் பாடலில் எடுத்துரைக்கின்றார்.  அதாவது இல்லறத்தை நல்லறமாக்க விழையும் பெண்ணொருத்தி நடுகல்லைத் தொழுது விருந்தெதிர் கோடலைத் தருமாறு வேண்டி வழிபட்டமை இப்பாடலில் வெளிப்படுகிறது.  நடுகல்லைத் தொழுதால் மழை பெய்யும் என்ற நம்பிக்கையும் பழங்கால மக்களிடம் நிலவியிருந்ததைப் புறநானூறு 263ஆம் பாடல் எடுத்தியம்புகிறது.
மேற்காணும் சான்றுகளின் அடிப்படையில் காணும் போது நடுகல் பழந்தமிழரின் நம்பிக்கை வழிப்பட்ட ஒன்றாகவும்அந்நடுகற்கள் கடவுளுக்கு இணையாகக் கருதப்பட்ட ஒன்றாகவும் விளங்கியிருப்பதைக் காணமுடிகிறது.


__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

TF%2BPorpanaik%2Bkottai.pngThe stone found near a pond was being used by people for washing clothes

Students of Department of Epigraphy and Archaeology of Tamil University here have discovered an important hero stone, a stone commemorating a heroic act, with Tamil-Brahmi (Tamizhi) inscription near Pudukottai. The discovery is considered to be significant in the history of early Tamil epigraphical research.
T. Thangadurai, S. Pandyan and A. Moses, research students of the Department of Epigraphy and Archaeology, found the stone slab at Porpanaikottai near Pudukottai during fieldwork last week.
The stone, lying near a pond close to the village, was being used by people for washing clothes. The triangular stone, measuring about 60 cm x 60 cm in area, is 10-cm thick. The stone has a five-line inscription written in Tamil using Tamil-Brahmi characters of circa 2 century Christian Era.

The university’s Professors S. Rajavelu, Y. Subbarayalu, N. Athiyaman, V. Vedachalam, V. Selvakumar and M. Bhavani deciphered the inscription and epigraphists are scrutinising it further.

According to S. Rajavelu, Professor of Underwater Archaeology, the inscription refers to the death of Kanang Kumaran, an officer in charge of the personal bodyguard wing (tanaiyan of the angkappadai) of the army of Atavanaru (Atavanur) which rescued cattle during the reign of Pon Kongar Vinnakon, successor of Ko Venkatti, a chief mentioned in the Sangam texts. The memorial was erected to mark the death of Kanang Kumaran.

M. Thirumalai, Vice-Chancellor of Tamil University, told presspersons on Friday that this was an interesting and important discovery. “Our students had discovered four hero stone inscriptions in Tamil-Brahmi script. The four earlier hero stone inscriptions are datable to the pre-Christian era.”
He said the inscription constituted important epigraphical evidence to correlate with the Tamil society of the Sangam period. Sangam literature had references to the capture of cattle in the enemy region and rescuing those driven away. Those killed in cattle raids gained commendation from the king, and in some cases, were stones engraved with their name were erected (Ezuthudai Nadukal).

The Chief Pon kongkar Vinnakkon probably ruled after Ko Venkatti. The word etirana appearing in the inscription suggest this. One could compare the legend on the Antipatti sliver coins that mentions Atina Etirana Sendan. (The Sendan who ruled after Atinan or Atinan, who ruled after Sendan).

The words angkappadai, tanaiyan and kanam are also interesting. The word angkappadai means the personal body guard of the chief, taniya denotes that he was in charge officer of the fort. The find spot —Porpanaikottai — still has the remnants of a mud fort and the fort covers 40 acres of land. It could have served as a garrison in those days.

http://www.archeolog-home.com/…/porpanaikottai-inde-stone-c…

http://www.thehindu.com/…/stone-commemor…/article3662994.ece

http://www.newindianexpress.com/…/chennai/article579686.ece…

http://wikimapia.org/4639872/porpanakkottai

பொற்பனை கோட்டை

பொன் பரப்பினான்பட்டி என்ற பண்டையப் பெயர் பொற்பனைக் கோட்டை என மாறி வழங்கப்படுகிறது.
புதுக்கோட்டை அருகே சங்க காலத் தமிழ் பிராமி எழுத்துப் பொறிக்கப்பட்ட நடுகல்லை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் அண்மையில் கண்டெடுத்தனர். கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லை ஆய்வு செய்ததன் மூலம் பண்டைய தமிழகத்தில் வாழ்ந்த வேளாண், கால்நடை மேய்ப்புச் சமூக மக்கள் எழுத்தறிவு கொண்டவர்களாக இருந்துள்ளனர் என்பது உறுதியாகிறது என்கிறார் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம. திருமலை. இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை மேலும் தெரிவித்தது: இந்தப் பல்கலைக்கழகத்தின் கல்வெட்டியல் - தொல்லியல் துறையைச் சேர்ந்த ஆய்வு மாணவர்கள் த. தங்கதுரை, எஸ். பாண்டியன், அ. மோசஸ் ஆகியோர் புதுக்கோட்டை பகுதியில் கடந்த வாரம் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டைக்கு அருகே துணி துவைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த நடுகல்லை கண்டெடுத்தனர். இதையடுத்து, புதுவை பல்கலைக்கழகப் பேராசிரியர் க. ராஜன், இந்திய தொல்லியல் துறை தெற்கு வட்டார இயக்குநர் து. தயாளன் உள்ளிட்டோர் அதைப் பார்வையிட்டனர்.
இந்த நடுகல்லில் கி.பி. 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி (தமிழி) எழுத்துகள் இடம் பெற்றுள்ளன.
இது இந்தியக் கல்வெட்டியலில் மிக முக்கியமானது. தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட 5-வது கல்வெட்டு இது.

நம் நாட்டிலேயே இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நடுகல்களில் காலத்தால் முற்பட்ட நடுகல்களில் இதுவும் ஒன்று என்றார் அவர்.

இந்த நடுகல்லை பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் சு. ராசவேலு, ந. அதியமான், வி. செல்வகுமார், ம. பவானி, முன்னாள் பேராசிரியர் எ. சுப்பராயலு, கல்வெட்டு ஆய்வாளர் வெ. வேதாசலம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து ராசவேலு தெரிவித்தது: தலா 2 அடி அகலம், நீளமுடைய இந்த நடுகல் முக்கோண வடிவில் உடைக்கப்பட்டு, எழுதப்பட்டுள்ளது.

இதில்
கோவென் கட்டிற் நெதிர
ணறு பொன்கொங்கர் விண்ணகோன்
ஆ எறிஇத்து ஏவ அதவ்வனரு
அங்கபடைத தாணையன் கணங்
குமரன் கல்
என 5 வரிகள் எழுதப்பட்டுள்ளன.

அதாவது, கோவன் கட்டி என்பவருக்கு அடுத்து வந்த பொன் கொங்கர் விண்ணகோன் காலத்தில் அதவன்னூரைச் சார்ந்த கணங்குமரன் என்பவர் ஆநிரைப் போரில் பசுக் கூட்டத்தைக் கைப்பற்றி இறந்தமைக்காக எடுக்கப்பட்ட நடுகல்.
கணங்குமரன் என்பவர் மெய்க்காவல் படைத் தலைவராகவும், கோட்டையைக் காக்கும் தலைவனாகவும் இருந்துள்ளது இந்தக் கல்வெட்டின் மூலம் தெரிய வருகிறது.
தாணையன் என்பது கோட்டை அல்லது அரணைக் காக்கும் தலைவன் எனப் பொருள்படும். மேலும், அங்கப் படை என்பது அக்காலத்தில் இருந்த மெய்க்காவல் படையைக் குறிக்கும்.

இந்தக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட பொற்பனைக்கோட்டை, சங்கக் காலத்தில் கோட்டைப் பகுதியாக இருந்துள்ளது. இப்போதும், இந்தக் கோட்டையின் இடிபாடுகள் காணப்படுகின்றன.
எனவே, இந்தக் கோட்டையைக் காக்கும் தலைவனாக இப்போரில் இறந்த கணங்குமரன் இருந்திருக்க வேண்டும். இந்த நடுகல் கல்வெட்டில் உள்ள தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்புகளின் அமைப்பைப் பார்க்கும் போது, அரச்சலூர், அம்மன்கோவில்பட்டி, பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகளுக்கு முற்பட்டதாக உள்ளது.

எழுத்தமைப்புப்படி, இது கி.பி. 2 ஆம் நூற்றாண்டாகவும், கரூர் அருகே புகலூரில் கண்டெடுக்கப்பட்ட முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த சேரர் கல்வெட்டுக்குப் பிற்பட்டதாகவும் உள்ளது என்றார் அவர்.
இந்தக் கல்வெட்டில் இடம் பெற்றுள்ள கட்டி மரபினர் குறித்து அகநானூறில் உள்ள பாடல் வரிகள் மூலம் பல்கலைக்கழக இலக்கியத் துறைத் தலைவர் வ. குருநாதன் விளக்கினார்.

http://wikimapia.org/4639872/porpanakkottai#/photo/2627506



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard