Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சிவன் வணக்கம் சிவலிங்க வணக்கமாக மாறுதல்:


Guru

Status: Offline
Posts: 7467
Date:
சிவன் வணக்கம் சிவலிங்க வணக்கமாக மாறுதல்:
Permalink  
 


சிவன் வணக்கம்

 

 

சிவன் வணக்கம் சிவலிங்க வணக்கமாக மாறுதல்:

பழங்காலத்தில் மக்கள் சிவன் என்னும் ஞாயிற்றுக் கடவுளை மலைமுகடுகளில் கண்டு வணங்கினார்கள். ஆகவே மலை முகடுகள் கடவுளின் உறைவிடம் என்று கருதினர். மலை இலாத நாடுகளில் மலைபோன்ற முக்கோண செய்குன்றுகளை எழுப்பி அவை மீது ஞாயிற்றைப் போன்ற வட்ட வடிவான வடிவத்தை வைத்து வழிபட்டார்கள். எகிப்தியரின் “கூர்நுதி”ச் சமாதிகள் ஞாயிற்றுக் கடவுளின் கோயில்களே யாகும். எல்லா இடங்களிலும் செய்குன்றுகளளை எழுப்புதல் எளிதன்று. ஆதலின், செய்குன்று வடிவான முக்கோணக் கற்கள் ஞாயிற்றின் குறிகளாக வைத்து வழிபடப்பட்டன. இலிங்கம் என்பதற்கு அடை யாளம் என்பது பொருள். (sanchi and its Remain – p.50 General F.C.Maisey) முக்கோண வடிவான கற்கள் பின்பு அடி அகன்று நுனி ஒடுங்கிய கற்களாக மாறின. ஒபிலிஸ்க் (Obelisk) எனப்படும் சதுரவடிவான தூண்களும் ஞாயிற்றின் வடிவங்களாகும்.

விவிலிய மறையில் பீதெல் என்று சொல்லபடுவன மரங்களின் கீழ் நிறுத்தப்பட்ட சிவலிங்கங்களேயாகும்.

கைலை, என்பது பழங்காலத்தில் சிவன், கோயில் கொண்டிருந்த மலைகளைப் பொதுவில் குறிக்க வழங்கிய பெயர் எனத்தெரிகிறது. இலங்கையிலுள்ள திருக்கோணமலையே எல் தொடர்பான பெயரைப் பெற்றிருப்பதற்குக் காரணம் அது, தென் கைலை என வழங்கப்படுகிறது.

கைலை மலை, திருக்கோணமலை முதலிய மலைகளைப் பார்க்கும் போது சிவலிங்கள் வடிவம் போன்று தோற்றம் அமைந்திருப்பதனாலேயே அவை சிவனின் இருப்பிடங்கள் எனக் கருதப்பட்டிருக்கின்றன. வடக்கேயுள்ள சிவன் மலை வட கைலை என்றும், தெற்கேயுள்ள அவ்வகை மலை தென் கைலை என்றும் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆதியில்,

இவ்விடங்களின் பெயர்கள் ‘எல் + ஐ + அம் = எல்ஐஅம் என்று இருத்தல் கூடும். பின்பு பிரித்தறியும் பொருட்டு வடகை ( வடக்குப் பக்கத்திலுள்ள) இடகை (இடப் பக்கத்திலுள்ள) என்னும் சொற்கள் சேர்ந்து வழங்கப்பட்டனவாகலாம். அப்பொழுது வடகை எல்லை அம், தென்கை எல்லை அம் என்று ஆகிய பெயர்கள் வடகைலாயம், தென்கைலாயம் என்று வழங்கலாயின என்று கருதலாம்.

இலிங்க வணக்கம் இந்தியாவில் மட்டும் காணப்படுவதன்று. ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் அகிப்திலும் காணப்படுகிறது. உரோமர் சிவலிங்கங்களைப் பிரியாபஸ் எனப் பெயரிட்டு வணங்கினார்கள். கிரேக்கர்களின் இலிங்கக் கடவுள் இதுவே. உரோமரும், கிரேக்கரும், எகிப்தியரும் சிவலிங்கங்களை நாட்டிக் கோயில்கள் அமைத்தார்கள். பிரியாபஸ் என்பது இந்தியாவில் காணப்படும் சிவலிங்கங்கள் போன்றது. இஸ்ரவேலர் சிவலிங்கங்களை வழிபட்டார்கள். விவிலிய மறை (I King XV) அசா (Asa) என்பவன் தன் தாயைச் சிவலிங்கத்துக்குப் பலி செலுத்தாதபடி தடுத்து அதனை அடைத்தெரிந்தானென்று கூறுகிறது. (A Dictionary of Religious Ceremonies of the Eastern Nation)


சிவம்பொருள் விளக்கம்:

‘சிவம் என்ற சொல் தமிழ்ச் சொல் என்று டாக்டர் கிரையர்சன் கூறுகின்றார் “The term’ Siva is Tamil in its origin; the conception of Rudra-Siva has a tinge of Dravidian influence on the Aryans not only philosophically but on their whole mode of thought” வேத இந்தியா (Vedic India) என்னும் நூலில் ரகோசின் என்பவர் சிவ வழிபாடு ஆரியர் வந்தபோது இந்த நாட்டில் வாழ்ந்த ஆதிமக்களில் ஒரு வகையாளர் வழிபாடென்று குறிப்பிட்டுள்ளார். சிவ என்ற சொல்லிலுள்ள சகர ஓசை ஆதியில் ஆரிய மொழியிற் கிடையாத கபால ஒலி (Cerebral) எனப்படும். அத்தகைய ஒலிகள் திராவிடச் சார்பால் ஆரிய மொழியில் புகுந்தன என்று ஆசிரியர் ராப்சன் கூறுகின்றார். சிவ என்ற சொல் செம்மை என்பதன் அடிப்படையாகப் பிறந்தது. அது சிவப்பு என்றும் நன்மை, மங்களம் என்றும் பொருள்படும். தமிழ் மக்கள் வேட்டுவ வாழ்க்கை நிலையிலிருந்த போது சிவனை வழிபட்டமையால் தமக்குள் அரிய செயலாய் மதிக்கப்பட்ட புலிக் கொலையையும் பாம்பு வசியத்தையும் அப்பெருமானுக்கு ஏற்றி வணங்கினர் போலும். புலித் தோலாடையும் பாம்பு நகையும் சிவபெருமானுக்கு உரியன வாயின1 என கா. சு. பிள்ளை விளக்குவதினின்று சிவம், ஆதிதிராவிட பழங்குடியினரின் வழிபாட்டில் இருந்தாகவும் அது மொழி வழியாகவும் பண்பாட்டின் வழியாகவும் தமிழர்க்கு உரியதென விளங்குகிறது.

சதாசிவம்:

ஆனந்த மார்க்கத்தின் தலைவரான ஆனந்த மூர்த்தி ஆய்வுக் கட்டுரையின் மூலம் மனிதனாகத் தோன்றி, மக்களுக்கு மட்டுமல்ல அனைத்து உயிரினங்களின் நல வாழ்விற்காகவும் அருந்தொண்டாற்றியவர் ‘சதாசிவம்’ என்றழைக்கப் பெற்றவர் என அறிகின்றோம்.2

வழிபாட்டில் சிவன்:

இராமன் சீதையை இராவணனிடமிருந்து மீட்டு வரும் போது சிவனை வழிபட்ட இடத்தைக் காட்டியதாக இராமயணம் மூலம் அறிகிறோம். கிருஷ்ணன் மகாபாரதப் போரின் போது 12ஆம் நாள் இரவு அருச்சுனனிடம் சிவனை நோக்கி வேள்விச் செய்யச் சொன்னான் என்பதாலும், இராமனுக்கும் கிருஷ்ணனுக்கும் காலத்தால் முற்பட்டவன் சிவன்3 என்னுங்கருத்தால் காலத்தைத் தெளிவாக வரையறை செய்ய முடியாத பழமை மரபிற்குரிய பெயரே ‘சிவன்’ எனத் தெரிகிறது.

பழமைச் சிறப்புடைய சிவன், காலத்தால் பழைய சங்க இலக்கியங்களிலும் குறிக்கப் பெறவில்லை என்பது வியப்பிற்குரியது. ஆனால், குறிப்பாக உணர்த்தும் மரபினைப் பரவலாகக் காணமுடிகிறது.

இலக்கியங்களில் சிவன்,

முக்கண் செல்வன்4
கரை மிடற்றண்ணல்5
காரி உண்டிக் கடவுள்6
தாழ் சடையன்7
புரமெரித்தோன்8
கொன்றை மாலையன்9
ஆலமர் கடவுள்10

1. கா.சு. பிள்ளை, தமிழர் மதம். சென்னை. பக். 6869
2. ஆறுமுக சாமிகள், தமிழ் ஆய்வுக் களங்கள். திருநெல்வேலி. 1999. பக். 65
Sadasiva who was born into this world about 7000 years ago and who by his holy birth consecreated as it were, each and every dust particle of this earth and utilized this whole life for the sole purpose of advancing the course of universal welfare Remember I have not said ‘human welfare’ because in our world not only are there humans, there are also birds and animals, trees and plants. Siva belongs to all and for all living beings. He gave His all, Hence the people called him Sadasiva- Sadasiva means ‘always’ and siva- as a I have said earlier means ‘welfare’ so Sada Siva means one whose only vow of existance is to promote the all round welfare of all living beings. (Sri Sri, Namah Shivaya Shamtaya, Ananda marga prachara sangam, Calcutta. 1985, p.5)
3. ஆறுமுக சாமிகள், தமிழ் ஆய்வுக் களங்கள். பக். 6869
4. புறம். 6, 55, அகம்181, முருகு153, கலி2:104
5. புறம் 1, 6, 55
6. மலைபடு கடாம் 82, 83
7. புறம்1
8. புறம்55
9. புறம்1, கலித்தொகை150
10. புறம்198

மேலே குறிக்கப் பெற்ற அத்தனையும் சிவனைக் குறிப்பனவே. என்ன காரணத்தினாலேயோ ‘சிவன்’ என்னும் பெயரால் குறிக்காமல் இத்தகைய குறிப்பால் குறிக்கும் மரபினைப் புலவர் கையாண்டனர் என்பது வியப்பளிப்ப தாகும்11 என்பர்.

மேற்கண்ட அனைத்தும் சிவனின் செயல்தான் என்பதற்கான எந்தச்சான்றினையும் காட்டவில்லை. முக்கண் செல்வன், கரை மிடற்றண்ணல், காரி உண்டிக் கடவுள், தாழ் சடையன், புரமெரித்தோன், கொன்றை மாலையன், ஆலமர் கடவுள் என்பன வெல்லாம் சிவனுக்கு மட்டுமே உரியதெனக் கருதுவதில் எந்த நியாமும் இருப்பதாகத் தோன்றவில்லை.

“சேயோன் மேய மைவரை யுலகம்”12 எனத் தொல்காப்பியம் குறிப்பது சிவனையேயாதல் வேண்டும்.13 என்பதும் சரியாகத் தோன்றவில்லை.

புராணம் குறிப்பிடும் சிவனும், இலக்கண இலக்கியம் காட்டும் குறிப்புகளும் ஒருவரையே குறிப்பிடுகின்றன என்பது பொருந்தாது. புராணங் குறித்த காலமும் இலக்கண இலக்கிய காலமும் வேறு வேறானவை. நீண்ட இடைவெளியைக் கொண்டவை என்பதால் இவ்வாறு கருதத் தோன்றுகிறது.
சிவன் பண்டு தியானம் கருதி மலையைத் தேர்ந்தவன். தென்னகத்தின் பொதியமும், வடக்கில் கயிலையும் அவன் சேர்ந்த மலைகள். சிவன் புலித் தோலையும் யானைத் தோலையும் உடுத்தியவன் என்பதிலிருந்து பனிக்காக இவ்வாடைகளைத் தேர்ந்தான் என அறிகின்றோம். சாம்பலைத் தண்ணீரில் குழைத்து உடம்பெல்லாம் பூசிக் கொள்ள எப்படிப் பட்ட குளிர் பாதிப்பும் ஏற்படாது. சிவன் இப்பழக்கம் மேற் கொண்டவன். காலப்போக்கில் சாம்பல் சமயச் சின்னமாகிய திருநீறாகியது. தியானம் யோகம் கற்பம் போன்ற முறைகளைக் கையாள சாத்வீக உணவையே கொள்ளுதல் வேண்டும். சிவன் மேற் கொண்ட உணவுமுறை இதுவே. சிவனை வழிபடு வோர் சைவர் எனப்பட்டது போல, உணவில் சிவன் கண்ட முறையும் காலப் போக்கில் சைவம் ஆனது14 என்பர்.

சிவன் தியானத்திற்காக மலையைத் தேர்ந்து, பொதிகைக்கும் கயிலைக்கும் சென்றான் என்பது பொருந் தாது. சிவன், கடல் கொண்ட குமரி நாட்டில் பஃறுளி ஆற்றங் கரையில் இருந்த தென் மதுரையில் நடைபெற்ற முதற் தமிழ்ச் சங்கத்தின் தலைவன். இது கி.மு. 10490 என்று கருதுவர் என்றால் கி.மு. 10490இல் குமரிக்கண்டத்திற்கும் கயிலைக்கும் ஒருவன் சென்று வருவதென்பது வெறுங் கற்பனையே. சாலை வசதியோ வாகன வசதியோ இல்லாத அக்காலத்தில் தமிழ்ச் சங்கத்தின் தலைவனாக இருந்த புலவரும், யோக நெறியைப் பின்பற்றுபவருமான ஒருவர் இவ்வளவு தூரம் நெடும் பயணம் மேற்கொண்டிருந்தால், அவர் மேற்கொண்டிருந்த புலமையும் யோக நெறியும் மேலோங்கியிருக்காது. கயிலை என்பதும் பொதிகை என்பதும் வேறு பொருளை உணர்த்தும் குறியீடாக இருக்கலாம்.

11. ஆறுமுக சாமிகள், தமிழ் ஆய்வுக் களங்கள். பக். 69
12. தொல்காப்பியம், அகத்தினை. இயல். 5
13. ஆறுமுக சாமிகள், தமிழ் ஆய்வுக் களங்கள். பக். 69
14. ஆறுமுக சாமிகள், தமிழ் ஆய்வுக் களங்கள். பக். 70
15. ஆறுமுக சாமிகள், தமிழ் ஆய்வுக் களங்கள். பக். 6869

முதல் சித்தன் சிவன்:

“சிவனைப் புராண நாயகனாகக் கொள்வதைக் காட்டிலும் வரலாற்று நாயகனாகக் கொள்வது பொருந்தும்.
சித்தர் இலக்கியங்கள் மூலம் சிவனே முதல் சித்தன் என்பதற்கான சான்றுகளைக் காணலாம்.

“பொதிகையிலே எனைப் பார்க்க சிவனும் வந்தார்
பூரணனே தெய்வமென்று போற்றிச் செய்து
இதமாகக் கற்பமுறை யாவும் கேட்டேன்”16

“சுகமாக நாகமது தரித்த ஈசன்
சுந்தரிக்குச் சொல்ல என்பால்
சூட்டினான்பார்”17

“நீ கேளு புலத்தியனே கற்ப மார்க்கம்
நின்மலமாம் சதாசிவனார் எனக்குச் சொன்னார்”18

“சாரித்த நாற்பத்து முக்கோ ணத்தைச்
சதாசிவனார் வகுத்தபடி சாற்றி னேனே”19

“சருகுமுனி எனும்பேர் சிவன் தந்தார் பாரே”20

“நாரிமுனி பாகனார் அருளால் சொன்னார்”21

“சிவனார் உரைத்தமொழி பரிவாய்ச் சொன்னார்”22

“பாதிமதி அணிந்தவர்தான் சொன்னதிது”23

“சொல்லவே தேவிக்குச் சதாசிவன்தான்
சொல்லிடவே தேவியும் நந்திக்குச் சொல்ல”24

“தாரணிந்த ஈசனன்று ஆயிக்குச் சொல்ல
தாயான ஈஸ்வரியும் நந்திக்குச் சொல்ல”25

என்பன போன்ற ஒத்த கருத்துகள் சித்தர் இலக்கியங்களில் காணமுடிகிறது.மருத்துவ நூல்களில் சிவன் மரபு தமிழில் காணப்பெறும் நூல்களில் பெரும்பாலும் பரமசிவன் தேவிக்கும், தேவி நந்திக்கும், நந்தி அகத்தியர் க்கும், அகத்தியர் புலத்தியர்க்கும் புலத்தியர் ஏனைய சித்தர் களுக்கும் சரியை, கிரியை, யோகம், ஞானம், மருத்துவம் ஆகிய அனைத்தையும் கூறியதாகக் காணப்படுகிறது. (இதே கருத்து சித்த மருத்துவப் பகுதியில் விளக்கப்பட்டுள்ளது.) ஆகவே அக்காலத்தில் சிறப்புற்று வாழ்ந்த மருத்துவப் பெரியார்களைப் போற்றுகின்ற வகையில் இவ்வாறு கூறப் பட்டதாகக் கொள்வதே சான்றோர்களுக்குச் சிறப்பெனத் தோன்றுகிறது.

சிவனின் வழிவந்த அகத்தியர் மருத்துவ மரபிரைக் குறிக்கும் முனைவர். ஆ. தசரதன், புலத்தியர்க்குப் பின், பரிபூரணம், முப்பு, சூத்திரம், வாகடம், வைத்தியம், கர்மம், கலைஞானம், தீட்டை, பூசை, இரசம், ஞானம்... .... .... என தற்போது

16. அகத்தியர் கற்ப முப்பு குறுநூல். பா. 48 17. அகத்தியன் வைத்திய வல்லாதி 600, பா.385 18. அகத்தியர் தீட்சா விதி200. பா. 50 19. அகத்தியர் பரிபூரணம்400. பா. 69 20. அகத்தியர் சௌமிய சாகரம்1200. பா. 77 21. யாகோப் வைத்திய வாத சுருக்கம்400. பா. 37 22. தேரையர்1001. பா. 653 23. யூகி வாதாங்க தீட்சை300. பா. 260 24. தன்வந்திரி வைத்திய சிந்தாமணி150. பா. 3 25. போகர் புவன கோசரம். பா. 1

வழங்கி வருகின்ற நூலின் பெயரோடு அர்/ஆர் விகுதிகளைச் சேர்த்துக் காரணப் பெயராக்கிப் பட்டிலிடு கின்றார். இது, படிக்கவும் கேட்கவும் சிறப்பாகத் தோன்றினாலும், ஆராய்ந்து பார்த்தால் அவ்வளவும் நூலின் பெயராகவும் மருந்தின் பெயராகவும் இருக்கக் காணலாம்.
இவையெல்லாம் ஆய்வாளர்களிடையே ஏற்படுகின்ற மயக்கங்கள் எனலாம்.

சிவன் சக்திகுறியீடு:

“கருவான எட்டிரண்டும் நாதம் விந்து
பேணப்பா நாதவிந்து சக்திசிவ மாச்சு
பெருகிநின்ற சத்திசிவம் தான்தான் என்று
பூணப்பா அறிவதனால் மனமே பூண்டு”26

என்பவற்றால், சத்தி என்பதும் சிவம் என்பதும் எட்டு, இரண்டு எனக்குறிப்பிடப்படுவது நாதம், விந்து ஆகிய இரண்டையேயாகும். அது வெளியிலுள்ளதல்ல. தான்தான் அது. அறிவினைக் கொண்டு மனதால் அறிய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

“தானான சூட்சமது என்ன வென்றால்
தன்மையுடன் போம்வாய்வு சிவம தாகும்
ஊனான உட்புகுதல் சத்தி யாகும்”27

மூக்கின் வழியே உள்ளே போகும் காற்று சத்தி என்றும், வெளியே போகும் காற்று சிவம் என்று அகத்தியரும், உள்ளே வெளியே உள்ள காற்று தெய்வமென்று, காகப் புசுண்டரும் குறியீடாகக் குறிப்பிடுகின்றனர். இவற்றால், சிவம் என்பதும் தெய்வம் என்பதும் குறியீடாகத் தோன்றுவது புலப்படும்.

“திரிந்து பார் தவாரங்கள் செடிபூ டெல்லாம்
சீவசந்து ஊர்வினங்கள் நடப்பினங்கள்
விரிந்துபார் பறப்பினங்கள் விலங்கி னங்கள்
வெறும் பாழென் றெண்ணாதே சிவமென்றெண்ணு”28

காற்றைச் சிவமென்ற அகத்தியரே, தாவரங்கள், செடி, பூண்டு, சீவசந்து, ஊர்வன, நடப்பன, பறப்பன, விலங்கு ஆகிய அனைத்துமே ‘சிவம்’ என்பது குறியீடல்ல. சிவப்பிரச்சாரமாகத் தோன்றுகிறது. (சிவம் என்றால் ‘அ’ ஆகிய உயிர் என்பதால் எல்லாவிடங்களிலும் அது இருக்கிறது எனுங் கருத்தில் இவ்வாறு கூறியிருக்கலாம்)

“மூன்றுக்கும் பேரேது முக்கண் ணென்பார்
மூவரென்பார் மூலமென்பார் மூர்த்தி யென்பார்
மூன்றுக்கும் பொருளறிந்தால் அவனே வாதி
முப்பாழு மிதுக்கொப்பு முடிவு மொப்பு”29

26. அகத்தியர் சௌமிய சாகரம். பா. 336
27. அகத்தியர் சௌமிய சாகரம். பா. 337
28. அகத்தியர் வைத்திய வல்லாதி600. பா. 285
29. கொங்கணர் முதற்காண்டம்1000. பா. 671

தங்கச் சுண்ணத்துள்ளே லிங்கம், பூரம், காரமிட்டு ஆட்ட செந்தூரம் ஆயிற்று. தங்கத்தாலான குருவுக்கு இம் மூன்றும் பச்சை வெட்டாகும் (கூட்டுப் பொருள்) இக் கூட்டுப் பொருளில்லா விட்டால் வேதையில்லை (வாத வித்தை) இத்தங்கக் குருவின் கிடையும் பச்சை மூன்றும் சிவனின் கண்கள் மூன்றுமாம். இறைவன் கண்கள் மூன்றுக்கும் ஒரே பெயராக முக்கண் என்பர்; அவன் செய்யும் தொழில்களை ஏதுவாகக் கொண்டு மும்மூர்த்தி என்பர் மூலக் காரணன் என்பர்; மூன்றுக்குமுள்ள பொருளறிந்தால் அவனே வாதியாம்.30 என்பவற்றிலிருந்து வாதத்திற்கு வேண்டிய மூலப் பொருள் இறைவன் என்றும், அதில் சேரும் மூன்று பொருள் இறைவனின் மூன்று கண்கள் அல்லது முக்கண் என்றும், அப்பொருள்கள் செய்யும் தொழிலை அடிப்படையாகக் கொண்டு மும்மூர்த்தி என்றும் மூலக்காரணன் என்றும் குறியீட்டு முறையால் மறை மொழிகள் வழங்கக் காணலாம்.

சிவன் சித்தர்:

“சித்தராய்ப் போகுமென்று பேசிக் கொண்டு
சிவனவனும் யோசனையே செய்தார் பின்பு”31
மருந்துப் பொருளைச் சிவன் என்று சொன்ன கொங்கணர் வேறொரு நூலில் சிவனைச் சித்தர் என்று கூறுகின்றதைக் காண்கிறோம்.
“தானான சிவன்தன்னைப் பாலில் போட்டுத்
தனித்துமே அடுப்பேற்றி எரித்துக் கொண்டு
ஊனான துலர்த்தியே யிடித்து நைய்ய
உருசிலை வடிகொண்டு சூரணமே செய்து”32

சிவனைப் பாலில் போட்டு அடுப்பேற்றி எரித்து நைய இடித்து உலர்த்திச் சூரணஞ் செய்து என்று போகர் உரைப்பகுதிலிருந்து சிவன் இறைவனாகவோ, சித்தனாகவோ தோன்ற நியாயமில்லை. சிவன் என்பது ஒரு பொருளின் பெயர் என்பது தெளியும்.

“தானென்ற மூவருக்கும் வயது இந்தத்
தகைமையுள்ள கலியுகந்தான் கடாசி தன்னில்
நானென்ற இவர்களுமே மாண்டே போவார்
நன்மையென்ற அடுத்தோர்கள் வீணாய்ப் போவார்
வானென்ற சதாசிவனும் மகேஸ் பரன்றான்
வண்மையுள்ள யுகநூறில் மாண்டே போவார்
தேனென்ற சிவன்மனையாள் பராப ரையும்
தேகம்விட்டு மாண்டிடுவாள் கேளு கேளு
மாண்டிடுவாள் நானுமந்த யுகத்திற் தானும்
மாண்டிடுவேன் சித்தரெல்லாம் மாண்டே போயி
ஆண்ட குரு பராபரத்திற் சேர்ந்தே கொள்வார்
அப்பனே இல்வாழ்க்கை சொற்ப மாகும்”33

சுப்பிரமணியர் அகத்தியர்க்கு உரைப்பதாக வரும் ஞான உபதேசத்தில், இக் கலியுக இறுதியில் சிவன், சிவனின் மனைவி, ஆகியோர் முதலிலும் பின்னர் தானும் மாண்டு போவோம் என உரைக்கக் காண்கிறோம்.

30. கொங்கணர் முதற்காண்டம்1000. பா. 66971 31. கொங்கணர் கற்பம்100. பா. 76 32. போகர் கற்ப விதி. பா. 36 33. சுப்பிரமணியர் ஞானம்25. பா.810

இந்த உலகில் இறைவனாக இருந்தாலும் சித்தனாக இருந்தாலும் ஒரு நாளில் மரணமடைவதற்கு உரியவர்கள் என்பதனால், புராணங்கள் கூறுவது போலும் பக்திநூல்கள் கூறுவது போலும் சிவன் எந்தக் காலத்திலும் அழியாமல் இருப்பவனல்ல என்பது விளங்கும்

சிவன் என்னும் சொல் பல்வேறு பொருளில் பல நிலைகளில் பயன்படுத்தப் படுகின்ற சொல்லாக மருத்துவ நூல்களில் காணப்பகின்றன. என்றாலும், சித்தர்களில் ஒருவன் சிவன் என்னும் பெயரில் இருந்து வந்ததாகவும் அவனின் நினைவாக அவனுரைத்த மருந்து, ஞானம் ஆகியவற்றிற்கு அவனின் பெயர் விளங்க வழங்கி வருவதாகவும் கருத நேர்கிறது. சித்த மருத்துவத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு குழம்பிற்கு அகத்தியர் குழம்பு எனும் பெயர் வழங்கப் படுகிறது. அந்த மருந்து ஏனைய மருந்துகளிலிருந்து மாறுபட்ட மருந்தாகவும் எல்லா நோயையும் போக்கக் கூடிய மருந்தாகவும் உரைக்கப்படுவது நினைவிற் கொள்ளத் தக்கது.

பழந்தமிழ் நூல்களுள் மிகப் பழமைவாய்ந்தது, தொல்காப்பியம். அதன்கண் சேயோன், மாயோன், கொற்றவை என்பவையாகும். சேயோன் சிவந்த நிறமுடையவன். மாயோன் கரிய நிறமுடையவ திருமால். கொற்றவை திரிபுர சுந்தரி அல்லது முப்புறம் எரித்த அம்மை ஆகிய தெய்வங்கள் வழிபடப்பாட்டிற்குரியன எனக் குறிக்கப் பட்டுள்ளது.

குமரி நாட்டில் பஃறுளியாறு கடல்வாய்ப்படுமுன் இயற்றப்பட்டதுமான ‘காரிக்கிழாரின் புறப்பாட்டில்,
‘வடாஅது பனிபடு நெடுவரை வடக்குந்
தெனாஅ துருகெழு குமரியின் றெற்கும்’

என்று, தமிழகத்தின் எல்லையைக் குறிப்பிடுவதுடன்,

‘பணியிய ரத்தை நின் குடையே முனிவர்
முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே’

என்று, சிவனுக்குத் திருக்கோயில் இருந்தது என்பதுடன், வழிபாட்டிற்குரிய தெய்வம் என்றும், நகரில் ஊர்வலமாகவும் எடுத்துவரப் பட்டது! என்றும், குறிப்பிடுகிறார்.
இச்செய்யுள் இன்றைக்கு ஏறத்தாழ 5000 ஆண்டிற்கு முற்பட்டது.

பெருங்கடுங்கோன், பாலைகலியில்,

‘முக்கண்ணான் மூவெயிலும்
உடன்றக்கால் முகம்போல ஒண்கதிர் தெறுதலின்’

என்று, சிவன் முப்புறம் எரித்ததைக் கூறுவதையும் காண்க.

‘இமயவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்’

என்று, குறிஞ்சிக்கலியும்,

‘மணிமிடற் றண்ணற்கு மதியாரற் பிறந்தோய் நீ’

என்று, பரிபாடலும் கூறுகிறது.

‘புனையிழாய் ஈங்குநாம் புலம்புறப் பொருள்வெஃகி
முனை என்னார் காதலர் முன்னிய ஆரிடைச்
சினைவாடச் சிறக்குநின் சினம் தணிந்து ஈக எனக்
கனைகதிர்க் கனலியைக் காமுறல் இயைவதோ?’

என்று, கலித்தொகை (16: 9-12) கூறுகிறது.


__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

'அந்தணர் என்னும் சொல் 'அந்தத்தை அணவுவார் அந்தணர்' 

அந்தம் என்றால் முடிவு - இறுதிநிலை. பொதுவாக இங்கு அனைவரின் வாழ்வுக் குறிக்கோளின் இறுதி நிலையை, சிறப்பாக ஆன்மீகரின் அல்லது துறவியரின் இறுதிக் குறிக்கோளைக் குறிக்கும். . -

'அணவுதல்' என்றால் கிட்டுதல், பொருந்துதல், சேர்தல் எனப் பொருள்படும். - -

அணவுதல்’ என்பதற்கு மறுபொருள்கள் தலைதுாக்கல், அண்ணாத்தல், மேலமைதல், மேல்நோக்கல், மேலே கவிதல் என்பன. இப்பொருள்களையும் இலக்கிய ஆட்சி யில் காண்கின்றோம். நச்சினார்க்கினியர் இம்மறுபொருள் களில் கருத்துான்றிப் பொருளைப் படைத்தார். இக் கருத்துான்றல்தான் அவரின் உள்ளுணர்வை அடையாளங் காட்டுகிறது. அவர் எழுதியுள்ள பொருள் மூன்று இடங் களில் வருகின்றது. அவற்றைக் கூர்ந்து நோக்கினால் அவர்

1. அந்தத்தை அணவுவார் அந்தணர், என்றது

வேதாந்தத்தையே நோக்குவார்' - ...

-திருமுருகு-96 உரை

இதில் பொதுவாக உள்ள அந்தத்தை, வேதத்தின் அந்தமாகக் கற்பித்துக் கொண்டார் என்பது நோக்கத் தக்கது. அதனையே சற்று விரிவாக, -

2. அந்தணர் வேதாந்தத்தை எக்காலமும்

பார்ப்பார்’ . - --மது 474 உரை. இதில் முன்னே நோக்குவார் என்றதை பார்ப்பார்

என்றமையும் கூர்ந்து நோக்க வைக்கிறது. இதற்கு மேலும், சற்று விரிவாக, - -

3. அந்தத்தை அணவுவார்; அந்தணர் என்றது

- வேதாந்தத்தையே பொருளென்று மேற்கொண்டு பார்ப்பார்’

-கலி, கடவுள்வாழ்த்து-3 உரை

இதில் வேதாந்தத்தையே என்றார். பார்ப்பார்’ என்பதை மேலும் அழுத்தமாக்கினார். மேற்கொண்டு’ என்னும் சொல்லையும் சேர்த்துக் கொண்டார். இச்சேர்ப்பு ஏன்(?) என்று நோக்கினால் அணவுதல் மேல்நோக்குதல் என்பதன் பொருட்குறிப்பைக் காட்டித் தன்நோக்கத்திற்கு வலிமை சேர்ப்பதாகிறது. . . -

அம்+தண்+அர் என்னும்இயல்பை அந்தம்+அணவு+அர் என்று வலிந்து ஆக்கினார். அந்தத்தை வ்ேதாந்தம் என்றார். வேதாந்தமே என்று பிற தமிழ்நூல்களை நீக்கினார். அணவுவார்' என்பதை நோக்குவார் என்றார். நோக்குவார்' என்றதைத் தாமே 'பார்ப்பார் ஆக்கினார். மீண்டும் பார்ப்பார்’ என்று வலியுறுத்தினார். அணவுதல் மேல்நோக்கல் என்பதைக் காட்ட மேற்கொண்டு” என்றார்.

இவற்றால் அந்தணர் என்பார் பார்ப்பனரே என்று பதிந்தார். இவ்வாறு பையப்பையச் சேர்த்தும், புகுத்தியும் செய்த நச்சரின் உள்நோக்கத்தை உறுதிசெய்ய அவர் பாரத்துவாச கோத்திரத்துப் பார்ப்பனர்" என்று நம்மை நினைக்கத் துரண்டுகிறது. நச்சர் நச்சராகிறார்.

கடவுளர் பார்ப்பனரா?

இடைக்காலத்தில் இவ்வாறு இவர் செய்யினும் சங்க கால வட்டத்து நூல்கள் கடவுளரை அந்தணர் என்றன.

'இமயவில் வாங்கிய ஈர்ஞ்சடைஅந்தணன்' என்று கலித்தொகை சிவனை அந்தணன்' என்றது.

பூணு லணிந்த -

"நுண்ஞாண் மார்பின்......... யாழ்கெழு மணிமிடற்று அந்தணன்’’’

என்று அகநானூறு சிவனைப்போற்றியது; பூனூல் காட்டிப் போற்றியது. .

1. கபிலர் : கலி : 38-1

2. பாரதம் பாடிய . -

பெருந்தேவனார் : அகம் : 1-15 

வேள்விப்பாகம் உண்ட பைங்கட் பார்ப்பான்'

என்று சிவபெருமானைப் பார்ப்பன இனத்தவனாகப் பரி பாடல் விளக்கியது

சிவனை மட்டுமன்று நான்முகனையும்,

ஆதி அந்தணன்'

என்றது.

தமிழ்நாட்டுக் கடவுள் சிவனும் பார்ப்பனர் ஆக்கப் பட்டார். . -

شهدای زوه بدة i فقهی ها و راه های : sقه

அந்தணர் என்னும்பெயரில் அவ்வினத்தார் உயர்த்தியே பேசப்பட்டனர்.

பார்ப்பனர் என்னும் பெயரிலும்,

அரசனைப் பா ர்த துப்

பார்ப்பார்க்கு அல்லது பணிபு அறியலையே'

என்று பெருமைப்டுத்தினார்.

-ஏற்ற பார்ப்பான் ஈர்ங்கை கிறையப்

பூவூம் பொன்னும் புனல்படச் சொரிந்து'

என்று போற்றியதாகப் பாடினார்.

1. கடுவன்

இளவெயினனார் : பரி : 5–26, 27 2. கடுவன்

இளவெயினனார் : Luff : ' 5–23 3. கபிலர் : பரி : 63—l

4. அவ்வையார் : புறம் : 367-5

பார்ப்பார் கோவன செய்யலர்'1

என்றும்,

"பார்ப்பார்த் தப்பிய கொடுமையோர்க்கும்’’’ (புறம், 34-3) என்றும் தாங்கிக் தாங்கித் காத்தனர்.

ஆனாலும் ஏளனமாகவும், தா ழ் வா. க வு ம்

பார்ப்பனனைப் பாடியவற்றையும் காண்கின்றோம்.

வேள்வி செய்யாத பார்ப்பான் அக்காலத்தில் இழிந்தோர் செய்யும் தொழிலாகக்கருதப்பட்ட சங்கு அறுக் கும் தொழில் செய்தான்' (அகம் 24-12) என்றும்,

'உப்பு ຄ.ສhaturສ່ தூதனாக ஒலைகொண்டு ஓடினான்.”*

என்றும்,

உயவல் ஊர்திப் பயலைப் பார்ப்பான்'

என்றும்,

'கம்மூர்ப் பார்ப்பனக் குறுமகன்'

பரத்தையர் தெருவிற் புகுந்து சாமக்குறும்பு செய்த முதிய முடப்பார்ப்பான்'

1. தாமப்பல்

கண்ணனார் : புறம் : 3-74

2. ஆலந்துார் கிழார் : புறம : 34-3

3. ஆவூர் மூலங்கிழார் அகம் : 24-1 4. பாலைபாடியபெருங்கடுங்கோ: அகம் : 337-7 5. மதுரை வேளாசான் : புறம் : 302-2 6. கபிலர் : ஐங் : 2027. " கலி : 65-8 தி.ப-6

"பழகினும் பார்ப்பாரைத் தீப்போல ஒழுக' வேண்டும் எனவும் உள்ள அடிகள் தமிழரிடையே அவர் காணப்பட்ட பங்கையும் காட்டுகின்றன. இவைபோன்று மேலும் பல உள்ளன. - -

இவற்றையெல்லாம் ஒன்றுகூட்டி ஒரு மீள் பார்வை யிட்டால்,

'அந்தணர் பார்ப்பனர்:

கடவுளரும் அந்தணர்-பார்ப்பனர்" என்னும் ஒரு வகைக்கருத்தும்,

'அந்தணர் துறவியர்

அந்தணர் எந்தக்குல இனத்துள்ளும்

அடங்காதோர்’ என்னும் மறுவகைக் கருத்தும்,

'பார்ப்பனர் போற்றத் தக்கவர்;

பார்ப்பனருள். இழிந்தவரும் புகடிக்கு

உரியவரும் இருந்தனர்' என்னும் இருவகைக் கருத்தும் ஒரே கால வட்டத்தில் தமிழ் மண்ணில் நிலவின என்றுதான் அறிய முடி கின்றது. . . . -

இவற்றை நோக்கும் எவரும் அத்தணர் பற்றி ஒரு குழப்பமான கருத்தையே காணவேண்டி நேரும். ஆம்; குழப்பமான கருத்துச் சூழ்நிலைதான் திருவள்ளுவர் காலத்தில் நிலவியது. - அந்தனர் பார்ப்பனர் அல்லர்

திருவள்ளுவர் இக்குழப்பத்தை-அந்தணர் யார் என்னும் குழப்பத்தை நீக்கி ஒரு தெளிவான கருத்தைப்

o

1. நல்லாதனார் திரி : 42-2

பதியவைக்கக் கருதியிருக்கவேண்டும். அதன் வெளிப் பாடாகத்தான்,

அந்தணர் என்போர் அறவோர்; மற்றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான்' (30)

என்றொரு குறளைப் படைத்தார். - : . * நீத்தார் பெருமை’ (அவாக்களைத் பகுத்தறிவு துறந்தோர் பெருமை) அதிகாரத்தின் முனை இறுதிக் குறளாகப் பதிந்தார்; முடிந்த முடிவான முத்திரைக் குறளாகப் 1 2 பதித்தார். -

அந்தணர் என்போர் பார்ப்பனர் அல்லர்’.

'அந்தணர் என்போர் அறவோர்' என்றார். எதனால் அறவோர்?

! எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான்'

அறவோர் என்று விளக்கம் தந்தார். செந்தண்மை (செம்மை + தண்மை) என்றால் செவ்விய-அழகிய குளிர்ந்த உள்ளத்தின் அருள் ஆகும் என்றார். இதனால், அம்+தண்+அர் என்னும் சொல் அமைப்பையும் அறிவித்

தவர் ஆனார்.

இதனை உணர்ந்த உரையாசிரியர் பலரும்

'செவ்விய தட்பம் செய்தலை' (மணக்குடவர்) 'செவ்விய தண்ணனியை” (பரிமேலழகர்). 'எல்லா உயிர்க்கும் அன்புடையர்' -سي- (பரிதியார்)

எவ்வகைப்பட்ட உயிர்க்கும் ஒத்திருக்கும் s

தண்ணனியை' (காலிங்கர்}

'அந்தணர் என்பதில் அம்-அழகு; தண்-குளிர்ச்சி. அர்-பலர்பால் விகுதி' (இராமானுச கவிராயர்பிற்காலத்தவர்) ஒருமுகமாக அம்+ தண்+அர் என்னும் சொல்லமைப் பாகக் கொண்டே பொருள் கண்டனர்.

ஆனால், மணக்குடவருக்கும், பரிமேலழகருக்கும் பின் வந்த நச்சினார்க்கினியர் தாம் படைத்த மொழியாக அந்தம்-அணவுவார் என்றமை கருதத்தக்கதாயிற்று. முன் கண்ட அவர்தம் உள்நோக்கம் இங்கும் உறுதி பெறுகிறது.

அந்தணர் வேறு, பாாப்பனர் வேறு

திருவள்ளுவருக்குப் பின்னரும் அவர் காலத்தும் இதனை உணர்ந்தோர் திருவள்ளுவரை அடியொற்றி அந்தணரை வேறாகவும் பார்ப்பனரை வேறாகவும் கண்டு பாடினர்.

"அந்தணர் இல் இருந்து ஊண் இன்னா'

என்று இனியவை நாற்பது(2) அந்தணர் என்போர் வீட்டில் இருந்து உணவு உண்ணாத துறவியர்' என்றது. அதே நூல்

'பார்ப்பார் இல் கோழியும் நாயும் புகல் இன்னா' என்று பார்ப்பார் இல்லில் இருந்து வாழ்பவர்' என்று வேறு படுத்திப் பாடியது.

'அந்தணர் என்போர் அறவோர்'

என்றதில் அறவோர் என்பது அற உணர்வை உடையவர்: அறச்செயலை மேற்கொள்பவர் என்று பொருள்பட்டு

1. பூதஞ்சேந்தனார் : இனி : 2 2. கபிலர் : இன்னா : 2-1

மனத்துக்கண் மாசிலன்' ஆகிய அறம் கொண்டவர் எனக் காட்டுகிறது.

மாந்தர்க்குச் சொன்ன இதனையே திருவள்ளுவர் தாம் குறித்த இறைவனுக்கும் ஏற்றி

அறம்ஆழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிற ஆழி நீந்தல் அரிது’’’ என்றார். இறைவனை அறக்கடல் (கடல் போன்று பரந் தும் விரிந்தும் ஆழ்ந்தும் செயற்படும் அறம்) என்று அறத்துக் குள்ளே வைத்து அந்தணன் என்றார். எட்டுக் குணங் களை இறைவனாக உருவாக்கியவர் அறம்' என்னும் செத் தண்மை என்னும் அருள் குணத்தையும் இவ்வாறு அறம் ஆழி அந்தணன்' என்றார்.

'அறம் ஆழி அந்தணன்' என்று திருவள்ளுவர் அமைத்தது,

'நுண்ஞாண் பூணுால் மார்பின்

யாழ்கெழு மணிமிடற்று அந்தணன்' .

என்று பூணுரல் அணிந்த பார்ப்பன இனத்தவனாகச் சிவனைப் பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியதற்கு மாற்றுக் கருத்தாகும்; மறுப்புக் கருத்து என்றும் கொள்ள வைக்கிறது.

அந்தணர் நூல் எது?

திருவள்ளுவர் தம் நூலில் அந்தணர் என்னும் சொல்லை மூன்று இடங்களில் ஆண்டுள்ளார், மேலே கண்ட இரண்டு நிற்க, மேலும்,

1. பாரதம் பாடிய : அகம். க. வாழ்த்து 3, 15.

பெருந்தேவனார்.

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

கின்றது மன்னவன் கோல்' (543)

என்று மன்னவன் செங்கோலாட்சியில் அமைத்தார். இங்கு, 'அந்தணர் நூல் என்றது முன்னர் பதித்த அந்தணர் என்னும் அறவோர்-தமிழ்ச்சான்றோர் படைத்திட்ட நூல்களேயாகும். ஆனால், உரையாசிரியர் அனைவரும்,

அந்தணர்க்கு உரித்தாகிய வேதத்திற்கும் அதனால் சொல்லப்பட்ட அறத்திற்கும்’

என்று பொருள் எழுதினர். இங்கும் அந்தணனைப் பார்ப்பனர் என்று கொண்டு நூலை வேதம் - நான்மறை என்றனர். ஒட்டுமொத்தமாக இக்கருத்து பொருந்தாத தாகும். எவ்வாறு? .

திருவள்ளுவர் பார்ப்பனர் வேதத்தை நான்மறையைக் கூறக் கருதியிருந்தால் முன்னர் *

மறப்பினும் ஒத்துக் கொளலாகும்’ (134)

என்று நான்மறையை ஒத்து’ என்னும் சொல்லால் குறித். தது போன்று,

'அந்தணர் ஒத்தோ டறத்திற்கும் ஆதியாய்” என்று பாடியிருப்பார். அவ்வாறன்றிப் பொதுவாக நூல் என்றமையின், செந்தண்மை பூண்ட அறவோர் நூல் களையே குறிக்கும், *

மேலும் அடுத்த அதிகாரமாம் கொடுங்கோன்மையில், !

“ஆபயன் குன்றும்; அறுதொழிலோர் நூல்மறப்பர்

காவலன் காவான் எனின் (560)  

என்றார். இங்கு அறுதொழிலோர் எனப்பட்டவர் நான் மறை என்னும் ஒத்தை ஒதல், ஒதுவித்தல், வேள்வி செய்: தல். செய்வித்தல், ஈதல்,ஏற்றது என்னும் ஆறுதொழிலைச். செய்யும் பார்ப்பனரைக் குறிக்கும். (மன்னன் கொடுங் கோலன் ஆனால், மக்கள் நலிவர், பார்ப்பனரும் சோற் றுக்கு அலைவர். சோற்றுக்கு அலையும் போது நான்மறை மறதிக்குள் மறையும்; மறப்பர்). -

இவ்வாறு அறுதொழிலோர் என்று பொருள் விளங்கபார்ப்பனர் நான்மறையைக் குறிக்க எழுதியமை போன்று முன்னரும்,

'அந்தணர் நூற்கும்'

என்பதை .

'அறுதொழிலோர் நூற்கும்”

என்று அமைத்திருப்பார். அவ்வாறு அமைக்காததே இது வேறு; அது வேறு என்று காட்டுகின்றது. இவ்விரண்டும் அடுத்தடுத்து வரும் அதிகாரங்களில் உள்ளவை. ஆகையால் இவ்வேறுபாடு காட்டப்பட்டது.

இவ்வமைப்புகள் அன்றித் திருவள்ளுவர், நூல்களாகப் பல்வகை நூல்களைக் குறித்தார்.

"நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை' (322) என்று அறநூலைக் குறித்தார்.

நூ லாருள் நூ ல்வல்லன் ஆகுதல்” (683) என்று ஆட்சியியலார் நூலைக் குறித்தார்.

'நூ லோர் வளிமுதலா எண்ணிய மூன்று' (941) -என்று மருத்துவ நூலைக் குறித்தார்.

எப்பால் நூலோர்க்கும்’ (533)

என்று உலகளாவிய பல துறை நூல்களையும் குறித்தார். இவ்வகையில் அந்தணர் நூல் என்பது ஒருவகை,

செந்தண்மைகொண்ட அந்தணராம் தமிழ்ச்சான்றோர் படைத்த அறநெறி நூல் என்றே பொருள். மக்கட் பிறப் பில் உயர்வு தாழ்வைக் காட்டும் நான்மறை ஒத்தைக் குறிக்காத,

இவ்வாறிருக்க உரையாசிரியர் அனைவரும் 'அந்தணர்க்குரித்தாகிய வேதத்திற்கும்'

என்று நான்மறையாகவே பொருள் எழுதினர். செந்தண்மை என்றதற்கு அம்+தண் அமைப்பில் செவ்விய தன்னருள் என்றெழுதிய இன்னோர் இங்கு ஒருங்கிணைந்தவராக வேதம் என்றமை, திருவள்ளுவருக்குப் பின் தமிழ் அறிஞ ரிடையே வேதம்’ எந்த அளவு ஆட்சி செய்தது. இன்னோரை ஆட்கொண்டிருந்தது' என்பனவற்றின் அடையாளமாகும். -

நான்மறை - வேதம் அளாதி என்பர். அஃதாவது தனக்கு மூலம்-ஆதி இல்லாதது தானே தனக்கு ஆதி யானது என்பது வடநூலார் கோட்பாடு. வேறு ஆதி இல்லாத வேதம் எவ்வாறு மன்னவன் செங்கோலை ஆதி யாகக் கொள்ளும்? இதனை வேதத்தார் ஏற்பாரா?

எனவே அந்தணர் நூல் என்றது தமிழ்ச் சான்றோரின் அற நூல்களேயாகும். இதனாலும் திருவள்ளுவர் நான் மறையைப் புறக்கணித்து ஒத்து’ என்று சொல்லாமல் பகுத்தறிவிற்கு ஒத்துவரும் மன்னவன் செங்கோலை ஆதி' என்றார். இஃது உண்மையுமாகும். தமிழ் மன்னர் பலரும் தமிழ்ப் பெருநூல்கள் தோன்றக் காரணமாக இருந்தவர்.உருவான நூல்களை பேணிப் போற்றிக் காத்தவர். எனவே, அவர்கோல் ஆதி என்பது உண்மையாகும்.

உலகிற்குப் பகவன் ஆதி ( ஆதிபகவன்) என்று பதிந் தமை போன்று. இங்கும் நூற்கும் அறத்திற்கும் செங் கோல் ஆதியாய் நின்றது' என்று அழுத்தமாகப் பதிந்தார். மன்னரை இறைவன் என்றும், இறை என்றும் பதிந்த திருவள்ளுவர் இங்கும் அதனையே வழிமொழிந்தார். எனவே இஃதும், வள்ளுவத்தின் பகுத்தறிவு முனைக்குச்

சான்றாகும்.

'நாலாஞ்சாதி”

இருவருக்குள் பூசல் எழுந்தது. வாய்ச்சண்டையாக வளர்ந்தது. பகடிச்சொல், சுடுசொல், கடுஞ்சொல், கொடுஞ்சொல் என்று வளர்ந்தது. அலுத்துப்போன ஒருவர், -

போடா நாலாஞ்சாதி பயலே' என்றார். மற்றவர், -

தோண்டா நாலாஞ்சாதியிலும்

கீழாஞ்சாதி”

-என்றார்.

அது என்ன நாலாஞ்சாதி மக்களுள் உயர்வு தாழ்வாக நான்கு சாதிகளை வகுத்தனர். வகுத்தவர் வடமொழி யாளர், அவற்றை வருணங்கள்’ என்றனர். நான்காம் வருணம் அவர்கள் சொற்படி சூத்திரர், தமிழில் குடியான வர்-வேளாண்மை செய்பவர்-உழவர் எனப்படுவர். பிற தொழில் செய்பவரும் அடங்குவர். இந்த நான்காம் சாதி என்பதுதான். நாலாஞ்சாதி என்று இழிவான பொருளில், சற்றுக் கொச்சையாகவும் வழங்கப்பட்டது.

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard